Author Topic: டிவி, செய்தித்தாளுக்கு டாடா காட்ட வைத்த ஆன்லைன் மீடியா!  (Read 1542 times)

Offline Anu

ஒரு காலத்தில் செய்திகளையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் வாரி வழங்குவதில் ரேடியோவும், செய்தித் தாள்களும் முன்னிலையில் இருந்தன. பின் டிவி வந்தது. மக்கள் டிவியை மிகவும் விரும்பி பார்த்தனர்.
தற்போது கணினி, இணைய தளம் மற்றும் மொபைல் ஆகியவற்றின் படையெடுப்பால் ரேடியோ, செய்தித் தாள்கள் மற்றும் டிவி ஆகியவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வு ஆன்லைன் ஆடியன்ஸ் மற்றும் ஆட் மெசர்மென்ட் ப்ளாட்பார்ம் விசிசென்ஸ் ஆகியவற்றால் நடத்தப்பட்டது. அந்த ஆய்வின்படி இந்தியாவில் மொபைல் இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் 4.8 கோடி பேரில் 2 பேர் அதாவது 50 சதவீதம் பேர் டிவி மற்றும் செய்தித்தாள்களை விட்டுவிட்டு ஆன்லைன் மீடியாவையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.  குறிப்பாக, மொபைல்போன் மூலம் உலக நடப்புகளை அறிந்து கொள்வது அதிகரித்து வருகிறது.
மேலும் மொபைல் இன்டர்நெட்டைப் பயன்படுத்துவோரில் பாதிப்பேர் தினமும் 2 முதல் 3 மணி நேரம் ஆன்லைனில் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஏனெனில் மொபைல் மற்றும் டேப்லெட் ஆகியவை, செய்திகள், விளையாட்டுகள், பொழுதுபோக்குகள் மற்றும் கல்விக்கான அனைத்து அம்சங்களையும் வழங்குகின்றன.
மேலும் மொபைல் இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் 80 சதவீதம் போ் தங்களது யூட்டிலிட்டி பில்கள் கட்டவும் மற்றும் பொருள்கள் வாங்கவும் இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர். அதோடு 28 சதவீத மொபைல் இன்டர்நெட்டைப் பயன்படுத்துவோர் மொபைல் மணியைப் பயன்படுத்துவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் மொபைல் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இன்னும் கணிசமாக அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதனால் நாளடைவில் செய்தித்தாள் மற்றும் டிவியின் பயன்பாடு மிகவும் குறையும் என்று அஞ்சப்படுகிறது.