Author Topic: கதை  (Read 954 times)

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
கதை
« on: June 26, 2020, 09:16:12 PM »
ஒவ்வொரு கால் தடத்திற்கும்
ஒவ்வொரு கதை உண்டு

இந்த ftc யில்  கால் பதித்ததற்கும்
ஒரு கதை உண்டு
அதில்
ENIGMA விற்கும் பங்குண்டு

இந்த ftc பயணத்தில்
நண்பனாய் தெரிந்தேன் சிலருக்கு
சகோதரனாய் தெரிந்தேன் சிலருக்கு
கோமாளியாய் தெரிந்தேன் சிலருக்கு
ஏதுமற்றவனாய் இருந்தேன் சிலருக்கு

திறமை என்ற பெயரில்
சிறியதாய் எழுதும் என் எழுத்துக்கும்
பெரிதாய்  ஊக்குவித்தனர்

தனிமை என் தோழன்
தனிமை என் தோழி
தனிமை என் நிஜம்
தனிமை என் நிழல்
தனிமை எனக்கு இனிமை

தனிமையின் மேல் கொண்ட
காதலால் முகமூடி அணிந்து
வாழும் எனக்கு

என் தனிமையின் விருப்பம்
அறிந்து என்னுடன் இருக்கும்
நட்புக்கள் சில

அவர்களுக்கு
எனது நன்றிகள்

ஒவ்வொரு தேடலுக்கும்
ஒவ்வொரு முடிவு இருக்கும்
மீண்டும் தேடல் பயணம் தொடரும்


பதித்த கால் தடங்கள்  ஒவ்வொன்றும்
வாழ்வில் ஒவ்வொரு கதை
சொல்லும்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: கதை
« Reply #1 on: June 27, 2020, 07:12:04 AM »
உங்களின்  தேடல் பயணம் தொடர வாழ்த்துக்கள் மச்சி  :-*

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Natchathira

  • Jr. Member
  • *
  • Posts: 85
  • Total likes: 198
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ★★Live ★★Laugh★★ Love★★
Re: கதை
« Reply #2 on: July 31, 2020, 10:36:30 AM »
தனிமையின் மேல் கொண்ட
காதலால் முகமூடி அணிந்து
வாழும் எனக்கு ---

தனிமை வாழ்க்கைக்கு அழகை சேர்க்கிறது.
நீங்கள் உண்மையிலேயே தனிமையுடன் உட்கார்ந்து அதைப் பரிசாகத் தழுவிக்கொள்ளக் கற்றுக்கொண்டால்… உங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு, நீங்கள் உண்மையில் எவ்வளவு வலிமையானவர் என்பதை  அறியும் தருணம் ..  ஆழமான, துடிப்பான மற்றும் வண்ணமயமான உங்களை உருவாக்குவதில் சிறிய தனிமை தேவை // தனிமை  அன்பளிக்கும் வலிமை கூட முகமூடிகளை அகற்றி இனிமையானா புதிய வாழ்க்கை பயணத்தை காதலிக்க தொடங்கும்
« Last Edit: July 31, 2020, 10:38:10 AM by Natchathira »