Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 279  (Read 263 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 279

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline எஸ்கே

 • Full Member
 • *
 • Posts: 237
 • Total likes: 716
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

அழகான  இரவு பொழுது
சாந்தமான நிலவு முகம்🌝
பனித்துளி படர்ந்த புல்வெளி 🌾
நிலவொளியின் வெளிச்சத்தில்🌛
வைரமாய் மின்னும் பனித்துளி
விலகி நிற்கும் மேகக்கூட்டம்☁️
ரம்மியமான வான்வெளி
பரவிக்கிடக்கும் நட்சத்திரம்✨

நானும் என்னுயிர் தோழியும்👫
அருகருகே நட்பாய் அமர்ந்து👥
 நிலவின் அழகை ரசித்தபடி🌙
கதைத்துக் கொண்டிருந்தோம்
ஆனால் அவளின் ஆசையோ...
வானில் மின்னிக் கொண்டிருக்கும்
நட்சத்திரம் வேண்டுமாம்...✨

அவளின் ஆசையை நிறைவேற்ற
நட்சத்திர மீன்களை பறித்து💫
அவளின் மடியில் நிரப்புகின்றேன்..
அவளுக்கோ அளவில்லா ஆனந்தம்
இன்னமும் பறித்து கொண்டிருக்கின்றேன்
நட்சத்திர கூட்டத்தை அவளுக்காக..
« Last Edit: October 04, 2021, 09:46:02 PM by எஸ்கே »
தொழிலார்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline Mr Perfect

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து தோழி என்னும் உறவாள்
என்னை கவர்ந்தவளே!

தோள் கொடுக்க தோழன் மட்டுமல்ல நல்ல தோழி இருந்தாலும் எட்டிப் பிடிக்கலாம் இந்த வானத்தை
என்று எனக்கு உணர்த்தியவளே!

 என் முகம் கண்டு என் குறை தீர்த்திடுவாள்!

என் பசியை அறிந்து உணவு படைத்திடுவாள்!

என் சோகம் கண்டு தன் தோள் தந்திடுவாள்!

 என் வெற்றி கண்டு முகம் மலர்ந்திடுவாள்!
 
 என்னை எவரிடமும் விட்டுக்கொடுத்ததில்லை, எந்த சூழலிலும் கைவிட்டதும் இல்லை!

துவண்டு விழும்போதெல்லாம் தைரியம் கொடுத்தவள்!

 இன்ப துன்பங்கள் அனைத்திலும் என் உடன் இருந்தவள்!
 
 நான் கண்ணீர் சிந்தும் முன்பே அதை துடைக்க கரம் கொடுத்தவள்!

எட்டா உயரங்களை எட்ட வேண்டும் நீ என்று ஊக்கம் அளிப்பவள்!

உன் அன்பிற்கு முன் இந்த வானமும் சிறியது தான் தோழியே!

நம்மை தவறாக பேசிய இந்த உலகிற்கு தெரியுமா நீ எனக்கு இன்னொரு தாய் என்று!

உன் அன்பிற்கு முன் இந்த வானமும் சிறியது தான் தோழியே!

என் ஆயுள் உள்ளவரை உன் நட்பை சுமந்து வாழ்வேன்!

நீ கலங்காமல் வாழ அந்த வின்மீனையும் விலைபேசுவேன் என் உயிர் தோழியே!
« Last Edit: October 04, 2021, 11:35:59 AM by Mr Perfect »

Offline thamilan

நானும் எனது நண்பியும்
அறியாத வயது
ஆசைகள் அரும்பு விடும் மனது

ஒரு நாள் இரவு
இருவரும் அமர்ந்து
வானத்து நட்சத்திரங்களை
எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தோம்
திடீரென என்னிடம் விண்மீன்களை
பறித்துத் தருவாயா எனக்கு என
ஆவலுடன் கேட்டாள்

மின்மினிகளை பிடித்து தரச் சொன்னால்
பிடித்து தந்து விடுவேன்
விண்மின்களை பிடித்து தரச் சொன்னால்
நான் என்ன செய்வேன்

என் நண்பியின் ஆசையை
நிறைவேற்றுவதை விட
வேறு என்ன வேலை எனக்கு
கதிரையை கொண்டுவந்து
ஏறிப் பார்த்தேன்
எட்டவில்லை வானம் எனக்கு
ஏணியை கொண்டு வந்து
ஏறிப் பார்த்தேன்
எட்டவில்லை எனக்கு
தோட்டத்தில் மாங்காய் பறிக்கும் 
நீண்ட தடியை கொண்டுவந்து
தட்டிப் பாத்தேன்
எட்டாத தூரத்தில் மின்மினிகள்

என் நண்பி ஆசைப் பட்டு கேட்கிறாள்
முடியவில்லையே எனக்கு
என் நண்பிக்கு வாங்கு கொடுத்தேன்
 
