Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 150  (Read 3171 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 150
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 10:59:35 AM by MysteRy »

Offline VidhYa

                           காதலுக்கு கண்ணில்லை  ஆனால்  உணர்வுகள்   உண்டு



நான் பிறக்கும்  போது
நீ என்னுடன் இல்லை
நான் வளரும் போது
நீ என்னுடன்  இல்லை           
நான் பிறகும்போது
இனி   நீ இல்லாமல்
என் வாழக்கையே இல்லை

காதலன் கணவனாகவும்
மங்கை மனைவியாகவும்
ஆனால்  மட்டும்
காதல் நிறைவடைவதில்லை
உனக்காக நான் 
எனக்காக நீ
நமக்காக நாம் என
வாழ்ந்தபின்னே நிறைவடைகிறது
நீயும் நானும் போகும் போது
உன் ஆடை ஒருமுறை உரசி
சென்றால் போதும் அந்த பாதை
இன்னும் நீள வேண்டுமென
நெஞ்சம் ஏங்குகிறது
 
என் கண்களை உன் துப்பட்டாவில் கட்டி
காதல் சிறையில் இந்த கைதியை
பார்க்க வருவாய் என்று சிறையில்
இரத்தம் தெறிக்க காத்திருக்கிறேன்
என் அன்பான காதலே
     
கண் இமைப்பதை கூட
குறைத்து விட்டேன் நான்
கருவிழிகளில் இருக்கும் நீ
குறைந்து விடுவாய் என்று
அன்பே  எல்லா கோபத்தையும் மறந்துவிடு
மறுபடியும்  முதலிருந்து  காதலிப்போம்
என்ற ஒற்றை வரி  போதும்
உன்னை நான் காதலிக்க மட்டும் அல்ல
உன்னுடன் வாழ்வதற்கும் கூட
அதுவே  ஆணிவேராகும்
       
நீ யாருக்காக வாழ்கிறாயோ
அவர்களுக்கு அனைத்தையும் விட்டுகொடு
உனக்காக யார்  வாழ்கின்றார்களோ
அவர்களை விட்டுகொடுக்காதே
காதலர்கள் எதிர்கொள்கின்ற தடைகளை
காதலின் சக்தி சுக்கு நூறாக உடைத்தெறிகிறது
எப்பொழுது  அந்த காதல் உண்மையாகிறதோ
     
உன் கண்களாய் இருக்க விரும்பவில்லை
உன் கண்கள் பார்க்கும்
இடமாக இருக்க விரும்புகிறேன்
ஆயிரம் மலர்கள் பார்த்தாலும்
என் மனம் சந்தோசம் ஆகவில்லை ஆனால்
உன் முகத்தில் உள்ள மலர்கள் போன்று
இருக்கும் உன் கண்களை
பார்த்ததும்    என்  மனதை
உன்னிடம் பறிகொடுத்து விட்டேன்
என் காதலே.....
                     
                     -   இப்படிக்கு  உங்கள்  காதல் கவிகுட்டி வித்யா

« Last Edit: June 09, 2017, 10:19:39 AM by VidhYa »

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
என் வாழ்க்கை  எனும் மரதனிலே
தடை தாண்டலாய் வந்தவனே
உனைத் தாண்டி போகத்தான்
பார்க்கிறேன் ஆனாலோ
தோற்றுத்தான் போகிறேன்

எந்தன் கனவுகள் யாவுமே
உந்தன் ஓர பார்வையிலே
தலைகீழாய் மாறுவதேனோ
அதனை மாற்றிட முடியா
காரணம் என் மனம்
உன் வசமானதினாலோ

எட்டி பிடித்திடும் தூரத்திலோ
என் இலக்குகள் அதனை
தட்டி தடுமாற வைத்திடும்
இந்த காதலே

விட்டு விலகிடு அவன்
நினைவுகளே என
முட்டி மோதுகிறேன் எந்தன்
மனதுடனே

என் கனவுகள்  மெய்ப்படும்
காலம் வரையிலே நீ
காத்திருப்பாயா என தவிக்கிறேன்
ஒரு கேள்வியுடனே??

காலம் தான் பதில் சொல்லும்
என்ற ஒற்றை வரியிலே
என் இலக்குகளுக்காய்
முன்னேறுகிறேன் தினம்
முயற்சிகளுடனே.....


