Author Topic: ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்  (Read 2423 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
2014ஆ‌ம் ஆ‌ண்டு ஜூலை மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் க‌ணி‌த்து‌ள்ளா‌ர்.

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில்பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் விலகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
 
வீடு வாங்குவது, மாறுவது நல்ல விதத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். ஆனால் மனைவிக்கு அலைச்சல், அறுவை சிகிச்சை, இரத்தப் போக்கு, வாகனச் செலவு வந்துச் செல்லும். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து கால் வலி, கழுத்து வலி குறையும். சகோதரர் ஓடி வந்து உதவுவார்.
 
பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். ஆலயங்களை புதுப்பிக்க உதவுவீர்கள். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
 
வியாபாரத்தில் அதிரடி சலுகைகளை அறிவித்து சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை விரிவுப்படுத்திக்கட்ட முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் விடுமுறை காரணங்களால் வேலைபளு கூடும். மேலதிகாரி உங்களின் செயலை உற்றுநோக்குவார். கடின உழைப்பால் இலக்கை எட்டும் மாதமிது.   
 
அதிர்ஷ்ட தேதிகள்: 1, 3, 5, 18, 21
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9
அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், வெளிர்நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள்.
 
பூர்வீக சொத்தை மாற்றி அமைப்பீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். உறவினர்களின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் இந்த மாதம் முழுக்க வேலைச்சுமை, சோர்வு, களைப்பு வந்து நீங்கும். யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து சகோதர சச்சரவு தீரும். இழுபறியாக இருந்த வீட்டு மனை வாங்குவது, வீடு வாங்கும் வேலை முடியும். என்றாலும் வீண் சந்தேகம், விரையம் வரக்கூடும்.
 
சிலர் உதவுவதாகச் சொல்லி உபத்திரவத்தில் மாட்டிவிடுவார்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள்.
 
உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். விடாமுயற்சிகள் தேவைப்படும் மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்: 2, 7, 6, 15, 25
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7
அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ஆலிவ்பச்சை
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 3, 12, 21, 30

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதம் திடீர் யோகம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம், காதுகுத்தி என வீடு களைக்கட்டும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மூத்த சகோதரர் ஒத்தாசையாக இருப்பார்.
 
குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு வாங்குவது கட்டுவது சாதகமாகும். வாகனம் வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை குறையும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். அரசியல்வாதிகளே! மேலிடத்திற்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.
 
வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். வேலையாட்கள், பங்குதாரர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சமயோஜித புத்தியால் சாதிக்கும் மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்: 3, 9, 12, 21, 27
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், சனி


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாததத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். லோன் கிடைக்கும். சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள்.
 
எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். புதன் வலுவாக இருப்பதால் கமிஷன், ஷேர் வகைகளால் லாபமடைவீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதைக் கூடும். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து வீண் செலவு, அலைச்சல், திடீர் பயணங்கள் வந்துப் போகும். ஆனால் உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்தக் கொள்வீர்கள்.
 
அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரகள் உதவுவார்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். மேலதிகாரி ஆதரிப்பார். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள். விட்டதை பிடிக்கும் மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்: 4, 1, 6, 8, 22
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6
அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, மயில்நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 5, 14, 23

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகப் பேசுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். பணவரவு அதிகரிக்கும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும்.
 
நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மாதத்தின் பிற்பகுதியிலிருந்து செலவு, வீண் டென்ஷன் வந்துப் போகும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.
 
 கை, கால் வலி வந்துப் போகும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தில் பாராட்டப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! அமைதியாக இருந்து சாதிப்பீர்கள். வியாபாரத்தில் லாபத்தை பெருக்க புது விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைபார்கள். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விவாதம், போட்டிகளில் வெற்றி பெறும் மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்: 5, 8, 14, 23, 24
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
அதிர்ஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, கிரே
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6, 15, 24

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் தடைப்பட்ட விஷயங்கள் உடனே முடியும். பிரபலங்கள் பாராட்டுவார்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். புது வேலைக் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மகளுக்கு தீவிரமாக வரன் தேடுவீர்கள். மகனுக்கு இருந்த கூடா நட்பு விலகும். சகோதர வகையில் பயனடைவீர்கள். சொத்து பிரச்னை தீரும்.
 
வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மாதத்தின் முற்பகுதியில் வேலைச்சுமை, மனக்குழப்பம், உறவினர்கள், நண்பர்களுடன் வாக்குவாதம் வந்துப் போகும் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மையப்பகுதியிலிருந்து சுபச் செலவுகள் அதிகரிக்கும். திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வீடு மாறுவது, கூடுதல் அறைக் கட்டுவது நல்ல விதத்தில் முடியும். ஆனால் முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை விவாதிக்க வேண்டாம். தூக்கமின்மை வந்து விலகும்.
 
அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். கன்னிப் பெண்களே! காதல் கைகூடும். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கலைத்துறையினர்களே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். அதிரடி செயல்பாடுகளால் முன்னேறும் மாதமிது. 
 
அதிர்ஷ்ட தேதிகள்: 6, 13, 14, 15, 24
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிஸ்தாபச்சை
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் புதிய எண்ணங்கள் உதயமாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பள்ளி, கல்லூரி கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். தடைப்பட்ட கல்யாணம் முடியும். வாகனம் வாங்குவது நல்ல விதத்தில் முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
 
புது வேலைக் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. கௌரவப் பதவிகள், பொறுப்புகள் கூடி வரும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த இழுபறி நிலை மாறும். இரத்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். என்றாலும் ஒருவித படபடப்பு, பேச்சில் தடுமாற்றம், பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை வந்து நீங்கும்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வி. ஐ. பிகளால் பாராட்டப்படும் மாதமிது. 
 
அதிர்ஷ்ட தேதிகள்: 7, 16, 20, 24
அதிர்ஷ்ட எண்கள்: 3, 8
அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, ஆரஞ்சு
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 8, 17, 26

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது, என்பதை புரிந்து செயல்படுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வரும் மோதல்கள் விலகும். வீடு வாங்குவது, விற்பது, மாறுவது நல்ல விதத்தில் முடியும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
 
உறவினர்கள் உங்களைப் பெருமையாகப் பேசுவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தூரத்து சொந்தங்களை சந்திப்பீர்கள். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். நட்பு வட்டம் விரியும். அலைச்சல் குறையும். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். என்றாலும் மனைவியுடன் மோதல்கள், மறைமுக எதிர்ப்புகள் வந்து விலகும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும்.
 
 அரசியல்வாதிகளே! தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். கன்னிப் பெண்களே! புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். எதிர்மறை எண்ணம் விலகும் மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்: 8, 6, 5, 14, 17
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9
அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்நீலம், பழுப்பு
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் புதிய முயற்சிகள் நிறைவேறும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஷேர் மார்க்கெட்டில் இழந்ததை பிடிப்பீர்கள். தேர்வில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. பணவரவு அதிகரிக்கும்.
 
தந்தையின் உடல் நலம் சீராகும். வீடு மாறுவீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சகோதரங்களால் நன்மை உண்டு. வீடு, மனை சேரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். ஆனால் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும், ஏமாற்றங்களும் வந்துப் போகும். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளே! பொது விழாக்களுக்கு தலைமைத் தாங்குவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் விட்டதை பிடிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வரும். கலைத்துறையினர்களே! வதந்திகள் வரக்கூடும். செல்வாக்கு, கௌரவம் ஒருபடி உயரும் மாதமிது. 
 
அதிர்ஷ்ட தேதிகள்: 9, 6, 10, 18, 21
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7
அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், க்ரீம்வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி