Author Topic: கால சுவடுகள்  (Read 416 times)

Offline Guest

கால சுவடுகள்
« on: September 23, 2018, 10:19:18 PM »
காலமே நீ
கடந்துகொண்டேயிருக்கிறாய்
மைல் கற்களை நான்
எதிர்கொள்ளும்போது
கடந்து வந்த தூரத்தை
லேசாய் திரும்பிப்பாற்கிறேன்...
.
புறம் சொல்லலின் காயங்கள்
உள் குத்தின் வலிகள்
பின்னால் பேசி முன்னால்
சிரித்து காலிடற வைக்க
முயற்சித்து தோற்றுப்போன
சில அழகிய கொடூரங்கள்...
.
இன்னும் அந்த குட்டிச்சுவர்
அங்கேயே இருக்கிறது - பலபேரின்
பாதைகளில் இன்னும்
முட்கள் பதியப்படுவதற்கான
கேவல முடிச்சுகளின் முகங்கள்...
.
நரைத்துப்போன தாடியில்
நுரைத்துப்போன உதடுகளில்
விறைத்துக்கொண்டிருக்கும் கால்களில்
இன்னும் உயிர்மூச்சின்
முதுமை எட்டவில்லை
இதயம் இன்னும் என்னில்
இளமை என்கிறது...
.
தூரத்தில் யாரோ
வருவது காண்கிறேன்
தூரத்து உறவாயின் எனை
கவர்ந்து கடந்து செல்லும் - ஆனால்
என் உதிரத்து உறவாயின்
நின்று எனை கடிந்து
கண்ணீர் வரவைத்துச்செல்லும்...
.
ஒவ்வொரு மணித்துளியும்
எனை கடந்து செல்கிறது
நேற்று புன்னகைத்தது
இன்று சிரிக்கிறது
நாளை ஏளனம் செய்யும்
இம்மணித்துளிகள்....
.
என் மயிற்கூச்செறிய
உங்கள் அன்பை என்னில்
வீசிச்செல்லாதீர்கள்
நீங்கள் கடந்தபின்
ஒவ்வொரு மணித்துளியையும்
நான் ஏகாந்தமாய் கடப்பதரிது....
.
காலம் எனை கடந்து செல்கிறது
திரும்பிப்பாற்கவியலா
நிபந்தனைகள் விதித்து.....

என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