Author Topic: பெண்_என்பவள்  (Read 3155 times)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
பெண்_என்பவள்
« on: June 13, 2017, 08:28:50 PM »
#பெண்_என்பவள்!!!

♥பெண் என்பவள்,
#போதை அல்ல நாம் கண்டோ,
உண்டோ, களிப்புற...

♥பெண் என்பவள்,
#ஆடை அல்ல, நாம் உடுத்தி, கிழித்து,
சேதப்படுத்த...

♥பெண் என்பவள்,
#கண்ணாடி அல்ல, நம்மையே நாம்
அங்கு காண...

♥பெண் என்பவள்,
#கொடி கம்பம் அல்ல, நம்மை
கொடியாய் உயர்த்த...

♥பெண் என்பவள்,
#கனவு அல்ல, நம் ஆசைகளை மட்டும்
காண...

♥பெண் என்பவள்,
#வர்ணம் அல்ல, நம் கொண்டாடங்களுக்காக பூசி மகிழ...

♥பெண், உண்மையில்...
ஒரு மருந்து, நாம் அன்பிற்கு
ஏங்குகையில்...

♥பெண்,
ஒரு ஊசி, நம் கிழிசல்களை தைத்து
அழகாக்கும்...

♥பெண்,
ஒரு கூரிய கத்தி, நம்
தவறுகளுக்கு நம்மை கிழிப்பாள்...

♥பெண்,
ஒரு கொடி, உயரே பறந்து நம்மை
பார்க்க வைப்பாள்...

♥பெண்,
ஒரு காட்சி, நம் காட்சி பிழைகளின்
விடையாகி திருத்துவாள்...

♥பெண்,
ஒரு தூரிகை, நம் வெற்று
வாழ்க்கையில், வர்ணம் பூசி, பின்
வர்ணமாகி, நம் கறை பட்டு, கரைந்தே
போகிறாள்...

♥இது என்னை பெற்று, வளர்த்து,
ஆளாக்கியவளுக்கும்.,.
என்னை செழுமை ஆக்கி, ஆக்கும்,
ஆக்க போகும் அனைத்து
பெண்களுக்கும் சமர்ப்பணம்..


படித்ததில் ரசித்தது

Offline DakalTi MaSs

Re: பெண்_என்பவள்
« Reply #1 on: August 16, 2018, 12:03:09 PM »
1. பேதை (Pethai):
Girl between the ages of 5 to 8;
மகளிர்பருவம் ஏழனுள் 5 முதல் 8 வயதுவரையுள்ள பெண்.
2. பெதும்பை (Pethumpai):
Girl between the ages of 9 and 10;
9 முதல் 10 வயதுவரையுள்ள பெண்.
3. மங்கை (Mangai):

A girl between 11 and 14 years;
11 முதல் 14 வயது வரை உள்ள பெண்.
4. மடந்தை (Madanthai):

Woman between the ages of 15 and 18;
மகளிர்பருவம் ஏழனுள் 15 முதல் 18 வயதுவரை யுள்ள பருவத்துப் பெண்.
5. அரிவை (Arivai):

Woman between the age of 19 and 24;
19 வயதுமுதல் 24 வயதிற்குட்பட்ட பெண்.
6. தெரிவை (Therivai):

Woman between 25 and 29 years of age;
25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்.
7. பேரிளம்பெண் (Perilampenn):

Woman between the ages of 30 and 36;
எழுவகைப் பருவமகளிருள் 30 வயதுக்கு மேல் 36 வயதுவரையுள்ள பெண்