Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 188  (Read 2481 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 188
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 01:47:26 PM by MysteRy »

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
கொட்டும் தூரலிலே
  எட்டும் தூரத்திலே
பட்டுச்சிறகடித்து வரும் பட்சியே.....
  காதல் தூதாய் உன்னை
என்னவள் அனுப்பினாளோ...!!!???

என்ன இன்ப சேதி உரைக்க 
  என்னிடம் வருகிறாய்...
காதலுக்கு தூது சொல்ல
  பூரிப்பில் கரைகிறாய்...

ஆடும் விழிகளில்
  நாடகம் காட்டும் என் கலைமாது,
நான் அவள்பால் கொண்ட காதலில்
  தவிப்பதை பார்த்து வரச் சொன்னாளோ...

இமைக்கும் சந்தத்திலும்
  காதல் கீதம் கொண்ட என் இசையரசி,
ஆகாரமின்றி அவள் புன்னகை ஒன்றையே
  எண்ணி எண்ணி காதல் வளர்ப்பதை
இரசித்து வரச்சொன்னாளோ...

குறைகளற்ற சிற்பமாய்
  பூமியில் நடைபயிலும் என் கட்டழகி,
உறக்கத்திலும் அவள் பூமுகம் கண்டு
  தலையணையிடம் சிரித்துப் பேசும்
என் பித்து நிலையை அறிந்து
  வரச்சொன்னாளோ...

நான் தேடும் சொர்க்கம் எல்லாம்
  ஒற்றைப் பார்வையில் ஒளித்த என் பூங்கொடி,
  அவள் நினைவுகள் அலையென அடிக்கும்
என் மனதின் நிலையை
  கேட்டு வரச்சொன்னாளோ...

நீ வரும் காட்சி கண்டு
  உன் சிறகுகளை விடவும்
என் இதயம் படபடப்பதை
  கேளாயோ பட்சியே.....

இயல்பு நிலைமாறி
  காதலால் தினம் மூழ்கி
கொஞ்சும் பெண்மைக்கு
  பஞ்சம் இன்றி கவிப் பாடி
உருகி வழியும் என்னிடம்
  விரைந்து வா தூது பறவையே...

அவள் சேதி யாதாயினும்,
  நான் கொண்ட சேதி ஒன்று தான்...
அவள் மடியில் தலை வைத்து
  கன்னியவள் தரும் நெற்றி முத்தம்
வேண்டிய கணமே என் ஜீவன் பிரிந்திடினும்
  ஏழேழு ஜென்மமும் மோட்சமே எனக்கு...

Offline JeGaTisH

நிலத்தில் நீர் தேடிய பறவைக்கு
வானத்தில் இருந்து  கொட்டியது மழைநீர்

மனக்கவலை மறந்து மனிதனும்
வானத்தையே பாதிருதான்
மனிதனுக்கு கிடைத்தது
என்னவோ சுடும் வெயில் தான்

பறவையின் மனதிற்க்கு மனிதனை போல
பாவங்கள் செய்ய தெரிவதிலையே

பறவையை அடைத்து வைக்க விரும்பும் மனிதனே
அது வெளியிலே விட்டு மழையில் அது துள்லுவதைபார்
அதுவே பறவையின் சுகந்திரம் அதை உன் ஆசைக்காக அடைக்தே!

அதை பொறுத்தவரை மழை அதன் நண்பன்
மழையை பார்த்ததும் பறவை சிரகடிபதை பார்
பறவையின் இன்பத்துக்கு அளவே இல்லை

மழை நண்பன் மீண்டும் வந்து
பறவையின் சந்தோசத்தை மீட்டேடுக்கும்
அதே போல மனிதனின் வாழ்க்கைகும்
ஒரு பயன் கிடைக்கும் என எண்ணுவோம்!


« Last Edit: June 10, 2018, 11:22:48 PM by JeGaTisH »

Offline thamilan

வெண்மேகக் கூடலிலே
கார்கேகம் கருவுற்று
பிரசவித்த குழந்தை மழையே
மேகத்தில் பிறந்து
காற்றினில் தவழ்ந்து
கடலினில் மிதந்திடும் மழையே
நீ வானம் பூமிக்கு அனுப்பிடும் காதல் கடிதங்களா
நீ தொட்டதும் பூமி சிலிர்க்கிறதே

உன்னால் மனிதகுலம்  மட்டுமல்ல
மண்ணின் ஜீவராசிகள் அனைத்துமே
பரவசம் அடைகின்றனவே
உன் துளி நீர் பட்டதும்
மண்ணின் அடியிலுள்ள விதைகள் கூட
சிலிர்த்தெழுந்து வெளிவருகின்றனவே

வானத்தின் கண்ணீர்
பூமிக்கு தெளித்திடும் பன்னீர்
மழைத்துளிகள் வானத்துக்கும் பூமிக்கும்
இறைவன் போட்டிட்ட  திரைச்சேலையா - இல்லை
பாண்டியன் சபையினில் கண்ணகி எறிந்திட்ட
சிலம்பின் பரல்களா

மழை இறைவன் பூமிக்கு அளித்திட்ட
ஒரு வரப்பிரசாதம்
மழையால் மானிடம் செழித்திடும்
மண்ணில் உயிர்கள்
மழைநீரால் உயிர்த்திடும்

மழையைக்  கண்டு  ஒதுங்கிடும்
மானிடரும் உண்டு 
மழையில் நனைந்து மகிழ்ந்திடும்
உயிரினங்களும் உண்டு
மழைநீர் படும்போது 
அடிமுதல் நுனிவரை சில்லென்று
சிலிர்க்குமேஅந்த சுகத்துக்கு ஈடுஇணை உண்டோ

