FTC Forum

Special Category => பொது விவாதம் - General Discussions (Debates) => Topic started by: Leo MaN on August 11, 2016, 05:14:43 PM

Title: வெட்டியா இருப்பது இதமா கஷ்டமா
Post by: Leo MaN on August 11, 2016, 05:14:43 PM

                  வணக்கம்..
இன்று உலகமே எதிர் நோக்கியுள்ள பாரிய பிரச்சினை  வேலை இல்லாதிண்டாட்டம் தான்
அது மட்டும்  இல்லை இன்று நம்மில் எத்தனையோ பேருக்கு வேலை இருந்தும்  வேலைக்கு  போவதுக்கு சோம்பேறித்தனம். சிலர்  வேலை  செய்வதுக்கு தயாராக இருப்பார்கள்  அவர்களுக்கு  வேலை கிடைக்காது. இது போன்ற பல காரணங்களினால்  நம்மில் பல பேர்  என் நாம் கூட வேலை இல்லாமல் வெட்டியா  இருந்து இருக்கிறோம் ஏன் இப்போ கூட நாம்  அப்படி  வெட்டியா இருக்கலாம்  அப்படி வெட்டியா  இருக்கிறது  இதமா இருக்குமா இல்ல ரெம்ப கஷ்டமா இருக்குமா  என்று தான்  கேட்க்கிறேன்.   நீங்களும் உங்கள்  கருத்துக்களை  பதிவு செய்யுங்கள்
 
குறிப்பு : இது நமது கல்லூரி வாழ்க்கைக்கு பிந்திய காலத்தை பத்தியதாகும்
Title: Re: வெட்டியா இருப்பது இதமா கஷ்டமா
Post by: Maran on August 12, 2016, 09:42:58 PM



அறிவான விவாதம் தேவையான விவாதமும்தான் நண்பா...  :)


இந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்: ஐநா எச்சரிக்கை என்ற செய்தி துளியுடனே விவாதத்தை ஆரம்பிக்கிறேன்.


வாழ்வில் மிகமுக்கியமாக கற்றுகொள்ள வேண்டிய விஷயம் எப்படி வாழவேண்டும் என்பதே...

வெட்டியா இருப்பது இதமா எங்கே இறுக்கப் போகிறது அந்த வாழ்க்கை ஒரு கஷ்டம்தான் கடினமானது கூட..., சிறு நெருடல்களில் மட்டும் வாழ்க்கை நகர்கிறது வேலையில்லா இளைஞர்களின் காலங்கள்  :(

படிக்காதவர்களுக்கு வாய்த்த மன நிம்மதி கூட வேலையில்லா பட்டதாரிகளுக்கு வாய்ப்பதில்லை, அதிகம் பழுத்த பழங்கள் உள்ள மரமே அதிக கல்லடி படுகின்றது! இது படித்தவர்களுக்கும் பொறுந்தும்! வேலையில்லா இளைஞனின் பசி சேர்ந்த இரவுகள், துணையில்லா மூப்பு போன்று வர்ணிக்கவியலா குரூரம் கொண்டவை.!

இந்த நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும் , பட்டதாரிகள் தற்கொலையும் விவசாயிகள் தற்கொலையும் அரங்கேரிய வண்ணம் உள்ளன. தாய், தந்தையை கூட இந்த வேலையில்லா திண்டாத்தினால் இழக்க நேரிடலாம் காதலி இல்லை மனைவி கூட மதிக்க மாட்டாங்க, வலிகள் நிறைந்தது. 24 வயது வரை வண்ணக்கனவுகளில் மிதந்தவனை 26 வயதில் பல வண்டிகளை ஏற சொல்கிறது.


