Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 159  (Read 2701 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 159
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 11:05:46 AM by MysteRy »

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
என் தனிமை எனும் போர்வை
காற்றில் மிதந்தது ஏனோ
அதனை களவாடிய கள்வன்
என்னவன் தானோ

அனுதினம் அவன் முகம் காட்டி
மறக்க வைத்தான் என்னை
நானோ தொலைத்ததெல்லாம்
மறந்து என்னுள் தேடுகிறேன் உன்னை

தோள் சாய்த்து தோழனானாய்
கை கோர்த்து காதலனானாய்
எனக்கே எனக்காய் எல்லாமுமானாய்
என்றோ நீ என்னவனானாய்

என்னை மீட்டெடுத்தாய்
உன்னுயிர் கொண்டு
ஆனால் தொலைத்துநிற்கிறேன்
உன்னை இன்று

மண்ணோடு நீ புதைந்தாலும்
என் கண்ணோடு நீ இருப்பாய்
மனதோடு உனை நான்
உணர்கையிலே என்னிதயத்தில்
என்றும் நீ சிரிப்பாய்

                    **விபு**                     
« Last Edit: September 17, 2017, 04:48:47 PM by VipurThi »

Offline KaBaLi

அழகான கடலே
என்னவளை கண்டால்
பார்த்து விடாதீர்கள்
உம்மையும் மாயம் செய்து விடுவாள்.

அவள் கயல்விழிகளில்
பல்லாயிரம் கவிதைகள்
ஒவ்வொரு பார்வையும் வில்லாக
என் நெஞ்சை துளைக்கின்றன.

கடல் அலையிலிருந்து நான்
தேர்ந்தெடுத்த குட்டி மீனே !!!
என் உள்ளத்திற்கு பசி
உன் குறுநகையை இரையாக போட்டு விடு.
வேர் தாங்கும் வழியை விட
காதல் பாரமானது.

அவளைக்
கண்டால் அறியாமல் சிரிக்கிறேன்
பார்க்கா விட்டால் கதறி அழுகிறேன்.

ஒளி வீசும்
உன் பனி முகத்தால்
பௌர்ணமி நிலவாக
உனையெண்ணினேன்
பால் வடியும்
உன் முகத்தில்
அரும்பிய புன்னகையால்

வான் வெளியில்
தோன்றும் தேவதையோ
என்றெண்ணினேன்

கடலில் மீனாக நீ மிதக்கின்றாய்
நான் தண்ணீராக தாங்குகிறேன் !! 

நான் செய்த  பாவத்திற்கு
கடுங்கோபம் உனக்கிருக்கும்
கண்ணீரோடு மன்னிப்பு கேட்கிறேன்
கடமை உணர்ந்து வந்துவிடு..!

காய்ந்த வயல் போல நானும்
காத்திருக்கிறேன் நாளும்
காலம் தாழ்தியது போதும்
கருணையாக பொழிந்துவிடு..!

நீ இல்லாத வாழ்க்கையை
நடைப் பிணமாய் வாழ்கிறேன்
உன் நினைவுகள் - இன்னும்
உயிராய் ஓடிக்கொண்டிருப்பதால்
ஆமைபோல் ஆயிரம்
ஆண்டு வாழாவிட்டாலும்
ஈசல் போல் ஒருநாள்
உன்னோடு வாழ
துடிக்கிறேன் ....!!!

என்னுடைய மகிழ்ச்சியை விட உன் மகிழ்ச்சியே எனக்கு முக்கியம் என்று சொல்லி  "தியாகம்" என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறது என் இயலாமை....

Offline thamilan

அந்தி மயங்கிய மாலை
அமைதியான அலைகடல்
கடல் மேல் ஒரு காரிகை
கருமேகம் சூழ்ந்த கடல் ஒரு ஓவியம் போல
அதில் வெண்தூரிகையாக
சயனித்திருக்கும் ஒரு பெண்
என்ன அழகான ஒரு காட்சி
இயற்கையிடம்  மதி மயங்குவதா 
மதி மயக்கும் மங்கையைக் கண்டு மயங்குவதா 

பெண்ணென்றால் பேயும் இரங்கும்
ஆளை விழுங்கும் ஆழ்கடல்
அது இரங்காதா என்ன
அவள் தளிர் மேனி அலுங்காமல்
தாங்கிப் பிடிக்கிறதே
அவள் தூக்கம் கலையக்கூடாது என்று
முகில் மேகம் கூட குடை பிடிக்கிறதே

தனிமைக்கு துணை நானியிருக்கிறேன் என
கை நீட்டும்  கடலரசன்
அவள் அழகை காண அஞ்சி
கடலுக்குள் முகம் புதைத்து
கை நீட்டுகிறானோ
காரிகை அவள் கை பிடிப்பாளோ  - இல்லை
அவள் காதலன்
கதிரவன் முகம் காண காத்திருப்பாளோ


Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 980
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
உலகால் தனித்து விடப்பட்டவள் நான்
யாரும் இல்லா தனிமையில்
நானும் என் தலையணையும்
உறவாடிய நாட்கள் பல

கூடி மகிழ யாரும் இல்லை
இல்லை என்று கூறி அளவும் யாரும் இல்லை
அழுது அழுது இறுதியில்
அதுவே பழக்கம் ஆயிற்று  எனக்கு

ஏதோ ஒரு காலை பொழுது
எனக்காக புலந்தாற் போல
உன்னை சந்தித்தேன் உலகமே
என் காலடியில் சுழல்வதாய் உணர்ந்தேன்

ஆறாத காயங்கள் பல
உன் பேச்சில் நீ ஆற்றினாய்
புன்னகை மறந்த உதடுகளில்
மீண்டும் நிறுத்த முடியா புன்னகை

என்னால் முடியாது என்றிருந்த
பலவற்றை முடிக்கவைத்தாய்
தந்தையாய் , தமையனாய் ஆசானாய்
நல் வழிகாட்டியாய் மாறினாய்  நீ எனக்கு

என் கரம் பற்றி வழிநடத்தினாய்
இருளும் தெரியவில்லை
ஒளியும் தெரியவில்லை
இடர்கள் நேரவில்லை

காலை விழிக்கும் போது
கலையும் கனவுபோல
எங்கே கலைந்து போனாய் நீ
என் பல பிரச்சனைகளுக்கு தோள் கொடுத்த தோழா

காதல் தோல்வியில் துவண்டு
மதுவுக்கு அடிமையானதேனோ
போதை உன்னை தனிமைப்படுத்தும்
உன்னை நம்பி இருப்பவர்களையும் தனிமைப்படுத்தும்

ஆயிரம் தைரியம் சொல்லி என்னக்கு வலு ஏற்றிய நீ
மதுவெனும் மீளாக்கடலில் மூழ்கி
உனை இழந்து எனைவிட்டு
நிரந்தரமாய் நீங்கி போனதேனோ

இன்று மறுபடியும் தனிமையில்
உனை  போன்ற நட்பில்லா
நடுக்கடலில் தத்தளிக்கின்றேன்  நான்
கரை சேர முடியாமல் தவிக்கும் எனக்கு
நீ கொடுத்த தைரியம் ஒன்றே
எனக்கு கலங்கரை விளக்கமாய் !!!
 
« Last Edit: September 19, 2017, 10:47:19 AM by NiYa »

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
தனிமை எனும் நரகத்தில்
வாழ்ந்து கொண்டிருந்த நான்
எனக்கென்று ஒரு உலகை
அமைத்து கொண்டு ...

அதில் என் வாழ்க்கைக்கு உயிர் கொடுக்கும்
உங்கள்....கவிதைகளை தேடி இன்று
ஓவியமாய் உங்கள் முன்
காட்சி அளிக்கிறேன்...

என் இதயத்தை திருடிக்கொண்ட கள்வனாய்..
காணவே கண்மூடித்தனமாக
காத்திருக்கிறேன்...

இந்த காதல் செய்யும் விளையாட்டில்
பெயர்தெரியா காதலனை காண காத்திருக்கிறேன்...

என் உடைந்து போன இதயத்திற்கு
ஆறுதலாய் உன் மார்பில் சாய ஒரு
உறவின் வருகைக்காக காத்திருக்கிறேன்...

கருமேகங்கள் என்னை சூழ்ந்திட..
ஆழ்கடல் நடுவில் உயிரில்லா ஜடமாய்
உனது முகம் காண காத்திருக்கிறேன்..

என் கனவில் வரும் கண்ணாளனே என் கை
பிடித்து என் அருகே வா ...
உன் முகம் காண காத்திருக்கிறேன்...

சுய நினைவு அற்று என்னை
அழைத்த ஒரு குரல்...
சுயநினைவுக்கு கொண்டுவர செய்தது...

அப்பொழுதுதான் உணர்ந்தேன் நான் கண்டா
அனைத்தும் கற்பனை என்று...

கடைசிவரை அவன் முகத்தை காணாமல்
என் கற்பனை முடிவடைந்தது ...


         
JesiNa...

Offline gab

இயன்ற வரை முயன்று, கடலோடு
சோர்ந்த உடலோடும், உள்ளத்து
அன்போடும் என்னவளை காத்தேன்
என்ற பெருமிதத்தோடு இவ்வுலகை விட்டு
விடைபெற எத்தனிக்கையில்..
நாம் கொண்ட காதல் ....
உனது பரிசுத்த அன்பு ...
உன் ஸ்பரிச உஷ்ணம் ...
என்னை மெல்ல தீண்ட என் மனம்
சற்றே பின்னோக்கி ...!

இளமை  துள்ளலில்
இருள் கிழித்து
இரு சக்கர வாகனத்தில்
இருவரும் இறக்கை கட்டி பறந்த வேளையில்
இடறி விழுந்து என் நிலையும் நினைவும்
இழந்த வேளையில்  உன் அன்பால் என்னை
மீட்டெடுத்தாயே என்னவளே!
அன்று பிரியாத நம்  காதலை ...!

தட்டோடு தாய்மாமன் நிற்க
தந்தை தலையசைக்க
தாய் மௌன மொழி பேச
தனிமையில் நீ தவிக்க
வாசல் தாண்டி போராடி
காத்தோமே
அன்று பிரியாத நம் காதலை ...!

பிறிதொரு  நாளில் சுபமுகூர்த்தம் 
நமக்காய் தேர்வாகி ஊர்மெச்ச
சுற்றமும் நட்பும் நம்மை வாழ்த்த
திருமண பந்தத்தில் இனிதே
தொடங்க காத்திருந்த
என்றும் பிரியா நம் காதலை
இன்று பிரிவேனா  ?

இந்த ஆழ் கடலுக்கு அந்த வாய்ப்பை
தரவும் மாட்டேன்..
என்னவளை தனிமையில்
தவிக்க விடவும் மாட்டேன்.
உனது அன்பின் ஸ்பரிசத்திலும்
நம் காதலின் கதகதப்பிலும்
இக்கடலையும் கடந்து கரை சேர்வோம்
என்ற நம்பிக்கையில்
அதே காதலோடு ....


உண்மை காதலுக்கு
என்றும் அழிவில்லை...


Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
இரவுகள் பல சுகம் தரலாம்
பலருக்கு
இரவுகள் என்றும் நரகம் தான்
எனக்கு

எத்தனை பேர்களின் கவலைகள்
தீர்க்கும் கடல் நீ
என்னை போன்றோர்களின்
பசியையும் நீயே தீர்ப்பாய்

இன்று , என் கணவன் என்றும் போல்
வலை விரித்து மீன் பிடிக்க
புறப்பட்டான் உன்னிடம்

வைத்துக்கொண்டு வஞ்சம் செய்யாதவள் -நீ
பல நாள் எங்கள் பட்டினியை மறக்க செய்தவள் நீ

கடற்கரையில் மனிதர்களை பார்ப்பதாலோ என்னவோ
ஆர்ப்பரித்து சீறுவாய் நீ
உன் உண்மை குணம் நடுக்கடல் வந்து பார்த்தவருக்கு புரியும்
அமைதியின் இருப்பிடம் நீ என்று

எல்லைகள் உனக்கில்லை , உன்னில் எல்லைகளை
வகுத்தவனுக்கோ பகுத்தறிவுமில்லை

மீன் தேடி வலை விரித்து, இரவில்கடலில்  சென்ற என் கணவனுக்கோ
மீளா துயரத்தில் நான் விழுவேன் என்று நினைத்திருக்க வாய்ப்புமில்லை

வலை விரித்து காத்திருந்த நேரம் , எல்லை கடந்து வந்ததாய்
தாக்கியது துப்பாக்கி குண்டுகள் என் கணவனின் மார்பில்

உதவிக்கு யாருமில்லை என் கடல் அன்னையே
நீயே சரணம் என்று உன் மடியில் விழுந்தாரே !
அமைதியாய் என்றும் போல் இன்றும் உன் மடியில்
ஏற்றுக்கொண்டாய்

அவரின் சடலம் கூட நான் பார்க்கவில்லை
உன்னில் அவர் வாழ்வார் என்று நம்பிக்கையில்

இதோ நானும் வருகிறேன் உன் மடியில் விழுகிறேன்
என்னையும் அரவணைத்துக்கொள்
என் கடல் அன்னையே !

****ஜோக்கர் *****


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "