FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: எஸ்கே on May 17, 2021, 11:27:12 PM

Title: இன்று ஒரு தகவல்
Post by: எஸ்கே on May 17, 2021, 11:27:12 PM
வால் துண்டாகி விட்டாலும் பல்லிகள் சுறுசுறுப்பாய் ஓடுகிறதே எப்படி?


ஆபத்து காலத்தில் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவே , இந்த வால் துண்டாதல் (டெயில் பிரேக்கிங்) சிஸ்டத்தை பல்லிகள் வைத்து இருக்கின்றன. துண்டாகி போன வால், பட பட என துடிப்பதையே எதிரி பார்த்து கொண்டு இருக்க , அந்த இடைவேளையில் பல்லி தப்பித்து ஓடி விடும். இதற்கு வசதியாக பல்லியின் வால் எலும்புகள் மிக மென்மையாக இருக்கும், அது தவிர மேல் தோலில் இருக்கும் செதில்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. கதவு இடுகிலோ அல்லது வேறு பெரிய பூச்சியின் வாயிலோ சிக்கி வால் துண்டானதும் துண்டான இடத்தில் இருக்கும் சுறுங்கு தசை உடனே இருகி, இரத்தம் வெளியேற விடாமல் அந்த இடத்திற்கு சீல் வைத்து விடும்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 02
Post by: எஸ்கே on June 11, 2021, 04:37:24 PM
எல்லா குதிரைகளையும் ரேஸ் குதிரைகளாகப்  பழக்கி ஓட வைக்க முடியுமா?

முடியாது! ரேஸில் ஓடுவதற்கு என்றே ஒரு வகை குதிரைகள் உள்ளன.அதற்கு 'தரோ பிரட்' என்று பெயர். உலகம் முழுவதும், கோடிக் கணக்கில் பணம் புரளும் ரேஸ் கோர்சில் இந்த  'தரோ பிரட்' வகை குதிரைகள் மட்டுமே ஓட முடியும்.
அதாவது உடல் திடகாத்திரதிற்கு பெயர் போன துருக்கிய குதிரை, உடல் கட்டமைப்பில் நேர்த்தியான அரேபிய குதிரை, வேகத்திற்கு பெயர் போன இங்கிலாந்து குதிரை ஆகிய மூன்றின் கலப்பே இந்த  'தரோ பிரட்' .

இதன் வம்சாவளியை சேர்ந்த குதிரைகள் தாம் உலகம் முழுவதும் ரேஸ் குதிரைகளக ஓடி கொண்டு இருக்கின்றன. பந்தய குதிரைகள் எந்த மாதத்தில் பிறந்தாலும், ஜனவரி முதல் தேதியில் பிறந்ததாகவே வயது கணக்கிடப்படும். ஏழு ஆண்டுகள் வரை மட்டுமே ரேஸில் ஓடும். பிறகு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டு விடும்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 03
Post by: எஸ்கே on June 11, 2021, 04:44:07 PM
பறவைகளில் கழுகின் பார்வை மட்டும் கூர்மையாய் இருப்பது ஏன்?


உயரப் பறப்பதிலும், உற்று நோக்குவதிலும்
கழுகுக்கு நிகர் கழுகு தான். கழுகின் கண்களில் உட்புற மற்றும் வெளிப்புற அமைப்புகளில் நுண்ணுக்கமான திசுக்கள் அமைந்து இருப்பது தான் இவைகளின் பார்வை கூர்மைக்கு காரணம்.1500 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் அனாயசமாய் கழுகு வட்டம் அடித்து கொண்டு இருக்கும்போது,அதன் பார்வை வியுகத்தில் சுமார் 10 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பரப்பு அதன் பார்வையில் இருக்கும்.அதே நேரத்தில்,எந்த அளவிற்கு தன்னால் இரையை தூக்கி கொண்டு பறக்க முடியும் என்பதையும் கழுகு துல்லியமாய் கணித்து வைத்து இருக்கின்றன.


கழுகின் கண்களின் இரண்டு அம்சங்கள் அத்தகைய கூர்மையான பார்வையைத் தருகின்றன. ஒன்று விழித்திரை, மற்றொன்று ஃபோவா. கழுகின் இவை இரண்டும் பார்வைத் துறையில் சிறந்த விவரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பெரிதாக்கும் திறனை ஒன்றாகக் கொடுக்கின்றது.



கூடுதல் தகவல்:
மனிதர்களின்  கண்களை கழுகின் கண்களாக மாற்றிக்கொண்டால், 10 மாடி கட்டிடத்தின் கூரையிலிருந்து தரையில் ஒரு எறும்பு ஊர்ந்து செல்வதைக் காணலாம்.
Title: Re: இன்று ஒரு தகவல் -04
Post by: எஸ்கே on June 11, 2021, 04:45:23 PM
உலகத்தில் தண்ணீர் உயிரினங்கள் ஏதாவது உண்டா?

உண்டே! குறிப்பாக பல்லிகளும்,பாம்புகளும், மற்ற பிற ஊர்வன வகைகளும் தண்ணீர் இருக்கும் பக்கம் எட்டி கூட பார்ப்பது இல்லை. காரணம், அந்தப் பிராணிகள் வெறும் மாமிச உணவை மட்டும் நம்பி வாழ்வதால்,அவைகளுக்கு விழுங்கும் ஜீவராசிகளின் உடல் திரவங்கள் போதுமானதாகும். ஈரப்பதம் அற்ற மற்றும் குறைவான தாவர உணவுகளை உட்கொள்ளும் பிராணிகளுக்கு தான் தண்ணீர் தாகம் வருகிறது.

வட அமெரிக்காவில் வாழும் கங்காருஎலி தன் வாழ்நாளில் தண்ணீரை முற்றிலும் தவிர்த்து விடுகிறது.அதே போல் சஹாரா பாலைவனத்தில் வாழும் 'ஆடக்ஸ்' என்னும் ஒரு வகை மான்,அங்கே விளையும் கள்ளிசெடிகளை மட்டுமே சாப்பிட்டு ஆயுசுக்கும் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல்  தன் வாழ் நாட்களை கழித்து விடுகிறது
.
Title: Re: இன்று ஒரு தகவல் - 05
Post by: எஸ்கே on June 11, 2021, 04:46:31 PM
பூனைக்குத் தெரியுமா பால்கோவாவின் டேஸ்ட்?

பூனைக்கு பால்கோவா மட்டுமல்ல, இனிப்பான எந்த உணவின் சுவையும் தெரியாது. மனிதர்களால் 5(அல்லது அதற்கு மேற்பட்ட) சுவைகளை உணரமுடியும். ஆனால், பூனைகளால் இனிப்புச்சுவையை மட்டும் உணர முடியாது. வீட்டுப்பூனை மட்டுமல்ல, காடுகளில் வசிக்கும் பூனைக்குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 06
Post by: எஸ்கே on June 11, 2021, 04:47:50 PM
உப்பு நீரும் டால்பின்களும்?


கடலிலேயே வாழ்ந்தாலும் டால்பின்கள் கடல் நீரைப் பருகுவதில்லை. கடலின் உப்பு நீரை அருந்தினால் டால்பின்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு அவை இறக்க நேரிடும். தங்களுக்குத் தேவையான நீரை அவை உண்ணும் உணவிலிருந்தே எடுத்துக்கொள்கின்றன.
Title: Re: இன்று ஒரு தகவல் - 07
Post by: எஸ்கே on June 11, 2021, 04:48:47 PM
வெளுத்ததெல்லாம் பனிக்கரடி அல்ல?


அண்டார்டிகாவிலிருக்கும் பனியின் நிறத்தோடு போட்டிபோட்டு வாழும் வெள்ளைவெளேர் பனிக்கரடியின் நிறம் உண்மையில் வெள்ளையில்லை என்பது தெரியுமா? அவற்றின் உடலிலிருக்கும் முடிகள்(Fur) நிறமற்றவை. அவை வெளிச்சத்தைப் பிரதிபலிப்பதாலேயே நம் கண்களுக்கு வெள்ளை நிறமாகத் தெரிகின்றன. உண்மையில் பனிக்கரடியின் தோல் கருப்பு நிறம்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 08
Post by: எஸ்கே on June 11, 2021, 04:50:12 PM
ஒரு கூட்டத்துக்கு ஒரு தலைவி தான்யா?

Clown Fish (நம்ம நீமோ மீன் தான்) என்றழைக்கப்படும் ஒரு வகை மீன்கள், எப்பொழுதும் கூட்டமாகவே வாழக்கூடியவை. ஒரு கூட்டத்தில் ஒரே ஒரு பெண் மீன் தான் இருக்கும். அந்தப்பெண் மீனின் தலைமையில் மற்ற மீன்கள் இயங்குகின்றன. இதில் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், அந்தப்பெண் மீனும், பிறக்கும் போது ஆணாகவே பிறக்கிறது. வளர்ந்த பின், அதிக திறமையுடைய, ஆளுமைத்திறன் உடைய ஆண் மீன், பெண்ணாக மாறி  தலைமைப் பொறுப்பை ஏற்கிறது.
Title: Re: இன்று ஒரு தகவல் -09
Post by: எஸ்கே on June 11, 2021, 04:51:06 PM

சிலந்தி வலை?



சிலந்திகளின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் நாளங்கள்தான் வலை பின்னத்தேவையான பசை போன்ற இழைகளைத் தருகின்றன என்பது நமக்குத் தெரிந்திருக்கும். ப்ரோட்டீன் நிறைந்திருக்கும் அந்த இழைகள் சிலந்திகளின் வயிற்றிலிருந்து வெளிப்பட்ட உடனே கெட்டியாகி நூல் போல் மாறி விடுகிறது. Golden Spider (“தங்கச் சிலந்தி” என்று அழைக்கலாமா? 😊 ) என்ற ஒருவகை சிலந்தியின் இழைகள், அதே தடிமனுள்ள இரும்பு இழையை விட பலமானது. அதே போல் மடகாஸ்கரில் இருக்கும் Darwin Bark Spiders வகை சிலந்திகள் 82 அடி நீள இழைகளை உருவாக்கும் திறன் பெற்றவை. இவை உருவாக்கும் வலைகள் 30 சதுர அடிகள் வரை இருக்கும்.

ஒன்று தெரியுமா??? சிலந்திகள் தங்கள் வலைகளை ஓரங்களில்தான் முதலில் பின்னத்தொடங்குகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக நடுப்பகுதியை நோக்கி பின்னிக்கொண்டே வந்து முடிக்கின்றன.
Title: Re: இன்று ஒரு தகவல் -10
Post by: எஸ்கே on June 11, 2021, 04:53:28 PM
ராணி தேனீ?

ஒரு தேன் கூட்டில் ஒரு ராணி தேனீ தான் இருக்கும். ஒரே நேரத்தில் ஒரு தேன் கூட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ராணி தேனீக்கள் இருந்தால், அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்ளும். இப்படி சண்டைக்கு அழைப்பதற்கென்றே ராணி தேனீக்களுக்கு ஸ்பெஷல் ரீங்காரமெல்லாம் இருக்கிறது. சண்டையில் ஒரு தேனீ மற்றொன்றைக் கொன்று ராணியாக வெற்றிவாகை சூடுகிறது. பெரும்பாலும், ஒரு தேன் கூட்டில் இருக்கும் தேனீக்கள், அக்கூட்டின் ராணி தேனீயின் குழந்தைகளாக இருக்கின்றன. ஒரு ராணி தேனீ உருவாகும்போது, அதற்கென்று அக்கூட்டிலிருக்கும் மற்ற தேனீக்கள் புரதம் நிறைந்த உணவைக் கொடுக்கின்றன. மற்ற தேனீக்களுக்கும் இவ்வுணவு கொடுக்கப்பட்டாலும், வளரும் ராணி தேனீக்கு ஸ்பெஷல் கவனிப்பு நிச்சயம்.

ஒரு புது ராணி தேனீ உருவாகும்போது, 15 நாட்களுக்கு தேன்கூட்டிலிருக்கும் துளையொன்றில் மற்ற தேனீக்களால் அடைத்து வைக்கப்படுகிறது. முற்றிலும் வளர்ந்து, இனப்பெருக்கத்திற்குத் தயாராகி 15 நாட்கள் கழித்து துளையிலிருந்து வெளிவரும் புது ராணீ தேனீ, முதல் காரியமாகச் செய்வது தேன் கூட்டிலிருக்கும் பிற ராணி தேனீக்களை சண்டையிட்டு வெளியேற்றுவது அல்லது கொல்வது.

தேன்கூட்டிலிருக்கும் மற்ற தேனீக்களின் முக்கிய வேலையே, ராணி தேனீக்கு பணிவிடை செய்வதும், அதற்குத் தேவையான உணவைக்கொண்டுவருவதும் தான். ராணி தேனீக்கு என்னதான் வேலை என்கின்றீர்களா? தொடர்ந்து முட்டையிட்டு தன் சந்ததியை வளர்ப்பது தான்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 11
Post by: எஸ்கே on June 11, 2021, 04:54:18 PM
Larry Twitter Bird?


சமூக வலைத்தளமான ட்விட்டரில் இருக்கும்  சிறிய நீல வண்ண பறவைக்கு(ம்) (செல்லப்)பெயர் இருக்கிறது. அதற்கு வைக்கப்பட்ட முதல் பெயர் “Larry Bird”. அமெரிக்காவின் பிரபலமான கூடைப்பந்தாட்ட அணிகளில் ஒன்றான Boston Celtics அணியில் விளையாடிய Larry Bird என்பவரின் நினைவாக வைக்கப்பட்டது இப்பெயர்.

ட்விட்டர் வலைதளத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான Biz Stone அவர்களின் ஊர் தான் Celtics அணியின் சொந்த ஊர். இப்போது புரிகிறதா பெயர்க்காரணம்?
Title: Re: இன்று ஒரு தகவல் -12
Post by: எஸ்கே on June 11, 2021, 04:55:10 PM
(https://i.postimg.cc/CdpsBCzP/images-34.jpg)

100 கிராம் பறவை?

உலகில் உள்ள மொத்த பறவையினங்களில் 19% பறவைகள் மட்டுமே தட்பவெப்ப நிலை காரணமாகவும், இனப்பெருக்கத்திற்காகவும் இடம்பெயர்கின்றன(migration). அதிகபட்சமாக 44,000 மைல்கள் இடம் பெயர்கின்றன. அப்படி 44,000 மைல்கள் இடம் பெயரும் பறவையின் பெயர்  Arctic Tern . பெயரை விடுங்கள்..அதன் எடை என்ன தெரியுமா? ஜஸ்ட் 100 கிராம்.


இப்பறவைகள் அதிகபட்சமாக 35 வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன. தன் வாழ்நாளில் அதிகபட்சமாக 1.5 மில்லியன் மைல்கள் பயணம் செய்கின்றன. கிரீன்லாந்தில் பயணத்தைத் தொடங்கி அண்டார்டிகாவின் கடற்கரை வழியாகப் பறந்து மீண்டும் கிரீன்லாந்தை வந்தடைகின்றன இப்பறவைகள். பயணத்தின் போது வட அட்லாண்டிக் கடலில் உணவிற்காக ப்ரேக் எடுத்துக் கொள்கின்றன. நீர்வாழ் பறவையான ஆர்டிக் டெர்ன் அதிகம் விரும்பி உண்பது மீன் வகைகளையே.
Title: Re: இன்று ஒரு தகவல் - 13
Post by: எஸ்கே on June 11, 2021, 04:56:13 PM
(https://i.postimg.cc/Bjtcpt2Z/images-35.jpg)


 பைன்(Pine) பறவைகள்?

Clark’s Nutcracker எனப்படும் ஒரு வகை பறவையினம், பைன் மரங்களின் விதைகளை விரும்பி உண்ணக்கூடியவை. வாழ்நாள் முழுவதும் இவை சாப்பிடக்கூடிய ஒரே உணவு பைன் மரத்தின் விதைகள் மட்டும் தான். இந்தப்
பைன் விதைகளை எடுத்துச் செல்வதற்காக அவற்றின் வாயில் ஒரு ஸ்பெஷல் பை கூட இருக்கிறது. இப்பறவைகள் ஒவ்வொன்றும் தன் குளிர்காலத்தேவைக்காக ஆண்டுதோரும் கிட்டத்தட்ட 30,000 பைன் மர விதைகளை சேமிக்கின்றன.  அத்தனை விதைகளும் ஒரே இடத்தில் சேமிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு பறவையும் 6,000 வெவ்வேறு இடங்களில் தத்தம் பைன் விதைகளைச் சேமிக்கின்றன.


இப்பறவைகளுக்கு ஞாபக சக்தி மிக அதிகம். எந்த அளவுக்கு என்றால், தான் உணவு சேமித்து வைத்திருக்கும் 6000க்கும் அதிகமான இடங்களை கரெக்ட்டாக ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு. தேவையான நேரத்தில் சேமிப்புக் கிடங்குகளுக்குச் சென்று உணவை எடுத்துவருகின்றன. அந்த இடம் பனியில் புதைந்து இருந்தால் கூட இவற்றால் சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியும். பெண் பறவைகள் உணவை எடுத்துவரச் செல்லும் நேரங்களில் ஆண் பறவைகள் முட்டைகளை அடைகாக்கின்றன. காகங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இந்தப்பறவைகள் அதிகபட்சமாக 17 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியவை.
Title: Re: இன்று ஒரு தகவல் -14
Post by: எஸ்கே on June 11, 2021, 04:56:52 PM
(https://i.postimg.cc/gnD4YkhN/images-37.jpg)

45 லிட்டர் தண்ணீரும் அரைமணிநேரத் தூக்கமும்?


ஒட்டகத்தைவிட அதிக நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாழக்கூடிய உயிரினம் ஒட்டகச்சிவிங்கி. ஓரிரு வாரங்களுக்கு ஒரு முறைதான் இவை நீர் அருந்துகின்றன. கால்களின் அதிக உயரம் மற்றும் குட்டையான(!!) கழுத்தின் காரணமாக, மற்ற விலங்குகளைப்போல் நின்றுகொண்டே நீரைப்பருக இவற்றால் முடியாது. தண்ணீர் வேண்டுமென்றால் முன்னிரு கால்களை அகட்டி வைத்தோ, மண்டியிட்டோ தான் பருக வேண்டும். இதனாலேயே இவை அடிக்கடி தண்ணீரைத் தேடுவதில்லை. மாறாக இவற்றின் உணவுகளிலிருந்தே தேவையான நீரை எடுத்துக்கொள்கின்றன. ஆனால், தண்ணீர் தேவை என்று வந்துவிட்டால், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 45 லிட்டர்  தண்ணீரைக் குடிக்கின்றன.


ஒட்டகச்சிவிங்கிகளைத் தூங்கும்போது பிடிப்பது மிகக்கடினம் ஏனென்றால், ஒரு நாளில் இவை தூங்கும் நேரம் மொத்தமாக 30 நிமிடங்கள் தான். இவற்றின் கால்கள்(கால்களின் உயரம் மட்டுமே) சராசரியாக ஆறடி உயரம் கொண்டவை. ஒரு மரத்திலிருந்து உணவு உட்கொள்ளும்போது ஆணும் பெண்ணும் சாப்பாட்டுக்கு போட்டி வந்துவிடக்கூடாது என்பதற்காக வெவ்வேறு பகுதிகளைத் தேர்வுசெய்கின்றன. ஒரு ஒட்டகச்சிவிங்கிக்கு 4 வயிறுகள் உள்ளன. கூட்டமாக வசித்தாலும், தலைவன்/தலைவி என்று யாரும் கிடையாது.
Title: Re: இன்று ஒரு தகவல் 15
Post by: எஸ்கே on June 11, 2021, 04:57:30 PM
(https://i.postimg.cc/Jt7Q9Rdy/images-38.jpg)


பறக்கும் மீன்கள்?


Exocoetidae என்ற விலங்கியல் பெயருடைய இம்மீன்களின் முன்துடுப்புகள் மீக நீண்டதாக பறவைகளின் இறக்கைகள் போல இருப்பதால் இவை, எளிதாக காற்றில் படபடத்து தாவுகின்றன. இம்மீன்கள், கடல் அமைதியாக இருக்கும்போது கடலின் மேல்மட்டத்துக்கு வருவதில்லை; மாறாக கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் போது தண்ணீருக்கு வெளியில் வந்து குதித்து, காற்றில் சில அடி தூரம் வரை பறந்து சென்று விளையாடுகின்றன. இந்த மீன்கள் பறக்கும் மீன்கள் என்று பெயர் பெற்றது இப்படித்தான். அதிக பட்சமாக 6 மீ உயரத்துக்குத் தாவுவதும் சுமார் 50 வினாடிகளில் 70கி.மீ வேகத்துக்கு பறப்பதும் இவற்றின் சிறப்பு. வேகமாக பறக்கும் போது இவை 160அடி தூரம் வரை பறப்பதாக தெரிய வந்துள்ளது.

கடலில் மிதக்கும் தாவர மிதவை நுண்ணுயிரிகள்தான் இதன் விருப்ப உணவாகும். பறக்கும் மீன்களைக் கடல் பறவைகளும் டால்பின்கள் மற்றும் சில வகை மீன் வகைகளும் விரும்பிச் சாப்பிடுகின்றன. மீன்பிடிப்போர் டார்ச் லைட்டுகளை இருட்டில் கடலின் மேற்பரப்பில் அடித்து இதைக் கவர்ந்து பிடிக்கின்றனர். இந்த மீன்கள் சுவை நிறைந்த உணவாகவும் இருப்பதால் இவற்றைப் பிடிப்பதில் பல காலமாகவே உலக நாடுகளிடையே போட்டிகள் நிலவுகின்றன. பார்படாஸ் நாட்டின் தேசிய சின்னமாகவும், தேசிய மீனாகவும் திகழும் இந்த பறக்கும் மீன்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
Title: Re: இன்று ஒரு தகவல் - 16
Post by: எஸ்கே on June 11, 2021, 04:58:22 PM
(https://i.postimg.cc/21vPv0H8/images-40.jpg)

மூளையா? கிலோ என்ன விலை?



உண்மையில் நட்சத்திரமீன்கள், மீன்களே அல்ல. அவை Asteroidea என்ற குடும்பத்தைச் சார்ந்த கடல்வாழ் உயிரினங்கள். நட்சத்திரம் போன்ற உருவ அமைப்பே இவற்றின் பெயர்க்காரணம். ஐந்து கைகளை உடைய நட்சத்திர மீன்களைத்தான் அதிகம் பார்த்திருப்போம். 20 முதல் 40 கைகள் உடைய மீன்களும் இருக்கின்றன. உப்புத் தண்ணீரில் மட்டுமே காணப்படும் இந்த உயிரினத்திற்கு cardiac stomach மற்றும் pyloric stomach என்று இரண்டு வயிறுகள் இருக்கின்றன. இவற்றின் ஒவ்வொரு கையின் முனையிலும் ஒரு கண் அமைந்துள்ளது. இந்தக் கண்கள் சுற்றிலுமிருக்கும் அசைவுகளையும், இருட்டு/வெளிச்சத்தையும் கண்டுபிடிக்க உதவுகின்றன.

பல்லியின் வால் மாதிரி, நட்சத்திர மீனின் கைகளில் ஒன்று துண்டானால், ஒரே வருடத்தில் அவை மீண்டும் வளர்ந்துவிடும். நட்சத்திர மீன்களுக்கு மூளை கிடையாது. அவற்றின் உடம்பில் இரத்தமும் கிடையாது. இரத்தத்தின் இடத்தை கடல் நீர் நிரப்புகிறது. தங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை நட்சத்திர மீன்களுக்கு உண்டு. ஒரு பெண் மீனால் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 1.3மில்லியன் முட்டைகளை இடமுடியும். இவற்றின் அதிகபட்ச வாழ்நாள் 35 வருடங்கள்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 17
Post by: எஸ்கே on June 11, 2021, 04:59:09 PM
(https://i.postimg.cc/dkwqNbdr/images-41.jpg)


பேர் சொல்லும் (கிளிப்)பிள்ளை?

கிளிகள் தங்கள் பிள்ளைகளை பெயரிட்டு அழைக்கின்றன. அதுமட்டுமல்ல, வயதில் சிறிய கிளிகள் நம்மைப்போலவே , தங்களின் பெயரை அவற்றுக்குப் பிடித்த மாதிரி மாற்றியும் வைத்துக்கொள்கின்றன. வெனிசுலாவில் சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் 17 கிளிக்கூடுகளில் சிறு மைக்குகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர். இதில் 9 கூடுகளில் இருந்த முட்டைகள் வெவ்வேறு கூடுகளில் மாற்றி வைக்கப்பட்டன. கிளிகளின் பெயர்கள் அவற்றின் பெற்றோர்,மூதாதையரைச் சார்ந்துள்ளதா அல்லது வளர்ப்பைச் சார்ந்துள்ளதா என்று கண்டறியவே இப்படி முட்டைகள் மாற்றி வைக்கப்பட்டன. முடிவில் வளர்ப்பைச் சார்ந்தே பெயர்கள் வைக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தனர் ஆராய்ச்சியாளர்கள்.


கூட்டமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்யும்போது வயதில் சிறிய கிளிகள் தொலைந்துவிடாமல் இருக்கவும், தொலைந்தால் கண்டறியவும், சரியான வேளைக்கு உணவு கொடுக்கவும்இந்தப்பெயர்கள் பெரிய கிளிகளுக்கு உதவுகின்றன. அதென்ன ”சரியான நேரத்திற்கு உணவு கொடுக்க” என்று யோசிக்கின்றீர்களா? மற்ற விலங்குகள்/பறவைகளுடன் ஒப்பிடும்போது கிளிகளே மனிதர்கள் மாதிரி தங்கள் பிள்ளைகளை அதிக நாட்கள் தங்களுடன் சேர்த்து வைத்துக்கொள்கின்றன. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் செல்ல கூட்டைவிட்டுக் கிளம்பிய மூன்று வாரங்களுக்குப் பிறகும் சிறிய கிளிகள் தங்கள் பெற்றோரையே உணவுக்காகச் சார்ந்திருக்கின்றன.

கிளிகள் மட்டுமல்ல டால்ஃபின்களுக்கும் பெயர்கள் உண்டு. ஒரு டால்ஃபின் தொலைந்துவிட்டால், மொத்த டால்ஃபின் குடும்பமும்(pod) சேர்ந்து தொலைந்துபோன டால்ஃபினின் பெயர் சொல்லி அழைக்கின்றன.

Title: Re: இன்று ஒரு தகவல் - 18
Post by: எஸ்கே on June 11, 2021, 04:59:52 PM
(https://i.postimg.cc/dhMV1brF/images-46.jpg)

தேன்வளைக்கரடி?

“Honeyguide” என்றொரு பறவை. விலங்குகளுக்கும்(சில சமயங்களில் மனிதர்களுக்கும்) தேன்கூடுகள் எங்கிருக்கின்றன என்று அடையாளம் காட்டுவதாலேயே இந்தப்பெயர்.. விலங்குகள் வந்து தேன்கூடுகளை உடைத்து சாப்பிட்டுச் சென்றபின் மீதமிருக்கும் தேனையும், கூடுகளிலிருக்கும் சிறு புழு,பூச்சிகளையும் உணவாக உட்கொள்வதற்காகவே இந்த வழிகாட்டும் வேலை.


தேனை விரும்பி உண்ணும் Honey Badger என்ற கரடி வகைகளுக்கே இவை அதிகம் வழிகாட்டுவதாக நம்பப்படுகிறது.. ஆப்ரிக்காவிலும் இந்தியாவிலும் காணப்படும் தேன்வளைக்கரடி(Honey Badger)களின் டயட்டில் தேனுடன் சேர்த்து பழங்களும், எலி முதலிய சிறு விலங்குகளும் இடம்பிடித்துள்ளன. பாம்புகளைக்கூட கொன்று சாப்பிடும் பழக்கமுடையவை இந்த வகைக்கரடிகள்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 19
Post by: எஸ்கே on June 11, 2021, 05:00:39 PM
(https://i.postimg.cc/c473ZkdT/images-48.jpg) (https://postimages.org/)

நெருப்புக்கோழிகள்?

நெருப்புக்கோழிகள்/தீக்கோழிகள் தங்கள் தலைகளை மண்ணுக்குள் புதைத்துக்கொள்ளும் அதிலும் குறிப்பாக ஆபத்துக்காலங்களில் என்ற கதையை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? உண்மையில் அது கதைதான். அவை தலைகளை மண்ணுக்குள் புதைத்துக்கொள்வது தங்கள் முட்டைகளைப் பாதுகாக்க. ஆண் நெருப்புக்கோழிகள் ஆறு முதல் எட்டு அடி அகலமும் 2 முதல் 3 அடி ஆழமும் கொண்ட குழிகளைத் தோண்டுகின்றன. இக்குழிகளில் பெண் நெருப்புக்கோழிகள் தங்கள் முட்டைகளை இட, ஆணும் பெண்ணும் மாறி மாறி அடைகாக்கின்றன. எதிரிகள் யாராவது தாக்க வரும்போது முட்டைகள் வெளியே தெரியாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. முட்டைகளை அடைகாக்கும் தீக்கோழிகள் அவ்வப்போது தங்கள் தலைகளால் அவற்றைத் திருப்பி வைக்கின்றன. இந்தச் சமயத்தில் தூரத்திலிருந்து பார்த்தால், அவை தலையை மண்ணுக்குள் விட்டிருப்பது போலவே தோன்றும்.

எதிரிகள் வரும்போது நெருப்புக்கோழிகளின் முதல் ரியாக்‌ஷன் பயத்தில் ஓடுவது; தங்களைக் காப்பாற்றிகொள்ள மட்டுமல்ல, தங்கள் முட்டைகளைக் காப்பாற்றவும்தான். தப்பித்து ஓடும் கோழியைப் பிடிக்கச்செல்லும் எதிரிகள் முட்டையையும் மறந்து, கோழிகளின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் கையுடன் திரும்பிச் செல்கின்றன.

ஒன்று தெரியுமா? நெருப்புக்கோழிகளின் மூளையின் சைஸ் அவற்றின் கண்களை விடச்சிறியது.
Title: Re: இன்று ஒரு தகவல் - 20
Post by: எஸ்கே on June 11, 2021, 05:01:19 PM
(https://i.postimg.cc/zDy7h9JC/images-49.jpg) (https://postimages.org/)


இந்தக்கொசுத்தொல்லை தாங்க முடியல?

பெண் கொசுக்கள் தான் மனிதர்களையும் விலங்குகளையும் கடிக்கும் சரி.. ஆண் கொசுக்கள் ஏன் நமக்கு ஊசி போடுவதில்லை? இதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் பெண் கொசுக்கள் ஏன் நம்மைக் கடிக்கின்றன என்று தெரிந்து கொள்வது அவசியம். பெண் கொசுக்கள் தன் இனப்பெருக்கத்திற்குத் தேவையான சத்துகளை நம் ரத்தத்திலிருந்து பெறுகின்றன. ஒவ்வொரு முறை முட்டையிடும் முன்பும் அவற்றிற்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஆண் கொசுக்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் வேலை இல்லை..அதனால் அவை நம்மைக் கடிப்பதும் இல்லை. ஒன்று தெரியுமா? பெண் கொசுக்கள் நம்மைக் கடிக்கப் பயன்படுத்தும் ஊசி போன்ற உறுப்பே ஆண் கொசுக்களுக்குக் கிடையாது. தங்களது உணவை சர்க்கரை அதிகமுள்ள தாவரங்களிலிருந்து எடுத்துக்கொள்கின்றன ஆண் கொசுக்கள்.

ஒரு பெண் கொசு, தன் எடையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமான ரத்தத்தை உறிஞ்சும் திறன் பெற்றது. பெண் கொசுவின் வயிற்றிலிருக்கும் சென்சார் ஒன்று, தேவையான அளவு ரத்தம் கிடைத்தவுடன் “இப்போதைக்கு இது போதும்” என்று சிக்னல் தருகிறது. இந்த சென்சார் மட்டும் இல்லையென்றால், பெண் கொசு, தான் வெடித்துச் சிதறும்(!!) வரை ரத்தம் உறிஞ்சுவதை நிறுத்தாது.
Title: Re: இன்று ஒரு தகவல் -21
Post by: எஸ்கே on June 11, 2021, 05:02:04 PM
(https://i.postimg.cc/Y0yDgTDy/images-50.jpg) (https://postimages.org/)

ஒரு சாக்லெட்டும் மைக்ரோவேவ் ஓவனும்?

மைக்ரோவேவ் ஓவன் உருவானதற்கு முதல் காரணம் சாக்லெட் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று யோசிக்க வேண்டாம். மைக்ரோவேவ் ஓவனைக் கண்டுபிடித்த பியர்ஸி ஸ்பென்சர்(Percy Spencer) ஒரு சாக்லெட் விரும்பி. இரண்டாம் உலகப்போரின்போது ராடார் கருவிகளுக்கருகில் பணிபுரிந்துகொண்டிருந்த பியர்ஸி, தன் சட்டைப்பையிலிருந்த Mr.Goodbar சாக்லெட் உருகியிருப்பதைப் பார்த்தார். அவ்விடத்திலிருந்த Magnetron ரேடார் கருவிகளிலிருந்து வெளிவந்த மைக்ரோவேவ் கதிர்களே தன் பாக்கெட்டிலிருந்த சாக்லேட் உருகக் காரணம் என்பதைக் கண்டறிந்த அந்தக் கணநேரத்தில் அண்ணாரின் சிந்தனையில் வந்ததே இந்த மைக்ரோவேவ் ஓவன் ஐடியா..

Magnetron கருவியிலிருந்து வரும் மைக்ரோவேவ் கதிர்களைக் கொண்டு உணவுப்பொருட்களை வெகுவிரைவில் சூடாக்க முடியும் என்று சொல்லி பியர்ஸி உருவாக்கித் தந்ததே இன்று நாம் உபயோகப்படுத்திக்கொண்டிருக்கும் மைக்ரோவேவ் ஓவன். முதல் மைக்ரோவேவ் ஓவனுக்கு அவர் வைத்த பெயர் Radarange. பியர்ஸி ஸ்பென்சர், தான் கண்டுபிடித்த மைக்ரோவேவ் ஓவனில் சமைத்த(!!!!!) முதல் உணவு பாப்கார்ன். ஒற்றைச் சாக்லெட் நம் வீட்டில் ஒரு அ(நா)வசிய பொட்டியைக் கொண்டுவந்து வைக்கும் என யாராவது நினைத்திருப்போமா? ம்ம்ம்.....
Title: Re: இன்று ஒரு தகவல் - 22
Post by: எஸ்கே on June 11, 2021, 05:02:43 PM
(https://i.postimg.cc/65hPbfL5/images-53.jpg) (https://postimages.org/)

உங்க டூத்பேஸ்ட்ல ஃப்ளோரைடு இருக்கா?

டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா இல்லையா என்ற ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும்.. டூத்பேஸ்ட்ல சோடியம் ஃப்ளோரைடு இருப்பது பற்றி பார்க்கலாம். ஃப்ளோரைடு, நம் பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது. பல சோதனைகளில், ஃப்ளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்கு பற்குழி விழுவது குறைகிறது அல்லது தவிர்க்கப்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல, டூத்பேஸ்ட்டும் விஷமே. ப்ரெஷின் தலை பெரிதாக இருக்கிறது என்பதற்காக, ஃப்ளோரைடு போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்ட பற்பசையினை அளவுக்கதிகமாக உபயோகிப்பது  பற்களுக்கு ஊறு விளைவிக்கும். அது மட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம். அதிக அளவுக்கதிகமான ஃப்ளோரைடு, பற்சிதைவு ஏற்படக் காரணமாகிறது. மேலும் குழந்தைகளுக்கு பற்கள் விழுந்து முளைக்கும் சமயத்தில் அதிக அளவு ப்ளோரைடு உபயோகித்தால் பற்களில் வெள்ளைத் திட்டுக்கள் விழக்கூடும். ஃப்ளோரைடு கலந்த பற்பசைகளில் “WARNINGS: Keep out of reach of children under 6 years of age. If you accidentally swallow more than used for brushing, seek PROFESSIONAL HELP or contact a POISON CONTROL center immediately.” என்ற செய்தியைக் கட்டாயமாக அச்சிட வேண்டுமென்று 1997ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) உத்தரவிட்டுள்ளது..
Title: Re: இன்று ஒரு தகவல் - 23
Post by: எஸ்கே on June 11, 2021, 05:03:25 PM
(https://i.postimg.cc/0yxsgwrj/images-54.jpg) (https://postimages.org/)

அழகான ராட்சசியே?

ஐஸ் மேஜிக், சூப்பர் கூல் குளிர்சாதனப்பெட்டிகளெல்லாம் வந்துவிட்ட பிறகு, மண்பானை என்பது மறந்தே போய்விட்டது. அதை மீண்டும் பழக்கத்திற்குக்கொண்டு வந்த பெருமையெல்லாம் 12 மணி நேர பவர்கட்டையே சேரும். மண்பானையில் வைக்கப்படும் நீர் மட்டும் வெயில் காலங்களில் குளிர்ச்சியாக இருப்பதன் காரணமென்ன தெரியுமா? பானைகளில் இருக்கும் சிறு சிறு துளைகள் தான். பானைகளிலிருக்கும் இந்த சிறு துளைகள் வழியாக உள்ளிருக்கும் இருக்கும் நீர் வெளியேறி, வெயில் மிகுதியால் நீராவியாக மாறுகிறது. இந்த நீராவியே, பானைக்குள் இருக்கும் நீரை குளிர்ந்த நீராக மாற்றுகிறது.

குளிர்/மழைக்காலங்களில் வெயில் குறைவாக இருப்பதால், நீர் நீராவியாக மாறுவதில்லை, பானைக்குள் இருக்கும் நீரும் ஜில்லென்று மாறுவதில்லை. வீட்டிலிருக்கும் மண்பானைக்கு ஏன் அடிக்கடி வியர்க்கிறதென்று இப்போது புரிந்திருக்குமே.
Title: Re: இன்று ஒரு தகவல் - 24
Post by: எஸ்கே on June 11, 2021, 05:04:03 PM
(https://i.postimg.cc/YSBrgNS0/images-55.jpg) (https://postimages.org/) (https://gasstation-nearme.com/)

நான் போகிறேன் மேலே மேலே?

குழந்தைகளைக் குஷிப்படுத்த எப்போதும் மேலேயே பறந்துகொண்டிருக்கும் ஹீலியம் பலூன்களில் நிரப்பப்படும் ஹீலியம் 1868ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஹீலியம் பூமியிலிருப்பதாக கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே, சூரிய ஒளிக்கதிர்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த Pierre Janssen and Norman Lockyer என்ற இரு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சூரியனுக்கருகில் ஹீலியம் நிறைந்திருப்பதைக் கண்டறிந்தனர். சூரியனைக்குறிக்கும் Helios என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்ததே ஹீலியம்.

ஒரு கிராம் எடையுள்ள பொருளை மேலே தூக்கிச்செல்ல ஒரு லிட்டர் ஹீலியம் தேவைப்படும். நீங்கள் 50 கிலோ தாஜ்மஹாலாக இருந்தால், உங்களை மேலே தூக்கிச் செல்ல எத்தனை லிட்டர் ஹீலியம் வாயு தேவைப்படும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். நிறம், மணம் இல்லாத இந்த வாயுவை திடமாகவோ, திரவமாகவோ ஜீரோ டிகிரி வெப்பநிலையில் மாற்ற முடியும்.

விண்வெளி ஆராய்ச்சிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஹீலியம், முதன் முதலில் மார்கெட்டுக்கு 1928ஆம் ஆண்டு வந்திருக்கிறது. ஹீலியம் நிறப்பப்பட்ட பலூன்களை வீட்டில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்திருந்தால், அவற்றிலிருக்கும் ஹீலியம் மெதுவாக வெளியேறி பலூன் தானாக தரைக்கு வந்துவிடும். ஹீலியத்தின் எடை மிகக்குறைவு. அதனால்தான் எந்த புவியீர்ப்பு சக்தியாலும் ஹீலியம் பலூன்களை கீழே வைத்திருக்க முடிவதில்லை.
Title: Re: இன்று ஒரு தகவல் - 25
Post by: எஸ்கே on June 11, 2021, 05:04:44 PM
(https://i.postimg.cc/nhJBR4VZ/images-56.jpg) (https://postimages.org/)

வரலாற்றின் 4 மாபெரும் ராஜாக்கள்?

நண்பர்களுடன் இல்லையென்றாலும், வெட்டியாக இருக்கும்போது பொட்டியிலோ செல்போனிலோ சீட்டு விளையாடும் பழக்கம் இருக்கும் மக்களுக்கான போஸ்ட் இன்று. அடிக்கடி பார்த்திருந்தாலும், நமக்குத் தெரியாத அல்லது நாம் கவனிக்காமல் விட்ட சில சீட்டுக்கட்டு செய்திகள் இதோ..

சீட்டுக்கட்டு ராஜாக்கள் நால்வரும் வரலாற்றிலிருக்கும் நான்கு மாபெரும் ராஜாக்களின் பிம்பங்கள்.

ஸ்பேட் ராஜா – டேவிட்
டைமண்ட் ராஜா – ஜூலியஸ் சீசர்
ஹார்ட்டீன் ராஜா – சார்லஸ் VII
க்ளவர் ராஜா – அலெக்சாண்டர் தி க்ரேட்

அதேபோல் 4 ராணிகளும்..
ஸ்பேட் ராணி – பல்லஸ்(Pallas)
டைமண்ட் ராணி – ரேச்சல்
ஹார்ட்டின் ராணி – ஜூடித் (Judith)
க்ளவர் ராணி – Argine

சீட்டுக்கட்டிலிருக்கும் இந்த 4 செட்களும் பஞ்சபூதங்களில் நான்கை(ஆமா..ஐந்தில்ல..நாலுதான்) குறிக்கின்றன.
ஸ்பேட் – காற்று
டைமண்ட் – பூமி
ஹார்ட்ஸ் – நீர்
க்ளவர் – நெருப்பு

சீட்டுக்கட்டிலிருக்கும் 52 சீட்டுகள் ஒரு வருடத்தின் 52 வாரங்களையும், 4 ஸெட் ஒரு ஆண்டின் நாலு சீசன்களையும், ஒவ்வொரு செட்டிலிருக்கும் 13 கார்டுகளும் ஒவ்வொரு சீசனின் 13 வாரங்களையும் குறிக்கின்றன.

டைமண்ட் ராஜா மட்டும் கையில் கோடாலி வைத்திருக்க, மற்ற ராஜாக்கள் கத்தியுடன் போஸ் தருகிறார்கள். அதே போல், டைமண்ட் ராஜாவுக்கு ஒரே ஒரு கண்தான். கைகளில்லாத ராஜாவும் இவரே. நான்கு ராஜாக்களில், ஸ்பேட் ராஜா மட்டும்தான் வலப்பக்கம் பார்த்துக்கொண்டிருப்பார்.

ராணிகளில், ஸ்பெட் ராணி மட்டுமே வலப்பக்கம் பார்த்துக்கொண்டிருப்பார்.நான்கு ரானிகளும் கையில் பூ வைத்திருந்தாலும், ஸ்பேட் ராணி கையில் செங்கோலும் இருக்கும்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 26
Post by: எஸ்கே on June 12, 2021, 05:45:24 PM
(https://i.postimg.cc/LX7tLKfv/images-57.jpg) (https://postimages.org/)

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு?


மற்ற பூக்களெல்லாம் அதிகாலையில் பூக்க, இந்த மல்லிகை மட்டும் இரவில் பூத்து மக்களிடையே ஸ்பெஷல் இடத்தைப் பெற்றுள்ளதன் மாயமென்ன? மற்ற செடிகளைப் போல், மல்லிகைச்செடியும் பூக்களைப் பூக்க வைக்கும் florigen என்ற ஹார்மோனை சூரிய ஒளியின் உதவியால் இலைகளில் உருவாக்குகின்றன. இலைகளிலிருந்து இந்த ஹார்மோன், மொட்டுகளை நோக்கி நகரும் “Nastic Movement”, பகலின் வெளிச்சம் குறைந்து இரவு  துவங்கும் நேரத்தில் தூண்டப்படுகிறது. இதுவே, மல்லிகைப் பூக்கள் இரவில் மலர்வதன் ரகசியம்..

மல்லிகைச்செடிகளின் மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் உதவுவது அந்து(தி?)ப்பூச்சிகள்/விட்டில்பூச்சிகள். இரவு நேரத்தில், இந்தப்பூச்சிகளைக் கவர்ந்திழுக்கவே, மல்லிகைகள் வெள்ளை நிறமும் கொள்ளை மணமும் கொண்டிருக்கின்றன.

ஹவாய், இந்தோனேஷியா, பாகிஸ்தான் மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளின் தேசிய மலர் மல்லிகை.
Title: Re: இன்று ஒரு தகவல் - 27
Post by: எஸ்கே on June 13, 2021, 07:07:28 PM
(https://i.postimg.cc/c4dKV6nR/images-61.jpg) (https://postimages.org/) (https://postimages.org/)

செவ்வாயில் செவ்வாய்?

மங்கள்யான் மங்களகரமாக செவ்வாய் கிரகத்திற்குச் சென்றுவருவதற்கு முன், நாம் ஒருமுறை சென்றுவரலாம். சூரியக் குடும்பத்திலேயே மிக உயரமான மலையைக் கொண்ட கிரகம் என்ற பெருமை செவ்வாய்க்கு உண்டு. இதிலிருக்கும் Olympus Mons என்ற எரிமலையின் உயரம் 21கிலோ மீட்டர்(ஆமாம்..தூரமல்ல..உயரம்). கிட்டத்தட்ட 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான மலையாக இருந்தாலும், இந்த எரிமலை இன்னும் உயிருடன் இருப்பதாக வானியல் வல்லுனர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.

அதிகமாக புழுதிப்புயல் தாக்கக்கூடிய கிரகமும் செவ்வாய் தான். மொத்த கிரகமும் புழுதியால் மூடப்படக்கூடிய அளவிற்கு, இங்கு மாதக்கணக்கில் புழுதிப்புயல் வீசும். பார்ப்பதற்கு சிவப்பு வண்ணத்தில் இருப்பதால், Red Planet என்று(ம்) செவ்வாய் கிரகத்தை அழைக்கின்றனர். Mars என்பது ரோமன் போர்க்கடவுளின் பெயர்.

செவ்வாய் கிரகத்தின் நிலவுகளின் பெயர்  Phobos(Fear), Deimos (panic). இவற்றில் முதலாவது ஒரு நாளுக்கு இருமுறை மேற்கு திசையில் உதித்து கிழக்கில் மறைகிறது. இரண்டாவது, கிழக்கில் ஒரு முறை உதித்து மேற்கு திசையில் மறைய 2.7 நாட்களை எடுத்துக்கொள்கிறது. இக்கிரகத்தின் சராசரி வெப்பநிலை -81 டிகிரி ஃபாரன்ஹீட். அதிகபட்சமாக(!!) குளிர் காலங்களில்  -205 டிகிரியும், வெயில் காலத்தில் 72 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கிறது.

செவ்வாய்க்கு அனுப்பப்படும் விண்கலன்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வெற்றிபெற்றிருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி, நாம் எப்போ செவ்வாயில் ப்ளாட் வாங்கி, வீடு கட்டி…. ம்ம்...
Title: Re: இன்று ஒரு தகவல் - 28
Post by: எஸ்கே on June 14, 2021, 08:10:34 PM
(https://i.postimg.cc/3NbY6p3Z/images-62.jpg) (https://postimages.org/)


 >:(பட்டைக்குறி..Bar code ?

நாம் வாங்கும் எல்லா பொருட்களிலும் நீங்காத இடம்பிடித்துவிட்ட “Bar Code”(தமிழில் ”பட்டைக்குறி”), அமெரிக்காவில் ரயில் பெட்டிகளை அடையாளம் கண்டுபிடிக்க முதன்முதலில் உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால், சூப்பர் மார்கெட்டுகளில், தினசரி வாங்கும் பொருட்களில் அச்சடிக்கப்பட்ட பிறகுதான், அவை அதிகம் வெளியுலகிற்குத் தெரிய வந்தன.

“Bar Code Scanner” கருவிகொண்டு முதன்முதலில் ஸ்கேன் செய்யப்பட்ட பொருள் Wrigley’s Juicy Fruit gum பாக்கெட். 1974ஆம் ஆண்டு அமெரிக்காவின் ட்ராய் நகரத்திலிருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இந்த வரலாற்றுச்சிறப்புமிக்க(!!) செயல் நடந்தது.


பலவகையான Bar Code இருந்தாலும், Universal Product Code(UPC) என்ற Bar Code தான் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. இந்த வகை Bar Codeஇல் இருக்கும் கருப்புப் பட்டைகளின் அகலமும், பட்டைகளுக்கிடையே இருக்கும் இடைவெளியும் தான் ஸ்கேன் செய்யப்படுகிறது. இவற்றின் உயரத்தைப் பதிவு செய்யவேண்டும் என்பது அவசியமில்லை.

சாத்தான்/பேய்/தீய சத்தி இவற்றைக் குறிக்கும்(???) 666 என்ற எண்கள் Bar Codeஇல் ஒளிந்துகொண்டிருப்பதாக ஒரு கதை உண்டு. இது கதையல்ல நிஜம் என்று சொல்லவும் ஒரு க்ரூப் இருக்கிறது. பாவம்..அப்பாவி கம்ப்யூட்டர்களுக்கு இந்த 666 கதையெல்லாம் தெரியாததாலோ என்னவோ, இன்றுவரை  எந்தப்பிரச்னையும் செய்யாமல் அவையெல்லாம் சமத்தாக வேலை செய்கின்றன.

