Author Topic: "ஆய கலைகள் அறுபத்து நான்கு"  (Read 6972 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அபிநயம்

அபிநயம் என்பது கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும். அபிநயம் இரண்டு வழிகளால் சித்தரிக்கப்படுகிறது. ஒன்று உலக வழக்கு. இது லோக தர்மி எனப்படும். மற்றொன்று நாடகவழக்கு. இது உலக வழக்கிற்கு சற்று அப்பாற்பட்டு கலைவடிவத்திற்கு முதலிடம் அளிக்கும். இது நாடக தர்மி எனப்படும். உலக வழக்கிற்கு எடுத்துக்காட்டு உண்மையான கண்ணீர். கண்ணீர் சிந்துவது போல் நடிப்பது நாடக வழக்காகும். அபிநயத்தில் நடிப்பு, பாவம் பல்வேறு அங்க நிலைகள் போன்றவை ஆடுபவரின் மன எழுச்சிகளை உணர்த்தப் பயன்படுகின்றன.

வகைகள்

பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் அபிநயிக்கப்படுகின்றன. அவையாவன:

    ஆகார்ய அபிநயம்
    வாசிக அபிநயம்
    ஆங்கிக அபிநயம்
    சாத்விக அபிநயம்

ஆகார்ய அபிநயம்

அலங்காரம் மூலம் அபிநயித்தல் ஆகார்ய அபிநயம் எனப்படும். முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்பு முதலியவை பரத நாட்டியத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. சிவனாக ஒருவர் ஆட வேண்டுமென்றால் அவர், சடாமுடி, பிறைச்சந்திரன், பாம்பு, புலித்தோல், நெற்றியில் திருநீறு முதலான ஒப்பனைகளைச் செய்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பனைகள் அவரைச் சிவனாக உணர்த்தும். இவ்வாறு அபிநயம் செய்வது ஆகார்ய அபிநயம் எனப்படும்.
வாசிக அபிநயம்

பாடலுக்கேற்ப அபிநயிப்பது வாசிக அபிநயம் எனப்படும். இந்த அபிநயத்திற்குப் பாடல் முக்கியம். பாடற்பொருள் அபிநயிக்கப்படும். ஆடுபவரே பாடலைப் பாடி அபிநயிப்பார். தற்காலத்தில் வேறொருவர் பக்க இசை பாட ஆடுபவர் அதற்கேற்ப அபிநயம் செய்து ஆடும் பழக்கமும் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆங்கிக அபிநயம்

உடல் உறுப்புகளால் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவது ஆங்கிக அபிநயம் எனப்படும். உடல் உறுப்புகளுக்குத் தனித்தனிச் செய்கைகள் உண்டு. இவற்றில் கைமுத்திரைகள் முதன்மையானவைகளாகவும், சிறப்பானவைகளாகவும் கொள்ளப்படுகின்றன. கைமுத்திரை என்பது விரல்களின் செய்கைகளாகும். பரத நாட்டியத்தில் ஒற்றைக்கை முத்திரைகளும், இரட்டைக்கை முத்திரைகளும் உள்ளன. ஒற்றைக்கை முத்திரை தமிழில் பிண்டி எனவும், சமஸ்கிருதத்தில் அசம்யுதஹஸ்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இரட்டைக்கை முத்திரை தமிழில் பிணையல் எனவும், சமஸ்கிருதத்தில் சம்யுதஹஸ்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டுகின்றன. கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும்.


அபிநயதர்ப்பணம் என்னும் நூலில் நந்திகேஸ்வரர் இந்த அபிநயம் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.

'யதோ ஹஸ்தஸ், ததோத்ருஷ்டி
யதோ த்ருஷ்டிஸ், ததோ மன
யதோ மனஸ், ததோ பாவோ
யதோ பாவ ஸ்ததோ ரஸ

(அபிநயதர்ப்பணம்) கம்பராமாயணத்தில் மிதிலைக் காட்சிப் படலத்தில் கம்பரும் இதையே சொல்கிறார்.

கைவழி நயனஞ் செல்லக்
கண்வழி மனமும் செல்ல
மனம் வழி பாவமும்
பாவ வழி ரசமும் சேர

    (பாடல் எண் : 572)

சாத்விக அபிநயம்


நவரசம் எனப்படும் ஒன்பது சுவைகளாகிய பயம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய உணர்வுகளை கை முத்திரைகள், முக பாவம் போன்ற உடல் மெய்பாடுகளால் அபிநயித்தல் சாத்விக அபிநயம் எனப்படும்.
பாவங்கள்

அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவையாவன:

    ஸ்ருங்காரம் (வெட்கம்)
    வீரம்
    கருணை
    அற்புதம்
    ஹாஸ்யம்(சிரிப்பு)
    பயானகம் (பயம்)
    பீபல்சம் (அருவருப்பு)
    ரெளத்ரம் (கோபம்)
    சாந்தம் (அமைதி)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
தாளம் (இசை)

தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தாளங்கள் ஏழு வகைகளாக உள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும்.

"பாட்டின் கால அளவை சேர்த்து கையினாலாவது, வேறு கருவிகளினாலாவது தட்டுவது தாளமெனப்படும். இத்தாளத்தின் உற்பத்தியானது காலம், செய்கை, அளவு என்ற மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும்போதுதான் தாளத்தின் உற்பத்தி உண்டாகின்றது. காலம் என்பது கணம், இலம் முதலியன. செய்கை என்பது அடிக்கப்படும் இரண்டு பொருள்களின் சேர்க்கை. அளவென்பது செய்கைக்கு நடுவிலிருக்கும் இடைவெளியாகும்

ஏழு தாளங்கள்

    துருவ தாளம்
    மட்டிய தாளம்
    ரூபக தாளம்
    ஜம்பை தாளம்
    திரிபுடை தாளம்
    அட தாளம்
    ஏக தாளம்

நாடிகள்

தாளங்களின் அமைப்பு நாடிகள் அல்லது பிராணன் என்று சொல்லப்படும் 10 கூறுகளினால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த பத்து நாடிகள் பின்வருமாறு:

    காலம்
    மார்க்கம்
    கிரியை
    உறுப்பு
    எடுப்பு
    ஜாதி
    களை
    லயம்
    யதி
    பிரஸ்தாரம்

தாள உறுப்புக்கள்

தாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு. அவையாவன:

    லகு (|)
    அனுதிருதம் (U)
    திருதம் (O)
    குரு (8)
    புளுதம் (1/8)
    காகபாதம் (+)

தாள உறுப்புகளின் விவரங்கள்

லகு என்பது ஒரு தட்டும், அதை தொடர்ந்து வரும் விரல் எண்ணிக்கைகளும் சேர்ந்ததாகும். உள்ளங்கை கீழே பார்த்திருக்க வலது கையால் தொடையில் அல்லது மற்றக் கையில் ஒரு தட்டுத் தட்டி அதே கையின் சுட்டு விரலிலிருந்து தொடங்கி எண்ணப்படும். இந்த எண்ணிக்கை மாறுபடலாம். இங்கே ஒரு தட்டும், ஒவ்வொரு விரலெண்ணிக்கையும் சம கால அளவுகளைக் கொண்டன. இக் கால அளவு ஒரு அட்சரம் எனப்படும். வெவ்வேறான விரலெண்ணிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வகையான "லகு"க்கள் உள்ளன. இவை,

    திச்ர லகு - ஒரு தட்டும், இரண்டு விரலெண்ணிக்கைகளும் - 3 அட்சரங்கள்
    சதுச்ர லகு - ஒரு தட்டும், மூன்று விரலெண்ணிக்கைகளும் - 4 அட்சரங்கள்
    கண்ட லகு - ஒரு தட்டும், நான்கு விரலெண்ணிக்கைகளும் - 5 அட்சரங்கள்
    மிச்ர லகு - ஒரு தட்டும், ஆறு விரலெண்ணிக்கைகளும் - 7 அட்சரங்கள்
    சங்கீர்ண லகு - ஒரு தட்டும், எட்டு விரலெண்ணிக்கைகளும் - 9 அட்சரங்கள்

அனுத்திருதம் ஒரு தட்டை மட்டும் கொண்டது. லகுவில் உள்ள முதல் அட்சரம் இதுவே. எனவே லகுவில் முதல் தட்டைப் போடும் விதமாகவே இதையும் போடவேண்டும்.

திருதம், இரண்டு அட்சர காலம் கொண்ட தாள உறுப்பு. ஒரு தட்டும், ஒரு வீச்சும் கொண்டது. வீச்சு என்பது தட்டிய பின் கையைத் தட்டிய இடத்திலிருந்து தூக்கி உள்ளங்கை மேல் நோக்கும் படி வீசுவதாகும். கையைத் திருப்பிப் புறங்கையால் தொடையில் அல்லது மற்றொருக் கைகையில் தட்டுவதும் உண்டு.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மோகனம்

மோகனம் 28வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும். சுபகரமான இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.


