Author Topic: கேக்  (Read 3530 times)

Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
கேக்
« on: July 15, 2011, 12:48:08 PM »

சாக்லெட் கேக்

தேவையானவை:
மைதா 2 கப்,
வெண்ணெய் 100 கிராம்,
கன்டென்ஸ்டு மில்க் 1 டின் (400 மிலி),
வெனிலா எசன்ஸ் 2 டே. ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் 2 டீஸ்பூன்,
ஆப்பசோடா கால் டீஸ்பூன்,
தண்ணீர் 400 மிலி,
கோகோ 2 டே. ஸ்பூன்,
உப்பு ஒரு சிட்டிகை (அளவுகள் தலை தட்டி எடுப்பது முக்கியம்).


செய்முறை:

மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், ஆப்பசோடா, கோகோ அனைத்தையும் சேர்த்து இரண்டு முறை சலியுங்கள். வெண்ணெயைக் குழைத்து, அதனுடன் சலித்து வைத்த மாவு, வெனிலா எசன்ஸ், பால், தண்ணீர் சேர்த்து, முட்டை அடிக்கும் கருவியால் நன்கு அடியுங்கள்.

கேக் பாத்திரம் (விதவிதமான வடிவங்களில் கடைகளில் கிடைக்கிறது) அல்லது அலுமினிய குக்கர் தட்டின் உள்ளே வெண்ணெய் தடவி, எல்லா இடங்களிலும் படுமாறு மாவை சிறிது தூவி விடுங்கள். அந்தத் தட்டில் முக்கால் பாகம் வரை கேக் கலவையை கொட்டுங்கள்.

வெறும் குக்கரை கேஸ்கட் போடாமல் அடுப்பில் ஏற்றி, 3 நிமிஷம் சூடாக்குங்கள். பிறகு, கேக் கலவை ஊற்றிய பாத்திரத்தை குக்கருக்குள் வைத்து மூடி, வெயிட் போடுங்கள். மிகக் குறைந்த தீயில் ஒன்றே கால் முதல் ஒன்றரை மணி நேரம்வரை வேகவிடுங்கள். பின்னர், குக்கரின் மூடியைத் திறந்து, மெல்லிய கம்பியால் கேக்கினுள்ளே நுழைத்துப் பாருங்கள். கம்பியில் கேக் ஒட்டவில்லை எனில், நன்கு வெந்துவிட்டதென்று அர்த்தம்.

பிறகு, கேக்கை கவனமாக வெளியில் எடுத்து, சற்றே பெரிய கண்ணுள்ள சல்லடையின் மேல் வையுங்கள். (நேரடியாக தட்டில் வைத்தால், சூட்டில் வேர்த்து கேக் தட்டோடு ஒட்டிக்கொள்ளும்). இதை 3 முதல் 4 மணி நேரம் வரை நன்கு ஆறவிட்டு, ஐஸிங் செய்யுங்கள்.


ஐஸிங் செய்ய தேவையானவை: வெண்ணெய் அரை கப், பொடித்த சர்க்கரைத் தூள் ஒன்றரை கப், கோகோ பவுடர், வெனிலா எசன்ஸ் தலா 2 டீஸ்பூன்.

செய்முறை: சர்க்கரைத் தூளை, கட்டிகள் இல்லாமல் சலியுங்கள். வெண்ணெயை ஒரு தட்டில் போட்டு, கையால் நன்கு குழைத்து, சலித்த சர்க்கரைத் தூளை சிறிது சிறிதாக அதனுடன் சேர்த்து நன்கு பிசையுங்கள்.

இந்தக் கலவையை இரண்டு பாதிகளாகப் பிரித்து, ஒன்றில் வெனிலா எசன்ஸ் சேர்த்துப் பிசையுங்கள். மற்றொன்றில் கோகோ பவுடரைச் சேர்த்து நன்கு கலக்குங்கள்.

பட்டர் பேப்பரில் கோன் செய்து, முனையை வெட்டுங்கள். அதனுள்ளே பூ செய்யும் பிளாஸ்டிக் அச்சைப் (கடைகளில் ‘நாஸில்’ என்று கேட்டால், கிடைக்கும்) போட்டு, இரண்டு நிற மாவிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து, இரண்டு நிறமும் பக்கம் பக்கமாக வெளியேறுவதுபோல் கோனுக்குள் போட்டு, கோனை மடித்து மூடிக்கொள்ளுங்கள்.

