Author Topic: இன்று ஒரு தகவல்  (Read 12631 times)

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 91
« Reply #90 on: August 17, 2021, 08:42:14 AM »


பவழப்பாறைகளை வளர்க்கும் சிற்பங்கள்?


இங்கிலாந்தைச் சேர்ந்த Jason deCaires Taylor என்பவருக்கு ஸ்கூபா டைவிங்கிலும், கடலுக்கடியில் இருக்கும் பவழப்பாறைகளைக் கண்டுபிடிப்பதிலும் ஆர்வம் அதிகம். 39 வயதான டெய்லர் ஒரு ஸ்கூபா டைவிங் ட்ரெயினரும் கூட. தன் இளம்பிராயத்தை ஐரோப்பா, ஆசியா மற்றும் மலேசிய கடற்பகுதிகளில் இருக்கும் பவழப்பாறைகளைக் கண்டுபிடிப்பதில் செலவு செய்த இவரின் விருப்பம் சிற்பங்கள் பக்கம் திரும்பியது.



விளைவு, 2006ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவின் Grenada கடற்பகுதியில் முதல் ம்யூசியத்தை கடலுக்கடியில் வடிவமைத்தார். இந்த இடத்தில் ஏற்கனவே இருந்த பவழப்பாறைகள் புயலால் பாதிக்கப்பட்டுவிட, ம்யூசியம் அமைந்த பிறகு அதில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளில் மீண்டும் வளரத்தொடங்கியிருக்கின்றன. கடலுக்கடியில் ம்யூசியம் அமைப்பது புது அனுபவமாக இருப்பதாகச் சொல்லும் டெய்லர், பொதுமக்களும் ம்யூசியத்திற்கான சிலைகள் அமைப்பதில் பங்குபெற வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 92
« Reply #91 on: August 18, 2021, 07:06:18 AM »


Cadabra என்கிற அமேசான்?


புத்தகங்கள், ஈ-ரீடர், டேப்லட், ஆடை அணிகலன்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள், வெப் சர்வீசஸ், க்ளவுட் ஸ்பேஸ் என அனைத்தையும் விற்கும் ஆன்லைன் ”சூப்பர் மார்கெட்”டான அமேசான் துவங்கப்பட்ட புதிதில் அதிக நஷ்டங்களைச் சந்தித்த கம்பெனிகளில் ஒன்று. துவங்கப்பட்டபோது புத்தகங்களுக்கு மட்டுமேயான ஆன்லைன் கடையாக இருந்த அமேசான் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பொருட்களையும் தங்கள் வெப்சைட் வழியாக விற்பனை செய்யத்தொடங்கியது.

வாடிக்கையாளர்களின் நலனில் அதிக கவனம் செலுத்தும் கம்பெனிகளில் அமேசானும் ஒன்று. சேவையில் குறைபாடு இருப்பதால் தான் வாடிக்கையாளர்கள் போன் செய்கிறார்கள் என்று வாதிடும் Jeff Bezos, அந்த போன்கால்களைக் குறைக்கும் அளவுக்கு நம் சேவை முன்னேறவேண்டும் என்றும், கஸ்டமர்களை அதிக நேரம் போனில் காக்கவைக்கக்கூடாது என்றும் தன் கீழ் வேலை செய்பவர்களுக்கு கட்டளையிட்டார். ஒருமுறை மீட்டிங்கில், வாடிக்கயாளர்கள் நலன் காக்கும் பகுதியில் வேலை செய்த மேனேஜரை அழைத்து, அமேசான் கால்செண்டர்களில் சராசரி காத்திருக்கும் நேரம் எவ்வளவு என்று கேட்டார் Jeff. மேனேஜர் 60 முதல் 70 நொடிகள் என்று பதில் சொல்ல, கொஞ்சமும் தாமதிக்காத Jeff, மீட்டிங் ரூமிலிருந்தே வாடிக்கையாளர்கள் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளும் தொலைபேசி எண்களை அழைத்து கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தபடி பதிலுக்காகக் காத்திருக்கத் தொடங்கினார். கிட்டத்தட்ட 4 நிமிடங்களுக்குப் பின் பதில் கிடைக்க, “I Just called to check” என்று சொல்லி பட்டென்று அழைப்பைத் துண்டித்தார். அதற்குப் பின் அந்த மேனேஜரின் நிலை என்னவென்று சொல்லவும்வேண்டுமா?