இலக்கணம்
ஆரோகணம்:    ஸ ரி2 க3 ப த2 ஸ்
அவரோகணம்:    ஸ் த2 ப க3 ரி2 ஸ

மோகனம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

சிறப்பு அம்சங்கள்


    மத்திமம், நிஷாதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
    இது உபாங்க இராகம் ஆகும்.
    ரி, க, த என்பன ராகச்சாயா ஸ்வரங்கள். இதில் வரும் ஜண்டை ஸ்வரங்களும், தாடுப் பிரயோகங்களும் ராக ரஞ்சகமானவை.
    இது திரிஸ்தாயி இராகம் ஆகும். மேலும் இரவில் பாட இரு மிக ரஞ்சகமாக இருக்கும்.
    இது ஒரு புராதன இராகம் ஆகும். எல்லா உருப்படி வகைகளையும் இந்த இராகத்தில் காணலாம். சுலோகங்களும், விருத்தங்களும் பாடுவதற்கேற்ற இராகம் ஆகும். இது ஒரு வர்ணனைக்குரிய இராகம் ஆகும். இசை நாடகங்களிலும், நிருத்திய நாடகங்களிலும் காணப்படும் பிரசித்த இராகங்களில் இதுவும் ஒன்றாகும்.

    மனிதவர்க்கத்துக்கு தெரிந்த மிகப் பழைய இராகம் இது ஆகும். இந்த இராகத்தில் வரும் ஸ்வரங்கள் ஸட்ஜ - பஞ்சம முறையில் முதன் முதலில் தோன்றும் ஸ்வரங்களாகும். இந்த விடயத்தை ஆதி காலத்திலேயே எல்லா நாட்டு இசைக் கலைஞர்களாலும் கையாளப்பட்டு வந்தது. ஆதிவாசிகளின் இசையிலும் பாமரமக்கள் இசையிலும் கூட இவ்விராகம் வழக்கத்தில் இருந்து வருகிறது.

    இந்துஸ்தானி இசையில் பூப் என்பது இவ்விராகமே. சர்வ ஸ்வர மூர்ச்சனாகர ஜன்ய இராகம்.

    இவ்விராகத்தின் ரிஷப, காந்தார, பஞ்சம, தைவத, மூர்ச்சனைகளே முறையே மத்தியமாவதி, இந்தோளம், சுத்தசாவேரி, உதயரவிச்சந்திரிக்கா ஆகிய இராகங்களாக ஒலிக்கின்றன. முல்லைப்பண் எனக் குறிக்கப்படுவது மோகன இராகமே ஆகும்.

    " திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" எனச் சிறப்புப் பெற்ற மாணிக்கவாசகரின் திருவாசகங் கூட தொன்று தொட்டு இந்த இராகத்தில் பாடப்பட்டு வருவது இவ்விராகத்தின் சிறப்பை உணர்த்துகின்றது.

உருப்படிகள்


    வர்ணம் : "நின்னுக்கோரி" - ஆதி - பூச்சி ஐயங்கார்.
    கீர்த்தனை : "ஏன் பள்ளி" - ஆதி - அருணாசலக் கவிராயர்.
    கிருதி : "ஸதாபாலய" - ஆதி - ஜி. என். பாலசுப்பிரமணியம்.
    கிருதி ]]: "ராராராஜீவ" - ஆதி - மைசூர் வாசுதேவச்சாரியார்.
    கிருதி : "நன்னுபாலிம்ப" - ஆதி - தியாகராஜர்.

மோகன இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

    நின்னுகோரி வர்ணம் :- அக்னி நட்சத்திரம்
    அண்ணாமலை அண்ணாமலை :- அண்ணாமலை
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கணிதம்


அறிவியல்கள்
இயற்பியல்
உயிரியல்
சமூக விஞ்ஞானம்
பயன்பாட்டு அறிவியல்கள்
பல்துறைமை
தத்துவவியலும் அறிவியலின் வரலாறும்

கணிதம் (Mathematics) என்பது வணிகத்தில், எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு தேவைகளும் பின்வரும் நான்கு பெரிய கணிதப் பிரிவுகளை பிரதிபடுத்துகின்றன:

    அளவு (quantity) - எண்கணிதம்
    அமைப்பு (structure) - இயற்கணிதம்
    வெளி (space) - வடிவவியல்
    மாற்றம் (change) - பகுவியல் (analysis) - நுண்கணிதம்

வரையறை

கணிதம் (Math அல்லது Maths) இலக்கங்களும், அதன் செய்முறைகளும் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல்), அத்துடன் உருவ அமைப்புக்களும் (shapes) மட்டுமல்லாது விஞ்ஞான ஆராய்ச்சிகளுடனும், அதன் பிரயோகங்களுடனும் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் ஒரு அறிவியல் சாதனமாகும். கணிதத்தின் தேவை எமது அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாகும். கலிலியோ "கணிதத்தின் உதவியால் நாம் இவ்வுலகத்தையே அறியலாம்" என்று கூறினார்.

