Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 175  (Read 2644 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 175
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 11:18:14 AM by MysteRy »

Offline Ms.SaraN

கர்மா என்பது நிஜம் தானோ
நாம் செய்வது எல்லாம்
நமக்கே பாடமாக மாறுமோ
என்றோ உன் நினைவால்
நான் வாடி தவித்தேன்
பேச நாதி அற்று
தனிமையில் எங்கோ வெறித்தபடி
வானத்தைப் பார்த்து நான்
அமர்ந்திருந்த நாட்கள் கணக்கிலிடா

உனக்கும் இந்த நிலைமையா
என்று எண்ணுகையில் மனதில்
ஏனோ சிறு வருத்தம்
எப்பொழுதும் உன்னை சுற்றி
ஆயிரம் ஆட்கள் சூழ்ந்து
சிரித்த வண்ணம் இருப்பவன் நீ
கவலை என்பது உனக்கு இல்லை
பிறரின் கவலை கூட உனக்கு இன்பமே
காதல் என்ற புனித உணர்வை
கொச்சைப் படுத்திய உனக்கு
என்றோ சாபம் கொடுத்ததாக நினைவு
 
சூரியன் மறையும் நேரத்தில்
அந்தி வானம் முகம் மாறுவது போல்
கவலை நிறைந்த முகத்துடன்
சொல்ல முடியாத சோகத்துடன்
யாரின் வருகைக்காக ஏங்கி
பொய்த்து போனவன் போல் 
கையில் பூவுடன் அமர்ந்திருப்பது
ஏனோ என் நெஞ்சை  பிசைகிறது

பூவுக்கு கூட தெரிகிறது
அவள் வரமாட்டாள் என்று
அது கூட தான் உயிரை
மாய்த்துக் கொண்டது தலைகவிழ்ந்து
உனக்கு புரியாதது ஏனோ
உன்னை அணைத்து
ஆறுதல் படுத்த மனம் ஏங்குகிறது
புத்தியோ நீ செய்த தூரோகத்தை
நினைவு படுத்தி கொண்டே இருக்கின்றது
 
நாட்கள் பல ரணங்களை
உனக்காக நான் ஏங்கினேன்
நீ யாருக்கோ ஏங்குகிறாய்
உன்னை தேடும் போதெல்லாம்
நீ என் அருகில் இல்லை
நீ தேடும் இந்த நொடி
உன் அருகில் அவள் இல்லை
இதுவே விதியின் விளையாட்டு
« Last Edit: February 26, 2018, 03:15:23 PM by Ms.SaraN »

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
பொன் வானம் சூடிய
அழகிய மதி மயங்கும்
மாலைப்   பொழுதன்றோ இது !

இயற்கை  நங்கை  தான் பெற்ற
எழிலால் தலை நிமிர
அகமெங்கும் கறை படிய
முகமெங்கும் இருள் சூழ

சோகக் கடலில் மூழ்கிக் கிடக்கும்
இந்த ஆடவன் யாரோ ?

கரம் கோர்த்து நடை போட
மடி சாய்ந்து கதை பேச
மணமேடைவரை போக

எதிர் பார்த்த கார் குழலாள்
வரும் பாதையறியாது சென்றாளோ?

காதலர் தினம் அன்று
காதலைப் பரிமாற அவளை அழைத்து
ரோஜா மலரினுள் தன் இதயம் பதித்து

பதுமையவளை காதலால்
அகம் குளிரச் செய்ய நினைத்த
இவன் நிலைதான் என்னானதோ ?

வழி மாறிச் சென்றாளோ?
இல்லை வேறோர் மணமாலை
தேடிச் சென்றாளோ என
பேதழித்து அவன் நிற்கையில்

அதன் நிலையறிந்து ரோஜாவின்
தேகமும் வாடியபோது 
கூடவே ராஜாயிவன்  காதலும்
வாடிக் குனிகிறது

 
« Last Edit: February 26, 2018, 05:21:48 PM by AnoTH »

Offline JeGaTisH

அந்தி வானமும் மறைகிறது அவள் வரவை எண்ணி
என் மனமும் சாய்கிறது வாடிய மலர்போல.

