Author Topic: கேலக்ஸி நோட்-2 மற்றும் கேலக்ஸி எஸ்-3 ஒப்பீடு!  (Read 1995 times)

Offline Anu

புது வரவுவாக நமது நாட்டிற்கு வருகை தந்திருக்கும் கேலக்ஸி நோட்-2 மற்றும் ஏற்கனவே பல சாதனைகள் புரிந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் பற்றிய ஒரு சிறிய ஒப்பீட்டினை பற்றி பார்க்கலாம்.
கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் ஃபேப்லட் வகையை சார்ந்த ஒன்று. இந்த ஸ்மார்ட்போன் 180 கிராம் எடை கொண்டதாக இருக்கும். கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 133 கிராம் எடை கொண்டாதகவும் இருக்கும். கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை விட இந்த கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் கொஞ்சம் கூடுதல் எடை கொண்டதாக இருக்கும்.
நோட்-2 ஸ்மார்ட்போன் 5.5 இஞ்ச் திரை வசதியினையும் அமோலெட் தொடுதிரையினையும் கொண்டாதாக இருக்கும். இதில் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். எஸ்-3 ஸ்மார்ட்போன் 4.8 இஞ்ச் சூப்பர் அமோலெட் தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனிலும் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் திரையில் நிறைய வேறுபாடுகள் இருப்பினும் இதன் திரை துல்லியம் ஒரே அளவாக இருப்பதை காணலாம்.
இந்த 2 ஸ்மார்ட்போன்களில் கொரில்லா கிளாஸ்-2 பாதுகாப்பு கவசம் கொடுக்கப்பட்டிருக்கும். கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரினையும், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரினையும் வழங்கும். ஆனால் இந்த ஸ்மார்ட்போன்களில் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸர் மற்றும் எக்ஸினோஸ் 4412 கூவாடு கோர் சிப்செட் ஆகியவற்றை பெறலாம்.
இந்த ஸ்மார்ட்போன்களின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக முக்கியமான ஒன்று என்று தான் கூற வேண்டும். நோட்-2 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டதாக இருக்கும். கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டின் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியும் அப்கிரேடு செய்யப்படுகிறது. கேல்கஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் எஸ்-வாய்ஸ் வசதி மிக முக்கியதுவம் பெற்ற ஒன்றால், கேல்கஸி நோட்-2 ஸ்மார்ட்போனில் எஸ்-பென் வசதி அனைவரையும் கவர்ந்து ஈர்க்கும் ஒரு விஷயமாக இருக்கும்.
கேமராவினை பொருத்தவரையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒரே மாதிரியான வசதிகளை கொண்டதாக இருக்கும். இதில் 8 மெகா பிக்ஸல் மற்றும் 1.9 மெகா பிக்ஸல் கேமரா ஆகியவற்றை பெற முடியும். இதனால் சிறந்த புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் எளிதாக பெற முடியும்.
கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று மூன்று விதமான மெமரி வெர்ஷன்களை பெறலாம். கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனில் உள்ள மைக்ரோஎஸ்டி கார்டு 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும். கேல்கஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் இருக்கும் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் 64 ஜிபி
வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும். இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.