FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 30, 2016, 10:01:17 PM

Title: ~ கேரட்,கத்தரிக்காய்,முருங்கைக்காய் சாம்பார் ~
Post by: MysteRy on April 30, 2016, 10:01:17 PM
கேரட்,கத்தரிக்காய்,முருங்கைக்காய் சாம்பார்

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு: 1/2 கப்
கேரட்_1
கத்தரிக்காய்_1
முருங்கைக்காய்_1
சின்ன வெங்காயம்_5
தக்காளி_1
பூண்டு_ 2 பற்கள்
புளி_பெரிய கோலிக்குண்டு அளவு
மிளகாய் தூள்_ 21/2 டீஸ்பூன்
மஞள் தூள்_ 1/4 டீஸ்பூன்
கொத்துமல்லி தழை_ 1 கொத்து

தாளிக்க:

கடுகு_ 1/4 டீஸ்பூன்
உளுந்து_ 1/4 டீஸ்பூன்
சீரகம்_ 1/4 டீஸ்பூன்
வெந்தயம்_ சிறிது
பெருங்காயம்_சிறிது
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_ 1/2 ஈர்க்கு

(http://pattivaithiyam.net/wp-content/uploads/2015/10/drumstick-eggplant-carrot-sambarcarrot-murungakkai-sambar-in-recipe-in-tamiltamilsamayal-kurippu-carrot-murungakkai-sambarcooking-tips-carrot-murungakkai-sambar-e1445518858822.jpg)

செய்முறை:

முதலில் பருப்பை நன்றாக கழுவி நீரை வடித்துவிட்டு அது மூழ்கும் அளவை விட அதிகமாகவே தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள், 2 சொட்டு விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்து பருப்பு குழையும் வரை வேக வைக்கவும். காய்களை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.இதில் உள்ள காய்களைத்தான் போடவேண்டும் என்பதில்லை.பிடித்தமான காய்களை போட்டுக்கொள்ளலாம். வெங்காயத்தை நீள வாக்கில் அரிந்து வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.தக்காளியைத் துண்டுகளாக்கவும்.புளியை நீரில் ஊறவத்து 1/2 கப் அளவிற்கு கரைத்து வைக்கவும்.
பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் கடுகு,உளுந்து, சீரகம்,வெந்தயம்,பெருங்காயம்,காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி வதக்கி அதன்பிறகு காய்களை வதக்க வேண்டும்.சிறிது வதங்கியதும் மிள்காய்த் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி புளித்தண்ணீரை விட்டு கொதிக்கவிடவும்.காய் வெந்ததும் பருப்பைக் கொட்டி கலந்து உப்பு போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.கடைசியில் கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.