Author Topic: Mango Recipes  (Read 2673 times)

Offline kanmani

Mango Recipes
« on: July 20, 2011, 10:16:34 AM »
மாம்பழ சீஸ் கேக்

தேவையான பொருட்கள்:

மேரி பிஸ்கட்ஸ் - 1/2 பாக்கெட்
வெண்ணெய் - 10 கிராம்
பனீர் - 50 கிராம்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 100 கிராம்
மாம்பழச் சாறு - 1/2 கப்
மாம்பழத் துண்டுகள் - தேவையான அளவு

ஜெலடின் - 1 ஸ்பூன்
லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்


செய்முறை:

* வெண்ணெயை உருக்கி அதனுடன் மேரி பிஸ்கட்டை பொடித்து சேர்த்து நன்றாக கிளறவும்.

* இதை பெரிய பாத்திரத்தில் அடியில் மட்டும் நிரப்பவும்.

* ஜெலடினை சுடுநீரில் கரைத்து ஆறியதும் மாம்பழச்சாறு, தயிர், பனீர், லெமன் ஜூஸ், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி, அதை ஒரு பாத்திரத்தில் அல்லது மோல்டிங் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸரில் வைக்கவும்.

* கலவை சற்றுக் கெட்டியானவுடன் மாம்பழத் துண்டுகளை மேலே தூவி பரிமாறவும்.

Offline kanmani

Re: Mango Recipes
« Reply #1 on: July 20, 2011, 10:18:48 AM »
மாம்பழ பர்பி

தேவையான பொருட்கள்:

மாம்பழச் சாறு - 1 கப்
பால் பவுடர் - 1/2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துறுவல் - 1 கப்
ஏலக்காய்த் தூள் - 1 ஸ்பூன்


செய்முறை:


* அடிக்கனமான பாத்திரத்தில் நெய்விட்டு மாம்பழக் கூழைப் போட்டுக் கிளற வேண்டும்.

* கூழ் கெட்டியானதும் இறக்கிவைத்து அதில் தேங்காய்த் துருவல், சர்க்கரை, பால் பவுடர் எல்லாம் சேர்த்துக் கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்றாகக் கிளற வேண்டும்.

* மீதியுள்ள நெய்யை விட வேண்டும்.

* பாத்திரத்தில் ஒட்டாமல் பொங்கி வரும்போது ஏலக்காய்த் தூளைப் போட்டு ஏற்கனவே நெய் தடவிய தட்டில் கொட்ட வேண்டும்.

* லேசாக ஆறியதும் துண்டுகள் போட வேண்டும்.

Offline kanmani

Re: Mango Recipes
« Reply #2 on: July 20, 2011, 10:21:14 AM »
மாம்பழப் பாயசம்

தேவையான பொருட்கள்:

இனிப்பான மாம்பழங்கள் - 4
சர்க்கரை - 150 கிராம்
பால் - அரை லிட்டர்
உடைத்த முந்திரிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த திராட்சை - அரை டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

செய்முறை:

* மாம்பழங்களைக் கழுவி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

* சூடு ஆறியதும் தோல், கொட்டை இவற்றை நீக்கிவிட்டுச் சாறெடுத்து இரண்டு கப் தண்­ணீர் சேர்த்து அத்துடன் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

* நன்றாகக் கொதித்ததும் இறக்கி வைத்து முந்திரி கிஸ்மிஸ் பழங்களை நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து நன்றாக ஆற வைக்க வேண்டும்.

* பாலில் கொஞ்சம் தண்­ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி வைக்க வேண்டும்.

* மாம்பழச் சாறு ஆறியவுடன் பாலுடன் ஏலக்காய்ப் பொடியைத் தூவி கலக்கிவிட்டு பரிமாறவும்.

Offline kanmani

Re: Mango Recipes
« Reply #3 on: July 20, 2011, 10:27:08 AM »
மாம்பழ ஐஸ்க்ரீம்
தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 4
சர்க்கரை - 300 கிராம்
பால் (காய்ச்சி ஆறியது) - 2 ஸ்பூன்
திராட்சை - 2 ஸ்பூன்

செய்முறை:

நன்கு கனிந்த புளிப்பில்லாத மாம்பழங்களை தோல் சிவி, சதை பாகத்தை துண்டு செய்து சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் மாம்பழம், க்ரீம் போன்று ஆகி விடும். பாலும் தேவைப்பட்டால் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும். இதை குளிர வைத்து கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றி, திராட்சை தூவி ஸ்பூன் போட்டு பறிமாற வேண்டும்.