மேகமே
உன் மழையெனும் அமுதத்தால்
இந்த‌ உலகை குளிர்வித்து
உலக வளங்களை செழிவித்திடும்
உனக்கு நாம் என்ன செய்தோம்
உலக வளங்களை சுரண்டி
வேரறுத்து காடுகளை நகரங்களாக
மாற்றியதைத் தவிர வேறொன்றும் இல்லை
« Last Edit: June 11, 2018, 03:25:22 PM by thamilan »

Offline PowerStaR

சிறுப் பறவை நான் ...
சிறகு உடைந்தப்
பறவையும்  ஆவேன் ...
எனினும் என் இரை என்
தேடலில் மட்டும் ....!!!
இதில் மழை என்ன
காற்று என்ன
எல்லாம் ஒன்றுதான் ....
இருப்பிடம் தேடி தேடி
தொலைகின்றேன் !!!
தனித்து வசிக்க அல்ல
உறவுகளுடன் கூடி சுவாசிக்க !!!
ஆற்றல் உண்டு அலைகடல்
மேலும் பறந்திட இருந்தும்
என்ன பயன் ??
சூழல் காற்று வீசுகையில்
சிறுப்பறவை நான்
என்ன செய்ய !!!
பறந்தேன் !!
சிறகு உடைந்தேன் !!
அனுபவங்கள் கற்றேன் !!!
காத்திருக்கிறேன் !!!
அதோ கார் மேகம் !!!
இளங்காற்றுடன் தூறலும்
விழ ....
துவங்கிவிட்டது என் சிறகு ...
விறித்து பார்க்கிறேன் மகிழ்வாக ...
மேலும் பலமாக ...!!
சற்று அனுபவத்துடன் ....
சிறகுகள் விறியும் மென்மேலும் எழ !!!

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
இதோ இரை தேடி என் தாய்
எங்கோ பறந்து செண்டிருக்கிறாள்
கூட்டில் எங்களை விட்டுவிட்டு

மனிதன் குடம் எடுத்து
வீதியில் அலைந்து கொண்டிருக்கிறான்
இதில் என் தாகம் பற்றி கவலை கொள்ள
அவனுக்கேது நேரம்

அவன் சிந்தும் சிறு துளிகள்
நீர் போதும் என் தாகம் தீர்க்க

குளத்தையும் , குட்டையையும்
அழுக்காக்கி பாசிபிடித்து
உபயோகிக்க முடியாமல்
வைத்துள்ளான்

ஏரியையையும் கரையாக்கி
வீடுகட்டி குடியேறியபின்
தண்ணீருக்காக
அலைந்துகொண்டிருக்கிறான்

மழை தரும் மேகத்தை
கொண்டுவரும் காற்றுகூட
இன்று மரங்களின்றி
அனல்காற்றாய் அறைந்துகொண்டிருக்கிறது

என் தாகம் கூடிக்கொண்டேயிருக்கிறது

இதோ ,
கருமேகம் எங்கிருந்தோ
வருகிறது
வாய் திறந்து அண்ணாந்து பார்க்கையில்
சிறு துளி என் வாயில் பட்டு
தெறிக்கிறது


துளிகள் கூட கூட
என் தாகமும் தீர
உடலும் மனமும்
குளிர்ந்தது

சிறகுகள் விரிய
பறக்க தோன்றியது
மழை வரும் திசை நோக்கி
இதோ

மெல்ல மெல்ல
எழுகிறேன் மேலே


****ஜோக்கர் ****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
பல வாரங்களும்
மின்னலாய்க்  கடந்தன
எம் தாகங்களும்
தீராது கிடந்தன

ஏங்கி ஏங்கி காத்துக்கிடந்தோம்
பசுமையை வேண்டி............
தேடித் தேடி ஓய்ந்தே போனோம்
ஏமாற்றம் எமை வாட்டி ......

எல்லோரும் வீசினோம்
கண் வலைகளை
நீரைத்  தேடி......... 

ஆனால் நீர் நிலைகளும்
துரத்தின நம் மீது
மண்ணை மூடி...................

ஆறறிவு ஜீவன்கள்
விதைத்த பாவங்கள்
இன்று வாயற்ற எமக்காய்
வந்த சோகங்கள்...............

மரங்களை அழித்து
கட்டிடம் விதைத்து
ஒய்யாரமாய் வாழும் மானிடம்

ஈரம் என்ற ஒன்றை நிலம் மீதும்
வையாமல் அழித்து சென்றன
எம்  வாழ்விடம்

என் குடும்பமும் மாண்டது,
வீடாய் வாழ்ந்த கூடும் சிதைந்தது,
தனியே தவித்து அலைகிறேன்
என்  சொந்தங்களைத் தேடி
தொலைகிறேன்........


தனி ஜீவனாய் ஆன பின்பு
மழை நீரும் பொழிகிறது
வெப்பத்தால் வெந்த
என் உடலும் தணிகிறது.

இருந்தும் என்ன பயன்?
ஒரு கூட்டுப்பறவைகளாய்
வாழ்ந்த சொந்தம்
எங்கோ தொலைகிறது...........

தேகத்தை தணிக்க மழை......
எனக்குள்  எரியும் சோகத்தை
தணிக்க இனி ஏது நிலை?

மழை பொழிய வழி விடுங்கள்
மரம் வளர்க்க பாடு படுங்கள்