ஒன்று தெரியுமா? ஒரு UPC Bar Codeஇல்முதல் மூன்று கருப்புப் பட்டைகளும் அதன் கீழ் உள்ள 3 எண்களும், குறிப்பிட்ட அந்தப் பொருள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. இதில் இந்தியாவிற்கான எண் 890.  உடனே, அருகிலிருக்கும் பொருளை எடுத்துப்பார்த்திருப்பீர்களே.. 🙂
Title: Re: இன்று ஒரு தகவல் - 29
Post by: எஸ்கே on June 15, 2021, 09:27:28 PM
(https://i.postimg.cc/bNqQMkQ0/images-63.jpg) (https://postimages.org/) (https://postimages.org/)

ஆனியன் ஐஸ்க்ரீம், கார்லிக் ஐஸ்க்ரீம்?


வெனிசுலா நாட்டிலிருக்கும் Heladeria Coromoto என்ற ஐஸ்கிரீம் கடையில் கிட்டத்தட்ட 1000 வகைகளில் ஐஸ்கிரீம்கள் உள்ளன. 1980ஆம் ஆண்டு Manuel da Silva Oliveira என்பவரால் துவங்கப்பட்ட இக்கடை, அதிக வெரைட்டிகளில் ஐஸ்கிரீம் இருக்கும் கடை என்று கின்னஸ் புத்தகத்திலும்(!) இடம் பிடித்திருக்கிறது. பல ஐஸ்கிரீம் கம்பெனிகளில் வேலை செய்த Oliveria, தன்னால் புது விதங்களில் ஐஸ்கிரீம் தயாரிக்க முடியும் என்று சொல்லி இக்கடையைத் தொடங்கியிருக்கிறார்.


அவர் முதன்முதலில் முயற்சி செய்த புது வெரைட்டி ஐஸ்கிரீம் அவகேடோ(பட்டர் ஃப்ரூட்). அதன் சுவையை சிறப்பானதாக மாற்றும் முயற்சியில் கிட்டத்தட்ட 50கிலோ ஐஸ்கிரீமை செலவு செய்திருக்கிறார் இந்த மனிதர்.

இங்கு(மட்டுமே??) கிடைக்கும் சில வித்தியாசமான ஐஸ்கிரீம் சுவைகள் – வெங்காயம், ஸ்வீட் கார்ன், முட்டை, சீஸ், காளான், மிளகாய், தக்காளி, ஒயின், பூண்டு, நண்டு(நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்..நண்டு தான்). ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 60 வகை ஐஸ்கிரீம்கள் விற்கப்படுகின்றன.

Cointreau, cognac or vodka-and-pineapple – இவையெல்லாம் என்ன தெரியுமா? இந்தக்கடையில் இருக்கும் சில ஆல்கஹால் கலந்த ஐஸ்கிரீம் வெரைட்டிகள்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 30
Post by: எஸ்கே on June 16, 2021, 09:48:43 PM
 (https://i.postimg.cc/vHQjD762/images-64.jpg) (https://postimages.org/)

லம்போகினி கார்கள் பிறந்த கதை?


 
இத்தாலியன் ஏர் ஃபோர்சில் மெக்கானிக்காக இருந்த Ferruccio Lamborghini, தன் உழைப்பால் உயர்ந்து “லம்போகினி” என்ற டிராக்டர் தொழிற்சாலையைத் துவங்கினார். இவர் கார்கள் தயாரிக்கத் துவங்கியதற்குப் பின்னால் ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது. டிராக்டர் தயாரிக்கும் கம்பெனியாக இருந்த லம்போகினியை கார்கள் தயாரிக்கும் கம்பெரியாக மாற்றிய பெருமை ஃபெராரி காரையும், அதன் கம்பெனி ஓனரையுமே சேரும் என்றால் நம்ப முடிகிறதா?

கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த லம்போகினி, தன் முதல் ஃபெராரி 250GT மாடல் காரை 1958ஆம் ஆண்டு வாங்கினார். ஆனால் ஃபெராரி கார்கள் மிகுந்த சத்தத்துடனும், தினசரி பயணங்களுக்கு கடினமானதாகவும் இருப்பதாகவும் நினைத்தார் லம்போகினி, தன் ஃபெராரி காரின் க்ளர்ச் உடைந்துபோனபோது அந்த க்ளர்ச் தன் கம்பெனி டிராக்டர்களின் க்ளர்ச் போலவே இருப்பதைக்கவனித்தார்.

ஃபெராரி கார் ஓனர் ஃபெராரியிடம் சென்று தன் க்ளர்ச்சுக்கு வேறு நல்ல மாற்று க்ளர்ச் தரவேண்டினார். கடுப்பான ஃபெராரி லம்போகினியைப் பார்த்து “நீ ஒரு டிராக்டர் தயாரிப்பாளர். உனக்கு ஸ்போர்ட்ஸ் கார் பற்றி எதுவும் தெரியாது” என்று முகத்திலடித்தாற்போல் சொல்லிவிட, வெளியே வந்த லம்போகினி எடுத்த முடிவுதான் லம்போகினி கார்கள் பிறப்பதற்கான காரணம். தன் தயாரிப்பில் வரும் கார்கள் “வெறும்(!)” ஸ்போர்ட்ஸ் கார்களாக மட்டுமில்லாமல் தினசரி உபயோகத்திற்கும் எந்த பிரச்னையும் தராமல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 31
Post by: எஸ்கே on June 17, 2021, 05:48:17 PM
(https://i.postimg.cc/qR6BfVMb/images-65.jpg) (https://postimages.org/)

Bubble Wrap Wallpaper?
 
 
Bubble Wrap பேப்பர் கையில் கிடைத்தால் உடைத்து விளையாடாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? உண்மையில் அந்த Bubble Wrap பேப்பர், பேக்கேஜ் செய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்டதல்ல. 1957 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியைச் சேர்ந்த Al Fielding, Marc Chavannes என்ற இரு விஞ்ஞானிகள், சுவர்களில் ஒட்டி டிசைன் செய்யக்கூடிய வால்பேப்பராகத்தான் முதன் முதலில் bubble wrap பேப்பரை டிசைன் செய்தனர். இரண்டு ப்ளாஸ்டிக் பேப்பரை ஒன்றின்மேல் ஒன்று ஒட்டி அதிலிருக்கும் சின்னச்சின்ன காற்றுப்பைகளை உருவாக்கிய அந்த வால்பேப்பர் டிசைன் பெரிதாக எடுபடவில்லை. கொஞ்சம் யோசித்த விஞ்ஞானிகளிருவரும் வால்பேப்பரை பேக்கேஜ் செய்யப்பயன்படும் பேப்பராக மாற்றி வெற்றிபெற்றனர். ஐபிஎம் தன் முதல் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை விற்கத்தொடங்கியபோது, அவற்றை பேக் செய்ய bubble wrap பேப்பரை உபயோகிக்கத்தொடங்கியதுதான் இவர்களின் முதல் பெரிய வெற்றி.
Title: Re: இன்று ஒரு தகவல் - 32
Post by: எஸ்கே on June 18, 2021, 06:15:37 PM
(https://i.postimg.cc/Kv83DCnT/how-women-and-men-see-colors.jpg) (https://postimages.org/)

கலர்ஃபுல் ஃபோபியாஸ்?


ஃபோபியாஸ்ல என்ன கலர்ஃபுல் என்று யோசிக்கின்றீர்களா? ஒரு சில வண்ணங்களைப் பார்த்தால் பிடிக்காமல் கோபம் வருவதற்கும், பயத்தால் எரிச்சலடைவதற்கும் ஸ்பெஷல் பெயர்கள் இருக்கின்றன. ஆந்திர தேச சினிமா ரசிகர்களுக்கும், நம்மூர் ராமராஜன்(மற்றும் பலர்) ரசிகர்களுக்கும் இந்த ஃபோபியாக்கள் எதுவும் வருவதற்கான வாய்ப்பே இல்லை. 😉

Chromatophobia  – எந்த வண்ணத்தைப்பார்த்தாலும் பயப்படுவது

Ereuthophobia – சிவப்பு நிறம், சிவப்பு நிற விளக்குகள் இவற்றைப்பார்த்தால் வரும் பயம். (சிக்னலில் சிவப்பு விளக்கைப் பார்த்தாலும் நிற்காமல் செல்லும் மக்களுக்கு இருப்பது என்ன வகையான ஃபோபியா என்று கண்டறிய வேண்டும். )

Leukophobia  – வெள்ளை நிறம் தரும் பயம்

Melanophobia  – கருப்பு நிறம் தரக்கூடிய பயம்

Porphyrophobia – ஊதா(purple) நிறத்தைப் பார்க்கும்போது வரும் பயம்

Xanthophobia – மஞ்சள் நிறத்தைப் பார்த்தால் வரும் பயம். (Yellow என்ற வார்த்தையைப் பார்த்தாலும் கூட)


இந்தப்படத்திற்கும் மேலுள்ள ஃபோபியா லிஸ்ட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை..இல்லை..இல்லவே இல்லை 😉

 
Title: Re: இன்று ஒரு தகவல் - 33
Post by: எஸ்கே on June 19, 2021, 08:25:23 PM
(https://i.postimg.cc/hGg46WMt/images-66.jpg) (https://postimages.org/) (https://bettafishcaretaker.com/lifespan)

மஞ்சள் மகிமை?

 
கல்லூரி/பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்திலிருப்பதன் காரணம் தெரியுமா? மற்ற பளிச் நிறங்களை விட மஞ்சள் நிறம் அதிவேகமாக நம் கவனத்தை ஈர்க்கக்கூடியது. எடுத்துக்காட்டாக, சிவப்பு நிறத்தைவிட மஞ்சள் நிறம்1.24 முறை விரைவாக நம்மை கவனிக்க வைக்கிறது. சாலையில் செல்லும் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி “கொஞ்சம் மெதுவாக செல்லுங்கள்..” என்று சொல்லாமல் சொல்லவே மஞ்சள் நிறம் பள்ளிப்பேருந்துகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.


மட்டுமில்லாமல், இப்பேருந்துகள் இயங்கும் அதிகாலை/மாலை நேரங்களில் மற்ற வண்ணங்களை விட மஞ்சள் நிறமே பளிச்சென்று தெரியக்கூடியது. பள்ளிப்பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் கொடுக்கும் இந்தப்பழக்கம் 1939ஆம் ஆண்டு அமெரிக்காவில் முதன்முதலில் துவங்கப்பட்டது. கொலம்பியா யுனிவர்சிட்டியில் பணியாற்றிய பேராசிரியர் Dr. Frank W. Cyr என்பவர் 1939ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளிப்பேருந்துகளின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய ஒரு ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினார். அதன் முடிவில் பல பள்ளிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது தான் இந்த மஞ்சள் வண்ணம். இந்த நிகழ்ச்சிக்குப் பின் “Father of the Yellow School Bus” என்றே பேராசிரியரை அழைக்கின்றனர்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 34
Post by: எஸ்கே on June 20, 2021, 07:50:25 PM
(https://i.postimg.cc/hGBTXRjH/images-67.jpg) (https://postimages.org/)

700% அதிகமான பென்சில் விற்பனை?


2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் உலகப்புகழ் பெறத்துவங்கி, இன்று எல்லா பத்திரிக்கைகளிலும் தவறாமல் இடம்பிடிக்கும் சுடோக்கு(Sudoku) புதிருக்கு முதன் முதலில் வைக்கப்பட்ட பெயர் “Number Place”. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே இந்தவகையான புதிர்கள் மக்களிடையே பழக்கத்தில் இருந்தாலும், இந்த மார்டன் சுடோக்கு 74 வயதான Howard Garns என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு(வடிவமைக்கப்பட்டு?) 1976ஆம் ஆண்டு  Dell Magazines என்ற பத்திரிக்கையில் ”Number Place” என்ற பெயரில் முதன்முதலில் வெளியானது. தான் கண்டுபிடித்த சுடோக்கு பிரபலமாவதைப் பார்க்காமலேயெ 1989ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார் Howard.

1984ஆம் ஆண்டு ஜப்பானில் Monthly Nikolist என்ற பேப்பரில் வெளியாகத் தொடங்கிய சுடோகுவிற்கு, Sūji wa dokushin ni kagiru என்று ஒரு வழவழா கொழகொழா பெயர் வைக்கப்பட்டிருக்க (அப்படியென்றால் “the digits must be single” என்று அர்த்தமாம்), பின் ஒரு நாள் Maki Kaji  என்பவரால் சுடொகு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2004ஆம் ஆண்டில் உலகமெங்கும் பிரபலமாகத் தொடங்கியது இந்தப்புதிர் குடும்பத்தில் மினி சுடோகு, cross sum sudoku, hypersudoku, killer sudoku என்று ஏகப்பட்ட வெரைட்டிகள் உள்ளன.

மொத்தமே 5,472,730,538 சுடோகு புதிர்கள் தான் உள்ளன. பேப்பரும் பென்சிலுமாக மக்களை கிறுக்குப்பிடித்து அலையவைத்த சுடோகு தான், 2006ஆம் ஆண்டு பென்சில் விற்பனை முந்தைய ஆண்டைவிட 700% அதிகரித்ததற்குக் காரணம் என்று ”The Independent of London” பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது..
Title: Re: இன்று ஒரு தகவல் - 35
Post by: எஸ்கே on June 21, 2021, 06:22:27 PM
(https://i.postimg.cc/ht00sFjJ/images-68.jpg) (https://postimages.org/)

கடுகு சிறுத்தாலும்?


Pistol Shrimp எனப்படும் இறால் மீன் வகை மூன்றிலிருந்து ஐந்து செண்டிமீட்டர் நீளமே வளரக்கூடியது. ஆனால் இந்த வகை மீன்கள் எழுப்பும் சத்தமோ ஒரு ஜெட் எஞ்சினிலிருந்து வரும் சத்தத்தை விட அதிகம். இவற்றின் இரண்டு நகங்களில் (கொடுக்கு??) ஒன்று மட்டும் பெரிதாக இருக்கும். இந்தப்பெரிய நகத்தில், பின் பக்கம் நகரக்கூடிய சுத்தியல் போன்ற பகுதி ஒன்றும், நகர முடியாத அடிப்பகுதி ஒன்றும் இருக்கின்றன. இதில் சுத்தியல் போன்ற பகுதி வெகமாக மற்றொரு பகுதியுடன் மோதும்போது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் தண்ணீரை வெளியே தள்ளுகின்றன. இந்தச் செயலால் தண்ணீரில் ஏற்படும் நீர்க்குமிழிகள் உடையும்போது தான் ஜெட் எஞ்சினை விட அதிக அளவில் சத்தம் வருகின்றன.

மிருகக்காட்சி சாலைகளில் இருக்கும் பெரிய பெரிய மீன் தொட்டிகள் கூட இந்தச் சப்தத்தால் உடைந்துவிடும்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 36
Post by: எஸ்கே on June 22, 2021, 06:59:41 PM
(https://i.postimg.cc/9fPrQHBr/images-70.jpg) (https://postimages.org/)



கண்ணீரின் கதை?



நாம் சிரிக்கும்போது எவ்வளவு கலோரிகள் செலவு செய்யப்படுகின்றனவோ அதே அளவு கலோரிகள் நாம் அழும்போதும் நம் உடலிலிருந்து செலவு செய்யப்படுகின்றன. அழுகையை அடக்குவதால் ஹார்மோன் பிரச்ச்னைகள் ஏற்பட்டு உடல் எடை கூடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். நம் கண்ணீர் பார்ப்பதற்கு(!) ஒரே மாதிரி இருந்தாலும், இதிலும் 3 வகைகள் இருக்கின்றன.

Basal tears – அடிப்படை கண்ணீர் – நம் கண்களை எப்போதும் ஈரப்பசையுடன் வைக்க உதவுகிறது.
Reflexive tears – எதிர்வினைக் கண்ணீர் – கண்களில் தூசு விழும்போது, வெங்காயம் நறுக்கும்போது, இருமும்போதும், தும்மும்போதும் வரும் கண்ணீர்.

Psych tears – உணர்வுசார் கண்ணீர் – பெயரிலிருந்தே தெரிந்திருக்குமே.. கோபம், மன அழுத்தம், பயம், துக்கம் இவை மட்டுமல்ல..அளவுகடந்த சந்தோஷத்தாலும் வரும் கண்ணீர். இந்த வகைக் கண்ணீர், மன அழுத்தத்தாலும் கவலையினாலும் நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. உணர்வுசார் கண்ணீர், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. அழுதுமுடித்தவுடன் புத்துணர்ச்சியுடனும் லேசான மனதுடனும் இருக்க இதுவே காரணம்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 37
Post by: எஸ்கே on June 23, 2021, 08:14:38 PM
(https://i.postimg.cc/L87n4Bgy/images-71.jpg) (https://postimages.org/)


 ஜெர்ரியும் சீஸும் கொஞ்சம் கட்டுக்கதையும்?



சீஸை திருடும் ஜெர்ரியையும், ஜெர்ரியை துரத்திப்பிடிக்க முயற்சி செய்து ஒவ்வொரு முறையும் பல்பு வாங்கும் டாமையும் விரும்பிப் பார்க்காதவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனால், ஜெர்ரிக்கு மட்டுமல்ல, எந்த எலிகளுக்குமே சீஸ் விருப்பமான உணவல்ல. இன்னும் சொல்லப்போனால், சீஸின் வாசனை வந்தாலே, அந்தப்பக்கம் போகாமல் தெறித்து ஓடிவிடும் எலிவகைகள் இருக்கின்றன. எலிகளுக்கு பசி வந்தால் சமையலறையில் இருக்கும் உணவுப் பொருட்கள் முதல், ப்ளாஸ்டிக், மரம், பூச்சிகள், மனிதன் என கண்ணில் படும் அனைத்தையும் சாப்பிடும் . வேறு வழியே இல்லையென்றால், சீஸையும் சாப்பிடும்.


அப்படியென்றால், எலிகளுக்கு சீஸ் பிடிக்கும் என்று கிளப்பிவிட்ட புண்ணியவான்(வதி) யாரு? தெரியாது. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கட்டுக்கதை இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அந்தக்காலத்தில், தானிய வகைகளையும், இறைச்சி வகைகளையும் சீஸையும் சேமித்து வைக்கும் பழக்கம் இருந்திருக்கும். தானியங்களையும் இறைச்சியையும் எலிகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க கொஞ்சம் சேஃப்டியாக வைத்திருப்பார்கள். ஆனால் சீஸ் கெட்டுப்போகாமலிருக்க காற்றோட்டமான இடத்தில் வைத்திருப்பார்கள். சாப்பாடு எதுவும் கிடைக்காத எலிகள் வேறு வழியின்றி சீஸை சாப்பிடத் துவங்கியிருக்க வேண்டும். இதிலிருந்து தான் எலிக்கு சீஸ் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே பரவத் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
Title: Re: இன்று ஒரு தகவல் - 38
Post by: எஸ்கே on June 24, 2021, 06:26:59 PM
(https://i.postimg.cc/ZKfQW670/images-72.jpg) (https://postimages.org/)

79 ஆண்டுகள் காத்திருந்த வால்ட் டிஸ்னி?


1927ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி கம்பெனி கடுமையான கஷ்டத்தில் இருந்த காலகட்டம். அப்போது, வால்ட் டிஸ்னியால் அறிமுகப்படுத்தப்பட்ட Oswald the Rabbit என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தின் உரிமை அமெரிக்காவின் யுனிவர்சல் ஸ்டுடியோவிற்கு விற்கப்பட்டது. டிஸ்னியின் நல்ல நேரம், அந்த கார்ட்டூன் கதாபாத்திரம் மக்களிடையே மிகப்பிரபலமாக மாற, 1928ஆம் ஆண்டு யுனிவர்சல் ஸ்டுடியோவுடனான ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கச் சென்றார் வால்ட் டிஸ்னி. தாங்கள் தரவேண்டிய பணத்தில் 20 சதவீதத்தைக் குறைத்துக்கொள்ளப்போவதாக யுனிவர்சல் அறிவிக்க, ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் திரும்பினார் டிஸ்னி. Oswald கதாபாத்திரத்தின் உரிமை யுனிவர்சலிடமே இருந்தது.



இது நிகழ்ந்து 79 ஆண்டுகளுக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு, யுனிவர்சல் ஸ்டுடியோவின் NBC டிவி சேனல், அமெரிக்காவின் பிரபலமான Sunday Night Football நிகழ்ச்சியின் உரிமையை வாங்கியது. அந்த நிகழ்ச்சியின் வர்ணனையாளராக யாரைத் தேர்வுசெய்யலாம் என்ற குழப்பம் வந்தபோது என்.பி.சி முடிவு செய்தது, வால்ட் டிஸ்னிக்கு சொந்தமான ஈஎஸ்பிஎன் சேனலில் வேலை செய்துகொண்டிருந்த Al Michaels என்பவரை. ஒப்பந்தம் என்ன தெரியுமா? வால்ட் டிஸ்னி, மைக்கேலை என்பிசிக்கு வர்ணனையாளராக அனுப்பி வைக்க வேண்டும். பதிலுக்கு, யுனிவர்சல் ஸ்டுடியோ, Oswald கார்ட்டூன் கேரக்டரின் உரிமையை வால்ட் டிஸ்னிக்கு திருப்பிக்கொடுக்க வேண்டும்.
Title: Re: இன்று ஒரு தகவல் 39
Post by: எஸ்கே on June 25, 2021, 06:08:26 PM
(https://i.postimg.cc/d0fsPnts/images-73.jpg) (https://postimages.org/)

இசைக்கு மயங்கும் தங்க மீன்கள்?


தங்க மீன்களின்(நான் சொல்வது நிஜமான Gold Fish..பெண் குழந்தைகளை அல்ல) ஞாபகசக்தியின் காலம் வெறும் மூன்று நொடிகள் தான் என்பது கட்டுக்கதை. உண்மையில், தங்க மீன்களின் ஞாபக சத்தி மற்ற சில மீன்களை விட அதிகம். இந்த வகை மீன்கள், தனக்கு தினமும் உணவு கொடுக்கும் மனிதரை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளக்கூடியவை. தனக்கு உணவு கொடுக்கும் மாஸ்டர் அருகில் வரும்போது அதிக உற்சாகத்துடன் இவை அங்குமிங்கும் நீந்தி சந்தோஷத்தைத் தெரிவிக்கும். கண் தெரியாத தங்க மீன்கள் கூட, தங்களுக்கு தினமும் உணவு கொடுக்கும் நபரை அவரின் குரலை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கின்றன.



குறிப்பிட்ட நிறங்களுக்கும் ஒளிகளுக்கும் குறிப்பிட்ட விதத்தில் இயங்கும்படி தங்க மீன்களுக்கு பயிற்சியளித்து ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகண்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, ஒரு குட்டி தங்க மீனுக்கு ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்கும் முன் குறிப்பிட்ட இசையை கேட்கவைத்திருக்கின்றனர். சில மாதங்கள் இப்படிச் செய்தபின் மீனை கடலில் விட்டுவிட்டனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதே இசையை மீனை விட்டுவந்த இடத்தில் இசைத்தபோது, அந்த மீன் இசை வந்த திசைநோக்கி வேகமாகத் திரும்பி வந்துவிட்டது.

தங்க மீன்கள் வளர்ப்பவர்கள் கவனத்திற்கு: மீன் தொட்டியை அடிக்கடி மாற்றுவதும், தொட்டியில் அழகுக்காக வைக்கும் பொருட்களை இடம் மாற்றி வைப்பதும், இந்தவகை மீன்களை உற்சாகமாக வைத்திருக்க உதவும் வழிகளாகும்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 40
Post by: எஸ்கே on June 26, 2021, 08:24:49 PM
(https://i.postimg.cc/rw8qhMvk/images-74.jpg) (https://postimages.org/)

பஞ்சுமிட்டாயும் பல் டாக்டரும்?


பஞ்சு மிட்டாய் தயாரிக்கப்பயன்படும் க்ரைண்டர் போன்ற அந்த மெஷினை உருவாக்க உதவியாக இருந்தது ஒரு பல் டாக்டர். 1897ஆம் ஆண்டு William Morrison என்ற பல் டாக்டரும் John C. Wharton என்ற மிட்டாய் தயாரிப்பாளரும் ஒன்றாக இணைந்து மின்சாரத்தால் இயங்கும் பஞ்சுமிட்டாய் மெஷினை கண்டுபிடித்தனர். நம்மூர் எக்ஸிபிஷன் மாதிரி அவர்களூரில் நடந்த ஒரு எக்ஸிபிஷனில் 1904ஆம் ஆண்டு இந்த மெஷினைக் கொண்டு உருவாக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்கள் மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த காலத்திலேயே ஒரு பஞ்சுமிட்டாய் 25 சென்ட்ஸ்க்கு விற்கப்பட்டது. அந்த எக்சிபிஷனுக்குச் செல்ல நுழைவுக்கட்டணமே 50 செண்ட்ஸ் தான். விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் ஆர்வமுடன் வாங்கினர். முடிவில் 68,655 பஞ்சு மிட்டாய்களை விற்று $17,163.75(தற்போதைய மதிப்பில் 4,11,000 டாலர்கள்) சம்பாதித்தனர் டாக்டரும் மிட்டாய் விற்பவரும். ஒரு பஞ்சுமிட்டாய் செய்வதற்கு அவர்களுக்குத் தேவைப்பட்ட அதிகபட்ச முதலீடு அந்த மெஷினும் இரண்டு டேபிள்ஸ்பூன்  சர்க்கரையும் மட்டும் தான்.


இதே சமயத்தில், Josef Lascaux என்ற மற்றொரு பல் டாக்டரும் இந்த மாதிரி ஒரு மெஷினைக் கண்டுபிடித்தார். ஆனால் அவர் பொதுமக்களிடம் இதை அறிமுகப்படுத்தாமல் தன் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு மட்டும் செய்து கொடுத்தார். அவர் பொதுமக்களிடையே இந்த மெஷினையும் மிட்டாயையும் அறிமுகப்படுத்தாததற்கான காரணம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை. பஞ்சுமிட்டாய்க்கு Cotton Candy என்ற பெயரை வைத்தது இந்த டாக்டர் தான். முன்னிருவர்களும் இதற்கு வைத்த பெயர் Fairy Floss.
Title: Re: இன்று ஒரு தகவல் - 41
Post by: எஸ்கே on June 27, 2021, 11:33:34 PM
(https://i.postimg.cc/mgVx4Yxn/images-76.jpg) (https://postimages.org/) (https://postimages.org/)

ஊதா கலரு கேரட்?


17ஆம் நூற்றாண்டு வரை கேரட்டுகள் ஊதா நிறத்தில்(Purple Color) இருந்தன. 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் ஊதா நிற கேரட்டுகளை நிறமாறுதலுக்கு உட்படுத்தி வெவ்வேறு வண்ணங்களில் கேரட்டுகளை உருவாக்கினர். ஆரஞ்சு வண்ண கேரட்டுகளுக்கு முன் வெள்ளை, மஞ்சள் நிறங்களில் எல்லாம் கேரட்டுகள் சோதனை முறையில் உருவாக்கப்பட்டன. கடைசியில் வெற்றிபெற்றதென்னவோ ஆரஞ்சு வண்ணம். வெள்ளை மற்றும் மஞ்சள் நிற கேரட்டுகளை ஒன்றிணைத்து தான் ஆரஞ்சு வண்ண கேரட்டுகள் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.



இரண்டாம் உலகப்போரின் போது, பிரிட்டீஷ் படைகள் ஏகப்பட்ட ஜெர்மன் விமானங்களை ராடார் உதவிகொண்டு சுட்டு வீழ்த்தின. ஜெர்மன் படை வீரர்களுக்கோ அப்போது ராடார் பற்றிய செய்தி எதுவும் தெரியாது. இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது பிரிட்டன். கேரட் அதிகமாக சாப்பிட்டால் (விமானங்களை சரியாகக் குறிவைத்து சுட்டு வீழ்த்தும் அளவுக்கு)கண்கள் நன்றாகத் தெரியும் என்று ஒரு பெரியவர் சொன்னதாகவும், அதைப் பின்பற்றியதாலேயே தங்கள் வீரர்களால் ஜெர்மன் விமானங்களைத் தாக்க முடிந்ததென்றும் ஒரு கட்டுக்கதையைக் கிளப்பிவிட்டது. ஜெர்மனியும் இதை நம்பியது, பிரிட்டீஷ் மக்களும் அப்போதிலிருந்து கேரட்டை தங்களின் தோட்டப்பயிர்களில் ஒன்றாக இணைத்துக்கொண்டனர்.

எக்கச்சக்கமாக கேரட்டுகளை மட்டும் சாப்பிட்டுக்கொண்டிருந்தால், நம் தோல் கேரட்டின் ஆரஞ்சு நிறத்திற்கு மாறிவிடும். கேரட்டிலிருக்கும் beta-carotene என்ற வேதிப்பொருளே ஆரஞ்சு வண்ணத்திற்குக் காரணம்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 42
Post by: எஸ்கே on June 28, 2021, 02:54:48 PM
(https://i.postimg.cc/L5ZdRPHc/images-77.jpg) (https://postimages.org/)

சீனப்பெருஞ்சுவர் – உலகின் மிகப்பெரிய கல்லறை?


சீனப்பெருஞ்சுவர் என்பது நாம் நினைப்பது போல் ஒரு பெருஞ்சுவர் இல்லை. சிறு சிறு சுவர்களாகக் கட்டப்பட்டு பின் ஒன்றிணைக்கப்பட்டது. இதன் முதல் பகுதி கி.மு 475ஆண்டு கட்டத்துவங்கப்பட்டது. அதற்குப்பின் சீனாவை ஆண்ட ஒவ்வொரு மன்னரும் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவின் எல்லையைப் பாதுகாக்க அதைப் பெருஞ்சுவராகக் கட்டினர்.

விண்வெளியிலிருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் தெரியும் என்று யாரோ கிளப்பிவிட, அதை சீனாவின் பாடப்புத்தகங்களிலெல்லாம் சேர்த்திருந்தார்கள். பின்னொரு நாள் சீனாவிலிருந்து விண்வெளிக்குச் சென்ற அறிஞர் ஒருவர், க்ராவிட்டி படத்தில் வருவதுபோல் விண்வெளியில் மிதந்து, சுவர் தெரியவில்லை என்று கூறியதையடுது பாடப்புத்தகங்களெல்லாம் திருத்தியமைக்கப்பட்டன.

சீனப்பெருஞ்சுவரை சீன மொழியில் “Wan-Li Qang-Qeng” என்று அழைக்கின்றனர். அப்படியென்றால் 10,000Li Long Wall என்று அர்த்தமாம். Li என்பது தோராயமாக 1/3 மைல் நீளம். 15 முதல் 30 அடி அகலமும் (சில இடங்களில்)25 அடி உயரமும் கொண்டது.

சீனப்பெருஞ்சுவரில் கடைசியாக 1983ஆம் ஆண்டு ஜப்பானுக்கும் சீனாவிற்கும் சண்டை நடந்தது. அந்தச் சண்டையின் அடையாளமாக துப்பாக்கி குண்டுகளின் தடங்கள் இன்னும் Gubeikou என்ற இடத்தில் இருக்கும் சுவரில் இருக்கின்றன.

இன்னும் 20 ஆண்டுகளில் சீனப்பெருஞ்சுவரின் ஒரு சில பகுதிகள் மறைந்துபோகலாம். மண்ணால் செய்யப்பட்ட இப்பகுதிகள் காற்றிலும் மழையிலும் கரைந்துவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

சீனப்பெருஞ்சுவரின் மற்றோரு பெயர் உலகின் மிகப்பெரிய கல்லறை..காரணம் என்னவென்றால், இச்சுவரை கட்டும் பணியில் இறந்த மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு மில்லியன்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 43
Post by: எஸ்கே on June 29, 2021, 03:37:45 PM

(https://i.postimg.cc/7LkSMB4X/images-78.jpg) (https://postimages.org/)


கே.எஃப்.சி கிறிஸ்மஸ்?


மற்ற நாடுகளைப்போல் இல்லாமல் ரஷ்யாவிலும் உக்ரைனிலும் கிறிஸ்மஸ் ஜனவரி 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காரணம் வேறொன்றும் இல்லை. இந்த இரு நாடுகளிலும் உள்ள தேவாலயங்கள் இன்னும் பழைய ஜூலியன் காலண்டர்களையே பண்டிகை நாட்களை அறிவிக்கப் பயன்படுத்துகின்றன. இங்கு 39 நாட்களுக்கு முன்பே மக்கள் கிறிஸ்மஸை வரவேற்க விரதமிருக்கின்றனர். கிறிஸ்மஸின் முதல் நாள் இரவு, வானில் முதல் நட்சத்திரம் தோன்றியவுடன் 12 வகையான உணவுகளுடன் இவர்களது இரவு விருந்து தொடங்குகிறது.



ஜப்பானில் கிறிஸ்மஸுக்கு முதல்நாள் பாரம்பரிய இரவு உணவு KFC சிக்கன். ஆமாம்..KFC சிக்கனே தான். கடைசி நேரத்தில் சிக்கன் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வதென்று, KFCயில் எக்கச்சக்கமான முன்பதிவுகள் நடக்கும்.

ஸ்லோவாகியாவில் கிறிஸ்மஸ் தினத்தின் முத்தைய நாள் இரவு உணவின் போது, சாப்பிடுவதற்கு முன் குடும்பத்தலைவர் Loksa என்ற உணவில் ஒரு ஸ்பூன் எடுத்து மேலே தூக்கிப்போடுகிறார். இந்த Loksa உணவு நம்மூர் தீபாவளி லேகியம் போல் கிறிஸ்மஸுக்காகவே ப்ரெட், கசகசா(Poppy Seeds) மற்றும் தண்ணீர் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
Title: Re: இன்று ஒரு தகவல் - 44
Post by: எஸ்கே on June 30, 2021, 04:54:36 PM
(https://i.postimg.cc/qqsPCQSp/images-79.jpg) (https://postimages.org/)

கோழியா முட்டையா?


கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா என்ற ஆராய்ச்சியை ஒரு பக்கம் வைத்துவிட்டு, ஆரஞ்சு என்ற பெயர் முதலில் பழத்திற்கு வந்ததா அல்லது நிறத்திற்கு வந்ததா என்று பார்க்கலாம். ஆரஞ்சு என்ற பெயர் முதன்முதலில் ஆரஞ்சு பழத்திற்கு தான் வந்தது. 1300களில் ஆரஞ்சு பழத்திற்கு இந்தப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. Orange என்ற வார்த்தையின் ஆதி என்னவென்று ஆராய்ந்தால், நாம் வந்து நிற்பது சமஸ்கிருதத்தில். orenge என்ற ப்ரெஞ்ச் வார்த்தையிலிருந்து வந்தது orange. இந்த ப்ரெஞ்ச் வார்த்தையின் மூலம் அராபிக், செரிபியன் என சுற்றிவிட்டு கடைசியில் n?ranga என்ற சமஸ்கிருத வார்த்தையில் வந்து நிற்கிறது.


ஆரஞ்சு நிறத்திற்கு இந்தப்பெயர் சூட்டப்பட்டது 1500களில் தான். பெயரில்லாமல்(அல்லது “yellow-red” என்ற பெயரில்) இருந்த நிறந்திற்கு ஆரஞ்சு பழம் பிரபலமானதற்குப் பின் ஆரஞ்ச் என்ற பெயரை வைக்கப்பட்டது.. ஒன்று தெரியுமா? ஆரஞ்சு வண்ணத்திற்கு நம் சிந்தனைகளை ஒருங்கிணைக்கும் பவர் இருக்கிறது. ஆரஞ்சு வண்ண இரு/நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் விளையாட்டுதனம் கொண்டவர்களாகவும் புதிய  ஸ்டைல்களை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 45
Post by: எஸ்கே on July 01, 2021, 04:03:52 PM
(https://i.postimg.cc/zByWZCQg/images-83.jpg) (https://postimages.org/)

ஆலிவ் பழங்கள்?


15 கிராம் பச்சை நிற ஆலிவ் 20 கலோரிகளையும், 15 கிராம் கருப்பு நிற ஆலிவ் 25 கலோரிகளையும் கொண்டிருக்கின்றன. ரெண்டுமே ஆலிவ் தானே பிறகேன் வித்தியாசம்? கருப்பு நிற ஆலிவ் பழத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயே அதிலிருக்கும் அதிக கலோரிகளுக்குக் காரணம்.


கருப்பு நிற ஆலிவ் பழங்கள் மரத்திலேயே கனிய வைக்கப்பட்டு பின் பறிக்கப்படுகின்றன. மாறாக கனிவதற்கு கொஞ்சம் முன்னதாகவே பறிக்கப்பட்டு, அவற்றிலிருக்கும் கசப்புத் தன்மை குறைவதற்காக 6 முதல் 12 மாதங்களுக்கு  பதப்படுத்தப்படுகின்றன பச்சை நிற ஆலிவ்கள். பதப்படுத்தப்பட்ட கருப்பு நிற ஆலிவில் இருப்பதை விட பதப்படுத்தப்பட்ட  பச்சை நிற ஆலிவில் இரண்டு மடங்கு சோடியம் இருக்கிறது. ஆலிவ் மரங்கள் அதிகபட்சமாக 2000 வருடங்கள் வரை உயிர் வாழும். உண்மையில், ஆலிவ் எண்ணெய் என்பது எண்ணெய் அல்ல. ஆலிவ் பழத்திலிருந்து எடுக்கப்படும் பழச்சாறு. “Extra virgin” என்பது, ஆலிவ் பழங்களிலிருந்து எடுக்கப்படும் முதல்தர எண்ணெய்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 46
Post by: எஸ்கே on July 02, 2021, 11:32:48 PM
(https://i.postimg.cc/W1m58gjq/images-86.jpg) (https://postimages.org/)

சட்டைல என்ன? பூனை சார்.. அதிலென்ன அவ்வளவு பெருமை??

அமெரிக்காவின் சி.ஐ.ஏ, கிட்டத்தட்ட 20 மில்லியன் டாலர்கள் செலவு செய்து ஒரு பூனையை சீக்ரட் ஏஜண்ட்டாக தயார் செய்தது. கரெக்ட்டு..பூனை தான். பூனையை எல்லோரும் செல்லப்பிராணியாகவே பார்க்கும் மனோபாவம் இருப்பதால், அதன் மேல் யாருக்கும் அவ்வளவு எளிதில் சந்தேகம் வராது என்று நினைத்த சி.ஐ.ஏ, 1960ஆம் ஆண்டு இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டது. ஒரு பெண் பூனையின் காதில் சிறிய மைக்கையும், அதன் உடலில் ஒரு ட்ரான்ஸ்மிட்டரையும் பொருத்தி அதை ஒரு சீக்ரெட் ஏஜண்ட்டாகத் தயார் செய்தது சி.ஐ.ஏ.. பூனையின் உருவ அளவைக் கணக்கில் கொண்டு, சிறிய உரையாடல்களை மட்டுமே பதிவுசெய்யக்கூடிய திறன் கொண்ட சின்ன பேட்டரியும் ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டது.



இவை அனைத்தையும் விட, பூனைக்கு பயிற்சி கொடுப்பதுதான் சி.ஐ.ஏவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. தன் மீது பொருத்தப்பட்டிருக்கும் கருவிகளை, பூனை மறந்தும்(!) வீணாக்கிவிடக்கூடாது, கருவிகள் வெளியில் தெரியக்கூடாது, குறித்த நேரத்தில் சொல்லும் வேலையைச் செய்ய வேண்டும்; இதெல்லாம் தான் சி.ஐ.ஏ கொடுத்த பயிற்சிகள். ஐந்து வருட பயிற்சிக்குப் பின், பூனை எப்படி வேலை செய்கிறது என்று சோதித்துப் பார்க்க விரும்பிய சி.ஐ.ஏ அதிகாரிகள், சாலையில் மறுபக்கம் இருந்த ஒரு பார்க் பென்ச்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இருவர்களை நோக்கிச் செல்லுமாறு கட்டளையிட்டு பூனையை கீழே விட்டனர். வேகமாக சாலையைக் கடந்த 20 மில்லியன் டாலர் ஏஜண்ட், டாக்ஸி ஒன்றில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்து போனது. அதோடு சி.ஐ.ஏவின் “பூனை சீக்ரெட் ஏஜண்ட்” முயற்சியும் முடிந்துபோனது.
Title: Re: இன்று ஒரு தகவல் - 47
Post by: எஸ்கே on July 03, 2021, 11:50:23 AM
(https://i.postimg.cc/K8nrcXj7/images-87.jpg) (https://postimages.org/)

ஹைட்ரஜன் சயனைடு பாதாம் பருப்பு?


பாதாம் பருப்பில் இனிப்பு, கசப்பு என்று இரண்டு வகைகள் உள்ளன. இதில் இனிப்பு வகை பாதாம்தான் நாம் உபயோகிக்கக்கூடியது. கசப்பான பாதாம் நச்சுத்தன்மை வாய்ந்தது. இந்த வகை பாதாமில் glycoside amygdalin என்ற வேதிப்பொருள் இருக்கிறது. நம் உடலினுள் சென்றவுடன் இவ்வேதிப்பொருள் ஹைட்ரஜன் சயனைடாக மாறி, நம்மைத் தின்றுவிடுகிறது. இந்த ஹைட்ரஜன் சயனைடு தான் ஹிட்லரின் நாசி கேம்ப்களில் தண்டனைகளை நிறைவேற்றப் பயன்பட்ட விஷவாயுவில் அதிக அளவு உபயோகப்படுத்தப்பட்டது.


நம் உடம்பில் ஒரு கிலோவில் விஷத்தை ஏற்ற, 1.2 மில்லிகிராம் ஹைட்ரஜன் சயனைடு போதுமானது. அப்படிப்பார்த்தால், ஓரிரு கைப்பிடிகள் நச்சுத்தன்மையுடைய பாதாம் போதும், நமக்கு மொத்தமாக டாட்டா சொல்ல.  ஆகவே மக்களே, யாராவது, இது பாதாம் மரம் என்று சொன்னால், அதன் பாதாமை அவசரப்பட்டு சாப்பிட்டுவிடாதீர்கள்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 48
Post by: எஸ்கே on July 04, 2021, 05:35:04 PM
(https://i.postimg.cc/DZgs5T2c/images-90.jpg) (https://postimages.org/)

கண்ணு கெட்டுப்போய்டும் கண்ணா?


பயங்கர சுவாரஸியமான புத்தகம் ஏதாவதொன்றை கீழே வைக்க மனமில்லாமல் படித்துக்கொண்டிருக்கும் நாளில், அம்மா முதல் அந்த வழியாகக் கடந்து செல்லும் வாண்டூஸ் வரை “குறைவான வெளிச்சத்தில் புத்தகம் படிக்காதே.. கண்ணு கெட்டுப்போய்டும்” என்று அட்வைஸ் மழை பொழிந்திருப்பார்கள். “என்னைக்காவது பாடபுத்தகத்தை இப்படிப் படிச்சிருப்பியா” என்று போகிறபோக்கில் சந்தில் சிந்துபாடும் வேலைகளும் நடந்தேறும். உண்மை என்னவென்றால், குறைவான வெளிச்சத்தில் புத்தகம் படிப்பதால் நம் கண் பார்வையில் எந்தப் பிரச்னையும் வராது. வரும் என்று இதுவரை எந்த அறிவியல் ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை. குழந்தைகளைச் சீக்கிரம் தூங்கவைக்க, பெற்றோர்கள் கண்டுபிடித்த ட்ரிக்காக இருக்கலாம் இந்தக் “கண் கெட்டுவிடும்” கதை.

குறைவான வெளிச்சத்தில் படிப்பதால், கண்கள் சோர்வடைந்துவிடும் என்பது மட்டுமே உண்மை. அதற்குக் காரணமும் நாமறிந்ததே. அதிக வெளிச்சத்தில் படிப்பதை விட, குறைந்த வெளிச்சத்தில் படிக்கும்போது நம் கவனம் புத்தகத்திலிருக்கும் வார்த்தைகள் மீது அதிகம். கண்களும் ஓவர் டைம் வேலை செய்தாகவேண்டிய கட்டாயம். இதனால் கண்களுக்கு வரும் சோர்வு, இரண்டு நாட்கள் நன்றாகத் தூங்கி எழுந்தால் தானாகவே சரியாகிவிடும்.

இடைவிடாமல் தொடர்ந்து பொட்டி தட்டிக்கொண்டிருப்பவர்களுக்கும், உற்றுப்பார்த்தே வேலை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கும் நாளடைவில் கண் பார்வையில் குறைபாடு ஏற்படும். ஈபுக்ஸ் படிக்கவேண்டும் என்றால், இருட்டில் கம்ப்யூட்டரிலோ, டேப்லெட்டிலோ படிப்பதை விட, வெளிச்சத்தில் படிப்பது சாலச்சிறந்தது.  அல்லது ஈ-இங்க் ரீடர்களிலோ படிப்பது பிரச்னை இல்லாதது.
Title: Re: இன்று ஒரு தகவல் - 49
Post by: எஸ்கே on July 05, 2021, 01:11:31 PM
(https://i.postimg.cc/zXyxmSsD/images-91.jpg) (https://postimages.org/)


தினமும் ஒரு ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லி?


Vaseline என்றழைக்கப்படும் பெட்ரோலியம் ஜெல்லியை யாராவது தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுவோமா? பெட்ரோலியம் ஜெல்லியைக் கண்டுபிடித்த Robert Augustus Chesebrough, தான் இறக்கும்வரை(இறந்தது 96வது வயதில்) அதைத்தான் செய்திருக்கிறார். எண்ணெய் உற்பத்தி அதிகரித்த 19 நூற்றாண்டின் இறுதியில்,  எண்ணெய் கிணறுகளில் உபயோகப்படுத்தப்பட்ட துளையிடும் கருவிகளின் மேல் வழவழப்பான பொருள் ஒன்று ஒட்டிக்கொள்வதாகவும், கருவியின் செயல்பாட்டை அது பாதிப்பதாகவும், அவற்றை  இயக்கியவர்கள் புகார் கூறினர்.


எண்ணெய்க் கிணறுகளில் வேலை செய்தவர்களோ, வழவழப்பான அந்த ஜெல்லியைத் தடவினால் காயங்கள் விரைவில் குணமடைவதாகக் கூறினர். இதன் பிறகே ராபர்ட், பெட்ரோலியம் ஜெல்லியைத் தனியாகப் பிரித்தெடுக்கும் ஆய்வுகளில் இறங்கி, வெற்றிபெற்று, ஜெல்லியை “Vaseline” என்ற பெயரில் விற்கத் துவங்கினார். ஒரு காலத்தில் நம்மூர் Franch Oil எப்படி “அனைத்தையும்” குணப்படுத்தும் தன்மை இருப்பதாகச் சொல்லி விளம்பரப்படுத்தப்பட்டதோ, அதே மாதிரி பெட்ரோலியம் ஜெல்லியையும் ”Miracle Cure” என்று சொல்லி ராபர்ட் விளம்பரப்படுத்தினார். தன் உடல் முழுவதும் ஜெல்லியைப் பூசிக்கொண்ட அவர், அது இதயத்தை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுவதாகக் கூறினார். ஜெல்லி காயங்களைக் குணப்படுத்த உதவுவதை நிரூபிக்க, தன் கைகளில் காயங்களை ஏற்படுத்தி அவற்றுக்கு  ஜெல்லியை மருந்தாகத் தடவினார். இந்த வரிசையில் தான் அவர் தினமும் ஒரு ஸ்பூன் ஜெல்லியை உட்கொண்ட நிகழ்வும் வருகிறது. தயவு செய்து இதை நீங்களும் இதை முயற்சி செய்ய வேண்டாம்....
Title: Re: இன்று ஒரு தகவல் - 50
Post by: எஸ்கே on July 06, 2021, 03:21:04 PM
(https://i.postimg.cc/8PrMwGfS/images-92.jpg) (https://postimages.org/)

சார்லி சாப்ளினும் ஆறடி கான்க்ரீட்டும்?


சார்லி சாப்ளின் இறந்த மூன்று மாதங்களில் அவரின் உடலை திருடர்கள் திருடிக்கொண்டு சென்றுவிட்டனர். 1977ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று, கல்லறையிலிருந்து சாப்ளினின் உடல் காணாமல் போய்விட்டது. அவருடைய குடும்பத்தினரிடமிருந்து பணம் பிடுங்கும் நோக்கத்தில் இரண்டு திருடர்கள் இந்த வேலையைச் செய்தனர். 11 வாரங்களுக்குப் பிறகு, திருடர்களைப் பிடித்து உடல் மீட்கப்பட்டது. இதே மாதிரி மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அவரின் உடல் 6 அடி கான்க்ரீட் குழியில் இரண்டாம் முறை புதைக்கப்பட்டது.


ஒருமுறை மாறுவேடப்போட்டியில் தன்னைப்போலவே வேடமிட்டு மூன்றாவது பரிசை(த்தான்) வென்றிருக்கிறார் சாப்ளின். ஹிட்லர் பிறப்பதற்கு சரியாக 4 நாட்கள் முன் பிறந்த சாப்ளினின் உண்மையான பிறந்த தினம் ஏப்ரல் 16ஆம் தேதி 1889 ஆண்டு. கடைசிவரை அமெரிக்கக்குடியுரிமை வாங்காமல் மறுத்து, நாட்டிலிருந்து வெளியேறி சுவிசர்லாந்தில் வாழ்ந்தார்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 51
Post by: எஸ்கே on July 07, 2021, 03:21:34 PM
(https://i.postimg.cc/yNCsBKLB/images-93.jpg) (https://postimages.org/)

மார்ஸ் & முர்ரே சாக்லெட்ஸ்?