நான் பெரியவன் ஆனதும்
படித்து பட்டம் பெற்று
விண்வெளிக்கு சென்று
அந்த விண்மீன்களை
மட்டும் அல்ல
அந்த வெண்ணிலவையும்
பறித்து வந்து உனக்கு தருகிறேன் என

நானோ படிப்பில் மக்கு
நானாவது படித்து பட்டம் பெற்று
விண்வெளிக்கு செல்வதாவது
என்றாலும் என் மனதுக்குள் சந்தோசம்
பிற்காலத்தில் நானும் அரசியல்வாதி
ஆகுவேன் என்னும் நம்பிக்கை
நானும் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கிறேனே

அவளும் மகிழ்வுடன்
காத்திருப்பின் அது வரை
உனக்காக என்றாள் 

« Last Edit: October 07, 2021, 05:01:46 AM by thamilan »

Offline Dear COMRADE

 • Newbie
 • *
 • Posts: 6
 • Total likes: 54
 • Karma: +0/-0
 • Gender: Male
 • என் இனிய தனிமையே✍️
அந்தி சாய்ந்ததும்
காரிருள் சூழ்ந்ததும்
தாரகை கூட்டத்தின் நடுவே
தங்க நிலா தவழ்ந்ததும்...
ஆயிரம் கதை சொல்வேன்
என் அன்புத் தங்கைக்கு...
வெண்ணிலவு உமிழும் வெளிச்சத்தில்
விரைந்து நகரும் பொழுதுகளோடு...

அவள் செவியோரம்
ரீங்காரம் இடும் - என்
செல்லக் கதைகள் கேட்டு
உதிரும் சிரிப்பினிலே
பூமியிலும் படர்கின்றதே பார்
அனையா விளக்காய் விண்மினிகள்...

நகர்ந்து செல்லும்
நாழிகை நடுவில் - சட்டென்று
இவள் மனதோடு
சங்கமிக்கும் ஓர் கனா...

நாள் இரண்டு கடந்தால்
தமையன் இவன் ஜனன தினம்...
பூமிப்பந்தின் மேலே
பூத்துக்குலுங்கும் -அந்த
பூக்களைப் பறித்து
தன் பொன்னான கரம் கொண்டு...
அன்பெனும் மாலை கோர்த்து
அன்பளிப்பாய் அதை வழங்க...

"அண்ணா
அந்தத் தாரகைகள் கொய்து
என்னிடம் தா" என்றாள் அவள்...
ஏன் என்ற காரணமும்
அவளிடத்தில் கேளாமல்
எட்டித் தாவினேன் நானும்
ஆஞ்சநேயர் போல - அந்த
நட்சத்திரங்கள் பறித்திட.....

பார்த்தீரா.....
அழகென்ற இறுமாப்பில்
அங்கிருந்த அம்புலியின்
முகம் சுருங்கிப் போவதை....

"கலங்காதே சந்திரனே
என் உடன்பிறப்பு உத்தரவிட்டால்
உனையும் பறித்திடுவேன்" என்றுரைத்து
மின்னும் ஆகாய பூப்பறிக்க - அவள்
மடியோடு உறவாடும்
விண்மீன்கள் தனி அழகு.....
« Last Edit: October 04, 2021, 02:11:38 PM by Dear COMRADE »

Offline Sun FloweR

தாய் முகம் அறிந்ததில்லை
தந்தை முகம் கண்டதில்லை
சக உதிரனாய் தோன்றிய நீ என்
சகலமும் ஆகிப் போனாய்...❤️

அன்று மலர் ஒன்று கேட்டேன்
மலர் வனத்தையே கண்முன் கொட்டினாய்..
அன்று சிப்பி ஒன்று கேட்டேன்
மூச்சடக்கி முத்தெடுத்து கண்முன் குவித்தாய்...
இன்று மின்மினி கேட்டேன்
வானத்து விண்மீன்களைப் பறித்து
ஒவ்வொன்றாய் நீட்டுகிறாய்...❤️

சிறுக சிறுக சேர்த்து வைத்துக்
கொள்கிறேன் நீ தரும் நட்சத்திரங்களை
மட்டுமல்ல உன் நேசத்தையும்
பாசத்தையும் அன்பு கலந்த
தாய்மையையும்❤️

அன்று நீ சொன்ன கதையில் நம்
அன்னை நிலவிலிருப்பதாய் கூறினாய்..
அதனால் தான் உனது நேசம் கண்டு,
தனது இடம் வெற்றிடம் ஆகாமல்
பாசத்தால் நிரம்பி வழியும் பூரிப்பில்
மெய்மறந்து சிரிக்கின்றாள் போலும் இந்நிலவன்னை...❤️

இவ்வுலகில் விலைமதிப்பில்லாதது
அன்னையின் அன்பு மட்டுமே என்பர்..
ஆனால்
என்னுலகில் யாவற்றையும் விஞ்சி
நிற்பது சகோதரனே உனது
தாய்மை மட்டுமே....❤️
« Last Edit: October 04, 2021, 09:30:15 PM by Sun FloweR »

Offline MoGiNi

அந்த
சிறு பிராயத்து
நாட்கள் ரம்மியமானவை
எட்டி  நீ  கை கோர்த்த
நிமிடத்தில் இருந்து
எனக்கானவள் நீ ..

கற்பனைகளில்
நான் பறித்த பூக்களை
காற்றிலே
உன் கூந்தலில்
சூட்டிக்கொண்ட நாட்கள் ..

உன் சிறிய
உதடுகள் தீண்டி
என் கரங்களுக்கு
வருவதற்காகவே
சிதறவிடப்பட்ட
தேன்  மிட்டாய்கள் ..

எட்டி நின்று
நான் வாங்கும்
அதட்டல்களுக்கு
கலங்கி நிற்கும்
கோழிமுட்டை கண்களுக்குள்
நான் காணாமல் போய்
கன  நாட்கள் ஆனதடி .

கனவுகளின் தேவதை நீ
கண் கலந்த பூவினம் நீ
என் கால்கள் சுற்றும்
பூனையடி
வாழ்வினுக்கும்
உன்னை சுமக்க
என் நாள்முழுதும் ஏங்குமடி

இதோ
இன்று
கற்பனையில் நான் பிடுங்கும்
காகிதமும் ஒளிர
காத தூரம் ஓடிவந்து
உனக்காய்
கால்கடுக்க
காத்திருக்கிறது நிலவு என்றால்
உனக்கு
புரிந்திடவா போகிறது
கெக்கே பிக்கேயென
கலகலத்து சிரித்துவைப்பாய் ..

பிடுங்கி வைத்த
நட்ட்ச்சத்திரங்கள்
உன் பிம்பம் பட்டு
ஒளிர்வதாய்
என்னுள்ளே ஒரு உணர்வு
பாவாடை தொட்டிலில்
கலகலத்து சிரிக்கிறது
அந்த ஒளிர்வாங்கி மின்னிகள்
இவன் என்றும்
உனக்கவன் என்றுரைத்து..

Offline JsB

 • Full Member
 • *
 • Posts: 112
 • Total likes: 446
 • Karma: +0/-0
 • Gender: Female
 • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)

எனக்காக வந்தாயே ...
எனக்காக இரவில் வந்து ஜொலித்தாயே...
என் உள்ளத்தில் தோன்றி மறைந்த அதே நிறமாக...
அந்த இரவு வானம் நீயாக...
உன் கனவு கன்னி நானாக மாற்றினாயே...

குழந்தைக்கு இரவை காட்டும் இன்னொரு தாய் நீயே...
பகலின் வெப்பத்தைத் தணிக்கும் நீரில்லா கருமழையே...
இரவெனும் மடியில் தினமும்...
என்னைத் தவழ வைக்கும் குழந்தை நிலவே...
என் தாய் மடிக்கு அடுத்து ...
நான் அசந்து உறங்கியது...

இரவே...உன் மடியிலே...என்று உணரும் போது...
கிடைக்கும் சுகமான இரவுகள் எத்தனை அழகு...
என் இரவின் அழகு ஓவியம் நீயாக...
உன் அழகை ரசிக்கும் பெண் நானாக
உன் இரவின் வருகைக்காக...
ஒவ்வொரு நிமிடத்தைக் கடந்துக் கொண்டிருக்கிறேன்...
என் இரவழிகியே...
« Last Edit: October 05, 2021, 12:42:40 PM by Forum »

Offline PreaM

 • Newbie
 • *
 • Posts: 8
 • Total likes: 34
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
இரவெனும் தோட்டத்தில் பூக்கும்
விண்மீனை பாரடி என் அன்பே...
உன் மலர்விழி மலர்ந்திட
மலைமேல் ஏறிதத்தித் தாவி
எட்டிப் பறித்தேன் உனக்காக மின்னும்
வானில் தோன்றிய விண்மீனை...

மணி மணியாய் விண்மீன்கள்
உன் மடியில் கொட்டி மூட்டை கட்டி
மறைத்து வையடி என் கண்மணியே...

விலையில்லாத விண்மீன்கள்
பூத்திருக்கு இந்த இரவினிலே

விடியும்வரை விளையாட அந்த
விண்வெளிக்கே செல்வோம் வா...

உன் புன்னகை ஒன்றே போதுமடி
பஞ்சபூதமும் உனக்கு அடிமையடி
அந்த நிலவை கொஞ்சம் பாரடி 
உன் அழகை கண்டு வியக்குதடி....

இரவோடு உறவாடி விண்னோடு விளையாடி
மகிழ்வோம் வா கண்மனியே...
இந்நாளில் உன்னோடு நான்
என்னாளும் உனக்காக
 இருப்பேன் என் கண்மனியே....
« Last Edit: October 05, 2021, 10:07:41 PM by PreaM »