         **விபு**


(இது அனைத்தும் கற்பனையே :P ;D)

Offline ChuMMa

காதல் விளையாட்டாய் தான்
தொடங்கியது எனக்கு

உன்னுடன் பேச முடியுமோ என
என் நண்பன் கட்டிய பந்தயம் தான்
உன்னுடன் நான் பேச காரணம்

என் மௌனம் களைத்தேன்
உன் ஓர விழி பார்வை என்னை தாக்கியபோது

காரணமின்றி பேசினேன் உன்னுடன்
ஆனால்
உன் கண்கள் சொல்லியது
ஆயிரம் காரணங்கள் நான் தினமும்
உன்னுடன் பேச ...

காதல் எனும் போட்டியில் கலந்துகொண்டேன்
உன் அழகிய நெற்றியில் என் கைகளால் 
வண்ணக்கோலமிட

எனக்கு உன்னுடன்  அப்படி வாழனும்
இப்படி வாழனும்னு ஆசை இல்லை,
அன்பே உன்கூட வாழனும்
உனக்காக வாழனும் அவ்வளவே !

அழகை பார்த்தே முதலில்  காதல் வந்தது
அழகிடம் தோற்றுப்போயே நம் காதல் நிலைத்தது

தடைகள் எது வந்தாலும் தகர்ப்போம்
சுகமாக சுமப்போம் நம் காதலை
வாழும் காலம் முழுவதும்

« Last Edit: June 07, 2017, 12:23:59 PM by ChuMMa »
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
காதல் ...
வாழ்க்கை  ஒரு  மரதன் என்று  சொல்லாமல்  சொல்லுகிறது  இந்த  புகைப்படம் ...

காதலும்  மரதன்  போல  தானே.. விளையாட்டாக  போய்விட்டது  இந்த  சூழ்நிலையீல்..

காதலுக்காக  உயிர்  விட்ட  காலம்  போய் .. காதல்  எனும்  பேர்  சூட்டி  இனொரு  உயிர்  கொடுக்கும் காலம்  வந்து  விட்டது ...

மரத்தானில்  வெற்றி  தோல்வி  இருக்கும் ... காதலிலும்  வெற்றி  தோல்வி  இருக்கும் .. அதை  வெற்றியாக  பெயர்சூட்டுவது நம்  கையீல் தானே உள்ளது ..

மரத்தானில்   வெற்றிக்கு  பின்  மகிழ்ச்சியும்  தோல்விக்கு  பின்  கண்ணீரும்  தான் அக்காலத்தில்  இருந்து  இக்காலம்  வரை  காண்கிறோம் ...

காதலில்  வெற்றிக்கு  பின்  கண்ணீரும் .. தோல்விக்கு  பின்  மகிழ்ச்சியும் .. தானே மிஞ்சுகிறது  இவுலகில்

...காதல்  புனிதமானது ... என்  வாழ்நாள்  முழுவதும்  உன்  கைகளை  கோர்த்து என்  மூச்சி  நிற்கும்  வரை உன்  வாழ்வில்  பயணிக்க  வேண்டும் ...
என்று  முன்னோர்கள்  காதலித்தார்கள் ...

நீ  இல்லை என்றால்  நான்   மரணித்து விடுவேன் என்று சொல்லுவதும்  அவள்  தானே .. அவனை  விட்டு  சென்று  வேறு  ஒருவன்  கையை  பிடிப்பதும்  அவள் தானே ..

எதையும்  எதிர்  பார்க்காமல்  காதலித்த  பாவத்திற்கு பரிசாக  கிடைத்தது  மது  சூது போதை ... இதை  தானே இவுலகில்  காண்கிறோம் ...காதலும்  மரதன் போல தான் ஒவொருவர் வாழ்க்கையிலும் ஓடி கொண்டே  போகிறது தடைகள் இன்றி ..

எதிர்  பாராமல்  காதலிக்கும்   ஒவொருவர் வாழ்க்கையிலும் விளையாடி  தான்  பார்க்கிறது காதல் ...

இந்த  மரதன்  விளையாட்டு  காதல் எப்பொழுது  முடிவுக்கு  வரும் ...  ஆண் மகனின்  வாழ்க்கை  அழிந்த பிறகா?

   *`~•°ஜெஸினா°•~`*
« Last Edit: June 07, 2017, 12:02:53 PM by JeSiNa »

Offline ReeNa

காதல் ஒன்றே தடையா
காலங்களின் புரியாத புதிரா
ஆழம் நீளம் தான் அறிவானோ
அதில் விழுந்தவன் நிலையென்னவோ

நீ இன்றி வாழ்வில்லை என்றவன்
வலி இன்றி தாண்ட முயல்பவன்
வாழ்க்கையில் இடறி விழுகிறான்
வர்ணங்கள் ஆயிரம் என்பதை மறந்து
நம்பிக்கை இழக்கிறான்

இந்த பருவத்தின் சோதனையோ
இடிபோல விழும் காயங்கள் ஆறுமோ
தடைகள் தாண்டி எதிர்கொள்வானோ
தடுமாறாமல் காதல் கிறீடம் சூடப்படுமோ

உண்மை அன்பு தடைகளை வெல்லும்
தடைகளை தகர்க்க முடியாது போனாலும்
நினைவில் அழிவின்றி வாழும் வேதம் காதல்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
வாழ்க்கை ஒரு பந்தையமென
சிந்தனையில் எட்டவில்லை ...
சிந்தித்திருந்தால் எட்டிப்பிடித்திருப்பேனா
என்று தெரியவில்லை ....

காதல் கொண்ட மனம்
அதற்கு எதுவும் புரியவில்லை ...
நினைவில் அவளும்
என்னை நீங்கவில்லை ....

காதல் வந்த கணம் ...
அதை உணர்ந்ததுதான் தாமதம் ...
செய்யவில்லை நானும் தவம் ...
அவளே இறைவன் தந்த வரம் ...

வார்த்தையின்றி பேசிடும்
அவளின் கண்கள் ...
எந்தன் விழிகளிலுள் ஊடுருவிடும்
காவியம்....
பூவியில் பிறந்தாள் அவள்
எந்தன் உயிரோவியம் ...

உதட்டின் ஓரம் புன்னகை
மலர்ந்து அவள் முகம் பார்த்தேன் ...
என்னவள் ஓரக்கண் பார்வையில்
எந்தன் நெஞ்சில் ரோஜாக்கூட்டம்
மலர்ந்ததை அறிந்தேன் ...

விழிகளின் பரிபாஷைகள்
மட்டுமே இருவரிடையில் ...
வார்த்தைகள் இருந்தும்
பேச மறுக்கிறது மனது ...
தவிக்கிறது உதடு ...

மௌனத்தைக் கலைத்திட ...
அவளிடம் காதல் செய்திச் சொல்லிட ...
காதல் வைத்தப் பந்தயத்தை வென்றிட ...
அவளின் கரம் கோர்த்திட...
நெஞ்சமத்தில் அச்சம் கொண்டேன் ...

இருப்பினும் சொல்லிட துணிந்தேன் ...
வார்த்தைகள் வரவில்லை- அவள்
விழியோடு விழி பார்க்கையில் ...
உறைந்தேன் என்னுளே பனிக்கட்டியாய் ...

பெருமூச்சினை விட்டிட ...
அவள் முகமதில் நாண புன்னகை ...
கள்ளி அவள் அறிந்தால் என் மனம் ...
வார்த்தைகள் தேவையின்றி போனது ....

இணைந்தே மலர்ந்தது புன்னகை ...
ஏன் தாமதமென்றாள் ....
உணர்தேன் தாமதமாக என்றேன் ...
காத்திரு என்றால் ...

புரியாமல் விழிக்க ...?!
திருமணத்திற்கு என்றுச் சென்றால் ...

வென்றேனா காதலிடம்
அல்ல தோற்றேனா இவளிடம் ...
இன்னும் தாமத்திருந்தால்
தோற்றேதான் போயிருப்பேனா...??
எந்தன் வாழ்க்கையிடம் ..!!!!

நன்றி !!!
~ !! ரித்திகா !!


« Last Edit: June 05, 2017, 07:09:55 PM by ரித்திகா »


Offline SweeTie


கண்களை மறைத்தாய்
கவிதைகள்   படித்தோம்
இதயத்தில்  இடம்பிடித்தாய்
இன்பத்தில் தள்ளாடினோம்
சொந்தத்தை உருவாக்கினாய்
சொர்க்கத்தில் சிறகடித்தோம் .