பஞ்சம்,பட்டினி, வேலையில்லா திண்டாட்டம், ஒரு பக்கம் ஏழை மக்கள் அதிகம், மறு பக்கம் வள மக்கள், "மரித்து வரும் மக்கள் நீதி"


கனவுகள் முடிவுற்றும் தன் குடும்பத்தின் கனவை கலைக்கும் திறானியற்று தெருவெங்கும் அலைகிறான் பல வேலையில்லா பட்டதாரி.. மற்றவர்களிடம் மறைக்கபடும் வேலையில்லா இளைஞர்களின் பசி பிரசவ வலிக்கு சமமானது.

சண்டக்காரன் தொல்லையகூட தாங்கிடலாம் ஆனா இந்த சொந்தகாரனுங்க தொல்ல தாங்கல டா சாமி என்ற புலம்பல்களிலேயே வாழ்க்கை நகரும். வேலையில்லா இளைஞர்களின் மனக்குறைய போக்க.. ஏதாச்சும் கவுன்சிலிங் கொடுங்கயா என்று பொலம்பியே சாகவேண்டி இருக்கும்.

தன் பெற்றோர் உடல்நலம் சரியில்லாதபோது அடுத்தவரிடம் கையேந்தும் வேலையில்லா ஆணின் மன வலியை விடவா நரகம் கொடியதாய் இருக்கப்போகின்றது??



உழைப்பு குறைவான தொழில்களை இன்றைய சமூகம் விரும்புவதால் உருவாகும் நிலைதான் வேலையில்லா திண்டாட்டம். சோம்பேறிகளுக்கு யாரும் வேலை தரமாட்டார்கள்!




வேலையில்லா பொழுதுகளில் வேலையையும்,
வேலை இருக்கும் வேளைகளில் தனிமையையும்  தேடி ஓடுகிறது மனது..!




Title: Re: வெட்டியா இருப்பது இதமா கஷ்டமா
Post by: BreeZe on August 13, 2016, 06:53:19 AM


hi

Ippo naan vettiya iruke nale naanum enoda commenta poda poren hehehe ....vettiya iruntha NIMATHI SANTHOSAM lam nambala yeduthukanum :D ..daily parents sis bro ne ipadi inum neria per enna solrangalo atha kettu talaiye aditey irukanum, comment lam panakudathe ..apadiye commenta pana "THANDASORU NEE URUPADUVIYA" ithu yellam left ear le kettu right ear valiya out paniranum  ... -_- soru sapdum pothe yosichi yosichi sapdanum ... ana nalla thoongalam :D .. 

ithule peria kodumai enna terima yaravathe vantha pothum intha veetla iruke periyavanga apo than nambala VETTI ne announce panurathe ..apo varum parunga kaathule pugaiiiii hmm (intha situation le neinga iruntha pls imagine panikung " kanna mudithe solravanga face le DISHYUM DISHYUM!! ne 1 ile 2 ile 3 times punch pananum pole irukum solle vanthen :D hahaha nijama punch panirathinga pls )

seri ithoda naan enoda vettiNeSS ah mudichite velaiya pakuren :D

Copyright by
BreeZe

Title: Re: வெட்டியா இருப்பது இதமா கஷ்டமா
Post by: Leo MaN on August 13, 2016, 04:24:53 PM
 நன்றி மாறன் நண்பா மற்றும் பிரீஸ் உங்கள் கருத்துக்களுக்கு..
பட்டதாரிகள் என்ற ஒரு வட்டத்தை சுத்தி உங்க கருத்துக்கள் அமைந்து இருக்கின்றன  இது தவிர செல்வந்தர்களின் பிள்ளைகள் அப்பா அம்மா  பாட்டன் சம்பாத்தியங்களில் இருப்பவர்கள் படித்து இருக்கலாம் இல்ல படிக்காமல் இருக்கலாம் இவர்கள் எந்தவிதமான  வேலைக்கும்  போகாமல் அல்லது அவர்கள் சொந்தவேலைக்கூட ( நல்ல வியாபாரமா இருக்கலாம் அல்லது  வேற எதாவது இருக்கலாம்) பார்க்காமல் பணத்தினை வைத்துக்கொண்டு அவர்கள் நினைத்தால் போல எது பதியும் கவலை படாமலும் யாரை பத்தியும் கவலை  படாமலும் மனதுக்கு பிடித்தால் போல சந்தோசமா இருக்கிறார்களே இது பத்தியும் உங்கள் கருதுகளை  கூறினால் நல்லா இருக்கும்  மாறன்  நண்பா.

பிரேஸி  பஞ்ச் பண்ண நினைத்தால்  நிறைய பேருக்கு பஞ்ச்  பண்ண வேண்டி வரும் அப்புறம் உங்களுக்கு தான்   கைல  கட்டு  போடவேண்டி வரும். பிரேஸி வெட்டியா  இருப்பதினால் தான் அப்பா அம்மா அண்ணா சொல்லுறத எல்லாம் கேட்டு மண்டைய மண்டைய ஆடணுமா அப்போ நீங்களே சம்பாதிக்க ஆரம்பித்தால் அவங்க சொல்லுறத கேட்க மாட்டிங்களா .. ஹிஹி  எப்படி இருந்தாலும் இப்போ நிம்மதியா தூங்கிறோம் அது போதும் ல
Title: Re: வெட்டியா இருப்பது இதமா கஷ்டமா
Post by: Maran on August 14, 2016, 12:12:34 PM



நன்றி லியோ மேன் நண்பா...  :)


நான் விவாத இழையின் கருப்பொருளின் நேர்கோட்டில்தான் விவாதம் செய்கிறேன் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை, வாழ்க்கையை வாழும் வகைகளை நாம் பின்பற்றும் வாழும் முறைகளே நிர்ணயிக்கின்றன !

எவ்வித சூழலில் நாம் பிறக்கிறோம், எவ்வாறு வளர்கிறோம் என்பதே நாம் வாழும் முறைகளை தீர்மானிக்கின்றது. நடுத்தர வர்க்கத்தில் பிறந்த என் மனம் முதலில் அப்படித்தான் விவாதத்தை ஆரம்பிக்கும், அனைத்து கோணங்களிலும் நான் விவாதிக்க தயார்..! ஆனால், தாங்கள்தான் விவாத இழையின் கேள்விக்கணைகளோடு நின்றுவிட்டீர்கள் என்பதே என் சிறு மனவருத்தம்.  :)


பொதுவாகவே, ஒருவரின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களைப் பற்றி, எழுதும் போது, யார் மனமும் நோகாத வண்ணமே கருத்துகள் தெரிவிக்க மெனகட வேண்டியுள்ளது


மனிதர்கள்தான் இருப்பதிலேயே வாழ்க்கையை அதிசிக்கலாக்கிக் கொண்ட உயிரினம். போகும் போக்கில் வாழ்வை அணுகும் முறை, எளிதானதாகவே அமைந்து விடுகிறது. இத்தகைய வாழ்க்கையை கடை மற்றும் மேல் தட்டு மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.




Title: Re: வெட்டியா இருப்பது இதமா கஷ்டமா
Post by: Leo MaN on August 14, 2016, 05:19:17 PM
நன்றி மாறன் நண்பா உங்க கருத்துக்கு
'வெட்டியா  இருப்பது இதமா  கஷ்டமா '  என்ற தலைப்புக்கு அமைய உங்க விவாதம் வெட்டியா இருப்பது கஷ்டம் என்பதை குறிக்கிறது. மன்னிக்கவும் என்னுடைய  விவாதத்தை பதிவு  செய்ய நான் மறந்துவிடடேன் நினைவு  படுத்தியமைக்கு நன்றி   நண்பா..
என்னுடைய விவாதம் கூட வெட்டியா இருப்பது  கஷ்டமே அது நமக்கு மட்டும் இல்லை  நம்மை சுத்தி இருப்பவர்களுக்கும் கஷ்டம் தான் . சின்னதா நான் ஒரு  உதாரணம் மூலமாக என் விவாதத்தை சொல்கிறேன் . 26 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞ்சன் அரசாங்க வேலைக்காக சில ஆண்டுகள்  காத்து இருக்கிறார் இவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை  இவரும் எந்த வேலைக்கும் போகாமல் வெட்டிய இருக்கிறார். அப்பா வெளிநாட்டில் இருந்து வீட்டுச்செலவிக்கு அனுப்பும் பணத்தில் இவரது  செலவுக்கு கொஞ்ச பணத்தை திருடுவது அம்மாவிடம்  திட்டு வாங்கி பாக்கெட் மணி  வாங்கிக் கொள்வது.இவருக்கென 3 நண்பர்கள் அவர்கள் சாதாரண வேலை பார்ப்பவர்கள் அவர்களின் செலவில் அவர்கள் கலாய்ப்பதை எல்லாம் தாங்கிக் கொண்டு டம் , தண்ணி இனி இதர செலவுகள் கூட அது மட்டும்  மனதுக்கு ஆசை பட்டது  ஏதும் வாங்கவும் முடியாத நிலைமை இப்படி எவ்ளோ சொல்லிடு போகலாம் இப்படி  வெட்டியா  ஒருத்தர் இருப்பதினால் அவருக்கும் கஷ்டம் அவரை   சுத்தி இருக்கிறவர்களுக்கும் கஷ்டம் .
Title: Re: வெட்டியா இருப்பது இதமா கஷ்டமா
Post by: Maran on August 24, 2016, 02:54:05 PM



உங்கள் அறிவு தாகத்தில் நான் ஆச்சரியப்படுகிறேன் Leo Man நண்பா..!  :)

நண்பர்கள் பொதுமன்றத்தில் தங்களுடைய முதல் பதிவுகள் விவாதத்தின் அறிவு தேடலிலேயே தொடக்கி இருக்கிறீர்கள். நல்லது! வாழ்த்துக்கள்..!!   


BreeZe தங்கையைப்பற்றி சொல்லவே வேணாம் எவ்வளவு சிக்கலான கருத்துகளையும் தனக்கே உரிய நகைச்சுவை தொனியில் எளிதாக சொல்லிடுப் போய்டுவாங்க, நான் அவர்களின் மிகப்பெரிய ரசிகன்.  :)


என்னமோ வாரம் பூரா காஷ்மீர் பார்டர்ல மிலிட்ரிகாரரா இருந்தா மாதிரியும் இன்னைக்கு மட்டும் வெட்டியா இருப்பது மாதிரியும் சீன் போட்டுவைப்போம்.  ;)
BreeZe தங்கை மாதிரி....  :)  ;)

அது பண்ணனும்
இது பண்ணனும்னு நெனச்சு, எதுவுமே பண்ணாம,
நல்லா சாப்பிட்டு,
வெட்டியா தூங்கற சுகம் இருக்கே..!!
அத சொல்ல வார்த்தை இல்ல...!!!
அது ஒரு தனி சுகம் தான்..!  :)  :)




நீங்கள் 'முடியும்' என்று நினைத்தாலும்..
'முடியாது'என்று நினைத்தாலும் இரண்டுமே சரிதான்.!!
ஏனென்றால் அதை நீங்கள் தான் முடிவு செய்கிறீர்கள்.!!