எம்&எம் சாக்லெட்டில் இருக்கும் இரண்டு Mகளுக்கும் சொந்தக்காரர்கள் யார் தெரியுமா? MARS சாக்லெட் கம்பெனியின் Forrest Mars Sr. மற்றும் HERSHEY’S சாக்லெட் கம்பெனியின் Bruce Murrie இருவரும்தான். எம்&எம் சாக்லெட் ஐடியா, மார்ஸ் சாக்லெட் நிறுவனத்தின் Forrest Mars Sr. அவர்களுடையது. 1941ஆம் ஆண்டு, உள்ளே மிருதுவான சாக்லெட்டுடன் வெளிப்பக்கம் கொஞ்சம் கடினமாக இருப்பதுபோல் சிறுவர்களுக்கான சாக்லெட் ஒன்றை உருவாக்குவது என்று முடிவுசெய்தவுடன் Forrest Mars செய்த வேலை, Hershey நிறுவனத்தின் Bruce Murrie அவர்களைச் சந்தித்து, தங்கள் நிறுவனத்திற்கு சாக்லெட் தரமுடியுமா என்று கேட்டது.


இரண்டாம் உலகப்போரினால் சாக்லெட்டுக்கு பஞ்சம் வரலாம் என்று Forrest Mars Sr. எதிர்பார்த்ததாலேயே மற்றொரு சாக்லெட் நிறுவனத்திடம் சாக்லெட் இறக்குமதி செய்யச்சொல்லிக் கேட்டார். இதற்காக அவர், எம்&எம் பங்குகளின் 20 சதவீதத்தை Bruce Murrieவுக்குக் கொடுத்துவிடவேண்டியது. அவர் எதிர்பார்த்ததுபோலவே சாக்லெட்டுக்குத் தட்டுப்பாடு வந்தது. வருடங்கள் சென்றபின், சாக்லெட் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கத் தொடங்கியபோது, Hershey’s வைத்திருந்த 20 சதவீத பங்குகளை மார்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டாலும், பெயர் மட்டும் மாறாமல் இன்றுவரை தொடர்கிறது.
Title: Re: இன்று ஒரு தகவல் - 52
Post by: எஸ்கே on July 08, 2021, 05:12:47 PM
(https://i.postimg.cc/43m1TS8s/images-95.jpg) (https://postimages.org/)

சூது கவ்வும்?


1971ஆம் ஆண்டு 94 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் துவங்கப்பட்ட FedEx(Federal Express) கம்பெனி 3 வருடங்களுக்குப் பிறகு, திவாலாகும் நிலமைக்கு வந்துவிட்டது. வெறும் ஐந்தாயிரம் டாலர்களை மட்டுமே வைத்துக்கொண்டு, தங்களின் விமானங்களுக்கு எரிபொருள் வாங்கக்கூட காசில்லாமல் இருந்த நேரத்தில், அதன் நிறுவனர் Fred Smith ஒரு காரியம் செய்தார். இருந்த ஐந்தாயிரம் டாலர் பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு வாரயிறுதியில் லாஸ் வெகாஸ் நகருக்குச் சென்று சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் தொடர்ந்து Black Jack விளையாடினார். திங்கள்கிழமை காலை, கம்பெனி அக்கவுண்ட்டில் சேர்ந்திருந்த பணம் எவ்வளவு தெரியுமா? 32,000 டாலர்கள். FedEx நிறுவனம் மூடப்படாமல் தடுத்தது இந்தப்பணம்.


இப்படி பொறுப்பில்லாமல் கம்பெனி காசை வைத்து சூதாடலாமா என்று மற்றவர்கள் கேள்வியெழுப்பியபோது, ஸ்மித், “அந்த 5000 டாலர்கள் இருந்திருந்தால் மட்டும் கம்பெனியைத் தொடர்ந்து நடத்தியிருக்கமுடியுமா? பணம் கொடுக்கவில்லை என்றால், எப்படியும் நமக்கு எரிபொருள் கிடைக்காது. எதுவுமே செய்யாமல் தோற்பதை விட, ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாமே என்றுதான் சூதாடினேன்” என்று பதில் சொன்னார். இது நடந்த கொஞ்ச நாட்களுக்குப் பிறகு புதிய முதலீட்டாளர்களிடமிருந்து 11 மில்லியன் டாலர் நிதியைத் திரட்டிய FedEx, 1976ஆம் ஆண்டு தன் முதல் லாபக்கணக்கை 3.6 மில்லியன் டாலர்களுடன் தொடங்கியது.
Title: Re: இன்று ஒரு தகவல் - 53
Post by: எஸ்கே on July 09, 2021, 08:45:14 AM
(https://i.postimg.cc/GtS2ZVSX/images-97.jpg) (https://postimages.org/) (https://banks-nearme.com/bank-of-america-near-me)


விவாகரத்து டீலிங்?



அறிவியல் மேதை ஐன்ஸ்டின் தன் (முதல்)மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா? இதெல்லாம் அவர்களுக்குச் ஜகஜம் தானே, இதிலென்ன சுவாரஸ்யமான செய்தி இருந்துவிடப்போகிறது என்கின்றீர்களா? விவாகரத்தை விட, அதைப் பெறுவதற்கு தன் மனைவியிடம் அவர் செய்துகொண்ட ஒப்பந்தம் தான் இதை ஸ்பெஷல் செய்தியாக மாற்றியது.


அதென்ன ஒப்பந்தம்? தான் எழுதிய அறிவியல் கட்டுரைகளுக்கும், தன் கண்டுபிடிப்புகளுக்கும் என்றாவது ஒரு நாள் நோபல் பரிசு கிடைக்கும் என்றும், அப்படிக் கிடைக்கும்போது அதில் வரும் பணத்தில் ஒரு பகுதியை விவாகரத்துக்கான தொகையாக அவர் எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஐன்ஸ்டின் மனைவிடம் சொல்லியிருக்கிறார். ஐன்ஸ்டினின் எழுத்துகளின் மீதும், அவரின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் மீதும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த அவர் மனைவி, ஒரு வார யோசனைக்குப் பின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாகக்கூறி, விவாகரத்துக்குச் சம்மதம் தெரிவித்தார். 1905ஆம் ஆண்டு ஐன்ஸ்டின் எழுதிய அறிவியல் கட்டுரைகளுக்காக 1921ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஒப்பந்தத்தின் படி, நோபல் பரிசால் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை தன் முன்னாள் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்தார் ஐன்ஸ்டின். மீதியை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் முதலீடு செய்து, அதில் பெரும்பகுதியை “Great Depression” நாட்களில் இழந்தார்
Title: Re: இன்று ஒரு தகவல் -54
Post by: எஸ்கே on July 10, 2021, 04:06:31 PM
(https://i.postimg.cc/yYv5w4CY/images-98.jpg) (https://postimages.org/)

ஆஸ்திரேலியா?



ஆஸ்திரேலியாவின் ஆரம்பகாலப் பெயர் என்ன தெரியுமா? Terra Australis Incognita. இந்த லத்தீன் மொழிப்பெயருக்கு, ”தென் பகுதியிலிருந்த தெரியாத நிலப்பரப்பு( The Unknown land in the south)” என்று அர்த்தம். பழங்காலத்தில் ரோமானிய மக்கள், தென் பகுதியில் ஒரு கண்டம்/நாடு/நிலப்பரப்பு இருப்பதாக நம்பினார்கள். ஆனால், போதுமான பயண வசதிகள் இல்லாத காரணத்தால், உண்மையாகவே அப்படி ஒரு இடம் இருக்கிறதா என்று அவர்களால் உறுதிசெய்ய முடியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பியர்கள்  Terra Australis இருப்பதைக் கண்டுபிடித்தனர். Terra Australis என்ற பெயரைச் சுருக்கி ஆஸ்திரேலியா என்று பல வருடங்கள் அழைக்கப்பட்டிருந்தாலும், 1824ஆம் வருடம் தான், “ஆஸ்திரேலியா” என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அந்த நாட்டிற்கு வழங்கப்பட்டது.
Title: Re: இன்று ஒரு தகவல் - 55
Post by: எஸ்கே on July 11, 2021, 03:51:18 PM
(https://i.postimg.cc/3JVmSy2m/images-100.jpg) (https://postimages.org/)

பாம்புகளின் தீவு?


பிரேசிலின் கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு தீவுக்குப் பெயர் Ilha da Queimada Grande. ஆங்கிலத்தில் Snake Island. இந்தத் தீவில் மனிதர்கள் வாழ தடைவிதிக்கப்பட்டுள்ளது. காரணம் வேறொன்றும் இல்லை. இங்கிருக்கும் பாம்புகள் தான். உலகிலேயே கொடிய விஷமுடைய பாம்புகளில் ஒன்றான Golden Lancehead Pit-viper, இந்தத் தீவில் எக்கச்சக்கமாக உள்ளன. எக்கச்சக்கம் என்றால், ஒரு சதுர மீட்டருக்கு ஒரு பாம்பு(இந்நேரம் 2 அல்லது 3) என்ற கணக்கில்.


இந்தவகைப் பாம்புகளில் இருக்கும் விஷத்தில் ஐந்தில் ஒரு பங்கு(மட்டுமே) விஷமுடைய fer-de-lance வகைப் பாம்புகள் தான் தென் அமெரிக்காவில் பாம்புகளால் நிகழும் 80% மரணங்களுக்குக் காரணமானவை என்றால்,  Golden Lancehead Pit-viper பாம்புகளின் விஷம் எப்படியிருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள். கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த Golden Lancehead Pit-viper பாம்புகளைத் தவிர, இத்தீவில் வேறெந்தவகைப் பாம்புகளும் இல்லை.

பிரேசில் அரசு, இங்கு வாழை மரங்களைப் பயிரிடவும், மக்களைக் குடியமர்த்தவும் செய்துவந்த முயற்சிகள் அனைத்தும் இப்பாம்புகளால் தடைபட்டு நிற்கின்றன. இதையும் தாண்டி, இந்தத் தீவை நீங்கள் பார்வையிட விரும்பினால், பிரேசிலின் கடற்படையினர் உங்களை தீவுக்கு 100 மீட்டர் தொலைவில் இறக்கிவிடுவார்கள். அங்கிருந்து படகிலோ, நீந்தியோ ஒரு விசிட் சென்றுவரலாம். ரெடியா மக்களே? 😉 :)

Title: Re: இன்று ஒரு தகவல் - 56
Post by: எஸ்கே on July 12, 2021, 09:05:44 AM
(https://i.postimg.cc/ncLGpYqT/images-2021-07-12-T085952-471.jpg) (https://postimages.org/)

நில்! கவனி! செல்!

முதன் முதலில் இங்கிலாந்து ரயில்வே கம்பெனிகள் தான் சிக்னலுக்காக வண்ண விளக்குகளை உபயோகப்படுத்தத் துவங்கினர். 1830 ஆம் ஆண்டு முதல்  புகைவண்டிகளை இயக்குபவர்களுக்கு எப்போது ரயிலை நிறுத்த/இயக்க வேண்டும் என்று சொல்வதற்காக இந்த முறை ரயில்வே நிர்வாகங்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

அன்று முதல் இன்று வரை, அபாயத்தைக் குறிப்பதால் சிவப்பு நிறம் “நில்” என்று சொல்ல தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் “செல்” என்று சொல்ல பச்சை நிறத்திற்கு பதிலாக வெள்ளை நிறமே உபயோகிக்கப்பட்டது. லண்டனில் 1914ஆம் ஆண்டு, சிவப்பு நிறத்திற்காக விளக்கின் மீது வைக்கப்பட்டிருந்த மூடி கழண்டு கீழே விழுந்துவிட, வெள்ளை நிற விளக்குதான் ஒளிர்கிறது என்று தவறாகப் புரிந்துகொண்ட புகைவண்டி ஓட்டுனர் வண்டியை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று மற்றொரு ரயிலின் மீது நேருக்குநேர் மோதிவிட்டார். அந்த விபத்திற்குப் பிறகுதான், “செல்” என்பதற்கு பச்சை நிறம் கொடுக்கப்பட்டது. அதோடு சேர்ந்து புதிதாக “கவனி” என்று அறிவிக்க மஞ்சள் நிற விளக்குகளும் வைக்கப்பட்டன. மஞ்சள் நிறம் தேர்ந்தெடுக்கப்படக்காரணம், மற்ற இரு வண்ணங்களிலிருந்தும் அதிக வித்தியாசமாக இருப்பதால் தான்.

1860களில் லண்டன் மாநகரில் குதிரையில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், சாலைகளைக் கடக்கும் பாதசாரிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகினர்.  எப்படி விபத்துகளைத் தடுக்கலாம் என்று அரசாங்கம் யோசித்துக்கொண்டிருந்தபோது , John Peake Knight என்ற ரயில்வே எஞ்சினியர்(மற்றும் மேனேஜர்) ரயில்வேயில் பயன்படுத்தும் அதே வண்ண விளக்குகள் முறையை ஏன் சாலைகளிலும் உபயோகிக்கக்கூடாது என்று ஐடியா கொடுத்தார். அவரின் ஐடியா ஏற்றுக்கொள்ளப்பட்டு 1868ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள், முதல் ட்ராஃபிக் சிக்னல் லண்டன் பாராளுமன்றத்துக்கு அருகில் நிறுவப்பட்டது
.
Title: Re: இன்று ஒரு தகவல் - 57
Post by: எஸ்கே on July 13, 2021, 06:55:12 PM
(https://i.postimg.cc/9QCYCnNQ/images-2021-07-13-T185233-796.jpg) (https://postimages.org/)

77 வருட சீக்ரெட்?


ஒலிம்பிக் போட்டிகளின்போது பறக்கவிடப்படுவதற்காக முதன்முதலில் ஒலிம்பிக் சின்னத்துடன் தயாரிக்கப்பட்ட கொடி 1920ஆம் வருடம் பெல்ஜியம் நாட்டில் போட்டிகள் நடத்தப்பட்டபோது காணாமல் போய்விட்டது. இது நடந்து 77 ஆண்டுகளுக்குப் பிறகு 1997ஆம் வருடம் Hal Haig Prieste என்ற ஒலிம்பிக் வீரரை, அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர் சந்தித்து பேட்டியெடுத்தார். பேட்டியின் நடுவில் பத்திரிக்கையாளர் கொடி காணாமல் போனதைப் பற்றி பேச, 1920ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் பெற்ற அந்த ஒலிம்பிக் வீரர் பதட்டப்படாமல், “அந்தக்கொடி என் பெட்டியில்தான் இருக்கிறது” என்று சொன்னது மட்டுமல்லாமல், அதை அவருக்குக் காட்டவும் செய்தார்.


தன் சக போட்டியாளர் Duke Kahanamoku “உன்னால் யாருக்கும் தெரியாமல் அந்தக்கொடியை எடுக்க முடியுமா” என்று சவால் விட்டதே தான் கொடியை எடுத்ததற்கான காரணம் என்று சொன்ன Hal Haig, இனி நீண்ட நாட்களுக்கு உயிர்வாழ முடியாது என்று நினைத்ததாலேயே உண்மையை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். உண்மையை வெளிப்படுத்தியபோது அவருக்கு வயது 101. இந்த நிகழ்ச்சி நடந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, 2000ஆம் ஆண்டு அந்த ஸ்பெஷல் கொடியை ஒலிம்பிக் கமிட்டியிடம் ஒப்படைத்தார் அவர். சுவிஸர்லாந்தில் இருக்கும் ஒலிம்பிக் மியூசியத்தில் இன்றும் பாதுகாக்கப்படும் அந்தக்கொடியை பத்திரமாக சேதமடையாமல் திருப்பித்தந்ததற்காக Hal Haigக்கு நன்றி(!) தெரிவித்தது ஒலிம்பிக் கமிட்டி.
Title: Re: இன்று ஒரு தகவல் - 58
Post by: எஸ்கே on July 14, 2021, 05:00:02 PM
(https://i.postimg.cc/0NswmL5f/05943e87105835c2783c92c35c94350b.jpg) (https://postimages.org/)

காணாமல் போன கேப்டன்?


1872ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரிட்டீஷ் கடற்படையைச் சேர்ந்தவர்கள் “Mary Celeste(a.k.a The Amazon) என்ற கப்பலை கடலில் கண்டுபிடித்தனர். கப்பலில் நீண்ட நேரத்திற்கு ஆள் நடமாட்டம் இல்லாமல் போகவே, கப்பலுக்குள் சென்று பார்க்க முடிவு செய்தனர். ஏற்றப்பட்ட சரக்குகள் அனைத்தும் அப்படியே இருக்க, கப்பலில் இருந்த மனிதர்களும் உயிர் காக்கும் படகும் சில டாக்குமெண்ட்ஸும், திசை காட்டும் கருவியும் மட்டும் மிஸ்ஸிங். கப்பலில் பணி செய்தவர்கள் என்ன ஆனார்கள் என்று ஆளாளுக்கு ஒரு புரளியைக் கிளப்பிவிட்டுக்கொண்டிருந்தனர்.  ஏற்கனவே இந்தக்கப்பலில் தலைமை தாங்கிய கேப்டன்கள் சிலரின் மர்ம மரணம், பெர்முடா முக்கோணம், கடல் கொள்ளையர்கள் என கணக்கில்லாமல் சென்றுகொண்டிருந்த கட்டுக்கதைகளுக்கு நடுவில் அறிவியல் சார்ந்து ஒரு விளக்கம் தரப்பட்டது.


நிஜத்துக்குக் கொஞ்சம் அருகில் இருந்த இந்த அறிவியல் விளக்கம் உண்மையாகவும் இருக்கலாம் என்று இன்றுவரை நம்பப்படுகிறது. அதென்ன அறிவியல் விளக்கம் என்கின்றீர்களா? கப்பலில் 1701 பேரல்களில் ஆல்கஹால் இருந்தது. அவற்றில் 9 பேரல்கள் Red Oak என்ற மரத்தால் ஆனவை. மற்ற பேரல்கள் White Oak மரத்தால் ஆனவை. இந்த ரெட் ஓக் மரத்தால் ஆன பேரல்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஆல்கஹால், மரத்தின் தன்மையால் ஆவியாகி காணாமல் போய்விட்டது. ஆரம்பத்திலேயே, அதிகம் தீப்பிடிக்கும் தன்மைகொண்ட ஆல்கஹால் பேரல்களை அவசியம் எடுத்துச் செல்லவேண்டுமா என்று சந்தேகத்துடனே வந்த கேப்டன், 9 பேரல்களில் இருந்த ஆல்கஹால் ஆவியானவுடன், கப்பல் தீப்பிடித்துவிடுமோ என்று பயந்து கப்பலை விட்டுவிட்டு மற்ற பணியாளர்களுடன் தப்பித்திருக்கலாம் என்ற விளக்கம் தான் அது. கேப்டனின் பெயர் Benjamin Briggs. இந்த அறிவியல் விளக்கத்தில் இருந்த ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால், தன் வாழ்நாளில் பெரும்பகுதியை கப்பலிலேயே செலவழித்த, இதற்கு முன் 5 கப்பல்களுக்கு கேப்டனாகப் பணியாற்றிய பெஞ்சமினும் அவருடன் சேர்ந்து தப்பித்தவர்களும் அதற்கு பின் கண்டுபிடிக்கப்படவே இல்லை. கப்பல் என்ன ஆயிற்று? பிரிட்டீஷ் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கப்பலும் அதிலிருந்த சரக்குகளும் வெற்றிகரமாக விற்கப்பட்டு பணமாக்கப்பட்டன.
Title: Re: இன்று ஒரு தகவல் - 59
Post by: எஸ்கே on July 15, 2021, 02:36:52 PM
(https://i.postimg.cc/pd1D6zSP/nwdn-file-temp-1626339854507.jpg) (https://postimg.cc/jWPwWwK1) (https://treetop100babynames.com/exotic-baby-names-boys)


ரெயின்போ தெரியும்.. அதென்ன மூன்போ?


சூரியஒளி வான்வெளியில் நீர்த்துளிகளைக் கடந்துவரும்போது மட்டும் வானவில் ஏற்படுவதில்லை.. நிலவொளியிலிருந்தும் வானவில் தோன்றும். நிலவின் ஒளி வான்வெளியில் நீர்த்துளிகளைக் கடந்து வரும்போது ஏற்படும் வானவில்லின் பெயர் “Moonbow”. காலைவேளையிலும், மாலையிலும் தான் வானவில் அதிகம் தோன்றும். காரணம், சூரியஒளிக்கற்றை 42 டிகிரி கோணத்தில் நீர்த்துளிகளைக் கடக்கும்போது மட்டுமே வண்ணங்களைக் காணமுடியும். அதனால்தான் உச்சிவெயில் வேளையில் வானவில் அதிகம் வருவதில்லை.

நம் ஒவ்வொருவர் கண்களுக்கும் வானவில்லில் வெவ்வேறு வண்ணங்கள் தெரியும். ஒவ்வொருவரும் பார்க்கும் வானில் இடங்களும், கோணமும், நேரமும் வித்தியாசமாக இருப்பதே நம் கண்களுக்கு வெவ்வேறு வண்ணங்கள் தெரியக்காரணம். ஒருவர் பார்க்கும் அதே இடத்தில், அதே நேரத்தில், அதே கோணத்தில், வான்வெளியில் அவர் பார்த்த அதே நீர்த்துளிகளையும் ஒளிக்கற்றைகளையும் மற்றொருவர் பார்த்தால் மட்டுமே முதலாமவர் பார்த்த வானவில் வண்ணங்கள் இடண்டாமவர் கண்களுக்குத் தெரியும். ஒரே நேரத்தில் இருவர் ஒரே இடத்தில் நின்று ஒரே கோணத்தில் பார்ப்பது சாத்தியமில்லைதானே? அதனால் தான் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு வானவில் வண்ணங்களைத் தரிசிக்கின்றோம்.  இனிமேல் பக்கத்தில் நிற்பவர்களுக்குத் தெரியும் வண்ணம் உங்களுக்குத் தெரியவில்லை என்று வருத்தப்படாதீர்கள்…நீங்கள் பார்க்கும் வண்ணங்கள் அவருக்குத் தெரியாது.

Polarized Sun Glasses அணிந்து பார்த்தால் வானவில் தெரியாது என்று ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 60
Post by: எஸ்கே on July 16, 2021, 11:08:31 AM
(https://i.postimg.cc/NjXbZGyB/images-2021-07-16-T110710-093.jpg) (https://postimages.org/)
 
அதே கண்கள்?


1989ஆம் ஆண்டு “usenet” என்ற ஆரம்பகால இண்டர்நெட்டில் “Those eyes” என்ற பெயரில் ஒரு போஸ்ட் வெளியானது. ஹாலிவுட்டில் இருந்த நடிகைகளில் அழகான கண்களை உடையவர்களின் படங்களை வெளியிட்டது அந்த வெப்பேஜ். மக்களின் கமெண்ட்டுகளுடன் அந்த த்ரெட் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து “The List” என்று பெயர் பெற்றது.

அதே சமயத்தில் “தி லிஸ்ட்” மாதிரியே உருவாக்கப்பட்ட மற்றொரு ப்ராஜெக்ட், மக்களிடம் சினிமாக்களுக்கு ரேட்டிங் கொடுக்கச்சொல்லி கேட்டது. நாளடைவில் இதுவும் வளர்ந்து எக்கச்சக்கமான படங்களுக்கு மக்களிடமிருந்து ரேட்டிங் வாங்கி வைத்திருந்தது.

1990ஆம் ஆண்டு Col Needham என்பவர் இந்த இரண்டையும் ஒன்று சேர்த்து ஒரே வெப்பேஜாக உருவாக்க முடிவு செய்தார். அப்படி இரண்டு லிஸ்ட்டையும் சேர்த்து உருவாக்கப்பட்டு 1993ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதே புகழ்பெற்ற IMDB வெப்சைட்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 61
Post by: எஸ்கே on July 17, 2021, 05:45:44 PM

(https://i.postimg.cc/Tw0Rdn1d/images-2021-07-17-T174321-495.jpg) (https://postimages.org/)

டின்களில் போதை?


குடிமக்களை குஷிப்படுத்த 1935ஆம் ஆண்டு Gottfried Krueger Brewing Company என்ற அமெரிக்கன் பீர் கம்பெனி முதன்முதலில் டின்களில் பீரை வெளியிட்டது. 1909ஆம் ஆண்டு முதல் டின்களின் பீரை அடைத்து விற்க முயற்சிகள் நடந்துகொண்டே இருந்தன. கார்பனேட்டட் பீரின் அதிக அழுத்தம் காரணமாக, டின்கள் அடிக்கடி வெடித்து டின்பீர் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருந்தன. Gottfried Krueger பீர் கம்பெனி இந்த பிரச்னைக்கு keg-lining என்ற டெக்னிக் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தது. 19ஆம் நூற்றாண்டு முதல் பீர் தயாரிக்கும் தொழிலில் இருந்த இந்தக்கம்பெனி கிட்டத்தட்ட 24 வருட முயற்சிக்குப் பின் 1933ஆம் வருடம் டின் பீயர் தயாரிப்பதில் வெற்றிபெற்றது.


எதிர்பார்த்தது மாதிரியே, அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே மாஸ் வெற்றிபெற்றது டின் பியர் கான்செப்ட். இரண்டாம் உலகப்போரின்போது டின்களில் பியர் விற்கப்படுவது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டது. டின் தயாரிக்கத் தேவைப்பட்ட பொருட்கள் உலகப்போருக்குத் தேவையான ஆயுதங்கள் தயாரிக்கவும் உபயோகப்படுத்தப்பட்டதே காரணம்
Title: Re: இன்று ஒரு தகவல் - 62
Post by: எஸ்கே on July 18, 2021, 12:27:51 PM
(https://i.postimg.cc/pL2ffH73/images-2021-07-18-T122543-354.jpg) (https://postimages.org/)

காற்றுக்கு விலை என்ன?


Pringles என்ற உருளைக்கிழங்கு வருவல் டப்பாவை கடைகளில் பார்த்திருப்போம். அந்த சிப்ஸையும் அதன் டப்பாவையும் வடிவமைத்த  Fredric J Baur இறந்த பிறகு, அவரின் அஸ்தியின் ஒரு பகுதி Pringles  டப்பா ஒன்றில் அடைக்கப்பட்டு அவர் உடலின் மற்ற பகுதிகளுடன் சேர்த்து புதைக்கப்பட்டது. 90வது வயதில் இறந்த Fredric, கடைசி ஆசையாக தன் வாரிசுகளிடம் கேட்டதாலேயே இப்படிச் செய்யப்பட்டது.


Pringles சிப்ஸில் 42 சதவீதம் மட்டுமே உருளைக்கிழங்கு இருப்பதாகச் சொல்லி அமெரிக்க அரசு Pringlesஐ உருளைக்கிழங்கு வருவல் என்று அழைக்கக்கூடாதென ஆர்டர் போட்டிருக்கிறது.
Title: Re: இன்று ஒரு தகவல் - 63
Post by: எஸ்கே on July 19, 2021, 02:40:43 PM
(https://i.postimg.cc/QM5GNgy7/images-2021-07-19-T143847-399.jpg) (https://postimages.org/)

தங்கச்சிலை?


1955ஆம் ஆண்டு Phra Phuttha Maha Suwan Patimakon என்ற 13ஆம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. ப்ளாஸ்டரால்(plaster) செய்யப்பட்டிருந்த அந்தச் சிலையை நகர்த்தியபோது எடை அதிகமாக இருந்ததால் தவறி கீழே விழுந்து உடைந்துபோனது. உடைந்துபோனது மேற்பக்கமிருந்த ப்ளாஸ்டர் மட்டும்தான். உள்ளே ஒளித்துவைக்கப்பட்டிருந்தது முழுவதும் தங்கத்தால் ஆன புத்தர் சிலை. தற்போதைய நிலவரப்படி சிலை செய்யப்பட்டிருந்த தங்கத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 1/4 பில்லியன்(மில்லியன் அல்ல) டாலர்கள்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 64
Post by: எஸ்கே on July 20, 2021, 01:14:28 PM
(https://i.postimg.cc/9FyhHqW5/images-2021-07-20-T131149-288.jpg) (https://postimages.org/)

சாக்லெட் மருந்து?


சாக்லெட்டில் இருக்கும் Theobromine என்ற வேதிப்பொருளும் காஃபியில் இருக்கும் Caffeineனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இதில் சாக்லெட்டில் இருக்கும் Theobromine, நரம்பு மண்டலத்தையும், இரத்தஓட்டத்தையும் தூண்டக்கூடியது. இதனால்தான் சாக்லெட் சாப்பிட்டவுடன் ரத்த அழுத்தத்தில் கொஞ்சம் மாறுதல் இருக்கும். நாய், குதிரை போன்ற விலங்குகளுக்கு மனிதர்களைப்போல் Theobromine வேதிப்பொருளை ஏற்றுக்கொள்ளும் உடலமைப்பு கிடையாது. சாக்லெட் சாப்பிடும் நாய்கள் இறந்துவிடும் அபாயம் அதிகம்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் சாக்லெட் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், சாக்லெட்டுகள் வயிற்றுவலிக்கான மருந்தாக உபயோகப்படுத்தப்பட்டன. சாக்லெட் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமடைவதாக மக்களும் நம்பினார்கள்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 65
Post by: எஸ்கே on July 21, 2021, 02:26:00 PM
(https://i.postimg.cc/CMRPDGqb/images-2021-07-21-T142326-760.jpg) (https://postimages.org/)

அதிர்ஷ்டத்தின் பெயர் Violet?



Violet Jessop என்ற பெண்மணி டைட்டானிக், ப்ரிட்டானிக் மற்றும் ஒலிம்பிக் ஆகிய மூன்று கப்பல்களிலும் பயணம் செய்து உயிர் பிழைத்திருக்கிறார். மூன்று கப்பல்களும் தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானபோது மூன்றிலிருந்தும் தப்பித்து வந்திருக்கிறார் இவர். 1887ஆம் ஆண்டு பிறந்த Violet, சிறுவயதிலிருந்தபோது அவரைப் புற்றுநோய் தாக்கியதாக சொல்லப்படுகிறது. அதிலிருந்து மீண்டு வந்தவர் தன் தாயைப் பின்பற்றி தன் 21வது வயதில் கப்பல் பணிப்பெண்ணாக பணியாற்றத் துவங்கினார். ஆரம்பத்தில் இவரின் வயதும், அழகும், இளமையான தோற்றமும் இவருக்கு எதிரியாக இருக்குமோ என்று கப்பலில் பணியாற்றிய மற்ற மக்கள் பயந்தார்கள். மேக்கப் எதுவும் இல்லாமல், தனக்குப் பொருத்தமில்லாத ஆடைகளுடன் பணியாற்றி கப்பலில் பயணம் செய்தவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொண்டார் Violet. மூன்று கப்பல் விபத்துகளிலிருந்து தப்பித்த பிறகும் மீண்டும் கப்பல்களிலேயே பணிப்பெண்ணாக வேலை செய்தார்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 66
Post by: எஸ்கே on July 22, 2021, 09:39:11 PM
(https://i.postimg.cc/G2VB7cM7/images-2021-07-22-T213628-382.jpg) (https://postimages.org/)

ஐஸ்க்ரீம் கோன்?

கோன் ஐஸ் வாங்கி, அதிலிருக்கும் ஐஸ்க்ரீமை அடுத்தவருக்குக் கொடுத்துவிட்டு அந்த வேஃபர் கோனை மட்டும் சாப்பிடும் பழக்கம் யாருக்கெல்லாம் இருக்கிறது? முதல் ஆளாக என் பெயரை பதிவு செய்து கொள்கிறேன். அந்த கோன் எப்படி ஃபேமசானது தெரியுமா? Italo Marchion என்பவரால் 1896ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஐஸ்க்ரீம் கோன் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான உரிமையை 1903ஆம் ஆண்டு அவர் பெற்றார். ஆனாலும் ஐஸ்க்ரீம் கோன் ஃபேமசானதென்னவோ வேறொரு இடத்தில்.

1904ஆம் வருடம் அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடந்த பொருட்காட்சியில் ஐஸ்க்ரீம் கடை ஒன்று எக்கச்சக்கமாக ஐஸ்க்ரீம்களை விற்றுத் தீர்த்தது. ஒரு கட்டத்தில் ஐஸ் க்ரீமை வைத்துக் கொடுக்க தட்டுகள் தீர்ந்து போன நிலையில் பக்கத்துக்கடையில் இருந்த Hamwi  என்பவர் உதவிக்கு வந்தார். அவர் வேஃபர் போன்ற தக்கையான பிஸ்கட்டுகளைச் செய்து விற்றுக்கொண்டிருந்தார். ஐஸ் க்ரீம் கடை அளவிற்கு அவர் கடையில் கூட்டமில்லை. ஐஸ் க்ரீம் கடைக்காரரின் பிரச்னையைப் புரிந்துகொண்ட அம்மனிதர், தன் பிஸ்கட்டுகளை கோன் வடிவில் செய்து அதில் ஐஸ் க்ரீம்களை வைத்துக் கொடுக்கச் சொன்னார். அந்த ஐடியா சூப்பராக வேலை செய்ய, அன்றிலிருந்து பிரபலமானதுதான் ஐஸ்க்ரீம் கோன்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 67
Post by: எஸ்கே on July 23, 2021, 07:31:27 PM
(https://i.postimg.cc/LXr2D95C/images-2021-07-23-T192808-451.jpg) (https://postimages.org/)

நான்-வெஜ் மீல்ஸ்?


சிறு பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் தாவரங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட ஒரு தாவரம் தான் drosera genus. இந்த வகைத் தாவரங்கள் Sundews என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் மேற்பகுதிகள் பார்ப்பதற்கு நீர்த்துளிகளால் சூழப்பட்டு இருப்பதைப் போல காணப்படுவதாலேயே Sundews என்ற சிறப்புப்பெயர்.


பார்ப்பதற்கு நீர்த்துளிகள் போலிருந்தாலும், நிஜத்தில் இவை கொஞ்சம் பிசுபிசுப்புத் தன்மை உடைய என்சைம்கள். அருகில் வரும் சிறு உயிரினங்களை தன் பக்கம் கவர்ந்திழுப்பதற்கு மட்டும் உதவுவதில்லை இந்த என்சைம்கள். அப்பூச்சிகள் தாவரத்தின் உணவான பிறகு அவற்றை செரிக்க வைக்கவும் உதவுகின்றன. சதுப்பு நிலக்காடுகளிலும் கடற்கரை ஓரங்களிலும் அதிகம் காணப்படும் இத்தாவரக்குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
Title: Re: இன்று ஒரு தகவல் - 68
Post by: எஸ்கே on July 24, 2021, 06:38:09 PM
(https://i.postimg.cc/BZmxPJ2K/images-2021-07-24-T183620-182.jpg) (https://postimages.org/)

நினைவுச்சின்னம்?


1989ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி காங்கோவிலிருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று, விமான நிலையத்திலிருந்து கிளம்பிய 46வது நிமிடத்தில் வெடித்துச் சிதறி சகாரா பாலைவனத்தில் விழுந்தது. விமானத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தான் விபத்திற்குக் காரணம் என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது நடந்த 18 வருடங்களுக்குப் பிறகு, 2007ஆம் வருடம் அதில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்தார்கள்.


தொலைதூரத்திலிருந்து சிறு பாறைகளைக் கொண்டுவந்து 200 மீட்டர் விட்டத்தில் ஒரு வட்டம் அமைத்து, அதில் விபத்துக்குள்ளான விமானம் போன்ற உருவத்தை உருவாக்கினார்கள். விபத்தில் உயிரிழந்த 170 பேரின் நினைவாக 170 கண்ணாடிகளையும், சேதமடைந்தது போக மீதமிருந்த விமானத்தின் சிறு பகுதிகளையும் நினைவுச் சின்னத்தில் சேர்த்தார்கள். அதுமட்டுமில்லாமல் சேதமடைந்த விமான இறக்கை ஒன்றில் இறந்தவர்களின் பெயர்களைப் பதித்து அந்த வட்டத்திற்குள் புதைத்து வைத்திருக்கிறார்கள்.

கூகிள் மேப்பில் 16°51’53″N, 11°57’13″E என்ற இடத்தைத் தேடினால், அந்த நினைவுச் சின்னத்தைக் காணலாம்
Title: Re: இன்று ஒரு தகவல் - 69
Post by: எஸ்கே on July 25, 2021, 03:54:56 PM
(https://i.postimg.cc/VkNYCGyL/images-2021-07-25-T155233-766.jpg) (https://postimages.org/)

ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா?



அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்திலிருக்கும் ஒரு குட்டியூண்டு டவுன் Buford. 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த டவுனில் மளிகை கடை முதல் பெட்ரோல் பங்க் வரை தினசரி தேவைகளுக்கான அனைத்தும் கிடைக்கின்றன. வயோமிங் மாகாணத்தில் முதன்முதலாக ரயில் பாதை அமைக்கப்பட்ட போது, அதில் வேலை செய்த மக்களால் உருவாக்கப்பட்டது இந்த நகரம். அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட 2000 மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் வேலை முடிந்ததும் மக்கள் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட, கொஞ்ச காலம் காலியாக இருந்த ஊரில் 1980ஆம் ஆண்டு Don Sammons என்பவர் தன் குடும்பத்துடன் வந்து குடியேறினார். 1992ஆம் ஆண்டு வரை அவர்கள் குடும்பம் மட்டுமே அந்த ஊரில் இருந்தது. 1992ஆம் ஆண்டு மனைவி இறந்த பின், மொத்த நகரத்தையும் விலைகொடுத்து வாங்கி அங்கேயே வசிக்கத் தொடங்கினார் Don Sammons. அந்த குட்டியூண்டு நகரத்திலிருந்த மளிகை கடை, பெட்ரோல் பங்க், “தண்ணீர்” கடை என அனைத்துக்கும் ஓனர் அவர் தான். மட்டுமில்லாமல் அந்த நகரத்தின் மேயர் கூட அவரே. இப்படி ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தவர் 2007 ஆம் ஆண்டு தன் நகரத்தை விட்டுவிட்டு மகனுடன் வசிக்கச் சென்றுவிட்டார்.


மகனுடன் செல்வதற்கு முன் அவர் செய்ததென்ன தெரியுமா? தன் ஊரை விற்கப்போவதாக EBAY வெப்சைட்டில் விளம்பரம் கொடுத்தார். விளம்பரம் வெளியான மறுநிமிடத்திலிருந்து ஏலங்கள் குவிய, 11வது நிமிடத்தில், ஒன்பது லட்சம் டாலர்களுக்கு ஏலத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்து வியட்நாம்வாசி ஒருவரிடம் ஊரை விற்றுவிட்டு ஊரை விட்டுச் சென்றுவிட்டார்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 70
Post by: எஸ்கே on July 26, 2021, 08:37:50 PM

(https://i.postimg.cc/90j6p7qy/images-2021-07-26-T203425-973.jpg) (https://postimages.org/)


முதுமை டு இளமை?


பெரும்பாலான ஜெல்லிஃபிஷ்(தமிழில் இழுது மீன்) வகை மீன்கள்  ஒரு சில மணி நேரங்களிலிருந்து சில மாதங்கள் வரை மட்டுமே உயிர் வாழக்கூடியவை. இவற்றில் ஒரு சில வகை மீன்களுக்கு சாவென்பதே கிடையாது; குறிப்பாக turritopsis nutricula என்ற ஜெல்லிஃபிஷ். இந்த வகை மீன்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் மீண்டும் சிறிய மீன்களாக மாறிவிடுகின்றன.


இவற்றின் உடம்பிலிருக்கும் செல்கள் ஒவ்வொரு முறை முதிர்ச்சியடையும் போதும் இறந்துவிடாமல் வேறொரு செல்லாக மாறுவதாலேயே முதுமையிலிருந்து இளமைக்குத் திரும்பும் இந்த வித்தியாசமான நிகழ்வு நடக்கிறது. வேறு எந்த மீன்களுக்கும் உணவாகாமல் இருந்தால், இவற்றுக்கு இறப்பு என்பதே இல்லை.
Title: Re: இன்று ஒரு தகவல் - 71
Post by: எஸ்கே on July 27, 2021, 06:26:11 PM
(https://i.postimg.cc/FRs371sJ/images-2021-07-27-T181303-138.jpg) (https://postimages.org/) (https://gasstation-nearme.com/mobil)

உணவுத் திருவிழா?


சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காகவும், தங்கள் நாட்டைச் சுற்றிப்பார்க்க வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தாய்லாந்து ஆண்டுதோறும் ஒரு உணவுத் திருவிழாவை நடத்துகிறது. எக்கச்சக்கமான பழங்களும் காய்கறிகளும் இடம்பெறும் இந்தத் திருவிழாவின் சிறப்பு என்னவென்றால், இது மனிதர்களுக்காக நடத்தப்படுவதல்ல. குரங்குகளுக்காக நடத்தப்படும் திருவிழா. பேங்காக் நகரிலிருக்கும் கோயிலின் முன் பழங்களும், காய்கறிகளும், கேக் வகைகளும் சாக்லெட்டுகளும் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டு, அங்கு வசிக்கும் 3000+ குரங்குகளுக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.


இந்த விழா நடக்கும் நாளில் மக்களும் குரங்குகளைப் போல் முகமூடிகளை அணிந்தும், வேஷமிட்டும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார்கள். 1989ஆம் ஆண்டு பேங்காக் நகரில் வசித்த வியாபாரி ஒருவரால் துவங்கப்பட்டது இந்த வித்தியாசமான உணவுத் திருவிழா. நடந்துமுடிந்த விழாவில் 4000 கிலோ பழங்களும் காய்கறிகளும் குரங்குகளுக்கு வழங்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Title: Re: இன்று ஒரு தகவல் - 72
Post by: எஸ்கே on July 28, 2021, 07:40:57 PM
(https://i.postimg.cc/kMKB0HtT/images-2021-07-28-T193337-696.jpg) (https://postimages.org/)

Troll-Haired Mystery Bug?


உலகில் வாழும் உயிரினங்களில் கிட்டத்தட்ட 8 மில்லியன் வகைகள் இருக்கின்றன. அவற்றில் நம்மால் கண்டுபிடிக்கப்பட்டு பெயர் சூட்டப்பட்டவை வெறும் 2 மில்லியன் மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 18,000 உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வகைப் படுத்தப்படுகின்றன. இப்படி புதுப்புது உயிரினங்களைக் கண்டுபிடிப்பதற்காகவே காடுகளிலும், மலைகளிலும் Wild Life ஆராய்ச்சியாளர்கள் வேலை செய்கிறார்கள். 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த உயிரினம் தான் troll-haired mystery bug. பார்ப்பதற்கு பெயிண்ட் அடிக்க உபயோகிக்கும் ப்ரஷ் மாதிரியே இருக்கும் இப்பூச்சிக்கு Troll-Haired Mystery Bug   என்று பெயர் வைத்த பெருமை National Geographic சேனலையே சேரும். ஒரே ஒரு ஃபோட்டோ மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. கண்டுபிடித்தவர்களைத் தவிர வேறு யாரும் இப்பூச்சியை நேரடியாகப் பார்த்ததில்லை.
Title: Re: இன்று ஒரு தகவல் - 73
Post by: எஸ்கே on July 29, 2021, 09:36:41 PM

(https://i.postimg.cc/htcp7L3x/crooked-forest.jpg) (https://postimages.org/)

க்ரூக்ட் காடு?


1930ஆம் ஆண்டு அப்போதைய ஜெர்மனியின்(தற்போதைய போலந்து) எல்லைக்குள் இருந்த Pomeraniaவின் ஒரு பகுதியில் 400 பைன் மரங்கள் நடப்பட்டது. அம்மரங்கள் இருக்கும் இடத்தின் பெயர் Crooked Forest. அப்படியென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? 1930ஆம் ஆண்டு நடப்பட்ட அந்த 400 பைன் மரங்களும் செங்குத்தாக வளராமல், அடிப்பகுதியில் ஒரே மாதிரி வளைந்து வளர்ந்திருக்கின்றன. ஏதோ ஒரு இயற்கையின் பாதிப்பால் இம்மரங்கள் தானாகவே இப்படி வளர்ந்தனவா அல்லது யாராவது வேண்டுமென்றே வளைத்து வளர்த்து வைத்திருக்கிறார்களா என்பது இன்று வரை புரியாத புதிர்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 74
Post by: எஸ்கே on July 30, 2021, 07:43:23 PM
(https://i.postimg.cc/bwtV8RTz/images-2021-07-30-T193938-045.jpg) (https://postimages.org/)

மனித எலும்புகள் 300 to  206 🤔 ?


எண்ணி பார்த்திருக்காவிட்டாலும், நம் உடலில் 206 எலும்புகள் இருக்கின்றன என்பது நாமறிந்த ஒன்று. ஆனால் நாம் குழந்தையாக இருந்தபோது நம் உடலில் இருந்த எலும்புகளின் எண்ணிக்கை தெரியுமா? கிட்டத்தட்ட 300. நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக். குழந்தைகளின் உடலில் 300+ எலும்புகள் இருக்கின்றன. குழந்தைகள் வளரும்போது சில எலும்புகள் ஒன்று சேர்ந்து ஒரே எலும்பாக மாறிவிடுகின்றன. தலை, இடுப்பு முதலிய பகுதிகளில் இருக்கும் ஒரு சில எலும்புகள் ஒன்றிணைந்து ஒரே எலும்பாக மாறுகின்றன. 300 எலும்புகள் 206ஆக மாறுவது இப்படித்தான். இந்த 206 எலும்புகளில் பாதிக்கும் மேல் அதாவது 106 எலும்புகள் நம் கை,கால்களில் மட்டுமே இருக்கின்றன.
Title: Re: இன்று ஒரு தகவல் - 75
Post by: எஸ்கே on July 31, 2021, 08:56:32 PM
(https://i.postimg.cc/0j48yPD3/images-2021-07-31-T205354-164.jpg) (https://postimages.org/)

நரகத்துக்குச் செல்லும் வழி?



நரகத்தைப் பார்க்க நினைப்பவர்கள் நார்வே நாட்டுக்கு ஒரு முறை சென்றுவருவது நல்லது. ஏனென்றால், அங்கே தான் நரகம் என்ற பெயரில் (Village of Hell) ஒரு கிராமம் இருக்கிறது. பெயரில் மட்டுமல்ல குளிரிலும் கிட்டத்தட்ட நரகம் தான். குளிர் காலங்களில் -25 டிகிரி செல்ஷியஸ் வரை செல்கிறது இந்த ஊரின் வெப்பநிலை.
 

ஹெல் என்ற பெயர் Hellir என்ற Old Norse மொழி வார்த்தையிலிருந்து வந்தது.  Hellir என்றால் cliff cave அல்லது overhang என்று அர்த்தம். இந்த Old Norse மொழி வட ஜெர்மனியின் சில பகுதிகளில் வழக்கிலிருந்தது.
Title: Re: இன்று ஒரு தகவல் - 76
Post by: எஸ்கே on August 02, 2021, 03:21:43 AM
(https://i.postimg.cc/ZYXGBvyH/images-2021-08-02-T031624-993.jpg) (https://postimages.org/)

ஏரிக்குள் மூழ்கிய காடு?


ஏரிகளைச் சுற்றி காடுகள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஏரிக்குள் காடு இருப்பதை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? கஜகஸ்தான் நாட்டிலிருக்கும் கெண்டி(Kaindy Lake) ஏரியில் தான் இப்படி ஒரு அதிசயம் ஒளிந்திருக்கிறது. 300 மீட்டர் அகலமும் 30 மீட்டர் ஆழமும் உடைய இந்த ஏரியின் வெளியிலிருந்து பார்த்தால் ஏரிக்குள் பந்தல்கால் நட்டுவைத்ததைப் போல் ஆங்காங்கே குச்சிகள் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும்.  ஒவ்வொரு குச்சியும் ஒரு பெரிய மரமென்பது ஏரிக்குள் சென்று பார்க்கும்போது மட்டுமே புரியும்.


எப்படி நிகழ்ந்தது இது? 1911ஆம் ஆண்டு கெண்டி ஏரி இருக்கும் பகுதியில் வந்த பூகம்பம், 700க்கும் மேற்பட்ட கட்டிடங்களை அழித்தது மட்டுமில்லாமல், சுண்ணாம்புக்கற்களினாலான ஒரு பெரிய மலை போன்ற தடுப்பை உருவாக்கியது. பெரும் பள்ளத்துடன் மரங்கள் நிறைந்த காடாக மாறிய இப்பகுதி, நாளடைவில் மழை நீரை உள்வாங்கி ஏரியாக மாறத் துவங்கியது. ஏரியின் வெப்பநிலை காரணமாகவும்(6 டிகிரி செல்ஷியஸ்), அங்கிருக்கும் மண்ணின் தன்மையாலும் நீரில் மூழ்கிய மரங்கள் அழுகிப்போகாமல், இன்றுவரை உயிர் வாழ்கின்றன. பல வருடங்களாக நீருக்குளிருப்பதால் மரங்கள் கொஞ்சம் அழுக்கேறியது போலிருக்கின்றன. அது மட்டுமில்லாமல், சுண்ணாம்புக்கற்களின் காரணமாக மற்ற ஏரிகளைப்போலல்லாமல் இந்த ஏரியிலிருக்கும் நீர், நீலம் கலந்த பச்சை நிறத்தில் இருக்கிறது.
Title: Re: இன்று ஒரு தகவல் - 77
Post by: எஸ்கே on August 03, 2021, 07:31:19 PM
(https://i.postimg.cc/Z5y1VBKC/images-2021-08-03-T192742-269.jpg) (https://postimages.org/)

(https://i.postimg.cc/Bb6zDtVZ/images-2021-08-03-T192616-137.jpg) (https://postimages.org/)

ஐஸ்..ஐஸ்..ஐஸ்?


நார்வே நாட்டிலிருக்கும் Sorrisniva Igloo Hotel, ஒவ்வொரு வருடமும் புதிதாகக் கட்டப்படுகிறது. காரணம் வேறொன்றுமில்லை.. வெயில் காலம் தொடங்கும்போது ஹோட்டல் உருகிவிடுவதால் தான் இந்த ஏற்பாடு. குளிர்காலத்தில் பனிக்கட்டிகளைக் கொண்டு கட்டப்படும் இந்த ஹோட்டலில், 30 அறைகள் இருக்கின்றன. நார்வே நாட்டின் கட்டிடக்கலையை முதன்மையாகக் கொண்டு அறைகள் வடிவமைக்கப்படுகின்றன.


20 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில் இருக்கும் அறைகளில் எக்கச்சக்கமான கம்பளிகளின் உதவிகளுடன் மக்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மக்களுக்காகத் திறக்கப்படும் இந்த ஹோட்டல், வெயில் காலம் வந்து பனிக்கட்டிகள் உருகும் வரை உயிருடன் இருக்கிறது.
Title: Re: இன்று ஒரு தகவல் - 78
Post by: எஸ்கே on August 04, 2021, 04:34:19 PM
(https://i.postimg.cc/4yxB2N1G/images-2021-08-04-T163234-043.jpg) (https://postimages.org/)

ஜப்பானின் காதல் கதை?


1936ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஜப்பானில் காதலர் தினம் என்பதெதுவும் கிடையாது. 1936ஆம் ஆண்டில் தான் அந்த நாட்டு மிட்டாய் கம்பெனி ஒன்று ஜப்பானில் வசித்த வெளிநாட்டவர்களைக் கவர்வதற்காக, பேப்பரில் காதலர் தின விளம்பரம் கொடுத்து சாக்லெட் விற்பனையையும், கொண்டாட்டங்களையும் ஜோராகத் தொடங்கி வைத்தது. 1970 வரை காதலர் தினத்தன்று, காதலர்கள் ஒருவருக்கொருவர் சாக்லெட் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இப்படியே சென்றுகொண்டிருந்தால் விற்பனையில் பெரிய மாற்றத்தைக்காண முடியாதென்று யோசித்த கடை முதலாளிகள் 1970 ஆண்டுக்குப் பின் ஒரு புதிய பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தினர். அதென்னவென்றால், பிப்ரவரி 14 அன்று பெண்கள் தன் மனதுக்குப் பிடித்த ஆண்களுக்கும், மற்றவர்களுக்கும் சாக்லெட் வாங்கித்தர வேண்டும். கண்ட சாக்லெட்டையெல்லாம் வாங்கிக்கொடுத்துவிட முடியாது. பெண்கள் யார் யாருக்கு என்னென்ன சாக்லெட் கொடுக்க வேண்டுமென்பதற்கு ஒரு அட்டவணையே உள்ளது.

1. giri-choko (obligation chocolate) – காதல் கத்தரிக்காய் உணர்வெல்லாம் இல்லாமல், தன்னுடன் பழகும் ஆண்களுக்கு(பாஸ், உடன் வேலை செய்பவர்கள்) பெண்கள் கொடுக்க வேண்டிய சாக்லெட் இது.

2. Chō-giri choko (ultra-obligatory  chocolate) – இவரை எனக்குத் தெரியும்..ஆனால் பெரிதாக பழக்கமெல்லாம் இல்லை..இனிமேல் பழக்கப்படுத்திக்கொள்ளும் எண்ணமும் இல்லை என்ற லிஸ்டில் வரும் ஆண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சாக்லெட்.

3. honmei-choko (favorite or true feeling chocolate) – காதலனுக்கோ கணவணுக்கோ மட்டுமே தரப்படவேண்டிய சாக்லெட். இந்த சாக்லெட்டை வீட்டிலேயே தன் கைப்பட செய்துகொடுக்கும் பெண்களுக்கு வாய்க்கும் வாழ்க்கைத் துணை மிகுந்த அதிர்ஷ்டசாலி(!) என்ற நம்பிக்கையும் அவ்வூரில் நிலவுகிறது.


எத்தனை வருடம் தான் பெண்கள் மட்டுமே ஆண்களுக்குச் சாக்லெட் கொடுத்துக்கொண்டிருப்பது? ஆண்களும் பெண்களுக்கு எதையாவது கொடுத்தால்தானே வியாபாரிகள் வாழ முடியும்? இதை மனதில் கொண்டு 1980களில் உருவாக்கப்பட்டதுதான் “White Day” அதாவது Answer Love on White Day. மார்ச் 14ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த White Dayவில் ஆண்கள் பெண்களின் காதலுக்கு பதில் சொல்லும் வகையில் அவர்களுக்குப் பரிசுகளை வழங்கவேண்டும். அதுவும் பிப்ரவரி 14 அன்று பெண்கள் கொடுத்த பரிசை விட இரண்டு மடங்கு அதிகமாக..
Title: Re: இன்று ஒரு தகவல் - 79
Post by: எஸ்கே on August 05, 2021, 08:15:44 PM
(https://i.postimg.cc/Pf7BbqmG/9-125.jpg) (https://postimages.org/)

100 போட்டோ கேமரா?

பொதுமக்களுக்கு கேமராவையும் ஃபோட்டோவையும் அறிமுகப்படுத்திய கொடாக்(Kodak) கம்பெனி , 1888ஆம் ஆண்டு ராபர்ட் ஈஸ்ட்மென் என்பவரால் நிறுவப்பட்டது. Kodak No.1 என்ற பெயரில் அவர் வெளியிட்ட முதல் கேமராவின் விலை 25 டாலர்கள். இன்றைய கணக்குப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 600 டாலர்கள். அந்த கேமராவைக்கொண்டு 100 ஃபோட்டோக்களை எடுக்க முடியும். 100 ஃபோட்டோக்கள் எடுத்து முடித்தவுடன் கேமராவை கொடாக் கம்பெனிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கொடாக் அந்த ஃபோட்டோக்களை பிரிண்ட் செய்து, புது ரோல் நிரப்பிய கேமராவுடன் மீண்டும் கஸ்டமருக்கு அனுப்பி வைக்கும். அப்படிப்பட்ட ஒரு கேமராவால் எடுக்கப்பட்டது இந்த ஃபோட்டோ.

Title: Re: இன்று ஒரு தகவல் - 80
Post by: எஸ்கே on August 06, 2021, 09:39:59 AM
(https://i.postimg.cc/gJHyk7yT/images-2021-08-06-T093734-800.jpg) (https://postimages.org/)

I am just going?


எங்கே தன்னை உயிருடன் வைத்து புதைத்துவிடுவார்களோ என்று ஒருவர் பயந்தால், அவருக்கு Taphephobia இருக்கிறது என்று அர்த்தம். அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களுக்கு இந்த ஃபோபியா இருந்திருக்கிறது. தன் இறுதி நாட்களில் உடனிருந்த செகரட்ரியை அழைத்து அவர் சொன்னது “I am just going. Have me decently buried, and do not let my body be put into the vault in less than three days after I am dead. Do you understand me?”.

பதினோரு வயது Grace Bedell என்ற சின்னப்பெண் ”நீங்கள் தாடி வைத்துக்கொண்டால் எங்கள் வீட்டிலிருக்கும் அனைவரையும் உங்களுக்கு ஓட்டுப்போட சொல்லுவேன். ஒல்லியாக இருக்கும் நீங்கள் தாடி வளர்த்தால் அழகாக இருக்கும்.” என்று கடிதம் எழுதியதால் தான் அபிரகாம் லிங்கன் தாடி வைத்துக்கொண்டார். அந்தக் கடிதத்தை எழுதிய குட்டிப்பெண்ணை சிலவாரங்களுக்குப் பின் சந்தித்த லிங்கன், “உனக்காகவே தாடி வைத்துக்கொண்டேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டுச் சென்றார். அப்பெண் லிங்கனைச் சந்தித்தது அதுவே முதலும் கடைசியும். இது தெரிந்த செய்தி. தெரியாத செய்தி என்ன தெரியுமா? அதிபராவதற்கு முன் லிங்கன் சிறிதுகாலம் ”Berry and Lincoln” என்ற சலூன் கடைக்கு பார்ட்னராக இருந்திருக்கிறார்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 81
Post by: எஸ்கே on August 07, 2021, 08:17:44 PM
(https://i.postimg.cc/B6c1mX7S/images-
[url=https://postimages.org/][img]https://i.postimg.cc/B6c1mX7S/images-2021-08-07-T201346-516.jpg) (https://postimages.org/) (https://poemsonly.com/poem/1528)

வானவில் வண்ணங்கள்?


இந்தப்படங்கள் ஃபோட்டோஷாப் செய்யப்படாத ஒரிஜினல் ஃபோட்டோக்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? சீனாவின் Danxia Landform Geological Parkஇல் இருக்கும் இந்த மலைகளுக்குப் பெயர் “Rainbow Mountains”. 24 மில்லியன் ஆண்டுகளாக இருக்கும் இந்த மலைகளுக்கு இப்படி வண்ணம் பூசி அழகு பார்க்கிறது இயற்கை.  பல்லாயிரம் ஆண்டுகளாக ஒன்று சேர்ந்து இருந்த மணற்கற்களும் தாதுப்பொருட்களும், அவ்வப்போது வந்து அரவணைத்த மழையும், எப்போதும் உடனிருந்த காற்றுமே இந்த வண்ணங்களுக்குக் காரணம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றார்கள்.

அதுசரி, நம்மூர் டைரக்டர்கள் கண்களில் இன்னுமா இந்த மலைப்பகுதிகள் படாமல் இருக்கின்றன?
Title: Re: இன்று ஒரு தகவல் - 82
Post by: எஸ்கே on August 08, 2021, 06:57:55 AM
(https://i.postimg.cc/8C3m6bpq/images-2021-08-08-T065628-834.jpg) (https://postimages.org/)

Bib-Label Lithiated Lemon-Lime Soda (AKA) 7-UP?


தற்போது பெப்ஸி குடும்பத்திலிருந்து வரும் 7-Up குளிர்பானம் 1929ஆம் ஆண்டு  Charles Leiper Grigg என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஆரம்பகாலப்பெயர் ”Bib-Label Lithiated Lemon-Lime Soda”. அப்போது இதில் கலந்திருந்த lithium citrate என்ற வேதிப்பொருளே 7Up-க்கு இப்படி ஒரு பெயர் சூட்டப்படக் காரணமாக இருந்தது. இந்த Lithium Citrate வெறும் வேதிப்பொருள் மட்டுமல்ல, உளவியல் மருத்துவத்துறையில் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது. இன்றும் கூட இந்த மருந்து bipolar disorder இருக்கும் மக்களுக்கு சில சமயங்களில் கொடுக்கப்படுகிறது. 1950ஆம் ஆண்டு வரை  இந்த வேதிப்பொருள் 7-Upஇல் சேர்க்கப்பட்டது. 7-Up என்ற பெயர் மாற்றம் நிகழ்ந்தது 1936ஆம் ஆண்டில்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 83
Post by: எஸ்கே on August 09, 2021, 08:27:27 AM
(https://i.postimg.cc/vHxTPyHM/images-2021-08-09-T082530-227.jpg) (https://postimages.org/)

நிறத்தில் என்ன இருக்கிறது?


சூப்பர் மார்கெட்டில் வெள்ளை நிற முட்டைகளுடன் இப்போதெல்லாம் அதிகம் பிரவுன் கலர் கோழி முட்டைகளும் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இரண்டு முட்டைகளுக்கும் என்ன வித்தியாசம்? கவனித்துப்பார்த்தால், பிரவுன் கலர் முட்டைகளின் விலை அதிகமாக இருக்கும். விலை அதிகமாக இருப்பதாலேயே, அந்த முட்டைகள் தான் சத்தானவை என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். உண்மையில் இரண்டு நிற முட்டைகளுக்கும் சத்துகள் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டிலும் ஒரே அளவில் தான் எல்லா சத்துகளும் உள்ளன.


சில சமயங்களில் முட்டை ஓடுகளில் வித்தியாசம் தெரியலாம். இதற்குக் காரணம் கோழிகளின் வயது. சின்ன வயது கோழிகளின் முட்டை ஓடுகள் மொத்தமாகவும், வயதான கோழிகளின் முட்டை ஓடுகள் கொஞ்சம் ஒல்லியாகவும் இருக்கும். மற்றபடி பிரவுன் கலர் முட்டைக்கும் வொயிட் கலர் முட்டைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அப்புறம் என்ன விலை மட்டும் அதிகம் என்கின்றீர்களா? இந்த பிரவுன் கலர் முட்டைகளை இடும் கோழிகள் மற்ற கோழிகளை  விட அளவில் பெரியவை. அதே மாதிரி மற்ற கோழிகளை விட அதிக உணவு உட்கொள்ளக்கூடியவை. சுருக்கமாகச் சொன்னால், மெயிண்டனன்ஸ் செலவு இவற்றுக்கு அதிகம். அதனால் தான் முட்டைகளின் விலையும் அதிகம்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 84
Post by: எஸ்கே on August 10, 2021, 09:08:32 AM
(https://i.postimg.cc/W4xPLtZc/TELEMMGLPICT000164837787-trans-Nv-BQz-QNjv4-Bqp-Vlber-Wd9-Eg-FPZtc-Li-MQfyf2-A9a6-I9-Ychsj-Me-ADBa08.webp) (https://postimg.cc/CZC2bhJc)

 இது நல்ல ஐடியாவா இருக்கே?


ரெண்டு பெரிய கம்பெனிகளுக்கு இடையில் பிரச்னை வந்தால் வழக்கமாக என்ன நடக்கும்? கோர்ட்டுக்குச் செல்வார்கள்.. ஒருவர் மேல் மற்றொருவர் குற்றம் சுமத்துவார்கள். சில பல வருடங்களுக்குப் பிறகு, யாராவது ஒருவர் மற்றொருவருக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்று ஜட்ஜ் தீர்ப்பு சொல்வார்..அதை எதிர்த்து நஷ்ட ஈடு தரவேண்டியவர் மற்றொரு வழக்கு தொடர்வார்.. இதைத்தானே மைக்ரோசாஃப்ட் முதல் ஆப்பிள் வரை பார்த்திருக்கிறோம். Arm Wrestling போட்டி வைத்து இந்த மாதிரி ஒரு பிரச்னையை தீர்த்துக்கொண்ட இரண்டு கம்பெனிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?


அமெரிக்காவில் இருக்கும் இரண்டு ஏர்லைன்ஸ் கம்பெனிகள் தான் இப்படி ஒரு வித்தியாசமான ஐடியாவுடன் களமிறங்கின. 1992ஆம் ஆண்டு உள்நாட்டு விமான சேவையில் ஈடுபட்டிருந்த Air Southwest மற்றும் Stevens Aviation இரண்டு கம்பெனிகளுக்கு இடையில் ஒரு பிரச்னை வந்தது. Air Southwest நிறுவனம்  1990ஆம் ஆண்டு “Just Plane Smart” என்ற ஸ்லோகனை அறிமுகப்படுத்தியிருந்தது. ”Plane Smart” என்ற அந்த ஸ்லோகன், மற்றொரு மாகாணத்தில் இயங்கிக்கொண்டிருந்த Stevens Aviation நிறுவனத்தால் 1990ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே உபயோகப்படுத்தப்பட்டது 15 மாதங்களுக்குப் பின் தெரிய வந்தது. ஸ்லோகனை யார் உபயோகிப்பது என்று முடிவு செய்ய “Arm Wrestling” போட்டி வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டார் Stevens Aviation நிறுவனத்தின் சேர்மென் Kurt Herwald. இதனால் கிடைக்கப்போகும் விளம்பரத்தை மனதில் வைத்து, Air Southwest நிறுவன CEO Herb Kelleher போட்டிக்கு ஓக்கே சொல்ல, 1992ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி, டாலஸ் நகரத்தில் இருவருக்குமிடையே Arm Wrestling போட்டி நடத்த முடிவு செய்யபட்டது. போட்டியில் வென்றது Stevens Aviation கம்பெனிதான் என்றாலும், இப்படி ஒரு போட்டிக்கு ஒத்துக்கொண்டதாலேயே, Air Southwest நிறுவனமும் அதே ஸ்லோகனை உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்து பிரச்னையை முடித்து வைத்தார் Kurt Herwald.
Title: Re: இன்று ஒரு தகவல் - 85
Post by: எஸ்கே on August 11, 2021, 08:11:32 AM
(https://i.postimg.cc/7Zmj0bY2/images-2021-08-11-T080830-713.jpg) (https://postimages.org/) (https://postimages.org/)

Sealand – உலகின் மிகச்சிறிய நாடு?


உலகத்திலேயே மிகச்சிறிய நாடு எது தெரியுமா? The Principality of Sealand (aka) Sealand. இங்கிலாந்து நாட்டின் Suffolk கடற்கரையிலிருந்து 7 நாட்டிகல் மைல் தூரத்தில் அமைந்திருக்கிறது இந்த நாடு. இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் அசைவுகளைக் கண்காணிக்க இங்கிலாந்து இந்த நாட்டை(அதாவது அங்கிருக்கும் சிறு கோட்டையை) கடலுக்கு நடுவில் உருவாக்கியது. 300 பேர்களைத் தாங்கக்கூடிய இக்கோட்டையை ஒரு பெரிய படகில் முதலில் உருவாக்கி, பின் அதை தண்ணீருக்குள் இடம்மாற்றினர்.


போர் நடந்துகொண்டிருந்தபோது, 100க்கும் அதிகமான வீரர்கள் இதில் தங்கி ஜெர்மனியை கண்காணித்தனர். 1956ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து இந்தக்கோட்டையை பராமரிக்காமல் விட்டுவிட்டது. அதன் பின் 11 வருடங்கள் கழித்து இங்கிலாந்து ஆர்மியில் வேலை செய்திருந்த Roy Bates என்பவர், தன் மகனுடன் இந்தக் கோட்டைக்கு வந்து தங்கினார். அவர் வந்ததென்னவோ ஒரு ரேடியோ ஸ்டேஷன் தொடங்க என்றாலும், ஆள்நடமாட்டமில்லாத அந்த இடத்தைத் தனதாக்கிக்கொள்ள முடிவுசெய்தார். இங்கிலாந்து நாட்டின் சட்டத்திலிருந்த ஓட்டையைப்(!) பயன்படுத்தி அதை சக்சஸ்ஃபுல்லால நிறைவேற்றினார் Bates-இன் வழக்கறிஞர். Sealand என்று பெயர் மாற்றப்பட்ட அந்த இடத்தை மீண்டும் தங்களுடையதாக்கிக்கொள்ள பிரிட்டீஷ் அரசு ஒரு கட்டத்தில் முடிவு செய்தது. ஆனால் அப்படி ஏதாவது செய்யப்போய் Bates-இன் குடும்பம் இறந்துவிட்டால் மக்களிடையே தங்கள் பெயர் கெட்டுவிடும் என்று அந்த ஐடியாவை செயல்படுத்தாமல் விட்டுவிட்டது.

அதற்குப் பின் தங்களுக்கென்று தனியாக அரசாங்கம், தேசியக்கொடி முதலியவற்றை தன் மனைவியின் விருப்பப்படி பேட்ஸ் வடிவமைத்தார். அவருடைய குடும்ப வாரிசுகள் Sealand-இன் இளவரசர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்
Title: Re: இன்று ஒரு தகவல் - 86
Post by: எஸ்கே on August 12, 2021, 09:16:25 AM
(https://i.postimg.cc/85Q23XhM/images-2021-08-12-T091329-291.jpg) (https://postimages.org/)

Make Me Happy Tiramisu?


Tiramisu என்றொரு கேக் வகை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? கொஞ்சமாக ஒயினோ அல்லது வேறு ஏதாவது ஆல்கஹால் பானம் சேர்த்தோ சேர்க்காமலோ செய்யப்படும் இந்த கேக் இத்தாலி வகை உணவு வகையாகும். Tiramisu என்ற இத்தாலியன் வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? pick me up (அல்லது) makes me happy.


சில வருடங்களுக்கு முன் அமெரிக்க மண்ணில் காலடி வைத்த புதிதில் ஆலிவ் கார்டன் ரெஸ்டாரண்டுக்கு அழைத்துச் சென்று இந்த Tiramisu கேக் ரொம்ம்ம்ம்ம்ப நன்றாக இருக்கும் என்று சொல்லி சாப்பிட வைத்து பின் “போச்சா..போச்சா” என்று வெறுப்பேற்றிய அந்த நண்பர்கள் குழாமை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். 😉
Title: Re: இன்று ஒரு தகவல் - 87
Post by: எஸ்கே on August 13, 2021, 08:21:50 AM
(https://i.postimg.cc/vZpy8nVy/images-2021-08-13-T081837-681.jpg) (https://postimages.org/)

ஹே ராம், எனக்கு ஒரு கதை சொல்லேன்!


ஒரு நாளில் 6 முதல் 7 மணி நேரம் மட்டுமே(!) தூங்கும் மக்களுக்கு, 8 மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குபவர்களை விட ஆயுள் அதிகமாம். கலர் டிவி கண்டுபிடிக்கப்படும் முன்பு வரை 75% மக்களின் கனவுகள் கருப்பு வெள்ளையில் இருந்திருக்கின்றன. கலர் டிவி வந்த பிறகு கருப்பு வெள்ளையில் கனவுகாணும் மக்களின் சதவீதம் 12ஆக குறைந்து விட்டதாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. பிறக்கும் போதே பார்வை இல்லாமல் பிறப்பவர்களின் கனவுகளில் உருவங்கள் எதுவும் வருவதில்லை. சப்தங்களும் வாசனைகளுமே அவர்களது கனவுகளை அழகாக்குகின்றன.


ஒருவர் தொடர்ந்து 16 மணி நேரம் உறக்கமில்லாமல் இருந்தால், அவரின் செயல்திறன்(அதாங்க பர்ஃபார்மன்ஸ்) குறைகிறது..எந்த அளவுக்கு என்றால், ரத்தத்தில் .05% சதவீதம் ஆல்கஹால் இருந்தால் எவ்வளவு குறையுமோ அந்த அளவுக்கு. தூக்கத்தைக் கண்டு(!) பயப்படுவதற்கு என்ன ஃபோபியா தெரியுமா? Somniphobia. அதிக நாட்கள்(264 மணி நேரம் 12 வினாடிகள்) தொடர்ந்து தூங்காமலிருந்த கின்னஸ் சாதனையை 1964ஆம் ஆண்டு 17 வயது Randy Gardner என்பவர் நிகழ்த்தினார் 🤔
Title: Re: இன்று ஒரு தகவல் - 88
Post by: எஸ்கே on August 14, 2021, 01:21:05 PM
(https://i.postimg.cc/sDfWDMSq/IMG-20210814-131957.jpg) (https://postimages.org/)

செய்திகள் வாசிப்பது?


North, East, West and South நான்கு திசைகளின் முதல் எழுத்தைச் சேர்த்து NEWS என்ற வார்த்தை உருவான கதையை நீங்களும் கேட்டிருப்பீர்கள் தானே? உண்மையில் NEWS என்ற வார்த்தையின் ஆதி, திசைகளின் முதலெழுத்தெல்லாம் கிடையாது. 14ஆம் நூற்றாண்டில் தான் NEWS என்ற வார்த்தை ஆங்கிலத்தில் முதன்முதலாக பழக்கத்தில் வரத்தொடங்கியது.  NEW என்பதன் பன்மை வடிவமான NEWS ஐ செய்திகளுக்காக உபயோகப்படுத்தத் துவங்கினார்கள்.


அதற்கு முன் வரை ஆங்கிலத்தில்  tidings என்ற வார்த்தை தான் NEWS என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்பட்டது. Tidings என்றால் Event, occurrence, or a piece of news என்று அர்த்தம். திசைகளிலிருந்து வரவில்லை என்றால் வேறு எங்கிருந்து வந்தது இந்த வார்த்தை? Nouveau என்ற (பழங்கால) ப்ரெஞ்ச் வார்த்தையிலிருந்து NEW என்ற ஆங்கில வார்த்தை உருவாகியிருக்கிறது. ப்ரெஞ்ச்சிலும் Nouveau  வார்த்தையின் பன்மை வடிவமான Nouvelles வார்த்தை ”செய்திகள்” என்ற அர்த்தத்திலேயே உபயோகப்படுத்தப்படுகிறது
.
Title: Re: இன்று ஒரு தகவல் - 89
Post by: எஸ்கே on August 15, 2021, 03:40:08 PM
(https://i.postimg.cc/44Pjs3rj/bigstock-Sunset-At-Giant-S-Causeway-76794419-1-1.jpg) (https://postimages.org/)

தேன்கூடும் எரிமலையும்?


அயர்லாந்து நாட்டின் Antrim என்ற இடத்தில் இருக்கிறது Giant’s Causeway என்ற பகுதி. கிட்டத்தட்ட 40,000 கருங்கல் தூண்களால் ஆன இப்பகுதியின் சிறப்பு என்னவென்றால், நாற்பதாயிரம் தூண்களும் அச்சில் வார்த்ததுபோல் ஒரே மாதிரி இருப்பதுதான். அறுங்கோண வடிவில் இருக்கும் இந்தத் தூண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த Bernard Fontanelle என்பவர் பல கணித கணக்கீடுகளுக்குப் பிறகு தேன் கூடு பெரிய சைசில் இருந்தால் எப்படி இருக்குமோ அதே மாதிரி தூண்கள் இருப்பதாகச் சொன்னார்.