தடைகள் வரட்டும்
துடைத்தெறிவோம்  என்றோம் 
தயக்கம் வேண்டாமென 
தியக்கத்தில்  கிறங்கவிட்டாய்
மாலை மையல்கொள்ளும் வேளை
மது உண்ட வண்டுகளானோம் .

காதலின் ரசம் கண்டோம் 
இமை வெட்ட மறுக்கும்  இரவுகள்
வார்த்தைகள் இல்லாத  மௌனம்
வறண்ட தொண்டையில்
சிக்கி தவிக்கும்  உருண்டைகள்
தடைகளைத் தாண்டிய இதயங்கள்
 
இரண்டு சோடிக் கண்களில்
 சொட்டுகளாய்  ஆனந்த  கண்ணீர்
உடல்கள் இரண்டும்  நடுக்கத்தில்
நடுநிசியின்   குளிர்ப் போர்வையில் 
தடைகளை  மீறிய  மூச்சுகளின் சங்கமம்.
 
காலத்தின் கட்டாயம்
தடைகளின் தாண்டவம் 
உச்ச ஸ்தாயியில் 
கர்ச்சிக்கும் சிங்கங்கள்  நடுவே
சிக்கிய  இளம் மான்கள்

திணறடிக்கும் தடைகள் 
திராணியற்றுப்போன   உடல்கள்
சின்னாபின்னமாகிய  இதயங்கள்
வலிகளை மட்டுமே சுமக்கும் 
தடைகளைத் தாண்டிய காதல் ….இன்று
கண்களில் நீர் மல்க வாழ்கிறது
 

Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
மரணம் வரை
மறக்க மாட்டேன்
என் கண்மணி
என சொல்ல மாட்டேன்
ஏனென்றால்
நீ வேண்டும்
ஈரேழு ஜென்மங்கள்

கல்விக்கு ஓடினேன்
கல்வியை வென்றேன்
பணம் தேடி ஓடினேன்
பணமும் வென்றேன்

காதல் உனக்காக
ஓடினேன்
பாசம் வென்றேன்
நேசம் வென்றேன்
நடப்பு வென்றேன்
உன்னை மட்டும்
வெல்ல ஓடுகிறது
இன்னும் என் காதல்

இதிகாசம் சொல்லும்
காதல்கள்
முதலில் வெல்லும்
பின்னர் கொல்லும்
நம் காதல்
முதலில் ஓட்டம்
பின்பு பாட்டம்
என்று எண்ணி
ஓடி தேடி
ஓயாமல்
ஓடுகிறேன்

நெடுந்தூரம் நீயிருந்தால்
துயரில்லை பெண்ணே
கலங்காது ஓடி வருவேன்
துயரம் கொள்ள மாட்டேன்

அலைமோதும்
உன் இதயம்
என்னோடு காலந்துவிட்டால்
அமைதியான
அலை போன்று
ஆர்ப்பரிக்க வருவேன்
என் கண்மணியே

தருவாயா உன்
கண் அசைவை
என் ஓட்டத்தை
நிறுத்த.
« Last Edit: June 06, 2017, 09:00:47 AM by SunRisE »

Offline RubeshV

தடைகள் நிறைந்த வாழ்க்கை ஒட்டத்தினில்
தடைகளை கலைந்திட

அன்பு ஒன்றே தீர்வன்றோ
அனைத்து தடைகளை வென்றெடுக்க ...

அன்பின் பரிமாணங்கள் பலவாகும்...

அன்னையின் விலை மதிப்பில்லாத அன்பினாலும்
தந்தையின் அறிவான பரிவினிலும்
ஆசிரியரின் தன்னலமில்லா அன்பான போதித்தலிலும்
அக்காவின் ஆசையான அரவணைப்பிலும்
அண்ணனின் பற்றான ஆதரவினிலும்
தம்பியின் திகட்டாத பாசத்திலும்
தங்கையின் நேசத்திலும்
நண்பனின் ஆபத்துக்கால ஆதரவிலும்
காதலியின் கனிவான நேசத்திலும்
தடைகள் நிறைந்த வாழ்க்கையினை
தாண்டி செல்வோம்

அன்பு ஆதரவு அரவணைப்பு பற்று பாசம்
பரிவு நேசம் காதல் கனிவு நிறைந்த
உறவுகளால் ....உடைத்தெறிவோம் தடைகளை ....