எண்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட கணிப்பியலோ (arithmetic) வடிவங்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட வடிவியலோ இவைதான் கணிதவியல் என்று நினைப்போர் பலர். இன்னும் சிலர் எண்களுக்குப் பதிலாக குறிப்பீடுகளை வழங்கி அவைகளையும் எண்கள்போல் கணிப்புகள் செய்யும் இயற்கணிதம் தான் கணிதத்தின் முக்கிய பாகம் என்பர். மற்றும் சிலர் வடிவங்களை அலசி ஆராயும் வடிவியல் வளர்ச்சி தான் கணிதத்தின் இயல்பு என்று கூறுவர். ஆனால் கணிதம் இதையெல்லாம் தாண்டிய ஒன்று.


தென் அமெரிக்காவில் இருந்த பழம் மாயா மக்களின் எண்முறை

கணிதக்கட்டுரை விமரிசனங்கள்
Add caption here

கணித விமரிசனங்கள் (Mathematical Reviews) என்ற ஒரு பத்திரிகை 1940 இல் ஒரு சில பக்கங்களுடன் தொடங்கி ஒவ்வொருமாதமும் கணிதத்தில் எழுதப்படும் புது ஆய்வுக்கட்டுரைகளை விமரிசிக்கவென்றே ஏற்படுத்தப்பட்டது. அது இன்று மாதத்திற்கு 2000 பக்கங்கள் கொண்டதாக வளர்ந்து, ஆயிரக்கணக்கான ஆய்வுப்பத்திரிகைகளிலிருந்து ஏறக்குறைய இருபது லட்சம் கட்டுரைகளின் விமரிசனத்தை கணிதப் பொக்கிஷமாகக் காத்து வருகிறது.
இந்தியக்கணித வரலாறு

எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் போல என வள்ளுவர் கூறுகிறார். திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, "அறு", "எழு", "எண்", பத்து, "கோடி" ஆகிய எண்கள் அல்லது தொகையீடுகள் அங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் "தொண்டு" அல்லது "தொன்பது" பயன்படுத்தப்படவில்லை


கணிதத்தில் பல்வகை நுட்பம் செறிந்த வடிவங்களைத் துல்லியமாக விளக்கலாம், அலசலாம். இப்படத்தைக் வரைபடமாகத் தரும் சார்பு: cos(y arccos sin|x| + x arcsin cos|y|)
மிழ் எண்ணுருக்கள், தமிழில் பூச்சியத்துக்கு குறியீடு இல்லை

எண்களை எழுதுவதில் இடமதிப்புத் திட்டத்தையும் பூச்சியம் என்ற கருத்தையும் உருவாக்கி வருங்காலக் கணிதக்குறியீட்டுமுறைக்கு அடிகோலிட்டது பழையகால இந்தியா. இதைத்தவிர இந்தியக் கணிதவியலர்கள் (ஆரியபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கராச்சாரியர், இன்னும் பலர்) மேற்கத்தியநாடுகள் மறுமலர்ச்சியடைந்து அறிவியலில் வளர்வதற்கு முன்னமேயே பலதுறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தனர்.

    வேதகாலத்துக்கணிதத்தின் கணிப்பு முறைகள்
    சுல்வசூத்திரங்களின் வடிவியல்
    சூனியமும் இடமதிப்புத் திட்டமும்
    எண்களின் அடிப்படைகளைப்பற்றி ஜைனர்கள்
    பாக்சாலி கையெழுத்துப்பிரதிகளின் சமன்பாடுகள்
    வானவியல்

இவையெல்லாம் இந்தியக்கணிதத்தின் சிறப்புகள்.
தற்காலத்திய கணிதத்தின் வரலாறு

14 வது நூற்றாண்டில் தொடங்கி, சென்ற ஆறு நூற்றாண்டுகளில் கணிதத்தின் வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள கணிதவியலாளர்கள் பலரின் வரலாறுகளே தக்க சான்றுகள். ஃபெர்மா, நியூட்டன், ஆய்லர், காஸ், கால்வா, ரீமான், கோஷி, ஏபல், வியர்ஸ்ட்ராஸ், கெய்லி, கேன்ட்டர், ஹில்பர்ட், இப்படி இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கு கொண்டு உருவாக்கப்பட்ட கணிதம் இன்றைய கணிதம்.

கணிதம் சம்பந்தமான பல்வேறு துணப் பிரிவுகள்

கணிதத்தின் தற்காலப் பிரிவுகளைப் பற்றி பட்டியலிடவேண்டுமானால் அப்பட்டியலில் 100 தாய்ப்பிரிவுகளாவது இருக்கும். இப்பிரிவுகளுக்குள் மிகவும் வியப்பு தரும் உறவுகள் உண்டு. இவைகளிலெல்லாம் கணிதத்திற்கென்றே தனித்துவம் வாய்ந்த மரபும் குறிப்பிடத்தக்கது. இம்மரபுதான் கணிதத்தை மற்ற அறிவியல் துறைகளிலிருந்து பிரித்துக் காட்டுகிறது.இவைதவிர, கணிதத்தின் அடிப்படைகளுக்கும் மற்ற துறைகளுக்குமான தொடர்பை தருக்கவியலும் ஆய்கின்றது. மேலும் புள்ளியியல் போன்ற நேரடியாகப் பயன்படும் கணிதத் துறைகளும் உண்டு.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நாடகம்
நாடகம்
நாடகக் கலைகள்
தமிழர் நாடகக் கலை
ஈழத்தமிழ் நாடகங்கள்
நாடக வகைகள்
நாடகப்படம்
நாடக வரலாறுகள்
தமிழ் நாடக வரலாறு
கிரேக்க நாடக வரலாறு
ரோமானிய நாடக வரலாறு
எகிப்திய நாடக வரலாறு
மராட்டிய நாடக வரலாறு
இங்கிலாந்து நாடக வரலாறு
சோவியத் நாடக வரலாறு
சீன நாடக வரலாறு
அமெரிக்க நாடக வரலாறு
ஜெர்மன் நாடக வரலாறு
பிரெஞ்சு நாடக வரலாறு
சமஸ்கிருத நாடக வரலாறு


நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம். இவற்றை எழுதுபவர்கள் நாடகாசிரியர் என அறியப்படுவார்.

விளக்கமும் செயல்பாடுகளும்

    'இயல்' என்பது சொல் வடிவம்,
    'இசை ' என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம்,
    'நாடகம்' என்பது, 'இயல்', 'இசை' மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவம்.

"உலகமே ஒரு நாடக மேடை" என்றார் ஒரு கிரேக்க அறிஞர். உலகில் நாடகங்கள் பலவகைகளாக நடத்தப்படுகின்றன. தமிழை தமிழகத்தினை பொருத்தமட்டில் நாடகம் என்பது தெருக்கூத்து மற்றும் பாவை நாடகங்களாக நடத்தப்படுகின்றன.

அருஞ்சொற் பொருள்

    கதைக்கோப்பு - Plot
    கதாப் பாத்திரம் - Character
    உரையாடல் - Dialogue
    பின்னணி - Setting
    வாழ்க்கையின் பேருண்மைகள் - Universal truths
    உத்திகள் - Techniques
    மேடையமைப்பு, மேடைநெறியாள்கை - Stage setting
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வீணை

சரசுவதி வீணை

வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.

வரலாறு

பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.

வீணையின் பாகங்கள்


குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.

வீணையின் அமைப்பு

வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.

தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.

யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.

நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களி நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும்.

தஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை' என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும்.

சரசுவீணை
சுருதிகளை மாற்றுபவை


மீட்டும் பகுதி


ஏகண்டம்-வீணைக்குடம்

வாசிப்புத் தந்திகள்

    சாரணி (ச)
    பஞ்சமம் (ப)
    மந்தரம் (ச)
    அநுமந்தரம் (ப)

தாள-சுருதித் தந்திகள்


    பக்கசாரணி (ச)
    பக்கபஞ்சமம் (ப)
    ஹெச்சு சாரணி (ச்)

வாசிக்கும் முறை

வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள-சுருதித் தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல்களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொண்டு மீட்டுவர். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன்னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி, கீழ் தண்டிலுள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார்.

தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையால் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்.