தனக்கு வரும் அத்தனை மெயில்களையும் தன் உதவியாளர்கள் மூலமாக தெரிந்துகொள்ளும் Jeff, ஏதாவது பிரச்னை என்று வரும் மெயில்களில் வெறும் கேள்விக்குறியை மட்டும் இட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புவார். அதற்குப் பின் மொத்த டீமும் செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அவரிடமிருந்து வந்த மெயிலில் இருக்கும் பிரச்னையை தீர்க்க/சமாளிக்க தீயாக வேலை செய்தாகவேண்டும்.

தங்கள் கம்பெனியில் வேலை செய்பவர்களை மட்டுமல்ல, தங்கள் கம்பெனியுடன் கூட்டு சேர்ந்து பொருட்களை விற்க வருபவர்களையும், தங்கள் போட்டி கம்பெனிகளையும் பாரபட்சம் பார்க்காமல் மிரட்டி வேலை வாங்கும் திறமை அமேசானுக்கு இருக்கிறது.  Kindle E-Readerஐ அறிமுகப்படுத்தும் முன், அதற்கான மின்புத்தகங்களைச் சேகரிக்கும் வேலையில் இறங்கியது அமேசான். தங்களுக்கு பேப்பர் புத்தங்களை அளித்துக்கொண்டிருந்த புத்தக நிலையங்களை அதட்டியும் மிரட்டியும் மின்புத்தகங்களைப் பெற்றது. Zappos, Lovefilm போன்ற போட்டி கம்பெனிகளை வெளியேற்ற அவர்கள் விற்ற பொருட்களின் விலையை எக்கச்சக்கமாகக் குறைத்து, போட்டியாளர்களுக்குப் ப்ரஷர் கொடுத்து கம்பெனிகளைத் தனதாக்கிக் கொண்டது அமேசான்.

அமேசானின் ஆரம்பகாலப்பெயர் Cadabra.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 93
« Reply #92 on: August 19, 2021, 08:30:44 AM »


ஸ்பின்ஸ்டர் (பாப்)கார்ன்?


பாப்கார்ன் செய்யும் போது சரியான ஈரப்பதம் இல்லாத காரணத்தால் வெடிக்காமல் போகும் சோள முத்துகளுக்கு ஸ்பெஷல் பெயர் இருக்கிறது தெரியுமா? அவை “Old Maid” அல்லது “Spinster” என்று அழைக்கப்படுகின்றன.

பாப்கார்னில் மஷ்ரூம், Snowflake என்று இரண்டு வடிவங்கள் இருக்கின்றன. மஷ்ரூம் வடிவ பாப்கார்ன்களை விட snowflake வடிவ பாப்கார்ன்கள் அளவில் பெரியதாக இருப்பதால், திரையரங்குகள் இந்த வடிவ பாப்கார்ன்களையே விற்கின்றன.


டி.வி பொட்டிகள் பிரபலமான 1950களுக்குப் பிறகு மக்கள் தியேட்டருக்கு வராமல் வீட்டிலேயே டி.வி பார்த்ததன் விளைவாக பாப்கார்ன் விற்பனையில் சரிவு ஏற்பட்டது. பாப்கார்னின் அறிவியல் பெயர் Zea Mays Everta.
« Last Edit: August 19, 2021, 08:31:47 AM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 94
« Reply #93 on: August 20, 2021, 07:31:18 AM »


Mayday Mayday Mayday?


விமானம் பறந்துகொண்டிருக்கும்போது, அதிலிருப்பவர்களுக்கு ஏதும் பெரிய ஆபத்து நேர்ந்தால், தரையிலிருக்கும் கண்ட்ரோல் ரூமுக்கு தாங்கள் ஆபத்திலிருக்கிறோம் என்று தெரிவிக்க விமானிகள் “Mayday” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். அதென்ன “Mayday” ? 1923ஆம் ஆண்டு லண்டன் விமானநிலையத்தில் பணியாற்றிய Frederick Stanley Mockford  என்பவரை அவசர காலத்தில் விமானிகள் உபயோகிக்க வார்த்தை ஒன்று சொல்லுங்கள் என்று கேட்டனர் அதிகாரிகள். ”Help” என்ற வார்த்தை மிகச்சாதாரணமாக எல்லோராலும் உபயோகிக்கப்படுவதால், ஆபத்துக்காலங்களில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தும்போது வித்தியாசம் ஏதும் தெரியாது. 1923களில் லண்டனுக்கும் பாரிசுக்கும் இடையில் அதிக விமானங்கள் பறந்ததால் , கண்ட்ரோல் ரூமில் இருப்பவர்கள் பிரெஞ்சு மொழி பேசும் விமானிகளுடன் அதிகம் உரையாட வேண்டியிருந்தது. இதயெல்லாம் யோசித்த அந்த அதிகாரி, “Help Me” என்று பொருள் தரக்கூடிய “m’aider” என்ற பிரெஞ்ச் வார்த்தையின் சாயலில் “Mayday” வார்த்தையை சஜஸ்ட்டினார். அப்படி உருவானது தான் இந்த Mayday. விமானங்கள் மட்டுமல்ல, கப்பல்களிலும் இதே வார்த்தைதான் உபயோகப்படுத்தப்படுகிறது.


அமெரிக்காவில் தேவையில்லாத நேரத்தில் Mayday அழைப்பு விடுத்தால், விமானிக்கு 6 வருட சிறையும், 250,000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்படும். செப்டம்பர் 11 விமானத் தாக்குதலின் போது ஒரே ஒரு விமானத்திலிருந்து மட்டும் இந்த Mayday அழைப்பு வந்தது. சமீபத்தில் காணாமல் போன மலேசிய விமானத்திலிருந்து இந்த Mayday அழைப்பு கடைசி வரை வரவில்லை. 😦



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 95
« Reply #94 on: August 21, 2021, 05:38:24 AM »


விக்கல்?


தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு விக்கல் வந்தாலே நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. 68 வருடங்கள் தொடர்ச்சியாக ஒரு மனிதருக்கு விக்கல் நிற்காமல் வந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? Charles Osborne என்ற அமெரிக்கருக்கு 1922ஆம் ஆண்டு வந்த விக்கல் 1990ஆம் ஆண்டு வரை நிற்கவே இல்லை. 1922ஆம் ஆண்டில் 350 பவுண்ட் எடையுள்ள பன்றி ஒன்று அவர் மேல் விழுந்தபோது ஆரமித்திருக்கிறது இந்த விக்கல். அன்றிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு 10 நொடிக்கும் ஒருமுறை விக்கல் வருமாம்.  ஆபரேஷன், ஹார்மோன் தெரபி என என்னென்னவோ செய்து பார்த்தும் இந்த இது நிற்கவேயில்லை. 1990ஆம் ஆண்டு அவருடைய 97ஆம் வயதில் அவர் மீது பரிதாபம் கொண்டு தானாகவே விக்கல் நின்றுவிட்டது. ஆனால் விக்கல் இல்லாமல் அவரால் உயிர்வாழ முடியவில்லையோ என்னமோ..அதற்குப்பின் ஒரே ஒரு ஆண்டு தான் அவர் உயிர்வாழ்ந்தார்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 96
« Reply #95 on: August 22, 2021, 11:45:08 AM »


கோயம்பேடு ஸ்பெஷல்?


காய்கறிகளை விரும்பி உண்ணக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை மிகக்குறைவு..வளர்ந்தவர்களின் எண்ணிக்கையே குறைவாக இருக்கும்போது குழந்தைகளின் எண்ணிக்கையைக் கேட்கவும் வேண்டுமா? உண்மையில் குழந்தைகளுக்கு காய்கள் பிடிக்காமல் போவதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறதாம். குழந்தைகள் பிறக்கும்போது அவர்களின் வாயில் கிட்டத்தட்ட 10,000 சுவை மொட்டுகள்/அரும்புகளுடன்(Taste buds) இருக்கின்றன. வயது கூடும்போது இந்த எண்ணிக்கை குறைந்து ஐந்தாயிரத்தில் வந்து நிற்கிறது.


