1997 ம் ஆண்டு இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் நேருக்கு நேர். இதன் இசையமைப்பாளர் தேவா அவர்கள். இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள். 6 பாடல்களும் சிறப்பானவை என்றாலும் என்னை மிகவும் கவர்ந்த பாடல், கவிஞர் வைரமுத்து எழுதி, பாடகர் ஹரிஹரனும், பாடகி ஆஷா போஸ்லேவும் இணைந்து பாடிய ''எங்கெங்கே எங்கெங்கே " என்ற பாடல் தான்..
இப்பாடலின் இசையும், காட்சி அமைப்பும் மிகவும் இனிமைதருவன.. கல்கத்தா வீதிகளில் சிம்ரனும், சூர்யாவும் ஓடிக்கொண்டே காதல் செய்யும் இப்பாடல் மிகவும் பிடிக்கும்..
நடிகர் சூர்யாவும், நடிகை சிம்ரனும் அறிமுகமான படம் இது.. இருவரும் இப்பாடலில் கொள்ளை அழகுடன் காட்சியளிப்பர்..என் வாழ்வில் மறக்கமுடியாத இப்பாடலை என்னுடைய கடந்த காலத்திற்கு சமர்ப்பிக்கிறேன்....