வீணை வகைகள்

    உருத்திரவீணை

    விசித்திர வீணை

    சித்திரவீணை

    நவசித்திரவீணை

    மோகன் வீணை

    சாத்வீக வீணை

    அன்சவீணை


பலவகையான வீணைகள் உள்ளன. அவற்றுட் சில:

    சரசுவதி வீணை
    உருத்திர வீணை
    விசித்திர வீணை
    மகாநாடக வீணை

வீணைக்கு உகந்த பக்கவாத்தியங்கள்

    தம்புரா
    தவில்

புகழ் பெற்ற வீணை இசைக் கலைஞர்கள்


    சிட்டிபாபு
    எஸ். பாலச்சந்தர்
    வீணை தனம்மாள்
    வீணை காயத்ரி
    ஆர். பிச்சுமணி ஐயர்
    ஈமணி சங்கர சாஸ்திரி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வேதம்


வேதங்கள்
வேதாங்கங்கள்
உபநிடதங்கள்
புராணங்கள்
உபபுராணங்கள்
இந்து சோதிடம்
இதிகாசங்கள்
ஏனைய நூல்கள
நூல் பகுப்பு
காலக்கோடு

வேதங்கள் என்பவை பொதுவாக இன்று இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்). சமசுக்கிருத வேதங்கள்:

    ரிக் வேதம்
    யசுர் வேதம்
    சாம வேதம்
    அதர்வண வேதம்

என்பனவாகும்.

இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமசுக்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளன. ஏறத்தாழ கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும்[மேற்கோள் தேவை] எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது. விசயநகர ஆட்சியில் புக்க அரசர் காலத்தில் வாழ்ந்த சாயணாச்சாரியர் (सायण) என்னும் 14 ஆவது நூற்றாண்டு காலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதிய, வேதார்த்த பிரகாசா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும்.

இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்ற வகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றை சில இடங்களில் உரைநடையிலும், மற்ற இடங்களில் ரிக் என்று சொல்லப்படும் வேதகால செய்யுள்நடையிலும் எடுத்துக் கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.

வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை:

    சம்ஹிதை - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
    பிரமாணம் எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
    ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
    உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்.

கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காடுவாழ் முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யசுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சதபத பிராம்மணம் என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சதபத பிராம்மணம் சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.

முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக் குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உணர்வதற்குத் துணையான வேதாந்த பாகங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு. வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். இதனை ஞான காண்டம் என்பர். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.
இவற்றையும் பார்க்கவும்

    ஆகமங்கள்
    உபவேதங்கள்
    உபநிடதங்கள்
    மெய்வழிச்சாலை
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சோதிடம்



மேஷம் • ரிஷபம் • மிதுனம் • கடகம் • சிம்மம் • கன்னி • துலாம்
விருச்சிகம் • தனுசு • மகரம் • கும்பம் • மீனம்
சோதிடம் உள்ளடக்க வகைகள்

[−] சோதிடம்
[×] அஷ்டகவர்கம்
[×] இராசிகள்
[×] இலக்கினங்கள்
[×] குறி கூறுபவர்கள்
[×] சீன சோதிடம்
  • சோதிட நூல்கள்
  • [×] திதிகள்
    [×] சோதிட நட்சத்திரங்கள்
    [×] யோகங்கள்
    விரைவு இணைப்பு: கிளைகள்
    சீன முறை • மருத்துவ சோதிடம் • கிளி சோதிடம் • நிதியியல் சோதிடம் • இடவமைப்பு
    சோதிடம்[/b]

சொல்லிலக்கணம்

சோதிடம் என்ற வார்த்தையான ἀστρολογία என்ற கிரேக்க பெயர்சொல்லிருந்து பிறந்ததாகும். இதற்கு கிரேக்க மொழியில் நட்சத்திரங்களின் கணக்கு என்று பொருளாகும். இச்சொல்லானது நட்சத்திர கணிப்பு என்றாக மாற்றமடைந்தது.

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிடம் தாலமி கோட்பாடுகளின் அடிப்படையிலும், ஹெலினிஸ்டிக் மற்றும் பாபிலோனிய மரபுகளின் அடிப்படையிலும் உருவானவையாகும். இதில் பன்னிரு ராசிகளும், நட்சத்திரங்களும் அடங்கிய ராசிச்சக்கரம் சோதிட கணிப்புமுறைக்கு பயன்படுகிறது.

ஆசிய சோதிடம்


இந்திய சோதிடம்

ஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான jyótis என்பதிலிருந்து பிறந்ததாகும். இந்திய சோதிடம் பொதுவாக இந்து சோதிடம் என்றும், வேத சோதிடம் என்றும் அறியப்பெறுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தினை கொண்டு அந்நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கணமும் குறிக்கப்பெறுகின்றன.

