Author Topic: படித்ததில் பிடித்தது  (Read 2353 times)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெயிலின் காரணமாக கர்பமான மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. ஆளில்லா நடைபாதையில் என் கனவர் தண்ணீர்க்கு எங்கு செல்வார்! என்று அதை கனவனிடம் சொல்லாமலே வருகிறாள்.

மனைவிக்கு தாகம் எடுக்கிறது என்று அவன் புரிந்துகொண்டான். இதற்கு பெயர் தான் கனவன் மனைவி உறவு. தூரத்தில் ஒரு முதியவர் இளநீர் வியாபாரம் செய்வதை பார்த்து அவள் கையை பிடித்துகொண்டு வேகமாக சென்ற பிறகுதான் தெரிகிறது.
அவனிடம் ஒரு இளநீர் வாங்குவதற்கு மட்டுமே காசு இருக்கிறது என்று சரி ஒரு இளநீர் தாருங்கள் என்கிறான்.

இளநீரை வாங்கியவன் தன் மனைவியிடம் கொடுத்து எனக்கு வேண்டாம் நீ குடிமா! என்கிறான். எனக்கு மட்டும் என்றால் வேண்டாம் நீங்கள் குடித்துவிட்டு தாருங்கள் என்றாள் அவள்.

இறுதியில் மனைவியை குடிக்க வைத்தான் ஆனால் அவளோ என் கனவர் எனக்காக காடு மலையெல்லாம் வேலை செய்பவர் அவர் குடிக்கட்டும் என்று குடிப்பது போல் நடித்துக்கொண்டிருக்கிறாள்.

இளநீர் கனவன் கைக்கு வந்தது. அவனும் மனைவியை போலவே இவள் என்னை நம்பி வாழவந்தவள். அதோடு என் குழந்தையை சுமக்கிறாள். இன்னும் கொஞ்சம் இவள் குடித்தால் என்ன! என்று இவனும் குடிப்பது போல் நடிக்கிறான்.

இவர்களின் காதலையும் விட்டுக்கொடுக்கும் குணத்தையும் பார்த்த முதியவர் அந்த பெண்ணிடம் நீ என் பொண்ணு போல இருக்கிறாய் இந்த இளநீரை நீ குடிமா என்று வேறொரு இளநீரை வெட்டி தருகிறார். கனவனின் அனுமதியோடு தாகம் தீர குடித்துவிட்டு அவன் மார்பில் மெதுவாக சாய்ந்துக்கொண்டு என் மேல் இவ்வளவு பாசமா என்பது போல் அவள் பார்க்கிறாள்.

நீ என் மனைவி. என் உயிரின் பாதி என்ற அர்த்தத்துடன் கண் சிமிட்டுகிறான் அந்த காதல் கொண்ட கனவன். இப்போது அன்பு என்ற ஒன்றும் விட்டுக்கொடுக்கும் குணமும் இருந்ததால் ஒரு இளநீர் வாங்க இருந்த காசுக்கு இரண்டு இளநீர் கிடைத்தது.

((இவ்வுலகில் எல்லா உயிரும் அன்பிற்காக தான் ஏங்குகிறது நண்பர்களே.. என்ன பிரச்சனை என்றாலும் கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தலும் ஒருவர் குறையை மற்றொருவர் மறைத்து வாழும் வாழ்கைக்கு சொர்க்கமே ஈடாகாது நண்பர்களே.))

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: படித்ததில் பிடித்தது
« Reply #1 on: August 10, 2017, 03:26:28 PM »
கதையில் மட்டும் தான்
இது போல அன்பு பார்க்க முடியும் போல

......இந்த தலைமுறை கல்யாணம் முடிந்ததும் கோர்ட் வாசலில் தான்
நிற்கிறார்கள்

அருமையான கதை + பாடம் நியா

வாழ்த்துக்கள் ..

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "