Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 178  (Read 2962 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 178
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 11:20:08 AM by MysteRy »

Offline JeGaTisH

இரவில் எட்டிப் பார்க்கும் முழு நிலவே
இமைகள் மூடாது உன்னை பார்க்கும்போது
என் இதயத்தில்  துடிக்கும்  பட்டாம்பூச்சிகளை
எண்ண  முடியவில்லை

நிலவே உன் அழகின் ரகசியம் இருளோ
பால்வண்ண  நிறமோ நான் அறியேன்
கவிஞன் என் விழிகளில்  நீ
காவியமா  இல்லை ஓவியமா  நான் அறியேன்

எட்டமுடியாத தூரத்தில்  நீயும்
உன்னை தொடத்  துடிக்கும்  கைகளுடன் 
ஏங்கி தவிக்கும் நானும்
இரவுகளில்  பேசும் மொழி காதல்

கத்தி இல்லாமல் என்னை குத்திக் கொல்லுகிறாய்
உருண்டு உருண்டு படுத்தாலும்  உறக்கமே வருவதில்லை
தினம் ஒரு முறையேனும்  உன்னை பார்க்கையில்   
என் தாகம் தணிகிறது.

நிலா நீயே என் கவிதையின் உயிர்
கவிஞ்ஞர்களின் கற்பனை எல்லையும் நீயே
நீ இல்லையேல் கவிதையும் இல்லை
என்  கற்பனையம்  காணாமல் போயிருக்கும்.

நிலவே நான் உன் காதலனாக
ஓர் வரமாவது கொடுத்துவிடு
தஞ்சமென  உன் காலடியில்
என்றுமே  அடைக்கலம்  ஆயிடுவேன்


           என் நிலாவின் காலடிகளுக்கு சமர்ப்பணம்.
           அன்புடன் ரோஸ்மில்க் காதலன் ஜெகதீஸ்




« Last Edit: March 18, 2018, 10:02:48 PM by JeGaTisH »

Offline RyaN

எங்கும் தொடரும் நிலவின் நிழல்போல்
பின் தொடர்கிறது,  அவள்  நினைவுகள்
எட்டிச்  செல்ல நினைக்கும்போது
விட்டுச் செல்ல  முடியவில்லை

நிலவே விண்ணில் நீ  வரும்  பொழுதுகளை 
கண் மூடாமல்  காத்திருக்கிறேன்  - நீயோ
கண்ணாமூச்சி விளையாடி 
முகில்களால்  மூடிக்கொள்கிறாய் 

எங்கும் என்னைத் தொடரும் நிலவே
அவள் நினைவையும் சேர்த்து சுமக்கிறேன்
உன்னை பார்க்கும் நொடிகள்  எல்லாம்
அவள் விம்பம் காண்கிறேன்  உன்னில்

பசுமை நிறைந்து  பயணித்த சாலைகள்
வெறுமையாய் தெரிகிறது  இன்று
தனிமை போக்க உன்னை நாடுகிறேன்
வருவாய் என் உயித்தோழியாய்.

நிலவே நீ தொலைந்து போகும் நாட்களில்
நானும் முகவரியற்றவனாய் 
கருகிப்போன  காதல் நினைவுகளோடு
சருகாகிப் போகிறேன்

பகலில்  நீ  இருக்கிறாய் ஆனால் இரவில்
மட்டும் தான் பிரகாசிக்கிறாய்
என் நிலையும்  இப்பொது  உன்பொன்றே
கனவுகளுடன் மட்டுமே பயணிக்கிறது.
« Last Edit: March 21, 2018, 04:50:29 AM by RyaN »

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 180
  • Total likes: 547
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
வெளிச்சத்தை உள்வாங்கி.,
எம் மீது உமிழ்ந்திடும்!
திரன் கொண்ட திரவியமே!
தெவிட்டாத காவியமே!!

ஆதிசிவன் கையிலொரு,.
அரிதான ஞான பழம்.,
அதை தானும் கொள்ளத்தான்.,
முருகன் வந்தான் உலகை வலம்!
அவன் செயலை தன்னகத்தே.,
கொண்டதொரு அழகு நிலம்.,
ஆயுள் முழுதும் சுற்றி வர.,
பூமிதானே அதற்கு மூலம்!!

தொலைதூரம் வாழ்ந்திடும்.,
தொலைந்தாலும் தோன்றிடும்!
நில்லாமல் சுற்றிடும்.,
நம் மனதில் நீங்கா இடம் பெற்றிடும்!!

இரு மலைகள் இடைவளியில்..
இடமளிக்கும் மணல் வெளியில்..
நடைபயின்று நமதருகில்..
நடந்து வரும் நிலவொளியால்!
பேசுவதும் எம்மொழியோ..
மயங்கிடுதே நம் விழியோ!!

பிள்ளைக்கு சோறூட்ட.,
பிடித்தவளை பாராட்ட.,
வடை சுட்ட கதை பேசி.,
படுத்தவண்ணம் ரசித்திட.,
படைக்கப் பட்ட நிலவுதான்!!
பார்ப்பவர் மனமோ களவுதான்!!!

நிலவின் காதலன்!!!      பீன்.......
[/font][/color][/size][/size]
« Last Edit: March 21, 2018, 05:18:20 PM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 845
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself

கதிரவன் மறைய
கருமேகங்கள் சூழ
நட்சத்திரங்கள் மினுமினுக்க
தென்றல் காற்று கன்னத்தில் வீச
எந்தவித பதட்டமும்
இல்லாமல் அமைதியாய்
வலம் வரும்
பால் வண்ணம் கொண்ட
வெண்ணிலவே
என் கிறுக்கல்களின்
நாயகியே ....

நிலவே
உன்னை பார்க்கையில்
என்னுள்
இனம் புரியா இன்பம்
வளர்பிறையில்
நீ மலர்ந்திடும்  போது
மகிழ்ந்திடுவேன் 
தேய்பிறையில்
நீ கரைந்திடும் போது
வருந்திடுவேன்


நிலவே
என் நடுஇரவு
கிறுக்கல்களுக்கு துணையாய்
இருந்தவள் நீ
என் துயரங்களை
பகிர்ந்தவள்  நீ
என் நினைவுகளை
சுமந்தவள் நீ
என் தனிமைக்கு
தோழியாய் வந்தவள் நீ
என் குழப்பங்களை
தீர்த்து  வைத்தவள் நீ
என் தூக்கத்துக்கு
தாலாட்டு பாடியவள் நீ

நான்
என்ன செய்ய
என் இதயமும்
எனக்கு  துரோகம்
செய்கிறது உன்னை
கண்டவுடன்
எனக்காக துடிப்பதை
விட்டு உனக்காக
துடிக்க தொடங்கியது
எனவே
நீ இன்றி நான் இல்லை

தினம் தினம்
உன் வரவை எதிர்பார்த்து
காத்திருக்கிறேன்
உன்னை கண்ட கணம்
உன் மீது நேசம் கொள்கிறேன்
உன்னை பார்க்காத
நாட்களில்
இரவுகளை நான் சபிக்கிறேன்
நீ எனக்கு எட்டாதூரத்தில்
இருக்கிறாய் என்று
அறிந்தும்
உனக்காக ஏங்கி தவிக்கிறேன்
என் தவிப்பு
எப்படி புரியும் உனக்கு
நான் உன்னை மட்டுமே
நேசிக்கிறேன் என்பதும்
உனக்கு
தெரிய நியாயமில்லை தான்
என்ன செய்வது என்று
புரியாமல் உன் வருகையை
கண்கொட்டாமல்
பார்க்கிறேன்
என்
நிலவழகி நிலவே
« Last Edit: March 20, 2018, 12:10:56 PM by Socrates »

Offline thamilan

ஆகாய மங்கையே
விதவைக்கோலம் பூண்டது ஏன்
உன் கணவன் கதிரவன்
கடலில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டதாலா
நிலவே நீயும் ஒரு புரட்சி வீரனே
விதவையின் நெற்றியில்
வட்ட பொட்டு வைத்தவன் நீ தானே

ஆயிரம் நட்சத்திர கன்னியர்கள் கண்சிமிட்டி
உன்னை வளைய வளைய வலம் வந்தாலும்
யாருக்கும்  மயங்காதவன் நீ

மாலை வேளையிலே மனதை மயக்கிடும்
மந்திரக்காரன் நீ
கவிஞரின் காதலன் நீ
கற்பனைகளின் களஞ்சியம் நீ

நிலவுக்கு களங்கம் இல்லை என்பர்
என்று மனிதன் காலடி வைத்தானோ
நிலவும் களங்கமானது
ஆறு ஏரி குளங்கள்
எதையும் விட்டுவைக்காத மனிதன்
நிலவையும் விட்டுவைக்கவில்லை

மழலைக்குத் தேவை உணவருந்திட!
மனங்களுக்குத் தேவை வருத்தங்கள் மறந்திட !
கவிஞனுக்குத் தேவை கவிதைகள் வடித்திட
காதலர்க்குத் தேவை எண்ணத்தைத் தூதுவிட !
எனக்கு  நீ தேவை கவிதை வடித்திட !
« Last Edit: March 20, 2018, 11:54:05 AM by thamilan »

Offline யாழிசை

வாடா வட்ட மதியே .. உன்னை வர்ணிக்க போதா மதியே...

தொலை வானில் தொடர்ந்து வரும் தொய்ந்து  போகாத வட்ட மதியே...
தொலை தூர பயணத்திற்குத் துணையாகும் துணையே..

தொலைந்து போகாமல் தூணாய் இருக்கும் மாயம் தான் என்னவோ ....
கல்லும் முள்ளும் குத்தாமல் ... காடும் மேடும் கடந்தாய் நீயே..

கதையும் பாட்டும் இனித்திடவும்
கவிதை இலக்கியத்திலும் இணைந்தாய் நீயே...

உனைக் காட்டி அன்னம் இட்டால்  அன்னை ...
நினை போற்றி  தினம் வளர்த்தாள் என்னை ...

சிவன் சிரசில் ஒய்யாரமாய் நீ சிரிக்க...
சினம் கொண்டோரும் உன்னை கண்டால் மனம் தணிக்க...

அம்புலி என்றே நினை கூப்பிட்டோம்...
அழகு முகத்திற்கு உனை ஒப்பிட்டோம்...

இயற்கையின் எல்லை உச்சியும் நீ...
இவ்வுலகின் இனிமைகளின் சாட்சியும் நீ...

கார் வானில்  கவி பாடி வரும்
கந்தர்வனை போல காட்சி அளிப்பவனே..
வஞ்சி மகள் வழி மேல் விழி வைத்து
காத்திருப்பது தான் அறியாமல் சென்றாயோ...

                                 



« Last Edit: March 21, 2018, 03:12:29 PM by யாழிசை »

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
இருள்வான முகமதிலே
மலைகளின் புருவங்களிடையே
வெண்ணிலவென பெயர் கொண்டு
இயற்கை வைத்த பொட்டு நீ

உன்னை சுற்றி எண்ண முடியா
சின்னஞ்சிறு  நட்சத்திரங்கள்
கண் சிமிட்டி உனை ரசிக்கும்
அழகுதான் என்னவோ

கருமை எனும் திரை நீக்கி
வெண்மை எனும் ஒளிதனையே
உலகிற்கு பரிசளிக்கும்
பூமித்தாய் மகளிவள்- பூக்களுக்கு
பிடித்தமானவள்

காதல் செய்யும் உள்ளங்களும்
உன் காட்சிதனை கண்டு விட்டால்
காதல் செய்ய மறந்திடும்
உன் மாய உலகில் மிதந்திடும்

இரவு எனும் கவிதைக்காய்
அழகு சேர்த்த ஒளி நீ
தேய்ந்து போய் வளர்ந்து வரும்
பிறையின் முழு வடிவம் நீ

மண்ணுலகும் விண்ணுலகும்
என்றும் ஒளிரட்டுமே உன்னால்
காலை மறைந்து போயினும்
மாலை ஒளிர்ந்து நீயும் வர
காத்திருப்போமே உன் பின்னால்..

                             **விபு**

Offline SweeTie

விண்ணை முட்டும் குன்றுகள் நடுவே
கண்ணை  சிமிட்டும்   வெள்ளை நிலா
இருளை விலக்கும்  வண்ண நிலா  அவள்
கருணை கொண்ட  அன்பு நிலா

கவிஞன் கண்ணில் பட்ட நிலா   
கவிதை  எழுத வைத்த நிலா
இனமும் மதமும் அற்ற  நிலா
என்றும் அவள் ஒரு இனிய நிலா

அவள் நெற்றியோ பிறை நிலா
வண்ண முகமோ வட்டநிலா
தேகமோ வதன  நிலா
மொத்தத்தில் அவளோ தங்கநிலா

குழந்தைகள் கொண்டாடும்  பால் நிலா
காதலர் களிப்பெய்தும்   தேன்  நிலா
காவியத்தில்  அவள் ஒரு  கன்னி நிலா
இன்று ஓவியமாய்  இங்கு வந்த  வட்ட நிலா

எட்டாத உயரத்தில்  நிற்கும் நிலா
சுற்றி விண்மீன்கள்  நடுவே ஒளிரும் நிலா
இரவை பகலாக்கும்  வெள்ளி நிலா  அவள்
என்றுமே  எனக்கொரு தோழி நிலா

 
« Last Edit: March 20, 2018, 07:05:59 PM by SweeTie »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........


உயிர் ஊட்ட உதயனையும்
சுவாசிக்க  காற்றையும்
வம்சம் தழைப்பதில் மரங்களையும்
கொடுத்து சிவக்க மழையையைம்
தீமையை அழிக்க அக்கினியையையும்
பல முரண்களை மனிதனுக்கு
எடுத்துரைக்கவோ
இறைவன் படைத்தது ....!

அப்படியினில் வான்மதியை
ஏன்  படைத்தான்  ?
கவிஞனர்களின் கற்பனைக்கா ?
காதலனின் வர்ணனைக்கா ?
தெரியாது முடியாது எனக்கு
கொடுத்து வைக்கலை
இயலாத காரியம்
கையாலாகாதவன்
கண்டு எடுத்த பிதற்றல்
வார்த்தைகளில் வசைபாடி
வானம் பார்த்து கிடைப்பவனுக்கு
இரவியிடம் ஒளி சேமித்து 
இருளில் தேவைக்கு மிளிரும் 
வான்மதியும் ஒரு பாடமே
அறிவாயா மனிதா ...!

இவ்வுலகினில் எல்லா உயிர்களும்
 ஜனிப்பதற்கு  காரணஉண்டெனில்
உன் பிறப்பின் காரணமறிவாய ?
உன் போல் ஒருவன் தான் மதியால்
மதியில் நீர் தேடுகிறான் .
யார் கண்டது
இருபது தலைமுறை கடந்து
பூமி என்றொரு அண்டம் ஒன்று
மனிதனின் பேராசைக்கு
நிர்மூலமானது என்று
உன் தலைமுறை நிலவில்
நின்று பாடம் புகட்டும் ...!

உயர்ந்த லட்சியம் இருப்பின்
வெற்றி நிச்சயம் ...!
« Last Edit: March 21, 2018, 02:27:17 AM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....