Author Topic: அறிந்து மறந்து கடந்து செல்  (Read 477 times)

Offline Guest

சிலையொன்று வடித்திடு
அதில் சில கண்களும்
பல செவிகளும் வைத்திடு....
.
கண்களை மூடியபடியும்
காதுகளை செவிடாகவும்
காற்றுப்புகாதவாறு நாசித்துவாரங்களை
சுருக்கி அடைத்தும்விடு....
.
கால்களை நீ
சக்கரங்களாய் வடிவமை
கைகளை ஆக்டோபஸின்
புலன்களைப்போல் அமை...
.
சக்கரங்கள் உருண்டுவிடாதபடிக்காய்
குறுக்கே ஒர் அமைப்பை சொருகு
கைகள் நீட்டாதபடிக்காய்
உடலோடு ஒட்டியமை....
.
தலை என்றொரு பாகம்
இருந்ததற்கான சாத்தியக்கூறுகளை
தெழிவாய் நிறுவிக்கொள்
யாரும் தடவிப்பாற்காவண்ணம்
முட்களைப்போல் கழுத்தை செதுக்கு...
.
யாருமறியாதோர் விழியினின்றும்
புறப்பட்டு வழிந்தோடும் கண்ணீருக்காய்
பள்ளத்தை மார்பின் நடுவே
தோண்டி வைத்துவிடு...
.
இன்னும் பிறக்காத குறைமாத
கருவறைக்குழந்தையாய்
தன்னை மடித்துவைத்துக்கொண்டபடியான
ஓர் உள்ளார்ந்த நிலையை
வெளிச்சமிடவேண்டும் உன் சிலை...
.
உன் கைகளுக்குள் அடங்காத
உன் எண்ணங்களை பிரதிபலிக்காத
உன் வாழ்க்கையை அறியத்தராததோர்
சிலையை நீ உன் எண்ணங்களாய்
வடித்து உன்னிலேயே புதைத்து
மூர்ச்சையாகச்செய்.....
.
நீ எதிர்பார்த்திருந்த கனவுலகில்
தீர்மானிக்கப்படாததோர்
ஆன்மீக உலகம்
உன்னில் பிறந்ததைப்போல்
அறிந்து மறந்து கடந்து செல்...

என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