என் மனதில் ஓர் நப்பாசை அவள் வருவாள் என்று
ஆகையால் பிடித்த பூவை விட மனதில்லை.

பெண் அதுவும் பூ போன்றதே
அழுதி பிடித்தல் கசந்து விடும்
அரக்க குணத்தில் பிடித்தால்  உதுர்ந்துவிடும்.

இருள் சூழும் நேரத்தில் இளவரசி அவள் நிலவாக
என் மனதை அறிய அவள் வருவாள்.
 
என் காதலை சாய்மானம் அறிந்து சாய இடம் தந்தது
என் காதலை நீ உணர்து உன் இதயத்தில் இடம் தருவாயென.

நீ வரும் நாழிகையில் என் மனக்கோட்டையோ
நீயும் நானும் வாழ்ந்து முடித்து போல சித்தரிதுவிட்டது.

விழியோடு மொழி பேச தெரியவில்லை
வலியோடு வாழ விதியும் விடவில்லை
உன்னோடு நான் வாழ வழி ஓன்று சொல்.

உன்னை எண்ணி பல கனவுகளோடும் அதை
உனக்கு புரிய வைக்க ஒரு பூவுடன் நானும்
மூன்று வார்த்தையில் சொல்ல காத்திருக்கிறேன்.


   அன்புடன் ரோஸ்மில்க் தம்பி ஜெகதீஸ்

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 845
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself
நான் கிறுக்கல் கிறுக்கும் ஒவ்வொரு
முறையும் என் நிழல் போல்
உன் நினைவுகள் என்னை தொடர்கிறது   
உன்னையன்றி வேற என்ன 
எழுத தோன்றும் என்னக்கு....

என்னை நேசிக்கிறாயா ?
என் கிறுக்கல்களை நேசிக்கிறாயா ?
என்றேன்
இந்த இரண்டும் இல்லை
உன் கிறுக்குத்தனங்களை
நேசிக்கிறேன் என்றாய் ....
காத்து கொண்டு இருக்கிறேன்
மீண்டும் என் கிறுக்குத்தனங்களை நேசிக்க
வருவாயா என்னவளே ....

உயிர் இழந்த பறவையாய்
என் நேசம் மீண்டும்
உயிர் பெறாது என்று
உலகம் சொல்கிறது
என்னவளே
உன் ஒரு துளி நேசத்தை என் மீதி
தெளித்து விடு
மீண்டும் உயிர் பெற்று வலம் வருவேன்
என் நேசம் உயிர் பெற
வருவாயா என்னவளே

உன்னில் நான் தொலைந்தேனோ
இல்லை
என்னில் நீ தொலைந்தாயோ
தெரியவில்லை
ஆனால்
தொலைந்து
தொலைத்து
போக வேண்டும்
உன்னுடன் மட்டும்
மீண்டும் வருவாயா என்னவளே

என்னை சுற்றி எத்தனை பேர்
இருந்தாலும்
சற்றும் கவலை கொள்ளாமல்
இடம் பொருள் ஏவல்
அனைத்தையும் உடைத்து
என்னை தாவி அணைத்திடும்
உன் நினைவுகள் ...
உருவம் இல்ல உன் நினைவுகள்
என்னுள் புகுந்து என்னை
உருக்குலைக்க செய்கிறது
இந்த இன்பமான வலியையும்
நான் ரகசியமாய் மிக ரகசியமாய்
ரசித்து கொண்டு இருக்கிறேன்
என்னவளே நீயும் வந்து
ரசித்திடுவாயா

உன்னை நினைவு படுத்தும்
எதுவும் என்னிடம் இல்லை
உன் நினைவுகளை தவிர ...
நினைவுகளை
நினைவு பொக்கிஷமாய் செய்து
என்னுள் பூட்டு கொள்கிறேன்
உன்னை போல்
உன் நினைவுகளும்
 என்ன விட்டு போகாமல் தடுக்க ...