இப்போது மீதமுள்ள கோகோ கலவையை சிறிது சிறிதாக ஒரு கத்தியினால் எடுத்து, கேக்கின் மேல்புறத்திலும் பக்க வாட்டிலும் சீராகத் தடவுங்கள். ஒரு கிண்ணத்தில் சிறிது வெந்நீரை வைத்துக் கொண்டு, கத்தியை அதில் நனைத்து, நனைத்து ஐஸிங் கலவையை சமப்படுத்துங்கள்.

அடுத்து, கேக்கின்மேல், கோனினால் விருப்பத்துக்கேற்ப டிசைன், பூக்கள் போட்டு அலங்கரித்தால் சாக்லெட் கேக் தயார்!

சாக்லெட் கேக் என்பதால்தான் அலங்கரிக்க கோகோ பவுடர் உபயோகிக்கிறோம். மற்ற கேக்குகளுக்கு, விரும்பிய நிறத்தில் பவுடர் போட்டுப் பிசைந்து கொள்ளலாம்.
[/size]
« Last Edit: July 15, 2011, 12:51:53 PM by குழலி »




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: கேக்
« Reply #1 on: July 15, 2011, 12:50:50 PM »

வெ‌‌ன்‌னிலா கே‌க்

தேவையானப் பொருட்கள்

முட்டை - 5
மைதா மாவு - 2 கப்
ச‌ர்‌க்கரை - 2 கப்
மார்கரின் - 1 கப்
வெ‌ன்னிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி

செய்முறை

ச‌ர்‌க்கரையை ‌மி‌க்‌‌ஸி‌யி‌ல் போ‌ட்டு தூளாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

அ‌த்துடன் மார்கரினை கலந்து நன்கு நுரைத்து வரு‌ம் வரை கர‌ண்டியை வை‌த்து அடித்துக் கொள்ளவும்

முட்டைகளை உடை‌த்து ஊ‌ற்‌றி அதையு‌ம் ந‌ன்றாக அடி‌த்து அதை, ச‌ர்‌க்கரை, மா‌ர்க‌ரி‌ன் கலவையுட‌ன் சேர்க்கவும். அ‌தி‌ல் தயிர், எசன்ஸ் சேர்த்து கொள்ளவும்.

மைதா மாவுட‌ன் பேக்கிங் பவுடரை சே‌ர்‌த்து சலித்து உரு‌ண்டை இ‌ல்லாம‌ல் தூளாக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

அ‌தி‌ல் மைதா மாவையு‌ம் ஊ‌ற்‌றி அ‌ந்த பா‌த்‌திர‌த்தை தூ‌க்‌கி‌ப் ‌பிடி‌த்து ஒரே பக்கமாக கலக்கவும். பின் கே‌க்‌கி‌ற்கான பர‌ந்த பா‌த்‌திர‌த்‌தி‌‌ல் வெ‌‌ண்ணெ‌ய் தட‌வி அ‌தி‌ல் மாவ‌ினை‌க் கொ‌ட்டி 35 ‌‌நி‌மிட‌ம் வேக ‌விடவு‌ம்.

கே‌க் ந‌ன்கு வெ‌ந்தது‌ம் இற‌க்‌கி அல‌ங்க‌ரி‌த்து வை‌க்கவு‌ம்.
« Last Edit: July 15, 2011, 12:52:43 PM by குழலி »




Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: கேக்
« Reply #2 on: July 15, 2011, 12:55:09 PM »

வெல்லக் கேக்

தேவை:
ரவை – 500 கிராம்
முட்டை – 6
துருவிய வெல்லம் – 500 கிராம்
கெட்டியான தேங்காய்ப்பால் – 2 கப்
சீனி – 250 கிராம்
பன்னீர்எசன்ஸ் – 3 தேக்கரண்டி
வெண்ணெய் – 250 கிராம்
முந்திரிப் பருப்பு – 250 கிராம்

செய்முறை:
பாதி முந்திரிப்பருப்பை பொடியாக்கிக் கொள்ளவும். மற்ற பாதியை நைய நறுங்கத் தட்டிக் கொள்ளவும். ரவையை வறுத்து அது சூடாக இருக்கும் போதே வெண்ணெயைக் கலந்து தனியே வைக்கவும். முட்டை மஞ்சள் கருவையும் சீனியையும் நன்கு அடித்து ரவைக்கலவையில் வெல்லம் சேர்த்துக் கலக்கவும். பருப்பு, எசன்ஸ் கலக்கவும். வெள்ளைக் கருவை நன்கு நுரை பொங்க அடித்துக் கேக், மாவுடன் கலக்கவும். இறுதியில் தேங்காய்ப்பால் சேர்த்து நெய் தடவிய கேக் பாத்திரத்தில் ஊற்ற வேக வைக்கவும்.