Author Topic: பிளாக்பெர்ரி மற்றும் சோனி ஸ்மார்ட்போன்கள்:ஓர் சிறிய ஒப்பீடு  (Read 1564 times)

Offline Anu

புதிதாக வெளியிடப்பட்ட இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கே ஓர் சிறிய ஒப்பீட்டை பார்ப்போம். சமீபத்தில் பிளாக்பெர்ரி கர்வ்-9220 மற்றும் சோனி எக்ஸ்பீரியா எஸ் என்ற ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டது.
இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே சிறந்த தொழில் நுட்பங்களை கொண்டது. இதில் கர்வ்-9220 ஸ்மார்ட்போன் கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பை பெற்றுள்ளது. ஆனால் சோனி எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போனில் கியூவர்டி கீப்பேட் வடிவைப்பு இல்லை.
ஆனால் பிளாக்பெர்ரி கர்வ் ஸ்மார்ட்போனில் 2.44 இஞ்ச் திரை வசதியின் மூலம் 320 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம். சோனி எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போனில், பிளாக்பெர்ரி கர்வ்-9220 ஸ்மார்ட்போனையும் விட பெரிய திரை உள்ளது. 4.3 இஞ்ச் அகன்ற திரை வசதியினை சோனி எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போனில் பெற முடியும்.
கர்வ்-9220 ஸ்மார்ட்போன் பிளாக்பெர்ரி-7.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். அதோடு இந்த ஸ்மார்ட்போன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரையும் பெற்றுள்ளது.
எக்பீரியா எஸ் ஸ்மார்ட்போனில் 1.3 முகப்பு கேமராவும், மற்றும் 12 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. ஆனால் பிளாக்பெர்ரி கர்வ்-9220 ஸ்மார்ட்போன், எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போனை விட குறைந்த மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளது.
அதே போல் கர்வ்-9220 ஸ்மார்ட்போனில் 3ஜி நெட்வொர்க் வசதி இல்லை. ஆனால் சோனி எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போன் 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்திற்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும்.
பிளாக்பெர்ரி கர்வ்-9220 ஸ்மார்ட்போனில் 3ஜி வசதி இல்லை என்றாலும் 1450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சமாக 7 மணி நேரம் வரை டாக் டைம் மற்றும் 432 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெற முடியும். சோனி எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள 1,750 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் அதிக பேட்டரி சப்போர்ட்டை பெற முடியும்.
சோனி எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போனில் 2ஜி நெட்வொர்க் வசதிக்கு 7 மணி நேரம் 30 நிமிடம் டாக் டைம் மற்றும் 450 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம். 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்திற்கு 8 மணி நேரம் 30 நிமிடம் டாக் டைம் மற்றும் 420 மணி நேரம் ஸ்டான்-பை டமினையும் கொடுக்கும்.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சிறந்த தொழில் நுட்பத்தினை வழங்கும். பிளாக்பெர்ரி கர்வ்-9220 ஸ்மார்ட்போன் ரூ.11,000 விலையிலும், சோனி எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போன் ரூ.33,000 விலையிலும் கிடைக்கும்.