Author Topic: காதல் சிலருக்கு  (Read 440 times)

Offline thamilan

காதல் சிலருக்கு
« on: April 09, 2018, 06:21:52 AM »
காதல் சிலருக்கு
ஆலமரம்
அது கிளை படர்ந்து
விழுது விட்டு
நீடித்து நிற்கும்

காதல் சிலருக்கு
போதிமரம்
காதலில் விழுந்து
நொந்து நூலாகிய பின்னர்
ஞானம் வரும்

காதல் சிலருக்கு
தூக்குமரம்
அந்த காதலே
அவர்கள் கழுத்தில்
தூக்குக் கயிராக தொங்கும்