டேஸ்ட் பட்ஸ் அதிகமாக இருக்கும்போது காய்களில் இருக்கும் கொஞ்சூண்டு கசப்புத்தன்மை கூட அதிகமாகத்தெரியுமாம். அதனால் தான் குழந்தைகள் காய்களைப் பார்த்தால் தெறித்து ஒடுகின்றனர். பெரியவர்களான பின் இந்தக்கொஞ்சூண்டு கசப்பை உணரும் டேஸ்ட் பட்ஸ் அழிந்துவிடுவதால், காய்களின் சுவையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு மக்கள் வந்துவிடுகின்றனர். ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால், நான்-வெஜ்ஜை விரும்பி உண்ணும் இளைஞர்களுக்குக் காய்களின் சுவை 40 வயதிற்குப் பிறகுதான் தெரிகிறது..அதுவும் டாக்டர்களின் சிலபல அறிவுரை செஷன்களால்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 97
« Reply #96 on: August 23, 2021, 09:38:13 AM »


ஆளில்லாத டீக்கடை?


யாருமே இல்லாத கடையில யாருக்குப்பா டீ ஆத்துறீங்க வசனம் Wells Fargo Bankக்கு ரொம்பப்பொருத்தமா இருக்கும். ஏன் தெரியுமா? ஆள்நடமாட்டமே இல்லாத ஒரு கண்டத்தில் ஏ.டி.எம் வைத்திருக்கின்றார்களே அதுக்காக. அண்டார்டிகாவின் தென்கோடியில்(McMurdo Station) உள்ள இந்த ஏ.டி.எம்மிலிருக்கும் இரண்டு மெஷின்களும் அங்கிருக்கும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவக் காத்துக்கொண்டிருக்கின்றன. அண்டார்டிகாவுக்கு மட்டுமல்ல, மொத்த உலகத்துக்குமே தென் துருவத்தின் கடைக்கோடியில் இருப்பது இந்த ஏ.டி.எம் தான். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சர்வீஸ் செய்யப்படுகின்றன இரண்டு மெஷின்களும்.  ஏ.டி.எம்மில் வைக்கப்போகும் பணத்தை விட அதற்கான பயணச்செலவு அதிகமாக இருக்கும் போலருக்கே.

இதே போல் வடதுருவத்தின் கடைசியில் இருக்கும் ஏ.டி.எம் நார்வே நாட்டில் அமைந்திருக்கிறது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 98
« Reply #97 on: August 24, 2021, 12:01:31 PM »


ஹா!ஹா! பிரமிட்?


கனடாவில் இருக்கும் Saguenay நதியின் கரையில் அமைந்திருக்கிறது The Pyramide des Ha! Ha! என்றொரு சின்னம். அதென்னய்யா சிரிப்பு வேண்டியிருக்கிறது, பிரமிட் என்று சொன்னால் எங்களுக்குப் புரியாதா என்று திட்டாதீர்கள். பிரமிடின் பெயரே Ha!Ha! தான். அப்படியென்றால் பிரெஞ்சு மொழியில் ”எதிர்பாராத தடை/இடஞ்சல்கள்” என்று அர்த்தமாம். பெயர் மட்டுமல்ல பிரமிடும் வித்தியாசமாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாலைகளில் வைக்கப்படும் “Yield” symbol பலகைகளைக்கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் பிரமிடில் 3000 Yield Signs இருக்கின்றன.


பிரமிடின் தலைப்பகுதி வரை மக்கள் சென்று பார்வையிட படிக்கட்டுகளும், உச்சியில் View Pointம் அமைக்கப்பட்டுள்ளன. அதெல்லாம் சரி, இப்படி ஒரு வித்தியாசமான பிரமிட் அமைக்கப்பட காரணமென்ன? 1996ஆம் ஆண்டு Saguenay  நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இறந்துபோன 10 பேரின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கிறது இந்த Yield பிரமிட்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 99
« Reply #98 on: August 25, 2021, 07:44:58 AM »


ஆப்பிள் பெண்ணே?


20ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஆப்பிள் பழங்கள் மக்களால் சாப்பிடப்படவில்லை..மாறாக அவை மதுபானங்கள் தயாரிப்பதில் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டன. 1900ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மக்கள்(குறிப்பாக ஆண்கள்) தண்ணீரைப் பருகினர். மற்ற நேரமெல்லாம் மது மட்டுமே அவர்கள் விரும்பி அருந்திய பானமாக இருந்திருக்கிறது. இதனால் அதிகம் அடிவாங்கி பாதிக்கப்பட்டது பெண்களும் குழந்தைகளும் தான்.

இதிலிருந்து மக்களைக் காப்பாற்ற விரும்பிய Women’s Christian Temperance Union போன்ற அமைப்புகள், ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், ஆப்பிளை மது தயாரிப்பதில் பயன்படுத்தக்கூடாது என்றும் மக்களிடையே பிரச்சாரம் செய்யத்தொடங்கினர். இப்படியான பிரச்சாரங்களால் மதுபானக்களில் கலக்கப்பட்ட ஆப்பிள்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

ஆப்பிள் தோட்டங்களை வைத்திருந்தவர்கள் இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய தங்களின் விற்பனை ஸ்டாடர்ஜியை “An Apple A Day keeps The Doctors Away” என்று மாற்றியமைத்து வெற்றிபெற்றனர்.
« Last Edit: August 25, 2021, 07:47:57 AM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 100 💯
« Reply #99 on: August 26, 2021, 11:21:15 AM »


பிங்க் லேக்?


ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு உப்பு நீர் ஏரியின் காரணப்பெயர் தான் “பிங்க் லேக்”. 245 ஏக்கர் பரப்பளவிலிருக்கும் ஏரியின் நீர் “பிங்க்” கலரில் இருப்பதாலேயே இந்தப் பெயர். பிங்க் நிறத்தின் பின்னால் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று காரணிகள் இருக்கின்றன. Dunaliella salina என்ற ஒரு வகை பாசி, halobacterium என்ற ஒரு பாக்டீரியா(அல்லது நுண்ணுயிரினம்) மற்றும் இறால் குடும்பத்தைச் சேர்ந்த brine என்ற உயிரினம். இவை மூன்றும் ஏரியில் அதிகமிருப்பதால் தான் தண்ணீர் பிங்க் கலராக மாறியிருக்கிறது. இந்த மூன்று உயிரினங்களுமே உப்பு அதிகமாக இருக்கும் தண்ணீரில் வாழக்கூடியவை.


இந்த ஏரியைச் சுற்றியிருக்கும் காடுகள் பறவைகளின் சரணாலயமாகவும் விளங்குகின்றன.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 101
« Reply #100 on: August 27, 2021, 12:19:16 PM »


தாமதமாக வந்து விழாவைச் சிறப்பித்த நாடு?


1908ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற ரஷ்ய டீம் 12 நாட்கள் லேட்டாக போட்டி நடக்கும் நாட்டுக்கு வந்த கதை தெரியுமா? உங்களுக்கும் எனக்கும் தேதி மறக்கலாம், மொத்த நாட்டுக்குமா தேதி மறந்துபோகும்? 1500ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மக்கள் ஜூலியன் காலெண்டரைப் பயன்படுத்திவந்தனர். 1577ஆம் ஆண்டு போப் க்ரிகோரி என்பவர் க்ரிகோரியன் காலண்டரை அறிமுகப்படுத்தினார். அன்று முதல் பல நாடுகள் ஜூலியன் காலண்டரைத் தூக்கி தூரமாக வீசிவிட்டு போப் அறிமுகப்படுத்திய காலண்டருக்கு மாறின. இங்கிலாந்து முதலான ஒரு சில நாடுகள் ஜூலியன் காலண்டரை விடுத்து புது காலண்டரைப் பயன்படுத்தத் தயங்கின. அப்படி தயங்கிய/உபயோகிக்க மறுத்த நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. க்ரிகோரியன் காலண்டருக்குப் பதில் ஜூலியன் காலண்டரைப் பார்த்துக்கொண்டிருந்ததால் 12 நாட்கள் லேட்டாக வந்து ஒலிம்பிக் போட்டிகளைச் சிறப்பித்தது ரஷ்யா. 1917ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ரஷ்யா க்ரிகோரியன் காலண்டரை உபயோகிக்கத் தொடங்கியது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்