என் கண்  இமைகளும்
கண் இமைக்க அடம் பிடிக்கிறது
உன் வருகையை எதிர் பார்த்து

நானும்...
என் கிறுக்கல்களும்
காத்திருக்கிறோம் உன் வருகையை எதிர்பார்த்து
நான் மறைந்து போனாலும்
அழியாத பொக்கிஷமாய்
என் கிறுக்கல்கள் சொல்லும்
உன்மீது நான் கொண்ட நேசத்தை
வந்துவிடு என்னவளே ....       
« Last Edit: February 27, 2018, 12:15:47 PM by Socrates »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
தாயின் கருவில்
உயிரென உருவானேன்
நான் ...
எந்தன் மனமெனும்
கருவில் உறவென
பதிந்தவள் நீ  ...

சிறகு முளைத்துப்
பறக்கத் தொடங்கினேன்
இவ்வுலகிலே   நான் ..
மைத்திட்டா விழிச்
சிமிட்டலில் 
சிறகையுடைத்துச் சிறைப்
பிடித்தவள் நீ ...

ராமன் எய்த அம்பில்
மயங்கினார் சீதை
என்றேன் நான் ...
வில் போல் வளைந்தப்
புருவத்திலிருந்து என்னிடத்தில்
அம்பை எய்தாய் நீ ...
காதல் வலையினில்
மாட்டிட வைத்தாய் நீ .. 

சிக்கி மூக்கி கல்லின்
உரசல் போதும்
தீயை மூட்டவென்று 
நினைத்தேன்  நான்  ...
உந்தன் இருவிழி
உரசலில்
எந்தன் நெஞ்சில்
அனலைத் தெறித்துச்
சென்றாய் நீ ...

தெறித்துச் சென்ற
அனல் இன்று
எரிமலையென
உருவெடுத்துள்ளது ...
இனியும் மூடி
மறைப்பதில் பயனேது  ...
இன்றே சொல்லிவிடு
என்றது மனது ...

ஆதவன் அந்திசாயும்
வேளை - என்னவள்
உன்னருகினில் நான் ...
பட படக்கும் விழிகளோடு
என்னெதிரில் நீ ...
சுவாசிக்க மறந்தேன்
ஒரு கணம் நான் ...

சொல்ல வந்ததைச்
சொல்லி முடித்தேன்
ஒரு மூச்சினிலே நான்  ...
ஏனோ மௌனம்
நீடித்தாய் நீ ...
உந்தன் ஒற்றைப்
பதிலுக்காக
காத்திருக்கிறேன் நான் ...
வாய் மொழி பேசாமல் ..
தலை அசைவினில்
மறுத்துச் சென்றாய் நீ ...

ஆனால் பெண்ணே,
மௌனம் நீடித்த பொழுதினில்
உந்தன் விழிகளோடு
கதைகள் பேசினேன் நான் ...
அதை மறந்தாயோ நீ ...

மைத்தீட்டா உந்தன்
மையல் விழியில்
மெய்யினை கண்டு
கொண்டேன் நான் ...
வாய்மொழியின்றி
உந்தன் கண்களில்
காதலை  உணர்ந்தேன்
நான் ..
ஏதோவொன்றுத் தடுத்தது
உன்னை ...
அதை அறிந்தேன் நான்...

உந்தன் மறுப்பினில்
வாடிய ரோஜாவைப்
போல்
எந்தன் முகமது
வாடி இருக்கலாம் ...
நான்
கொண்ட காதல்
என்றும் வாடாது ...
உன்னில்  நான்  கண்ட
காதல்  பொய்யென்றாகாது ..

எட்டதா  உயரத்தில்
இருக்கலாம்  நிலவு ...
நீ தீண்டும்
தூரத்தில் தான்
என் காதல் ...
நிச்சயம் ஏற்பாய்
ஒருநாள் நீ...
காத்திருப்பேன்
உன் சம்மதத்திற்காக நான்...

காத்திருப்பேன்
உந்தன் வருகைக்காக நான்..
நேரமெடுத்துக்கொள் நீ...
தாமதம் கொண்டாலும்
காத்திருப்பேன்
உன் நெற்றியில்
என் முதல் முத்தம்
பதித்திட நான் ...

ஆனால் கண்ணே ,
எந்தன் கல்லறை நாள்
வரை தாமதித்திடாதே ...
உந்தன் நினைவுகளோடு
இறைவனடி சேர
விரும்பவில்லை நான் ...

உன்னில் கலந்து
காதலை பகிர்ந்து
உயிருக்குள் உறைந்து
நெஞ்சில் உன்னைச் சுமந்து
உந்தன் கால் கொழுசின்
ஓசையில் முற்றிலும்
என்னைத் தொலைக்க
விரும்புகிறேன் நான்

எந்தன் தவ வாழ்விற்கு
வரமென வந்தவளே நீ
உந்தன் கரமதனைப்  பற்றிட
ஏங்குகிறேன் நான்
கொடி ரோஜா மலர்கள்
பூத்துக்குழுங்க
காத்துக்கிடக்கிறேன்
எந்தன் இதய வாசலிலே...
உந்தன் வருகை ஒன்றுக்காய்....

நன்றி ...
ரித்திகா ...

« Last Edit: February 27, 2018, 05:39:56 PM by ரித்திகா »


Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
காத்திருக்கும் காதல்
சொல்லத்துடிக்கும் வார்த்தைகள்
சொல்லாமல் போன நேரங்கள்

கண் மறைக்கும்
அவள் முகம்
கண் விழிக்க
மாயமானதேனோ

கற்பனையிலவள் புன்னகை
காதலாய் ஒரு பார்வை
கன்னகுழியில் விழுந்தவன் நான்
எழுந்து நிற்க முடியவில்லை

தள்ளி நின்ற யாரோ இவள்
அருகில் வர தோழியானாள்
அள்ளியணைத்து காதலியானாள்

எப்போது என் துணையாவாள்
கேட்க நிற்கின்றேன் கேள்வியோடு
இங்கு அவள் வருகைக்காக.....

                                                 **விபு**

Offline thamilan

வானம் மிக நீண்ட தெருக்களாய்
அகன்று விரிந்திருக்க - அங்கே
உன்னொரு சிறு பார்வைக்காய்
காத்திருக்கிறது மனசு

எல்லோரும் பார்
அவன் கிறுக்கன் என்கிறார்கள்
தொலைந்த இடத்தில்
மரணத்துக்குப் பின்னிருந்து
உன்னைத் தேடுகிறேனென்று  யாரறிவார்

சுற்றித் திரிந்த தெருக்களும்
அமர்ந்து பேசிய கோவில்களும்
நின்று பார்த்த விளக்கு கம்பங்களும்
முத்தம் தந்த ஜன்னலின் அருகாமையும் போக
வேறென்ன வேண்டுமெனை  கொல்வதற்கு
யாருக்கும் புரியாது தான்

இதயம் உடைக்கும்
பார்வையேந்தி கையில் மலரேந்தி
ஈரம் சுரக்காத உன் காதலுக்காக
காத்துக் கிடக் கும் என்னை
கடவுள் கூட கர்வி என்று  பட்டம் சூட்டலாம்

காத்துக் கிடப்பது சுகமென்கிறார்கள்
காத்துக் கிடப்பவனுக்குத் தான் தெரியும்
அதன் வேதனை
துடிக்கும் உயிர் நாதமெல்லாம்
நீயே நீயே என ஓசையெழுப்புகையில்
எதைக்கொண்டு என் காதலை
தோல்வியென்பேன் சொல்லடி

நான் காதலிக்கிறேன்
உன்னிடம் சொல்லிவிட்டு.......
நீயும் காதலிக்கிறாய்
என்னை கொன்றுவிட்டு
இந்தக் கொலைக்கு பெயர்
கொலையென்று ஆகாமல்
ஒருதலைக் காதல் என்று பெயரிடுவது
விசித்திரம்