Author Topic: காதல் எனும் இனியவள்  (Read 1026 times)

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
காதல் எனும் இனியவள்
« on: April 07, 2018, 09:50:08 PM »
காதல் எனும் இனியவள்




ஆதாம் ஏவால் அன்று கொண்ட பந்தம்,
  காதல் எனும் பெயர் கொண்ட
காரிகையை ஈன்றதோ?
  அவள் வந்தபின்னர் தான்
விண்ணும் மண்ணும்
  அழகாய் உறவாடியதோ !
காற்றும் மழையும் கதை பேசியதோ !

காதல் கன்னியவள் கண்ணியமாய்
  பவனி வரக் காரணம் என்னவாம் ?
பிரிவினையென்ற  ஒன்று
  என்னிடம் இல்லை கண்ணேயென்று
கண்ணடித்தாள் என்னைப் பார்த்து...

சிந்தித்துப் பார்த்தேன் ஒரு கணம்
  அது உண்மையே என
உணர்ந்தேன் மறு கணம் 
  வனப்பை பாரவில்லை
ஜாதியை கோரவில்லை
  அந்தஸ்து  கேட்கவில்லை 
பட்டமும் தேடவில்லை

உண்மைக் காதலரிடையே காதலவள்
  அப்படித்தானே குடி கொள்வாள்
அவள் வானிலே மிதக்கும்
  ஜோடிகள் மாத்திரமே
உணர்வர் என் அர்த்தம்...

உன் இதயத்தில் அரியாசனமிட்டு
       அமர்கையிலே நீயும் ருசிப்பாய் தோழியே
என் ரசனை..........
  உயிராகி உடலாகி உறவாகி
உன் காதலுடன் மௌனம் பேசுகையில்
  அறிவாய் காதலவள் வாசனை..........

காதல் பேதமறியாது என
  ஊரார் சொல்லக் கேட்டவள்,
கவி தொடுக்கையிலேயே உணர்ந்துவிட்டேன்.
  வார்த்தைகள் வெளிவர மறுக்கிறது
 
காதல் வெள்ளம் விழிகளில் நிறைய
     என் பேனையும் தலை குனிகிறது...
« Last Edit: June 30, 2018, 09:20:46 PM by AshiNi »

Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 499
  • Total likes: 1534
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: காதல் எனும் இனியவள்
« Reply #1 on: April 08, 2018, 11:03:37 AM »
ரொம்ப அழகான கவிதை Ashini sis... உங்களுடைய சிந்தனையும் வார்த்தை பிரயோகமும் மீண்டும் மீண்டும்  என்னை வியப்படைய செய்கிறது. வாழ்த்துக்கள் sis...தொடரட்டும் உங்கள் கவி பயணம்.. 

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: காதல் எனும் இனியவள்
« Reply #2 on: April 08, 2018, 12:11:46 PM »
Ungaludaya rasanai migundha paaraattukkalukku mikka nanri sis
« Last Edit: June 29, 2018, 02:35:04 PM by AshiNi »

Offline JeGaTisH

Re: காதல் எனும் இனியவள்
« Reply #3 on: April 08, 2018, 03:42:42 PM »
மிகவும் அழகா இருக்குறது வரிகள் மற்றும் கவிதை

வாழ்த்துக்கள் AshiNi கவிதைகள் தொடரட்டும்

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: காதல் எனும் இனியவள்
« Reply #4 on: April 08, 2018, 06:55:48 PM »
Ungaludaya paaraattukkalukku nandri Jegatish bro
« Last Edit: June 29, 2018, 02:36:02 PM by AshiNi »

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: காதல் எனும் இனியவள்
« Reply #5 on: April 09, 2018, 11:53:26 AM »
"உண்மைக் காதலரிடையே காதலவள்
அப்படித்தானே குடி கொள்வாள் "

காதல் ஒரு உணர்வு அவ்வுணர்வில்
கவிதை எழுதுகையில்
பேனாவும் தலைகுனிகிறது

மனிதன் மட்டும்
காதலில் உண்மை,பொய்மை
தேடிக்கொண்டிருக்கிறான்

வாழ்த்துக்கள் சகோ

தமிழ்த்தாய் உங்கள் பேனாவில்
அரியாசனமிட்டு அமர்ந்திருக்கிறாள்

தொடர்ந்து எழுதுங்கள்




"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: காதல் எனும் இனியவள்
« Reply #6 on: April 09, 2018, 04:20:55 PM »
காதல் பேதமறியாது என ஊரார்
சொல்லக் கேட்டவள்
கவி தொடுக்கையிலேயே உணர்ந்துவிட்டேன்.
வார்த்தைகள் வெளிவர மறுக்கிறது
 
     காதல் வெள்ளம் விழிகளில் நிறைய
     என் பேனையும் தலை குனிகிறது

azhanga lines ashi sis :D  romba feel pani eluthirukinga pola :P thirumba thirumba read panum pothu its gives a lovely feel :D ungaloda intha kavithai payanam menmelum thodara vaazhthukal :)

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: காதல் எனும் இனியவள்
« Reply #7 on: April 09, 2018, 08:00:25 PM »
Joker bro matrum Vipurthi thanga,
Ennudaya kavidhaikkul ooduruvi sendru rasiththu en kalai aarvathai thatti koduthu karuththukkal padhivu seivadhatku migavum nanri
« Last Edit: June 29, 2018, 02:37:40 PM by AshiNi »