1
கவிதைகள் / செல்வியும் செல்பியும் (selvi vs selfie)
« Last post by AshiNi on Today at 06:51:57 PM »
படுக்கையறையே சிறையென மாறி
சுவரெங்கிலும் அவன் பெயர் கீறி
காதலன் நினைவுகள் அனலாய் சூழ
கருகி வாழும் அவள் பெயர் செல்வி
பள்ளிக்கூடப் பாடம் பயிலாவிடினும்
பள்ளியறைக் காதல் ஒருநாள் காண
வானெங்கும் சிட்டுக்களாய் சிறகடித்து
காதல் செய்த ஜோடி பட்சிகள் அவர்கள்
தென்னந்தோப்பின் மத்தியிலே
தத்தித் தாவித் திரிந்த
முயல் குட்டிகள் அவர்கள்
நெளிந்து ஓடும் ஓடை நீருக்குள்ளும்
காதல் கீதம் ஒலிக்கச் செய்த
தங்கமீன்கள் அவர்கள்
சோளம் விளையும் மண்ணில்
சோளக்காட்டு பொம்மையையும்
கண்மூட வைத்து நாணம் வரச்செய்த
சிங்கார இளசுகள் அவர்கள்
கிராமத்து வாடையில்
கண்களின் ஜாடையில்
இதயம் பரிமாறிய இவர்கள் காதலின்
உயிரைக் காவெடுக்க வந்த
"அதன்" சதியை என்னவென்று சொல்ல...!
அவனும் நினைக்கவில்லை
நேரப்போகும் அவலம்
அவளும் அறியவில்லை
"அதன்" கபடம்
காதல் காற்றை சுவாசிக்க
மலையடிவாரம் போதுமென
அவள் உரைக்க
எல்லோரும் வியக்க 'லைக்'
வேண்டலாம் வா என
மலையுச்சி கூட்டிச்சென்றது
கிராமத்தானையும் தழுவிக்கொண்ட
முகநூல் ஆசை
உச்சியைத் தொட்டதும்
இருவர் முகங்களுக்கும் முன்னே
நீட்டினான் கைப்பேசியை
இது என்ன மச்சான் என
வாய் திறக்க அவள் விழைகையில்
அவன் கால் தொட்ட கற்பாறை
விரைந்து கொண்டது
அவனை பாதாளத்தில்
தள்ளியதும் "அது"
சுயபுத்தியை மறக்கச்
செய்ததும் "அது"
நாட்கள் கடந்துதான் கருவாச்சியும்
அறிந்தாள் "அதன்" பெயர்
பலரின் வாலிபத்தை ஆட்டம் காண
செய்கிறது "அதன்" செயல்
"செல்பி" மோகம்
பாவம் பாராது
சூறையாடியது
அவன் காதல் வேகம்
பல மனைகளிலும்
வினையாகி போனது
புகைப்பட தாகம்
இளரத்தத்தின் அறிவை
மங்கச் செய்த ஆசையால்
பாஷை அறியாது
தவிக்கிறாள் பேதை,
அவள் மச்சான்
வரைந்த காதலுடனும்
அவன் அவளுக்குள் உயிராய்
விதைத்த கருவுடனும்....