Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 196  (Read 2223 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 196
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 01:42:31 PM by MysteRy »

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
இறைவன் அடிக்கடி பூமிக்கு வருவதில்லை...
ஆதலால் தந்தை என்பவரை அனுப்பினாரோ...!
தினமும் நாம் வேதங்கள் கேட்பதில்லை...
ஆதலால் தந்தை சொல்லை மந்திரமாக்கினாரோ...!

நான் மொட்டாக வந்தபின்
என் தாய் காட்டிய
ஓவியம் என் தந்தை...
நான் மலராக மலர்ந்தபின்
நான் கண்டு வியந்த
காவியம் என் தந்தை...

தாய்ப்பாலின் அருமையை
என் தந்தையின்
பாச மழையிலும் உணர்ந்தேன்!
கருவறையின் பெருமையை
என் தந்தையின்
அன்பு கரங்களிலும் அறிந்தேன்!

என் வெளிச்ச கதிரவன் என் தகப்பனே...
என் வர்ண வானவில் என் தகப்பனே...
என் காடுகளை பூவனமாய்
மாற்றுபவர் என் தகப்பனே...
நான் உயரங்கள் எட்ட
ஏணியாகுபவர் என் தகப்பனே...

தந்தையின் மடியே என் சொர்க்கம்...
அவரின் அறிவுரையே என் மார்க்கம்...
தந்தையின் புன்னகையே அன்பின் அடையாளம்...
அவரின் கன்ன முத்தமே என் பொய்க்கோபத்திற்கு கடிவாளம்...

பள்ளி நாட்கள் பசுமையாகின,
என் தந்தையின் கரம்பற்றி செல்வதற்காய்...
செல்லக் கோபங்கள் வழமையாகின,
என் தந்தையின் கொஞ்சலிற்காய்...

மகள் என கர்வம் கொள்கிறேன்...
என் ராஜதந்தைக்கு இளவரசி ஆனதால்...
யுவதி என கவலை கொள்கிறேன்...
என் தந்தையின் கொஞ்சல் கிடைக்காததால்...

தந்தையின் அன்பு தோப்பில்
பட்சியாய் காற்றில் திரிந்தேன்...
தந்தையின் துடிப்பான பண்புகளால்
நல்லொழுக்கம் அறிந்தேன்...

குழந்தையாய் என்னை
அவர் தூக்கி மகிழ வைத்தார் அன்று!
குமரியாய் நானும்
அவர் பெயர் உயர்த்தி வாழ்கிறேன் இன்று!

ஆயிரம் பட்டங்கள் எனை சேரலாம்...
ஆயிரம் கௌரவங்கள் எனை சூழலாம்...
ஆயினும் அவை கண்டு எனை மறவேன்!
அவற்றை என் தந்தைக்கு பரிசாய் தருவேன்!

என் தனிப் பெயரால் நான் ஒருபோதும்
திருப்தி கொள்ளவில்லை...
என் தந்தையின் பின்னால் என் பெயர் கொண்டே
பெருமிதம் கொள்கிறேன்...

என் காலங்கள் கடக்கலாம்...
புது உறவுகள் நான் காணலாம்...
என் குணங்கள் மாறலாம்...
பல தடைகள் நான் தாண்டலாம்...

எத்தனை மாற்றங்கள் சந்திப்பினும்
என் தந்தையின் அன்பை மறவேன்...
வாழையடி வாழையாக எந்நாளும்
என் தந்தையின் புகழை கடத்துவேன்...

எழுத்துக்களால் மட்டுப்படுத்த முடியா சாகரம் என் தந்தை...
ஆயினும் அவருக்காய் ஓர் துளி கவி சமர்ப்பித்து
உச்சி குளிர்கிறது என் சிந்தை...!!!
« Last Edit: August 20, 2018, 07:25:12 PM by AshiNi »

Offline JeGaTisH

தந்தை எனக்கு பெருமை சூட்டி
எனது  இளவரசியாக
என் கையில் இவள்  சிறு நிலா!

உன்னை  வயிற்றில்  சுமக்காவிட்டாலும்
என்  நெஞ்சில்  சுமக்கும் பாக்கியம் பெற்றேன்!

இரவுக்கு நிலவு தோழி
பூவுக்கு தேனீ தோழி
எனக்கு நியடி நிலா
எப்போதும் உன் மீது பால்வாசனை
உன்னை நுகர்திடவே
பட்டாம்பூச்சி உன்னை தேடும்
எப்போதும் தெரியாத மொழி பேசி
என்னை வெல்லும் ஒரு அறிவாளியும் நீ

கனவுகள் பல உன்னை  வளர்க்க
கலைந்தது ஒரு நொடியில்,  நான் உன்னை தூக்க
ஏற்பேனே  உன்னை என்னில்  பாதியென
வளர்ப்பேனே  உன்னை பெற்றெடுத்த தாயென
வாழ்வேனே இனி என் வழக்கை உனக்கென
தருவெனே  என் உயிர்கூட உனக்கென!



 அன்புடன் உங்கள் சொக்லேட்  தம்பி ஜெகதீஸ்
« Last Edit: August 22, 2018, 01:53:03 PM by JeGaTisH »

Offline thamilan

மகளே
உன் அன்பைத் தோற்கடிக்கும்
மற்றொரு அன்பை
யாரும் தரப் போவதில்லை
உலகில் உன்னைத் தவிர

தந்தையே
தந்தையாக நீ காட்டிய அன்பையெல்லாம்
தாயாக நான் திருப்பித் தருவேன்
அடுத்த ஜென்மத்தில்
நீ என் மகனாக பிறப்பாயெனில்


மகளே
உன்னை வயிற்றில் சுமக்கும்
பாக்கியம் எனக்கு இல்லை
ஆதலால் மகளே நீ பூத்து
நான் உதிரும்வரை
என் நெஞ்சினில் சுமக்கிறேன்
என்னை அப்பா என்ற மகுடத்தை சூட்டியவளே

தந்தையே
சொர்க்கம் என்பது என்னவென்று
என்னிடம் கேட்டால்
நான் படுத்துறங்கும் என் தந்தையின்
மார்பு தானென்பேன்
ஐந்திரண்டு திங்கள் என்னை
கருவறையில் சுமந்தாள் தாய்
நீயோ என்னை
ஆயுள் வரை சுமக்கும் தாயாகிறாய்

மகளே
என் கை பிடித்தது நீ நடக்கையில்
உன் கைகளுக்குள் அடைக்கலமாவது
நான் தான் மகளே
தொட்டிலில் தொடங்கிய உன் உறவு
நான் கட்டிலில்  விழும் வரை
தொடர்ந்திடும் மகளே


தந்தையே
அறிவுக்கே அறிவுரை சொல்லும்
ஆசான் நீ
நான் என்ன தப்பு செய்தாலும்
அன்பான வார்த்தைகளால் என்னை
உருகிட செய்திடும் பனிமலை நீ
அன்பை மட்டுமே அடைமழையாய்
பொழிந்திடும் ஆகாயம் நீ

மகளே
உன் மழலைச் சொல்
எனக்கு ஐம்பெரும்  காப்பியங்கள்
அப்பா என்று நீ கூப்பிடும் சொல்
எனக்கு நான் கேட்டரியா அமுதகானம்
நீ சிரிக்கும் சிரிப்பொலி
சிதறும் தேன்துளி


Offline KoDi

  • Jr. Member
  • *
  • Posts: 70
  • Total likes: 270
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
கண்ணே என் கண்மணியே
கை  தவழும்  ரோஜாவே
பொன்னே என் பொற்சிலையே
பூத்துக் குலுங்கும் நந்தவனமே

தத்தி  நடை பயிலயிலே
தவழ்ந்து வரும் அருவி நீ
ஆடி  பாடி   ஓடுகையில்
வீசுபூந் தென்றல் நீ
என்னை பார்த்து சிரிக்கையிலே
நான் வணங்கும்  தெய்வம் நீ
சிந்தையிலே  இனிக்கின்றாய்
கனியே கற்கண்டே

