Author Topic: பனை மரத்தின் நன்மைகள்  (Read 1109 times)

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
பனை மரத்தின் நன்மைகள்
« on: January 18, 2019, 10:43:37 PM »
📆 பனை மரத்தின் நன்மைகள் 📆

1. இதன் மட்டை அழகிய மனை கூரை வேய பயன்படும் ஒரு மரத்தின் மூலம் வருடத்திற்கு 15 மட்டைகள் எடுக்கலாம் .

2. இதன் பூ (பாலை) பதநீர் கிடைக்கும் இது உடம்ப்பிற்கு மிகுந்த ஆற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இழந்த சக்தியை மீட்டுத்தரும்.

3. இதன் காய் நொங்கு இதுவும் மேல் கூறிய குளிச்சி மற்றும் உண்ட்ம்பிற்கு தேவையான ஆற்றலை தரவல்லது.

4. இதன் தண்டு ஒரு உறுதியான தூண் அமைக்க பயன்படும்.

5. இதன் கனி உண்ணவும் இதன் கனியை நிலத்தில் புதைத்து பனை கிழங்கு தயாரிக்க பயன்படும்.
இந்த கிழங்கை வேகவைத்து உண்டால் உடம்பிற்கு மிகுந்த ஆரோக்கியம் கிடைப்பதோடு் இதில் கிழங்கிற்கே உரிய வாயு தொல்லையை நீக்கும் குணம் கொண்டது...

6. இந்த மரத்தை நகரத்தில் வளர்க ஏதுவானது அதிக அளவு நிழல் தரவில்லை என்றாலும் அதிக அளவு பயனுள்ளது இதன் வேர் ஆணி வேர் தொகுப்பு எனவே பக்கவாட்டி வளர்ந்து கட்டங்களுக்கு சேதம் விளைவிக்காது இதற்கு நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அதி்கம் உருஞ்சும் குணம் கிடையாது. பனை மரம் வளர்க அதிகமான இடம் பக்கவாட்டு/மேல்மட்டம் தேவை இல்லை குறைந்த அளவு இருந்தால் போதும்.

*50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனை மரங்கள் அழிப்பு, இதற்கு காரணம் வெள்ளை சர்க்கரையை நம்மிடம் கொடுத்து நம்மை சர்க்கரை நோயாளிகளாக மாற்றவே இதன் மூலம் மில்லியன்களில் மருத்துவத்தில் பணம் சம்பாதிக்கபடுகின்றது..*

7. பனைமரம் ஏரி குளங்களில் மண்ணரிப்பை தடுக்கும் அதன் வேர்கள் நிலத்தடி நீரை பாதுகாக்கும்._

8. பனையின் ஓலைகள் கூரைகள் கட்டுவதற்க்கும் அதன் மட்டை பாதுகாப்பு படல் அமைக்கவும் அதன் நாறு கட்டுவதற்க்கும் , அதன் ஓலைகள் கலைபொருள், பாய், பெட்டி போன்றவற்றை செய்ய பயன்படுகிறது.

9. பதநீர் 100 சதவீத இயற்கை பானம் உடல் சூட்டை தணிக்கும் அதன் கருப்பட்டி கல்கண்டு ஆகியவை சிரந்த நாட்டு மருத்துவம் கருப்பட்டி சேர்த்த பொழுது எவர்க்கும் சக்கரை வியாதி இல்லை பனங்கல் மிதமான போதைதரும் உடலுக்கு எந்த தீங்கும் இல்லை.

10. பனம்பழம் மிக அதிகமாக வைட்டமின் சி கொண்டது அதன் கொட்டை அதிக புரசத்து நிறைந்த தவம் கொன்டது அதன் கிழங்கு அதிகமான நார்சத்து கொண்டது.

11. பனையின் காய்ந்த வேரை புகையிலையாக முன்னோர்கள் புகைத்தனர் காய்ந்த மரத்தை வலை அமைத்து வீடு, அகப்பை, கரண்டி, சாடிகள், கூஜாக்கள் தயாரிகின்றனர்...

*சிறு குறிப்பு :*

▪ *வருடத்துக்கு ஒரு பனை மரம் கொடுப்பது:*

▫ *180 லிட்டர் பதநீர்*

▫ *25 கிலோ கருப்பட்டி*

▫ *20 கிலோ பனை நார்*

▫ *10 கிலோ விறகு*

▫ *6 பாய்*

▫ *2 கூடை*



உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால