Author Topic: அழைப்புமணி - 2  (Read 2422 times)

Offline இளஞ்செழியன்

அழைப்புமணி - 2
« on: January 11, 2021, 05:01:59 PM »


''ஹெல்லோ யாரு''
என்று கேட்கையிலேயே லைன் கட் செய்யப்பட்டிருந்ததை அறிந்து கொண்ட தாயவள்...

இது யாராவது தெரியாம எடுத்திருப்பாங்க அதான் வச்சிட்டாங்க, ன்னு அவளுக்கே உரிய அழகான பழைமை வாத அறிவுடன் சொல்லிவிட்டு...,

போ...! போய்ட்டு இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு...! என்று மகளிடம் சொல்லிக் கொண்டே மொபைலை தூக்கி மகளின் கையில் திணித்து விட்டு அறைக்குள் அவளும் திரும்புகிறாள்.

இல்லம்மா...
டைம் சரியாயிடிச்சு, நா படிக்கனும்
தூங்க டைம் போதாது...,
என்றவளின் பதிலை கேட்ட தாய்,
சரி அப்ப படி நான் தூங்குறேன் ன்னு சொல்லிட்டு அங்கிருந்து நடை போட்டார்.

ஆனால்! இந்த நவீன ஆண்டுகளின் இடைவெளிகளில் பிறந்து வளர்ந்து வாழ்கின்ற மகளுக்கோ, இதனில் இன்னும் சந்தேகம் தீரவில்லை. யோசித்துக் கொண்டே இருக்கிறாள், யாரா இருக்கும்? எதுக்கு இப்ப கால் பண்ணாங்க அதுவும் வெளிநாட்டு நம்பர்ல இருந்து வந்திருக்கே?

சரி ஏதோ ஒன்னு...

அப்டின்னு
மிகச் சாதாரணமாக நகர்ந்தும் நகராமலும் கால்கள் நடை போட்டது கிச்சனுக்குள், போய்ட்டு தண்ணீர் சொட்டு மட மடவென குடித்து விட்டு, முகத்தையும் கழுவி விட்டு துடைத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்து துவாயை ஓரமாய் போட்டு விட்டு,
படிப்பதற்கு புத்தகத்தை எடுக்கிறாள்., ஏனெனில்...!
அன்று அவளுக்கு தனது வாழ்வின் அடுத்த கட்ட நகர்வை தெரிவு செய்து கொள்வதற்கு தேவைப்படும் கட்டாயமான ஒரு பரீட்சை எழுத வேண்டிய நாள்.

புத்தகத்தை திறந்து அஞ்சி நிமிஷம் கூட கடந்திருக்காது,
யாரோ கதவை தட்டுகிற சப்த்தம் கேட்டு பதறியவள், யாரு? என்று கேட்கும் முன்னே மறுபடி தாயின் அறைக்குள் விரைந்து செல்ல முயல்கிறாள்.

ஆனால் தாயோ அதற்குள் மறுபடி...

டொக், டொக், டொக்,
என்ற கதவு தட்டும் சப்த்தத்தின் தூரத்து ஒலி கேட்டு வந்துவிட்டார்.

யாரோ தெரியாது என இருவரும் முகம் பார்த்தே சந்தேகித்துக் கொண்டு கதவருகே செல்ல முனைகையில்,
அவளின் சிஸ்டரும் எழும்பி வந்து விட்டாள் என்னவென்று பார்ப்பதற்கு.

கதவை திறந்து மூவரும் பார்த்தால்,
அங்கே அந்த தாயாரின் தம்பி..,
அதாவது இவர்களின் மாமனார் நிற்கிறார்,

என்ன மாமா? என்ன இந்த டைம்ல?...
பதறிய மூத்தவளை பேச விடாமல்,

யாராவது கால் பண்ணாங்களா? என மெல்லிய குரலில் கேட்டவரின் பின்னால் அவரின் மனைவியும் இருப்பதை கண்ட இவர்கள் மூவருக்கும் ஒன்னும் புரியவில்லை.

ஏன்? ஓஹ் இப்ப தான் இவள் பேச சொல்லி தந்தாள், ஆனா ஆன்சர் பண்றப்பவே கட் ஆயிடிச்சி என தாயவள் திரும்ப தன் தம்பியிடம் கூறும் போதே...!

அது ஒன்னுமில்ல.., என்று தலையை சொறிந்து கொண்டே உள்ளே போய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அமைதி காக்கிறார்.

இவர்கள் மூவரும் திக்குமுக்காடி கேள்விகளை வீசுகிறார்கள் பதற்றத்துடன்...

இப்படி சலசலப்பு பேச்சுக்கள் சப்தமாக மாறி பேசிக் கொண்டிருக்கையிலேயே மறுபடி வந்தது அந்த கட்டார் நாட்டின் அழைப்பு.

இருந்த பதட்டத்தில் தாய் மகளின் கையிலிருந்து மொபைலை பிடுங்கி பச்சை பட்டனை ஸ்லைட் செய்தவுடன் அந்த பக்கத்தில் இருந்து ஒருவர் துரிதமாக கேட்கிறார்..,

யார் பேசுறது? ஏன் இவ்வளவு நேரம் ஃபோன் ஆன்சர் இல்ல? பல தடவை எடுத்தேன்...,

என்பவரின் பேச்சை இடைமறித்தவர்...

சரி நீங்க யாரு? ஏன் ஃபோன் பண்ணீங்க?

அது... அது...

(தொடரும்)
பிழைகளோடு ஆனவன்...