Author Topic: தமிழ் அறிவு விளையாட்டு  (Read 17471 times)

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #60 on: June 25, 2020, 08:05:04 AM »
இளங்கோவடிகளுக்கு கண்ணகியின் கதையை கூறியவர் யார்?
 
சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் .

 இளங்கோவடிகள் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். இவர்  அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் .

அடுத்து.
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று கூறியவர் யார் ?
« Last Edit: June 25, 2020, 08:15:20 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #61 on: June 30, 2020, 06:44:17 AM »
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று கூறியவர் யார் ?

விடை: பாரதியார்

விளக்கம்:

ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம். சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம், கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.



இக்காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது. சோழ நாட்டில் பிறந்து, பாண்டிய  நாட்டில் வளர்ந்து சேர நாட்டில் முடியும் சிறந்த காப்பியம் சிலப்பதிகாரம். இந்நூல் இன்பத்தை நுகர்ந்தவர்களில் மகாகவி பாரதி தலை சிறந்தவர். பாட்டுக்கொரு புலவன் பாரதியார்  நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்று சிலப்பதிகாரத்தின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார்.

அடுத்து : தஞ்சைப் பெருவுடையார் கோவில் எப்பொழுது கட்டி முடிக்கப்பட்டது?


Offline CheetaH AdhitYa

  • Jr. Member
  • *
  • Posts: 78
  • Total likes: 80
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ~Kindness makes u good leader~
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #62 on: July 02, 2020, 12:44:21 AM »
தஞ்சைப் பெருவுடையார் கோவில் எப்பொழுது கட்டி முடிக்கப்பட்டது?

தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது
தஞ்சைப் பெரிய கோயில் (பிரகதீஸ்வரர் கோவில்)
 கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.


புதியது-கம்பராமாயணம் எத்தனை காண்டங்களையும், படலங்களையும்,பாடல்களையும் கொண்டவை?
« Last Edit: July 02, 2020, 07:02:01 PM by CheetaH AdhitYa »

Offline Tejasvi

  • Full Member
  • *
  • Posts: 187
  • Total likes: 327
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #63 on: June 29, 2022, 12:15:48 PM »


கம்பராமாயணம் எத்தனை காண்டங்களையும், படலங்களையும்,பாடல்களையும் கொண்டவை?

கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும்,

    பாலகாண்டம்
    அயோத்தியா காண்டம்
    ஆரண்ய காண்டம்
    கிட்கிந்தா காண்டம்
    சுந்தர காண்டம்
    யுத்த காண்டம்

இந்த ஆறு காண்டங்களில் 123 படலங்களும், 10,500 பாடல்களும் உள்ளன.

Next : முடிகெழு வேந்தர் மூவருக்கும் உரியது, நீவிரேப் பாடி யருளுக என்று வேண்டிக் கொண்டவர் யார்?



Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 166
  • Total likes: 434
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #64 on: August 01, 2023, 02:22:42 PM »
Ans - சாத்தனார்

Next Question- கடையெழு வள்ளல்கள் பெயர்கள்?

Offline Vethanisha

  • Full Member
  • *
  • Posts: 111
  • Total likes: 185
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #65 on: March 18, 2024, 12:31:51 PM »
பேகன்,
பாரி,
காரி,
ஓரி,
அதியமான்,
ஆய்,
நல்லி

ஆகியோர் கடையேழு வள்ளல்கள் எனப் போற்றப்படுகின்றனர். இம்மன்னர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதி களை அந்த காலத்தில் ஆண்டவர்கள்

கேள்வி : கடையெழு வள்ளல்கள் பற்றி கூறும் நூல் எது?