Title: Re: வெட்டியா இருப்பது இதமா கஷ்டமா
Post by: thamilan on September 25, 2016, 07:05:45 AM
லியோ உங்கள் விவாதத்தில் நானும் எனது கருத்தை சொல்ல ஆசைப்படுகிறேன்.
உங்கள் கேள்வி வெட்டியாக இருப்பது இதமா கஷ்டமா?
எனது வாதம் இதமே
உங்கள் வாதத்தில் யாரோ ஒரு வேலை இல்லாதவரை பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள்.  வேலை இல்லாதது கஷ்டமாக இருந்தெருந்தால் அவர் வேலை தேடிஇருந்திருப்பார்  அது இதமாக இருந்ததால் தானே அவர் வேலை தேடவில்லை உங்கள் தலைப்பில் வெட்டியாக இருப்பதால் மற்றவர்களுக்கு இன்பமா துன்பமா என்று கேட்டிருந்தால் நீங்கள்  சொன்ன கருத்துக்கள் சரியானதாக இருந்த்திருக்கும்.
  வெட்டியாக இருப்பதனால் மற்றவர்களுக்கு கஷ்டம் தான் . ஆனால் அது தலைப்புக்கு அப்பாற் பற்ற விஷயம்.  வெட்டியாக இருப்பவனுக்கு அது இதமே
       நாம் வருடம் முழுவதும் உழைக்கிறோம் ஒரு வாரத்தில் ஆறு நாட்கள் உழைத்துவிட்டு ஒரு நாள் விடுமுறையில் இருக்கும் போது அந்த நாள் எத்தனை ஆனந்தமாக இருக்கிறது? அந்த நாள் முழுவதும் தூங்கி எழும்பத் தோணுமே? நாள் முழுவதும் டிவி முன்னாள் உட்கார்ந்திருந்தாலும் அலுப்பு தட்டாதே. வெட்டியா இருந்தா ஆனந்தம் என்கிறதுக்கு இது ஒரு உதாரணம்.
        வெட்டியா இருக்கிறது முதலில் கஷ்டம் தான். உடம்பு அதற்கு பழகிவிட்டால் அப்புறம் வேலை செய்வது தான் கஷ்டமாக இருக்கும். உழைப்பவனுக்கு உழைப்பின் அருமை தெரியும். சோம்பிக் கிடப்பவனுக்கு சோம்பலின் அருமை தெரியும்.

படிக்காதவர்களுக்கு வாய்த்த மன நிம்மதி கூட வேலையில்லா பட்டதாரிகளுக்கு வாய்ப்பதில்லை, அதிகம் பழுத்த பழங்கள் உள்ள மரமே அதிக கல்லடி படுகின்றது! இது படித்தவர்களுக்கும் பொறுந்தும்! வேலையில்லா இளைஞனின் பசி சேர்ந்த இரவுகள், துணையில்லா மூப்பு போன்று வர்ணிக்கவியலா குரூரம் கொண்டவை.!
       
இது நண்பர் மாறன் சொன்ன கருத்தின் வரிகள்.

"படிக்காதவர்களுக்கு வாய்த்த மன நிம்மதி கூட வேலையில்லா பட்டதாரிகளுக்கு வாய்ப்பதில்லை"
இதற்கு காரணம் என்ன? படித்தவன் தனது படிப்புக்கு தகுந்த வேலையை எதிர்பார்க்கிறான். படிக்காதவன் எது கிடைத்தாலும் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறான். படித்தவன் தனது தகுதிக்கு வேலை கிடைக்கும் வரை வெட்டியாக இருப்பதை விட்டு விட்டு கிடைக்கும் தொழிலில் தனது திறமையை காட்டலாம் தானே.
நம் நாட்டில்  வேலைஇல்லா பஞ்சத்துக்கு முதல் காரணம். நமது படிப்பும்  அந்த படிப்புக்கான வேலை தேடலுமே ஆகும். உதாரணத்துக்கு இன்றய இளைஞகர்கள் அநேகம் பேர் தேர்ந்தெடுப்பது தகவல் தொழில் நுட்பம் துறையை  சார்ந்த  படிப்பு தான். இருப்பது நூறு வேலைவாய்ப்புகள் அதற்கு ஆயிரம் பேர்கள்  தகுதி பெற்றால்  எத்தனை  பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்?   
   
உழைக்கணும் முன்னுக்கு வரணும் என்ற எண்ணம் இருந்தால் வழியா இல்லை உலகிலே.
நானும் கொஞ்ச நேரம் வெட்டியா இருந்து விட்டு மறுபடி வரேன்
Title: Re: வெட்டியா இருப்பது இதமா கஷ்டமா
Post by: Maran on September 29, 2016, 10:25:59 AM


நன்றி தமிழன் நண்பா என் கருத்துக்களையும் மேற்கோள்காட்டி விவாதம் செய்ததிற்கு. சரியும் தவறும் எப்போதும் மோதிக்கொள்வதில்லை... உலகின் யுத்தங்கள் எப்போதும் சரிக்கும் விருப்பத்திற்கும் இடையில் தான் நிகழ்கின்றன.


       



"படிக்காதவர்களுக்கு வாய்த்த மன நிம்மதி கூட வேலையில்லா பட்டதாரிகளுக்கு வாய்ப்பதில்லை"
இதற்கு காரணம் என்ன? படித்தவன் தனது படிப்புக்கு தகுந்த வேலையை எதிர்பார்க்கிறான். படிக்காதவன் எது கிடைத்தாலும் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறான். படித்தவன் தனது தகுதிக்கு வேலை கிடைக்கும் வரை வெட்டியாக இருப்பதை விட்டு விட்டு கிடைக்கும் தொழிலில் தனது திறமையை காட்டலாம் தானே.
நம் நாட்டில்  வேலைஇல்லா பஞ்சத்துக்கு முதல் காரணம். நமது படிப்பும்  அந்த படிப்புக்கான வேலை தேடலுமே ஆகும். உதாரணத்துக்கு இன்றய இளைஞகர்கள் அநேகம் பேர் தேர்ந்தெடுப்பது தகவல் தொழில் நுட்பம் துறையை  சார்ந்த  படிப்பு தான். இருப்பது நூறு வேலைவாய்ப்புகள் அதற்கு ஆயிரம் பேர்கள்  தகுதி பெற்றால்  எத்தனை  பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்?   
   
உழைக்கணும் முன்னுக்கு வரணும் என்ற எண்ணம் இருந்தால் வழியா இல்லை உலகிலே.
நானும் கொஞ்ச நேரம் வெட்டியா இருந்து விட்டு மறுபடி வரேன்




உண்மைதான் நண்பா... உங்கள் கூற்றை நானும் ஏற்றுக் கொள்கின்றேன், நானும் அதைத்தான் என் அலசல்களில் பதிவிட்டேன்.




உழைப்பு குறைவான தொழில்களை இன்றைய சமூகம் விரும்புவதால் உருவாகும் நிலைதான் வேலையில்லா திண்டாட்டம். சோம்பேறிகளுக்கு யாரும் வேலை தரமாட்டார்கள்!




வாழ்க்கை என்பது பெரும்பாலும் தெரிந்தெடுக்கப்பட்டதாகும். சில சமயம் திணிக்கப்பட்ட வாழ்கையாகவும் அது அமைவதுண்டு.

மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ!
குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ!!
தோற்று விட்டால் என்ன செய்வது!!!
என்கிற பயம்
செயலை ஆரம்பிக்கவே விடாமலும் செய்து விடுகின்றது.


மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து, நாம் விரும்பும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட செய்வதில்லை. சந்தோஷத்தையே காலால் மிதிக்கிறோம்.






அது பண்ணனும்
இது பண்ணனும்னு நெனச்சு, எதுவுமே பண்ணாம,
நல்லா சாப்பிட்டு,
வெட்டியா தூங்கற சுகம் இருக்கே..!!
அத சொல்ல வார்த்தை இல்ல...!!!
அது ஒரு தனி சுகம் தான்..!  :)  :)



நீங்கள் 'முடியும்' என்று நினைத்தாலும்..
'முடியாது'என்று நினைத்தாலும் இரண்டுமே சரிதான்.!!
ஏனென்றால் அதை நீங்கள் தான் முடிவு செய்கிறீர்கள்.!!





Title: Re: வெட்டியா இருப்பது இதமா கஷ்டமா
Post by: Mirage on November 11, 2016, 07:36:31 PM
2 days ku vettiya irkadhu easy ana adhuku mela remba kashtam  :-X