Author Topic: 2015 ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்  (Read 4289 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook

2015    ஆ‌ம் ஆ‌ண்டு ஏப்ரல்   மாத‌த்‌தி‌ற்கான  எ‌ண் ஜோ‌திட‌ப்      பல‌ன்களை  ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க. ப. வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.


ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் அனுபவ அறிவால் பல காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள்.

அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உயர்ரக ஆபரணம் வாங்குவீர்கள். மாதத்தின் மையப்பகுதியில் கொஞ்சம் முன்கோபம் வரும். சகோதரங்களுடன் பிணக்குகள் வரும். நெருங்கிய உறவினர்கள் கூட இப்படி நடந்துக் கொண்டார்களே என்ற ஆதங்கமும் இருக்கும். என்றாலும் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறியும் சக்தி கிடைக்கும்.

ஆரோக்யம் சீராகும். மனஉளைச்சல், பிரச்னைகள் நீங்கும். மாதத்தின் பிற்பகுதியில் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள், வீண் சந்தேகங்கள் வரும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டு பேசுவது நல்லது. மறதியால் பணம், நகைகளை இழக்க நேரிடும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தப்பாருங்கள். வாகனம் அடிக்கடி பழுதாகும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். குடிநீர், கழிவு நீர் குழாய் அடைப்பு வந்துப் போகும். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் வெடிக்கும். உயரதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டிய மாதமிது.   
     
அதிஷ்ட தேதிகள்: 1, 12, 21
அதிஷ்ட எண்கள்: 4, 7
அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்



Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29


2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. சில வேலைகள் முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவினங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப்பாருங்கள். யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். பழைய நண்பர்களுடன் மோதல்கள் வரும். சொந்த-பந்தங்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். ஆனால் மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர்களால் மனமகிழ்ச்சி கிட்டும்.

வீடு, மனை வாங்குவது, விற்பது சுமூகமாக முடியும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எப்போதும் எதையோ இழந்ததைப் போல இருப்பீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடும். பெரிய நோய் இருப்பதை போல் இருக்கும். தலைச்சுற்றல் வரும். நெஞ்சு வலி வரக்கூடும். ஹார்ட் அட்டக்கோ என்றெல்லாம் பயப்பட வேண்டாம். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம்.

கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். வெளிநாட்டவர், வேற்றுமொழிக்காரர்களால் புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைத்துறையினர்களே! இழந்த புகழை மீண்டும் பெற எதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். தாணுன்டு தன் வேலை உண்டு என்றிருக்க வேண்டிய மாதமிது.       
 
அதிஷ்ட தேதிகள்: 2, 11, 25
அதிஷ்ட எண்கள்: 1, 6
அதிஷ்ட நிறங்கள்: அடர்நீலம், ரோஸ்
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி



Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30


3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் பெரிய பிரச்னைகளையெல்லாம் தீர்க்கப் பாருங்கள். வழக்குகள் சாதகமாகும்.

அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடன் தொகையை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். என்றாலும் கண் எரிச்சல், அடிவயிற்றில் வலி வந்துப் போகும். உணவில் பழங்கள், கீரை வகைகளை சேர்த்துக் கொள்வது நல்லது. மூச்சுத் திணறல், சளித் தொந்தரவு, அலர்ஜி, யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும்.

பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேச வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து வீடு கட்ட லோன் கிடைக்கும். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். ஆன்மீகப் பயணங்கள் சிறப்பாக அமையும். புகழ் பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள்.

கன்னிப்பெண்களே! கனவுத் தொல்லை, முகப் பரு வந்து நீங்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். சக ஊழியர்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். கலைத்துறையினர்களே! திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு காணும் மாதமிது.   
 
அதிஷ்ட தேதிகள்: 1, 9, 10
அதிஷ்ட எண்கள்: 4, 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி



Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


ஏபரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31


4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் தன்னிச்சையாக சில பெரிய காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். உங்களின் அனுபவ அறிவை பயன்படுத்தி முன்னேறுவீர்கள்.

அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வது, விற்பது, புதுப்பிப்பது போன்ற முயற்சிகள் சாதகமாக அமையும். சகோதரங்களிடம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். சில நேரங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துக் கொள்வார்கள். அவர்களை அன்பால் அரவணைத்துப் போங்கள். சிலர் கார் வாங்குவீர்கள். வண்டியை மாற்றுவீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும்.

கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். விலகிச் சென்ற சொந்த-பந்தங்கள் வலிய வந்துப் பேசுவார்கள். இளைய சகோதரம் ஆதரவாக இருப்பர். நட்பு வட்டம் விரியும். மாதத்தின் பிற்பகுதியில் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். ஆனால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும்.

கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் அயல்நாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. சக ஊழியர்களுக்காக பரிந்துப் பேசுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனை திறன் வளரும். கடனில் ஒரு பகுதி கரையும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 4, 17, 26
அதிஷ்ட எண்கள்: 3, 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி



Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23


5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் சாதுர்யமாகவும், சமயோஜிதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள்.

விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு வாங்குவது, கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிட்டும். சிலர் வீடு மாறுவீர்கள். ஆனால் ஒருவித சோர்வு, களைப்பு, படபடப்பு வந்துப் போகும். சில விஷயங்களில் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணமோ என்றெல்லாம் வருந்துவீர்கள்.

பல் வலி, வாய் புண், செரிமானக் கோளாறு, அசிடிட்டி தொந்தரவுகள் வரக்கூடும். பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்றாலும் திடீர் செலவுகளால் கைமாற்றாக, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! வீண் விமர்சனங்களை தவிர்த்து, செயலில் அக்கறை காட்டுங்கள்.

