Author Topic: ~ ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்! ~  (Read 1113 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்! ~
« on: February 28, 2017, 07:40:31 PM »
ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!



பீரியட் ட்ராக்கர் காலண்டர்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சியை ட்ராக் செய்யும் ஆப் பீரியட் ட்ராக்கர். இந்த ஆப், ஒவ்வொரு முறை ஏற்படும் மாதவிடாய் சுழற்சி சரியான இடைவெளியில் உள்ளதா என்பதையும், கர்ப்பமாகக்கூடிய வாய்ப்பு எப்போது அதிகமாக இருக்கும் என்பதையும் காட்டுகிறது. பிஎம்ஐ, எடை, உடல் வெப்பநிலை என எல்லா விஷயங்களையும் கணக்கிட்டு ஹெல்த் ரிப்போர்ட்டை அளிக்கிறது இந்த ஆப். 5 கோடிக்கும் அதிகமான பேர் பயன்படுத்தும் இந்த ஆப், கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.7 ரேட்டிங் பெற்றுள்ளது. இதில் உங்கள் பர்சனல் தகவல்களை யாரும் பார்த்துவிடாமல் இருக்க பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கும் வசதியும் உள்ளது.



வாட்டர் லாக்டு

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோம். எவ்வளவு தண்ணீர் இன்னும் அருந்த வேண்டும் என்பதை காட்டுகிறது இந்த வாட்டர்லாக்டு ஆப். இந்த ஆப்பில் திரவமாக நாம் அருந்தும் அனைத்து பொருள்களின் அளவைப் பதிவு செய்வதன் மூலம் இன்று எவ்வளவு தண்ணீர் அருந்தியிருக்கிறோம் என்பதையும். இன்னமும் இந்த நாள் முடிவதற்குள் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். மேலும், தண்ணீர் குடித்து அதிக நேரம் ஆகிவிட்டது என்பதையும் நினைவுபடுத்துகிறது இந்த ஆப். தினசரி மற்றும் சரியான இடைவெளிகளில் ரிமைண்ட் செய்கிற இந்த ஆப்,  ஐ-ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கிறது. இலவச ஆப்பாக ஆப்பிள் ஸ்டோரில் இருக்கும் இது, ஐஒஎஸ் 9 இயங்குதளம் வரை சப்போர்ட் செய்யும். https://goo.gl/7JrYOr