Recent Posts

Pages: [1] 2 3 ... 10
6
Dear RJ

Song Title : Muththa Mazhai (Tamil)
Movie       : Thug Life (Tamil)
Music       : A.R.Rahman
Lyrics       : Siva Ananth
Singer      : Dhee

ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னே இந்த வார இசை தென்றலுக்கு பாடலை பதிவிடுகிறேன்..

இந்த பாடலை தேர்வு செய்ய ஒரு சின்ன காரணம் இருக்கிறது. இந்த பாடல் 2 version ல உள்ளது. எனக்கு ரொம்ப பிடிச்சது Dhee version தான். காரணம் dhee இந்த பாடலை பாடிய விதம் ஒரு பெண்ணின் தெய்வீக காதலை தன்னுடைய அழகிய தமிழ் வார்த்தைகளை கோர்த்து பாடி இருக்கிறார். இன்னொரு version வேற மாதிரி இருக்கும். அதில் பாடலின் இடை இடையே சில சந்தங்களை சேர்த்து பாடி இருப்பதால் சற்றே மாறுபட்டு தெரிகிறது.

 ரங்கீலா -ஹே ராமா..  கோச்சடையான் - இதயம் அதே பாணியில் இன்று... இந்த பாடல்..

சிவா ஆனந்த் பாடல் வரிகளில்..

கண்ணான கண்ணே என் கண்ணாளா
என் உள் மன காதலை கண்டாயா
கரு மை கண்ட கண்ணோக்கி
பொய் சொல்லி நின்றாயா

நான் காதலி காதலன் நீ
வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்
காலம் யாவும் நீதானே
இந்தக் காலன் வந்தால் வெல்வேனே

ரொம்பவே யோசிச்சு பாடலை எழுதி இருக்கிறார். நமக்கு கண்ணதாசனை நினைவு படுத்துகிறது.

அவ்ளோ தான் சொல்ல நினைத்தேன்... நன்றி.




Pages: [1] 2 3 ... 10