உண்மையில் இந்தத் தூண்கள் ஒரே மாதிரி இருப்பதன் காரணம் பல நூற்றாண்டுகளுக்கு முன் கடலுக்கடியில் வெடித்த எரிமலையே. எரிமலையின் சக்தியால் கடல் மட்டத்திலிருந்து 100 அடி உயரத்திற்கு மேல் நோக்கி நகர்த்தப்பட்ட பாறைகளும், எரிமலைக்குழம்பும் மெதுவாக பூமியின் வெப்பநிலைக்கு மாறத்துவங்கின. அப்போது ஏற்பட்ட வெடிப்புகளே காலப்போக்கில் பாறைகளை ஒரே வடிவமுடைய தூண்களாக மாற்றியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 90
Post by: எஸ்கே on August 16, 2021, 07:41:25 AM
(https://i.postimg.cc/nhY0Q36M/images-2021-08-16-T074008-103.jpg) (https://postimages.org/)

சோயா பீன்ஸ் சீஸ்?


வெஜிடேரியன் என்ற பேச்சுக்கே இடமில்லாத சில ஜப்பான்/சீனா ஹோட்டல்களில் தப்பித்தவறி சாப்பிடச்செல்லும் அப்பாவிகளுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது டோஃபு எனப்படும் ஒருவகை சீஸ். பார்ப்பதற்கு அசப்பில் நம்மூர் பன்னீர் மாதிரி இருக்கும் இந்த டோஃபு சோயா பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது. குறைந்த கொழுப்புச்சத்தும், அதிக இரும்புச்சத்தும் நிறைந்த டோஃபு, கி.பி இரண்டாம் நூற்றாண்டு முதலே சீனாவில் பழக்கத்தில் இருந்துவருகிறது. ஆரம்ப காலத்தில் dou fu (அல்லது) tou fu (அப்படியென்றால் Bean Curd என்று அர்த்தமாம்) என்று சீன மொழியில் அழைக்கப்பட்ட இந்த உணவு வகை சீன சமையல்காரர் ஒருவரால் எதிர்பாராதவிதமாக கண்டுபிடிக்கப்பட்டது. சோயாபீன்ஸில் புதிய முறையில் சூப் தயாரிக்கும் முயற்சியில் இருந்தவருக்கு சூப்பிற்கு பதிலாகக் கிடைத்ததே டோஃபு. சீன மொழியின் dou fu வார்த்தை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ஜப்பானுக்கு வந்ததன் விளைவே இன்று வழக்கத்திலிருக்கும் Tofu என்ற வார்த்தை.


இப்படி உணவு இருப்பதே 18 & 19ஆம் நூற்றாண்டுகளில் தான் அமெரிக்கர்களுக்குத் தெரியும்..அதுவும் அந்த சமயத்தில் சீனாவிலிருந்து அமெரிக்கா வந்து குடியேறிய மக்கள் அறிமுகப்படுத்திய பின்புதான். ஆனால், 1950ஆம் ஆண்டுக்குப் பின் சோயாபீன்ஸ் பயிரிடத்துவங்கிய அமெரிக்கா, 20ஆம் நூற்றாண்டில் உலகின் அதிக சோயா பீன்ஸ் பயிரிடும் நாடாக மாறியிருக்கிறது.
Title: Re: இன்று ஒரு தகவல் - 91
Post by: எஸ்கே on August 17, 2021, 08:42:14 AM
(https://i.postimg.cc/rm826GNf/images-2021-08-17-T083831-863.jpg) (https://postimages.org/)

பவழப்பாறைகளை வளர்க்கும் சிற்பங்கள்?


இங்கிலாந்தைச் சேர்ந்த Jason deCaires Taylor என்பவருக்கு ஸ்கூபா டைவிங்கிலும், கடலுக்கடியில் இருக்கும் பவழப்பாறைகளைக் கண்டுபிடிப்பதிலும் ஆர்வம் அதிகம். 39 வயதான டெய்லர் ஒரு ஸ்கூபா டைவிங் ட்ரெயினரும் கூட. தன் இளம்பிராயத்தை ஐரோப்பா, ஆசியா மற்றும் மலேசிய கடற்பகுதிகளில் இருக்கும் பவழப்பாறைகளைக் கண்டுபிடிப்பதில் செலவு செய்த இவரின் விருப்பம் சிற்பங்கள் பக்கம் திரும்பியது.

(https://i.postimg.cc/pr6wnwbS/images-2021-08-17-T083814-785.jpg) (https://postimages.org/)

விளைவு, 2006ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவின் Grenada கடற்பகுதியில் முதல் ம்யூசியத்தை கடலுக்கடியில் வடிவமைத்தார். இந்த இடத்தில் ஏற்கனவே இருந்த பவழப்பாறைகள் புயலால் பாதிக்கப்பட்டுவிட, ம்யூசியம் அமைந்த பிறகு அதில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளில் மீண்டும் வளரத்தொடங்கியிருக்கின்றன. கடலுக்கடியில் ம்யூசியம் அமைப்பது புது அனுபவமாக இருப்பதாகச் சொல்லும் டெய்லர், பொதுமக்களும் ம்யூசியத்திற்கான சிலைகள் அமைப்பதில் பங்குபெற வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 92
Post by: எஸ்கே on August 18, 2021, 07:06:18 AM
(https://i.postimg.cc/C58XqtVP/images-2021-08-18-T070355-015.jpg) (https://postimages.org/)

Cadabra என்கிற அமேசான்?


புத்தகங்கள், ஈ-ரீடர், டேப்லட், ஆடை அணிகலன்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள், வெப் சர்வீசஸ், க்ளவுட் ஸ்பேஸ் என அனைத்தையும் விற்கும் ஆன்லைன் ”சூப்பர் மார்கெட்”டான அமேசான் துவங்கப்பட்ட புதிதில் அதிக நஷ்டங்களைச் சந்தித்த கம்பெனிகளில் ஒன்று. துவங்கப்பட்டபோது புத்தகங்களுக்கு மட்டுமேயான ஆன்லைன் கடையாக இருந்த அமேசான் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பொருட்களையும் தங்கள் வெப்சைட் வழியாக விற்பனை செய்யத்தொடங்கியது.

வாடிக்கையாளர்களின் நலனில் அதிக கவனம் செலுத்தும் கம்பெனிகளில் அமேசானும் ஒன்று. சேவையில் குறைபாடு இருப்பதால் தான் வாடிக்கையாளர்கள் போன் செய்கிறார்கள் என்று வாதிடும் Jeff Bezos, அந்த போன்கால்களைக் குறைக்கும் அளவுக்கு நம் சேவை முன்னேறவேண்டும் என்றும், கஸ்டமர்களை அதிக நேரம் போனில் காக்கவைக்கக்கூடாது என்றும் தன் கீழ் வேலை செய்பவர்களுக்கு கட்டளையிட்டார். ஒருமுறை மீட்டிங்கில், வாடிக்கயாளர்கள் நலன் காக்கும் பகுதியில் வேலை செய்த மேனேஜரை அழைத்து, அமேசான் கால்செண்டர்களில் சராசரி காத்திருக்கும் நேரம் எவ்வளவு என்று கேட்டார் Jeff. மேனேஜர் 60 முதல் 70 நொடிகள் என்று பதில் சொல்ல, கொஞ்சமும் தாமதிக்காத Jeff, மீட்டிங் ரூமிலிருந்தே வாடிக்கையாளர்கள் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளும் தொலைபேசி எண்களை அழைத்து கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தபடி பதிலுக்காகக் காத்திருக்கத் தொடங்கினார். கிட்டத்தட்ட 4 நிமிடங்களுக்குப் பின் பதில் கிடைக்க, “I Just called to check” என்று சொல்லி பட்டென்று அழைப்பைத் துண்டித்தார். அதற்குப் பின் அந்த மேனேஜரின் நிலை என்னவென்று சொல்லவும்வேண்டுமா?

தனக்கு வரும் அத்தனை மெயில்களையும் தன் உதவியாளர்கள் மூலமாக தெரிந்துகொள்ளும் Jeff, ஏதாவது பிரச்னை என்று வரும் மெயில்களில் வெறும் கேள்விக்குறியை மட்டும் இட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புவார். அதற்குப் பின் மொத்த டீமும் செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அவரிடமிருந்து வந்த மெயிலில் இருக்கும் பிரச்னையை தீர்க்க/சமாளிக்க தீயாக வேலை செய்தாகவேண்டும்.

தங்கள் கம்பெனியில் வேலை செய்பவர்களை மட்டுமல்ல, தங்கள் கம்பெனியுடன் கூட்டு சேர்ந்து பொருட்களை விற்க வருபவர்களையும், தங்கள் போட்டி கம்பெனிகளையும் பாரபட்சம் பார்க்காமல் மிரட்டி வேலை வாங்கும் திறமை அமேசானுக்கு இருக்கிறது.  Kindle E-Readerஐ அறிமுகப்படுத்தும் முன், அதற்கான மின்புத்தகங்களைச் சேகரிக்கும் வேலையில் இறங்கியது அமேசான். தங்களுக்கு பேப்பர் புத்தங்களை அளித்துக்கொண்டிருந்த புத்தக நிலையங்களை அதட்டியும் மிரட்டியும் மின்புத்தகங்களைப் பெற்றது. Zappos, Lovefilm போன்ற போட்டி கம்பெனிகளை வெளியேற்ற அவர்கள் விற்ற பொருட்களின் விலையை எக்கச்சக்கமாகக் குறைத்து, போட்டியாளர்களுக்குப் ப்ரஷர் கொடுத்து கம்பெனிகளைத் தனதாக்கிக் கொண்டது அமேசான்.

அமேசானின் ஆரம்பகாலப்பெயர் Cadabra.
Title: Re: இன்று ஒரு தகவல் - 93
Post by: எஸ்கே on August 19, 2021, 08:30:44 AM
(https://i.postimg.cc/cJJ9WSsz/images-2021-08-19-T082932-038.jpg) (https://postimages.org/)

ஸ்பின்ஸ்டர் (பாப்)கார்ன்?


பாப்கார்ன் செய்யும் போது சரியான ஈரப்பதம் இல்லாத காரணத்தால் வெடிக்காமல் போகும் சோள முத்துகளுக்கு ஸ்பெஷல் பெயர் இருக்கிறது தெரியுமா? அவை “Old Maid” அல்லது “Spinster” என்று அழைக்கப்படுகின்றன.

பாப்கார்னில் மஷ்ரூம், Snowflake என்று இரண்டு வடிவங்கள் இருக்கின்றன. மஷ்ரூம் வடிவ பாப்கார்ன்களை விட snowflake வடிவ பாப்கார்ன்கள் அளவில் பெரியதாக இருப்பதால், திரையரங்குகள் இந்த வடிவ பாப்கார்ன்களையே விற்கின்றன.


டி.வி பொட்டிகள் பிரபலமான 1950களுக்குப் பிறகு மக்கள் தியேட்டருக்கு வராமல் வீட்டிலேயே டி.வி பார்த்ததன் விளைவாக பாப்கார்ன் விற்பனையில் சரிவு ஏற்பட்டது. பாப்கார்னின் அறிவியல் பெயர் Zea Mays Everta.
Title: Re: இன்று ஒரு தகவல் - 94
Post by: எஸ்கே on August 20, 2021, 07:31:18 AM
(https://i.postimg.cc/J0MQdpWr/images-2021-08-20-T072855-172.jpg) (https://postimages.org/)

Mayday Mayday Mayday?


விமானம் பறந்துகொண்டிருக்கும்போது, அதிலிருப்பவர்களுக்கு ஏதும் பெரிய ஆபத்து நேர்ந்தால், தரையிலிருக்கும் கண்ட்ரோல் ரூமுக்கு தாங்கள் ஆபத்திலிருக்கிறோம் என்று தெரிவிக்க விமானிகள் “Mayday” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். அதென்ன “Mayday” ? 1923ஆம் ஆண்டு லண்டன் விமானநிலையத்தில் பணியாற்றிய Frederick Stanley Mockford  என்பவரை அவசர காலத்தில் விமானிகள் உபயோகிக்க வார்த்தை ஒன்று சொல்லுங்கள் என்று கேட்டனர் அதிகாரிகள். ”Help” என்ற வார்த்தை மிகச்சாதாரணமாக எல்லோராலும் உபயோகிக்கப்படுவதால், ஆபத்துக்காலங்களில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தும்போது வித்தியாசம் ஏதும் தெரியாது. 1923களில் லண்டனுக்கும் பாரிசுக்கும் இடையில் அதிக விமானங்கள் பறந்ததால் , கண்ட்ரோல் ரூமில் இருப்பவர்கள் பிரெஞ்சு மொழி பேசும் விமானிகளுடன் அதிகம் உரையாட வேண்டியிருந்தது. இதயெல்லாம் யோசித்த அந்த அதிகாரி, “Help Me” என்று பொருள் தரக்கூடிய “m’aider” என்ற பிரெஞ்ச் வார்த்தையின் சாயலில் “Mayday” வார்த்தையை சஜஸ்ட்டினார். அப்படி உருவானது தான் இந்த Mayday. விமானங்கள் மட்டுமல்ல, கப்பல்களிலும் இதே வார்த்தைதான் உபயோகப்படுத்தப்படுகிறது.


அமெரிக்காவில் தேவையில்லாத நேரத்தில் Mayday அழைப்பு விடுத்தால், விமானிக்கு 6 வருட சிறையும், 250,000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்படும். செப்டம்பர் 11 விமானத் தாக்குதலின் போது ஒரே ஒரு விமானத்திலிருந்து மட்டும் இந்த Mayday அழைப்பு வந்தது. சமீபத்தில் காணாமல் போன மலேசிய விமானத்திலிருந்து இந்த Mayday அழைப்பு கடைசி வரை வரவில்லை. 😦
Title: Re: இன்று ஒரு தகவல் - 95
Post by: எஸ்கே on August 21, 2021, 05:38:24 AM
(https://i.postimg.cc/NjRZDBtT/images-2021-08-21-T053605-018.jpg) (https://postimages.org/)

விக்கல்?


தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு விக்கல் வந்தாலே நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. 68 வருடங்கள் தொடர்ச்சியாக ஒரு மனிதருக்கு விக்கல் நிற்காமல் வந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? Charles Osborne என்ற அமெரிக்கருக்கு 1922ஆம் ஆண்டு வந்த விக்கல் 1990ஆம் ஆண்டு வரை நிற்கவே இல்லை. 1922ஆம் ஆண்டில் 350 பவுண்ட் எடையுள்ள பன்றி ஒன்று அவர் மேல் விழுந்தபோது ஆரமித்திருக்கிறது இந்த விக்கல். அன்றிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு 10 நொடிக்கும் ஒருமுறை விக்கல் வருமாம்.  ஆபரேஷன், ஹார்மோன் தெரபி என என்னென்னவோ செய்து பார்த்தும் இந்த இது நிற்கவேயில்லை. 1990ஆம் ஆண்டு அவருடைய 97ஆம் வயதில் அவர் மீது பரிதாபம் கொண்டு தானாகவே விக்கல் நின்றுவிட்டது. ஆனால் விக்கல் இல்லாமல் அவரால் உயிர்வாழ முடியவில்லையோ என்னமோ..அதற்குப்பின் ஒரே ஒரு ஆண்டு தான் அவர் உயிர்வாழ்ந்தார்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 96
Post by: எஸ்கே on August 22, 2021, 11:45:08 AM
(https://i.postimg.cc/N0fdkKdV/images-2021-08-22-T114317-463.jpg) (https://postimages.org/)

கோயம்பேடு ஸ்பெஷல்?


காய்கறிகளை விரும்பி உண்ணக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை மிகக்குறைவு..வளர்ந்தவர்களின் எண்ணிக்கையே குறைவாக இருக்கும்போது குழந்தைகளின் எண்ணிக்கையைக் கேட்கவும் வேண்டுமா? உண்மையில் குழந்தைகளுக்கு காய்கள் பிடிக்காமல் போவதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறதாம். குழந்தைகள் பிறக்கும்போது அவர்களின் வாயில் கிட்டத்தட்ட 10,000 சுவை மொட்டுகள்/அரும்புகளுடன்(Taste buds) இருக்கின்றன. வயது கூடும்போது இந்த எண்ணிக்கை குறைந்து ஐந்தாயிரத்தில் வந்து நிற்கிறது.


டேஸ்ட் பட்ஸ் அதிகமாக இருக்கும்போது காய்களில் இருக்கும் கொஞ்சூண்டு கசப்புத்தன்மை கூட அதிகமாகத்தெரியுமாம். அதனால் தான் குழந்தைகள் காய்களைப் பார்த்தால் தெறித்து ஒடுகின்றனர். பெரியவர்களான பின் இந்தக்கொஞ்சூண்டு கசப்பை உணரும் டேஸ்ட் பட்ஸ் அழிந்துவிடுவதால், காய்களின் சுவையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு மக்கள் வந்துவிடுகின்றனர். ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால், நான்-வெஜ்ஜை விரும்பி உண்ணும் இளைஞர்களுக்குக் காய்களின் சுவை 40 வயதிற்குப் பிறகுதான் தெரிகிறது..அதுவும் டாக்டர்களின் சிலபல அறிவுரை செஷன்களால்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 97
Post by: எஸ்கே on August 23, 2021, 09:38:13 AM
(https://i.postimg.cc/3RFvGkD0/images-2021-08-23-T093608-394.jpg) (https://postimages.org/)

ஆளில்லாத டீக்கடை?


யாருமே இல்லாத கடையில யாருக்குப்பா டீ ஆத்துறீங்க வசனம் Wells Fargo Bankக்கு ரொம்பப்பொருத்தமா இருக்கும். ஏன் தெரியுமா? ஆள்நடமாட்டமே இல்லாத ஒரு கண்டத்தில் ஏ.டி.எம் வைத்திருக்கின்றார்களே அதுக்காக. அண்டார்டிகாவின் தென்கோடியில்(McMurdo Station) உள்ள இந்த ஏ.டி.எம்மிலிருக்கும் இரண்டு மெஷின்களும் அங்கிருக்கும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவக் காத்துக்கொண்டிருக்கின்றன. அண்டார்டிகாவுக்கு மட்டுமல்ல, மொத்த உலகத்துக்குமே தென் துருவத்தின் கடைக்கோடியில் இருப்பது இந்த ஏ.டி.எம் தான். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சர்வீஸ் செய்யப்படுகின்றன இரண்டு மெஷின்களும்.  ஏ.டி.எம்மில் வைக்கப்போகும் பணத்தை விட அதற்கான பயணச்செலவு அதிகமாக இருக்கும் போலருக்கே.

இதே போல் வடதுருவத்தின் கடைசியில் இருக்கும் ஏ.டி.எம் நார்வே நாட்டில் அமைந்திருக்கிறது.
Title: Re: இன்று ஒரு தகவல் - 98
Post by: எஸ்கே on August 24, 2021, 12:01:31 PM
(https://i.postimg.cc/WprsdZ30/iZ4WX34.png) (https://postimages.org/)

ஹா!ஹா! பிரமிட்?


கனடாவில் இருக்கும் Saguenay நதியின் கரையில் அமைந்திருக்கிறது The Pyramide des Ha! Ha! என்றொரு சின்னம். அதென்னய்யா சிரிப்பு வேண்டியிருக்கிறது, பிரமிட் என்று சொன்னால் எங்களுக்குப் புரியாதா என்று திட்டாதீர்கள். பிரமிடின் பெயரே Ha!Ha! தான். அப்படியென்றால் பிரெஞ்சு மொழியில் ”எதிர்பாராத தடை/இடஞ்சல்கள்” என்று அர்த்தமாம். பெயர் மட்டுமல்ல பிரமிடும் வித்தியாசமாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாலைகளில் வைக்கப்படும் “Yield” symbol பலகைகளைக்கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் பிரமிடில் 3000 Yield Signs இருக்கின்றன.


பிரமிடின் தலைப்பகுதி வரை மக்கள் சென்று பார்வையிட படிக்கட்டுகளும், உச்சியில் View Pointம் அமைக்கப்பட்டுள்ளன. அதெல்லாம் சரி, இப்படி ஒரு வித்தியாசமான பிரமிட் அமைக்கப்பட காரணமென்ன? 1996ஆம் ஆண்டு Saguenay  நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இறந்துபோன 10 பேரின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கிறது இந்த Yield பிரமிட்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 99
Post by: எஸ்கே on August 25, 2021, 07:44:58 AM
(https://i.postimg.cc/Y9LLRhhK/images-2021-08-25-T074329-909.jpg) (https://postimages.org/)

ஆப்பிள் பெண்ணே?


20ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஆப்பிள் பழங்கள் மக்களால் சாப்பிடப்படவில்லை..மாறாக அவை மதுபானங்கள் தயாரிப்பதில் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டன. 1900ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மக்கள்(குறிப்பாக ஆண்கள்) தண்ணீரைப் பருகினர். மற்ற நேரமெல்லாம் மது மட்டுமே அவர்கள் விரும்பி அருந்திய பானமாக இருந்திருக்கிறது. இதனால் அதிகம் அடிவாங்கி பாதிக்கப்பட்டது பெண்களும் குழந்தைகளும் தான்.

இதிலிருந்து மக்களைக் காப்பாற்ற விரும்பிய Women’s Christian Temperance Union போன்ற அமைப்புகள், ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், ஆப்பிளை மது தயாரிப்பதில் பயன்படுத்தக்கூடாது என்றும் மக்களிடையே பிரச்சாரம் செய்யத்தொடங்கினர். இப்படியான பிரச்சாரங்களால் மதுபானக்களில் கலக்கப்பட்ட ஆப்பிள்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

ஆப்பிள் தோட்டங்களை வைத்திருந்தவர்கள் இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய தங்களின் விற்பனை ஸ்டாடர்ஜியை “An Apple A Day keeps The Doctors Away” என்று மாற்றியமைத்து வெற்றிபெற்றனர்.
Title: Re: இன்று ஒரு தகவல் - 100 💯
Post by: எஸ்கே on August 26, 2021, 11:21:15 AM
(https://i.postimg.cc/nVkRDTmv/images-2021-08-26-T111852-582.jpg) (https://postimages.org/)

பிங்க் லேக்?


ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு உப்பு நீர் ஏரியின் காரணப்பெயர் தான் “பிங்க் லேக்”. 245 ஏக்கர் பரப்பளவிலிருக்கும் ஏரியின் நீர் “பிங்க்” கலரில் இருப்பதாலேயே இந்தப் பெயர். பிங்க் நிறத்தின் பின்னால் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று காரணிகள் இருக்கின்றன. Dunaliella salina என்ற ஒரு வகை பாசி, halobacterium என்ற ஒரு பாக்டீரியா(அல்லது நுண்ணுயிரினம்) மற்றும் இறால் குடும்பத்தைச் சேர்ந்த brine என்ற உயிரினம். இவை மூன்றும் ஏரியில் அதிகமிருப்பதால் தான் தண்ணீர் பிங்க் கலராக மாறியிருக்கிறது. இந்த மூன்று உயிரினங்களுமே உப்பு அதிகமாக இருக்கும் தண்ணீரில் வாழக்கூடியவை.


இந்த ஏரியைச் சுற்றியிருக்கும் காடுகள் பறவைகளின் சரணாலயமாகவும் விளங்குகின்றன.
Title: Re: இன்று ஒரு தகவல் - 101
Post by: எஸ்கே on August 27, 2021, 12:19:16 PM
(https://i.postimg.cc/y6XdQP7D/IMG-20210827-121543.jpg) (https://postimages.org/)

தாமதமாக வந்து விழாவைச் சிறப்பித்த நாடு?


1908ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற ரஷ்ய டீம் 12 நாட்கள் லேட்டாக போட்டி நடக்கும் நாட்டுக்கு வந்த கதை தெரியுமா? உங்களுக்கும் எனக்கும் தேதி மறக்கலாம், மொத்த நாட்டுக்குமா தேதி மறந்துபோகும்? 1500ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மக்கள் ஜூலியன் காலெண்டரைப் பயன்படுத்திவந்தனர். 1577ஆம் ஆண்டு போப் க்ரிகோரி என்பவர் க்ரிகோரியன் காலண்டரை அறிமுகப்படுத்தினார். அன்று முதல் பல நாடுகள் ஜூலியன் காலண்டரைத் தூக்கி தூரமாக வீசிவிட்டு போப் அறிமுகப்படுத்திய காலண்டருக்கு மாறின. இங்கிலாந்து முதலான ஒரு சில நாடுகள் ஜூலியன் காலண்டரை விடுத்து புது காலண்டரைப் பயன்படுத்தத் தயங்கின. அப்படி தயங்கிய/உபயோகிக்க மறுத்த நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. க்ரிகோரியன் காலண்டருக்குப் பதில் ஜூலியன் காலண்டரைப் பார்த்துக்கொண்டிருந்ததால் 12 நாட்கள் லேட்டாக வந்து ஒலிம்பிக் போட்டிகளைச் சிறப்பித்தது ரஷ்யா. 1917ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ரஷ்யா க்ரிகோரியன் காலண்டரை உபயோகிக்கத் தொடங்கியது.