கன்னிப் பெண்களே! கனவுகள் நனவாகும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். கமிஷன், புரோக்கரேஜ், கல்வி நிறுவனங்களால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்த்தாலும் மூத்த அதிகாரியை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகள் அனைவராலும் பாராட்டப்படும். அலைச்சலுடன் ஆதாயமும் தரும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 5, 15, 24
அதிஷ்ட எண்கள்: 2, 8
அதிஷ்ட நிறங்கள்: வெளிர்நீலம், ஆரஞ்சு
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்



Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24


6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிரபலங்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பணவரவு அதிரிக்கும். வீண் குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். பிரச்னைகள், போராட்டங்கள் ஓயும். தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். தோற்றப் பொலிவுக் கூடும். உறவினர் வீட்டு கல்யாணம், காது குத்து, கிரகப் பிரவேசத்தை முன்னின்று நடத்துவீர்கள். புதிதாக செல்போன் வாங்குவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும்-. பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆனால் முன்கோபத்துடன் பேசி சொற் குற்றம், பொருள் குற்றத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

கை, கால் வலிக்கும். பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னை, தைராய்டு, யூரினரி இன்பெக்ஷன், தோலில் நமைச்சல் வந்துப் போகும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியிலிருந்து மனோபலம் அதிகரிக்கும். சகோதரங்களால் பயனடைவீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. வீடு, மனை வாங்குவதற்கு முன்பாகவும் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும்.

கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். தகுதிக் கேற்ப புது வேலை கிடைக்கும். வியாபாரம் தழைக்கும். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். கமிஷன், பிரிண்டிங், உணவு வகைகளால் லாபம் வரும். உத்யோகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். சிலர் உங்களைப் பற்றி தவறாக மூத்த அதிகாரிகளிடம் வதந்திகளை பரப்புவார்கள். அதை பொருட்படுத்த வேண்டாம். கலைத்துறையினர்களே! வருமானம் உயர வழி பிறக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 6, 8, 13
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்



Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25


7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்படப்பாருங்கள்.

தலை வலி, சையனஸ், சளி தொந்தரவுகள் வந்துப் போகும். மறைமுக எதிர்ப்புகள், வாகனப் பழுது வந்துப் போகும். ஆனால் பிரச்னைகள் இருந்தாலும் எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கட்டிடம் கட்டத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். சகோதரங்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

அறிஞர்கள், ஆன்மிகவாதிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். உங்களை எல்லோரும் காரியம் ஆகும் வரை பயன்படுத்திக் கொண்டு வேலை முடிந்த உடன் உங்களை அலட்சியப்படுத்துவார்கள். அப்படிப்பட்டவர்களை யார் என்பதை புரிந்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள்.

கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். திடீரென்று அறிமுகமாவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். அலுவலக நிமித்தமாக சிலர் வெளி மாநிலம், அயல்நாடு சென்று வருவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பதறாமல் பக்குவாக செயல்பட வேண்டிய மாதமிது.       
 
அதிஷ்ட தேதிகள்: 2, 6, 7
அதிஷ்ட எண்கள்: 4, 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, பச்சை
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி



Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26


8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், உங்களுக்கு இந்த மாதத்தில் எதிலும் நிம்மதி உண்டாகும். மனஇறுக்கங்கள் நீங்கும்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். பதவிகள் தேடி வரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலம், சொத்துப் பிரச்னைக்கு விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். சகோதரங்களுடன் இருந்த சச்சரவு நீங்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அனுபவ அறிவு அதிகமுள்ளவர்கள், ஆன்மிகப் பெரியோர்களின் ஆலோசனைகள் சில பிரச்னைகள், சிக்கல்களிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மகனுக்கு தள்ளிப் போன திருமணம் நல்ல விதத்தில் முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சுக்ரன் லாப வீட்டில் நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் லாபம் வரும். வீடு, மனை வாங்குவது, கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சித்து பேசாதீர்கள்.

கன்னிப் பெண்களே! காதலில் தெளிவு பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் திடீர் யோகம் உண்டாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாகனம், கட்டிட வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு. அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சக ஊழியர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தன்னடக்கத்தால் தடைகளை தாண்டும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 5, 6, 14
அதிஷ்ட எண்கள்: 1, 3
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, பிங்க்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்



Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27


9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழி வகைகள் கிடைக்கும்.

மாற்று யோசனைகள் மனதில் உதிக்கும். நல்லவர்களின் நட்பும் தக்க நேரத்தில் உதவிகரமாக இருக்கும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். செல்லுமிடமெல்லாம் தரிசனம் சிறப்பாக கிடைக்கும். என்றாலும் மனதிலே சின்ன சின்ன சஞ்சலங்கள், எதிலும் பிடிப்பற்ற நிலை, ஆர்வமின்மை வந்துப் போகும். யாரும் தன்னுடன் முழு அன்புடனோ, பாசத்துடனோ நடந்துக் கொள்ளவில்லை எல்லோரும் நடக்கிறார்கள் என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து புது வேலை அமையும்.

வாகன வசதிப் பெருகும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜை மாற்றுவீர்கள். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சொத்து வாங்குவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். அரசியல்வாதிகளே! மேலிடம் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாவார்கள். புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி வரும். அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பாராட்டுகளும் கிடைக்கும். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 3, 9, 12
அதிஷ்ட எண்கள்: 4, 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்