இந்துக் காலக் கணிப்புமுறையால் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவனை கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்பெறுகின்றன. பஞ்சாங்கம் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து உறுப்புகளை கொண்டதாகும்.

இந்து சமயத்தின் இதிகாசமான மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் காலக்கணிப்பு முறையில் சிறந்தவனாக கொண்டாடப்பெறுகிறார். இவர் குறித்து தந்த நாளில் யுத்தத்தினை தொடங்கினால் வெல்ல இயலும் என எதிரான கௌரவர்களே இவரிடம் வந்து நாள்குறித்து சென்றதாக மகாபாரதம் கூறுகிறது.

கிழக்காசிய சோதிடம்


சீன ஜோதிடம் பாரம்பரிய வானியல் மற்றும் நாள்காட்டி அடிப்படையாக கொண்டது. சீன ஜோதிடம் சீன தத்துவத்துடன் (மூன்று நல்லிணக்கம்: சொர்க்கம், பூமி, நீர் கோட்பாடு) நெருக்கமான உறவை கொண்டுள்ளது. சீன சோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவமரமாக உருவகப்படுத்தப்பட்டது. பின்பு இதை கணிப்பதில் இருந்த கடினத் தன்மையை முன்னிட்டு, 12 கிளைகளுக்கு பதில் 12 விலங்குச் சின்னங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யான் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலகங்கள் ஆகும். ஆக மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன சோதிடம் கணிக்கப்படுகிறது.

சோதிடமும் வான்குறியியலும் (astrology)

கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தை காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள் பின்வருமாறு:

    சூரியன் (ஞாயிறு Sun)
    சந்திரன் (திங்கள் Moon)
    செவ்வாய் (Mars)
    புதன் (அறிவன் Mercury)
    குரு (வியாழன் Jupiter)
    சுக்கிரன் (வெள்ளி Venus)
    சனி (காரி Saturn)
    இராகு (நிழற்கோள்)
    கேது (நிழற்கோள்)

கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாறு:

    மேடம் (மேஷம்)
    இடபம் (ரிஷபம்)
    மிதுனம்
    கர்க்கடகம் (கடகம்)
    சிங்கம் (சிம்மம்)
    கன்னி
    துலாம்
    விருச்சிகம்
    தனு (தனுசு)
    மகரம்
    கும்பம்
    மீனம்

சோதிடத்தில் விண்மீன் குழுக்கள்

ஞாயிற்றின் தோற்றுப்பாதை (முழுவதுமாக 360 பாகை) 131⁄3 பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூர் செய்யப்பட்டுள்ளது. 'அசுவினி' ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூராகும், 'ரேவதி' கடைக்கூராகும். இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன்குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 31⁄3 பாகைகள் கொண்ட 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு 'பாதம்' எனப்படும். ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் மீதுள்ள இராசி சக்கரமும் 30 பாகை இடைவெளியில் 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'மேடம்' இராசி சக்கரத்தில் முதற் கூராகும், 'மீனம்' கடைக்கூராகும்.

இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்து பட்டியலிடலாம்:

விண்மீன் குழு    இராசி    பாகை
அசுவினி    மேடம்    13°20'
பரணி    மேடம்    26°40'
கிருத்திகை பாதம் 1    மேடம்    30°
கிருத்திகை பாதம் 2,3,4
ரோகிணி பாதம் 1    இடபம்    43°20'
ரோகிணி பாதம் 2,3,4
மிருகசீரிடம் பாதம் 1    இடபம்    56°40'
மிருகசீரிடம் பாதம் 2    இடபம்    60°
மிருகசீரிடம் பாதம் 3,4
திருவாதிரை பாதம் 1,2    மிதுனம்    73°20'
திருவாதிரை பாதம் 3,4
புனர்பூசம் 1,2    மிதுனம்    86°40'
புனர்பூசம் பாதம் 3    மிதுனம்    90°
புனர்பூசம் பாதம் 4
பூசம் பாதம் 1,2,3    கடகம்    103°20'
பூசம் பாதம் 4
ஆயில்யம் பாதம் 1,2,3    கடகம்    116°40'
ஆயில்யம் பாதம் 4    கடகம்    120°
மகம்    சிங்கம்    133°20'
பூரம்    சிங்கம்    146°40'
உத்திரம் பாதம் 1    சிங்கம்    150°
உத்திரம் பாதம் 2,3,4
அட்டம் பாதம் 1    கன்னி    163°20'
அட்டம் பாதம் 2,3,4
சித்திரை பாதம் 1    கன்னி    176°40'
சித்திரை பாதம் 2    கன்னி    180°
சித்திரை பாதம் 3,4
சுவாதி பாதம் 1,2    துலாம்    193°20'
சுவாதி பாதம் 3,4
விசாகம் பாதம் 1,2    துலாம்    206°40'
விசாகம் பாதம் 3    துலாம்    210°
விசாகம் பாதம் 4
அனுடம் பாதம் 1,2,3    விருச்சிகம்    223°20'
அனுடம் பாதம் 4
கேட்டை பாதம் 1,2,3    விருச்சிகம்    236°40'
கேட்டை பாதம் 4    விருச்சிகம்    240°
மூலம்    தனுசு    253°20'
பூராடம்    தனுசு    266°40'
உத்திராடம் பாதம் 1    தனுசு    270°
உத்திராடம் பாதம் 2,3,4
திருவோணம் பாதம் 1    மகரம்    283°20'
திருவோணம் பாதம் 2,3,4
அவிட்டம் பாதம் 1    மகரம்    296°40'
அவிட்டம் பாதம் 2    மகரம்    300°
அவிட்டம் பாதம் 3,4
சதயம் பாதம் 1,2    கும்பம்    313°20'
சதயம் பாதம் 3,4
பூரட்டாதி பாதம் 1,2    கும்பம்    326°40'
பூரட்டாதி பாதம் 3    கும்பம்    330°
பூரட்டாதி பாதம் 4
உத்திரட்டாதி பாதம் 1,2,3    மீனம்    343°20'
உத்திரட்டாதி பாதம் 4
ரேவதி பாதம் 1,2,3    மீனம்    356°40'
ரேவதி    மீனம்    360°

சோதிட முறைகள்

    குறி கூறுதல்
    எண் சோதிடம்
    பெயர் சோதிடம்
    கிளி ஜோசியம்
    நாடி ஜோசியம்
    கைரேகை ஜோசியம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பரகாயப் பிரவேசம்

பரகாயப் பிரவேசம் என்பது கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பதாகும். ஓர் உயிரற்ற உடலில் எம்முயிரை சென்றடையச் செய்வதும்,அவ்வுயிரற்ற உடலினிற்கு உயிர் பெறச் செய்து நம் உடலினை உயிர் அற்ற நிலையினை ஏற்படுத்துவதற்கும் இக்கலை பயன்படுகின்றது.இக்கலையினை செய்து காட்டியவர்கள் சித்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.உயிர் வேறு,உடல் வேறு என்ற தத்துவத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது இக்கூடு விட்டுக் கூடு பாய்தல் தந்திரக் கலை.மேலும் கூடு விட்டுக் கூடு பாய்தல் கலையினை ஆதிசங்கரர்,அருணகிரியார் போன்றவர்கள் நன்கு அறிந்திருந்தனர். அறுபத்து நான்கு ஆய கலைகளில் ஒன்றாகவும் இக்கலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பாவம் (பரதநாட்டியம்)

பாவம் அல்லது பாவனை என்பது பரத நாட்டியத்தில் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை உடலுறுப்புகளாலும், முகத்தாலும், வாக்கினாலும் வெளிப்படுத்துவதாகும். உடலில் உண்டாகும் எட்டு நிலைகளை பாவம் என்று விவரிக்கின்றார். அவை மெய்சிலிர்த்தல், கண்ணீர் விடுதல், முகத்தின் வண்ணம் மாறுதல், ஸ்தம்பித்தல், வியர்த்தல், நடுங்குதல், குரல் மாறுதல், மயங்கி வீழ்தல் ஆகியவையாகும்.

அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவையாவன:


    ஸ்ருங்காரம் (வெட்கம்)
    வீரம்
    கருணை
    அற்புதம்
    ஹாஸ்யம்(சிரிப்பு)
    பயானகம் (பயம்)
    பீபல்சம் (அருவருப்பு)
    ரெளத்ரம் (கோபம்)
    சாந்தம் (அமைதி)



                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
தண்ணுமை

தண்ணுமை
மிருதங்கம்


வகை

கொட்டு இசைக்கருவி, தோலால் ஆனது.
சுருதி எல்லை
ஒத்த இசைக்கருவி

உறுமி


தண்ணுமை (மிருதங்கம்) தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே 'மிருதங்கம்' என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது.

பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும்.

மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.