என்மீது உறங்கையிலே
நான்  உனது பஞ்சு மெத்தை
என்னைப்பார்த்து  சிரிக்கையிலே
நான்  உனது   கோமாளி
எச்சில் நீ  உமிழ்க்கையிலே
நான் உனது குப்பைத்தொட்டி
இருந்தும் நான் ரசிக்கிறேன்
எனது இரு கைகள்  தட்டி 

சுகந்த சந்தன வாசனையே
பூவாய் மலர்ந்த மல்லிகையே
சொந்தம் தந்த  தேவதையே
சுவாசம்  தந்த பைங்கிளியே
பாசம் உன்னில் பொங்குதடி   
பரிவாய் நீயும்  பார்க்கையிலே
சொர்கம் ஒன்று வேண்டாமடி   
உனை  கொஞ்சுவது  போதுமடி
« Last Edit: August 23, 2018, 11:04:47 PM by KoDi »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
அப்பா

நீ என்னை கையில் தாங்கிய
அந்த நாள் இருந்து இன்று மட்டும்
எல்லாவற்றிலும் என்னை
தாங்கிக்கொள்பவர் அவர்

இளவரசியாக என்னை நடத்தும்
ராஜா அவர் தான்
யாரு என்னை என்ன சொன்னாலும்
என் உடனிருக்கும் நண்பர்  அவர்

என்னிடம் பாசமாக பேசும் போது
குழந்தையாக அவர் பேச்சு
எனக்காக அவர் செய்யும் பணிவிடைகள்
அளவுக்கு அதிகம்

அடிக்கடி நீ சொல்லும்
அந்த வார்த்தைகள்
நீ தான் என் அம்மா
கேட்கும் போதே  என் மெய் சிலிர்க்கும்

என் ஆசை தான்
அவர் ஆசை
என் கனவு தான்
அவர்  கனவு

யாருக்காகவும் எதற்காகவும்
என்னை விட்டுக்கொடுக்காத
அன்பின் உருவம் அவர்
ஆம் அவர் தான் என்
உயருக்குயிரான அப்பா




« Last Edit: August 19, 2018, 10:19:21 PM by NiYa »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மகளே
நீ பிறந்தபோது என்மனத்தில்
பொங்கும் பிரவாகமாக ஆனந்தம்
குளிக்கவென கடலில் மூழ்கியவன் கையில்
விலையுயர்ந்த முத்தாக கிடைத்தாய் நீ


முதல் நாள் உன்னை
என்கைகளில் தாங்கிப்பிடிக்கையிலே
என் மனம் சொல்லியது
என்றும் உன்னை தாங்கிப்பிடித்து
உலகில் உன்னதமான ஒரு இடத்தில்
நிலைநிறுத்துவேன் உன்னை என


ஒவ்வொருமுறையும் உன்
பிஞ்சிக் கைகளையும்
பஞ்சிக் கால்களையும் தொடும்போது
என் இதயத்தில் இன்ப அதிர்வுகள்


இரவில் நீ கண்மூடித்  தூங்குவதை
கண்முழித்துப் பார்க்கும்  நான்
உனக்கு எல்லாம் சரிவர செய்கிறேனா என
எனையே நான் கேட்டுக்கொள்வேன்
உன் நலனுக்காக
இறைவனிடம் கைகூப்பித் தொழுவேன்


நீ எப்படி வளர வேண்டும்
என்ன மாதிரி ஆக வேண்டும்
இது தான் எனது ஒரே நினைவும் கனவும்
உன்னை ஊர் போற்றும்
நாடு போற்றும்
உத்தம பெண்ணாக
அன்பும் பணிவும் மிக்க
அற்புதப் பெண்ணாக ஆளாக்குவேன்             


நீ எப்படி எல்லாம் வரவேண்டும் என்று நினைப்பாயோ
நீ எத்தனை உயரம் உயர விரும்புகிறாயோ
உனக்கு படிக்கட்டுகளாக நானிருப்பேன்
என் உயிர் உள்ளவரை
உனக்காக வாழ்ந்திருப்பேன்


நீ தடுக்கி விழும் போதெல்லாம்
உன்னைத் தாங்கிப் பிடிப்பேன்
நீ தடுமாறும் போதெல்லாம்
உன்னை தட்டிக் கேட்பேன்


என் குட்டித் தேவதையே
உனக்கானது இந்த தந்தையின் இதயம்
உனக்காகவே வாழும்
இந்த தந்தையின் ஆன்மா


நண்பர்
 DONG lee எனும் PAUL WALKER யின் புதிதாக பூத்த அன்பு மகளுக்கு  இந்தக் கவிதை  சமர்ப்பணம்
:)
« Last Edit: August 20, 2018, 05:27:52 PM by MysteRy »

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
அன்புள்ள தந்தைக்கு !
மகள் எழுதும் மடல்!
தாய் தான் பத்துமாதம் சுமந்து ..
வலி கண்டு பெற்றால் என்னை!

ஆனால்.....
அவள் கரு சுமந்த நாள் முதல்..
இன்று ...இருக்கும் நாள் வரை...
சுமந்தவன்..சுமக்கிறவன் நீ அன்றோ..?

தாய் ரத்தத்தை பால் ஆக்கி
தினந்தோறும்  ஊட்டினாள்.....

நீயோ......
உன் வேர்வையை ....உணவு ஆக்கி ...
இன்றுவரை ஊட்டுகின்றாய்....

நாள் ஒரு மேனியும்...
பொழுது ஒரு வண்ணமுமாய்....
நான் வளர்வதற்கு ...
பார்த்து பார்த்து செய்தவன் நீ..

பள்ளியில் சேர்க்க..
பயண பட்டு அலைந்தாய்..!

என் பாட புத்தகங்களுடன் ...
நீயும்  ஆரம்பத்தில் இருந்து ...
என்கூடவே படித்தாய்....

என் மதிப்பெண்களை கண்டு...
மகிழ்வுடன் கொண்டாடினாய்....

மற்ற கலைகளுக்கும் ...
உற்சாகமூட்டி  ஊக்குவித்தாய்.....

கல்லூரியில் படிப்பிக்க ...
காற்றாய் அலைந்தாய்..

இடம் பெற்றதும்..
இமயத்தை  நான்...வெற்றி கண்டதாய்...
இதய களிப்பு எய்தினாய் !

பட்டம் பெற்றதும்...
பணியில் சேர்ந்ததும்..
உன் ஆசியால் தான் அன்றோ ...

கை நிறைய ஊதியம் பெற்றும்..
அதில் கையில் தொடவில்லை நீ..

என் திருமணத்திற்கு ...
மாப்பிள்ளை பார்த்ததும்...
என் காதல் கதை கேட்டு ...
விட்டு கொடுத்தாய் ..
என் மகிழ்வே பிரதானமாய்..

ஊர் வியந்தபடி கோலாகலமாய்....
ஊர்வலம் போனது...
என் திருமணம்...

புகுந்த வீட்டுக்கு ..
புறப்பட்டு போனதும்...
புயல் நெருப்பாய் ..சுழன்றவன்..

பொசுங்கி போன......
புழுதியாக அடங்கி போனாய் ..

நீ இல்லாமல் ஒளி இல்லை ..
வாழ்வில் என்று வருந்தினாய்!

எனக்கு மகள் பிறந்ததும்..
நீ சிறு குழந்தையாய் ...
மாறி விட்டாய் ..!

ஒரு விந்தை பார்த்தாயா தந்தையே..?

கண்ணுக்கு கண்ணாய்....
வளர்த்த உன்னை..நான் காண ..
இன்று வந்தவரிடம் ...
அனுமதி பெற வேண்டுமாம்..!

உயிர் கொடுத்த உன்னை பார்க்க...
உறவுஆனவன் தடை போடுகிறான்..

ஒடிந்த  போனபோதெல்லாம் ....
உரமான உனக்கு...

இன்று..
உனக்கு உதவ முடியாமல்..
உணர்ச்சையற்று  நிற்கிறேன் !.

காத்து இருக்கிறேன் அப்பா !
இவனுக்கும் மகள் பிறந்து இருக்கிறாள்!

ஓர் நாள் .....
இவனுக்கும் புரியும் ...
பெற்றவனின் வலிகள்....
என்றும் திரும்பி வரும் என்று...

என்னை பற்றியே கனவு கண்ட....
நீ என்றும்  கவலை வேண்டாம்..

உன்னால் வந்தவள் ...
உன் வரவுக்கு காத்து நிற்கின்றேன்!

« Last Edit: August 20, 2018, 02:08:39 PM by RishiKa »

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 845
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself


அப்பா
வியப்புக்குரிய
ஒரு அதிசய சொல் ...

அப்பா
உன்னை பற்றி
நான் கிறுக்கும்
கன்னி கிறுக்கல் இது ...
உன்னை பற்றி
கிறுக்கல் கிறுக்க
எழுதுகோல் எடுத்தேன்
தமிழ் சொற்களில்
வெள்ளப்பெருக்கு
சொற்கள் நான் நீயென     
போட்டி இட்டது
உன் புகழ் பாட .....

நான் மண்ணில் உதித்த
சில மணித்துளி நேரத்தில்
தன் இருக்கரங்களில் வாரி எடுத்து
மகிழ்ந்த ஒரு உன்னத ஜீவன் ...
அன்று கையில் சுமந்தாய்
இன்று தோளில்  சுமக்கிறாய்
என்றும் மனதில் சுமக்கும்
ஒரு உண்மையான உறவு ...

 

அப்பா
ஒரு போர் வீரன்
துன்பங்கள் என்னை
தீண்டாமல் பாதுகாப்பதில்
அப்பா
அன்பின் பிறப்பிடம்
என் முகம் கண்டு
என் மனசோர்வை
சரி செய்வதில்


எல்லா பிள்ளைக்கும்
அப்பா
முதல் கதாநாயகன்
முதல் நண்பன்
தவறு என்ன ?
எனக்கும்  அப்படி தான் ....
காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசத்தை
எடுத்துரைத்தவர்
எத்தனை இன்னல்கள்
வந்த போதும் அது
எனக்கான பரிட்சை
என்று எனக்கு உணர்த்தியவர்

 

இக்கட்டான
குடும்ப சூழலிலும்
பொருளாதார சூழலிலும்
கொடுக்கப்பட்டது
என் கல்வியும்
என் சுதந்திரமும் ....
என் தவறுகளை  கண்டித்தாரே தவிர
என் போக்கில் எந்தவித கட்டுப்பாடும்  இல்லை
காலப்போக்கில் உணர்ந்தேன்
உண்மையான சுதந்திரத்தை ....

அப்பா
என் பகுத்தறிவு ஆசான்
சிறுவயதில் உன் மார்பில்
தலை சாய்த்து
நான் உறங்க நீ கூறிய
பகுத்தறிவு கதைகள்
இன்றும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது
அதை பின்தொடர 
சிறு சிறு முயற்சிகளை
நான் செய்துவருகிறேன் ...

 
அப்பா
அன்பான ஈசன்
அழகான கதிரவன்
அழியாத உறவு
அரவணைப்பின் அச்சாணி
அச்சம் போக்கும் தேம்பாவணன்
அகம் புகும் கள்வன்
அதட்டி பேசா நன்னன்
பொறுமையின் சிகரம்
என் தாய்க்கே தாயாய் 
மாறும் ஒரு அதிசய பிறவி ..

அப்பா
ஏறத்தாழ  ஐம்பது காலம்
உன் அயராத உழைப்பு
எத்தனையோ இன்னல்கள்
எத்தனையோ வெற்றிகள்
அனைத்தையும் கடந்து வந்துவிட்டாய்
இனிவரும் காலங்களில்
நிம்மதியாகவும்  இன்பமாகவும்
உடல் ஆரோக்கியத்தோடும்
உனக்கான நேரமாக இருக்க வேண்டும் ....
உன் தோளில் உள்ள சுமையை
சுமக்க காத்திருக்கும்
உன் இம்சை மகன்  ....
« Last Edit: August 20, 2018, 04:52:48 PM by Socrates »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
தந்தை  எனும்  மூன்றெழுத்து
 வாழ்வில்  நான்  கிடைக்கப் பெற்ற பேருறவு  ...               
தந்தை  எனும்  ஓருறவு                     
உம்மால்  உணர்ந்தேன்  நானும்  அன்பின்  உயர்வு ...                                                     
பட்டும்  படாமல்  விழி  விரிகையில்
எம்மை பூப்போன்று  கரங்களில்
ஏந்தியவர்  நீரே ..
எந்தன்  பாதமது  பூமியில்  பதியும்முன் 
உங்கள்  நெஞ்சினிலே  தாங்கியவரும்  நீரே ..

எந்தன்  உதட்டோரம்  புன்னகை  மலர்கையில்...
உங்கள்  விழியோரம்  கண்ணீர்  துளிர்வதேனோ ...
தகப்பன்  ஆகிவிட்ட  கர்வமோ ...
உங்கள்  ஜீவனில்  உயிர்  கொண்ட  உதிரம்
ஜனனம்  கண்ட  மகிழ்ச்சியின்  உச்சமோ ...

அன்னையவர்  மடியில்  தவழ்ந்து 
தந்தை  உங்கள்  தோளில் தஞ்சம்  கொண்டேன் ...
தினம்தோறும்  தங்கள்  மார்புதனில்
நான்  துயில்  கொள்ள ...
தங்களின்  நித்திரை  மறந்தீரோ ...

நாட்டின்  ராணிக்கும்  இந்த  பாக்கியமுண்டோ..
நம்  வீட்டின்  ராணியாக
என்னை  தினம்  தினம்  அலங்கரித்து
அழகு பார்த்ததும்  நீர்தானே  ...

பிஞ்சு  கரம்  பிடித்து  ...
அடிமேல்  அடி  வைத்து  நடை 
பயிற்று  வைத்தவரும்  நீர்தானே ...
வாழ்வின் ஞானம் கற்பித்த
மிகச்  சிறந்த  ஆசானும்  நீர்தானே  ...

என்  விழியறிந்த  முதல்
காதலனும்  நீர்தானே   ...
தாய்  தந்த  எந்தன்  உயிருக்கு 
காவலனும்  நீர் தானே ...

எந்தன்  விழியசைவுகளலே  என்  மனக்கவலை  அறிபவரும் நீர்தானே ...
துயரம்   சூழும்  பொழுதிலும் 
புன்னகை  பூத்த   முகத்துடன் 
என்னை  வரவேற்பவரும்  நீர்தானே ...

அன்பின்  திருவுருவம்  நீர்தானே  ...
கண்டிப்பின்  அடையாளம்  நீர்தானே  ...
தியாகத்தின்  விளிம்பும்  நீர்தானே ..
கருவில்  சுமக்காவிட்டாலும்  என்னை
ஆயுள்  வரை  நெஞ்சில்  சுமக்கும்  ஓருயிர்  நீர்தானே  ...

என்  வாழ்வில்  நான்  கிடைக்க  பெற்ற
பெருஞ்செல்வம்  நீரோ  ...
உம்மிடம்  ஒரு  கோரிக்கை  செவிமடுப்பீரோ  ...
உயிர்  ஜனனித்த   பொழுதில்  முதலில் 
கையில்  ஏந்தியவர்  நீரே  ...
எந்தன்  ஆயுள்  முடியும்  நேரம்  ...
தங்கள்  மடியில்  விடைபெறும்  வரமொன்று   தருவீரோ  ...?

தெய்வத்தை  கண்டதில்லை  நேரில் . ..
அவரின்  மருவுருவமாய்   காண்கிறேன்  என்   பெற்றோரை ...

~ ரித்திகா ~
« Last Edit: August 20, 2018, 04:35:56 PM by ரித்திகா »