Author Topic: மன்மத வருட பொதுப் பலன்கள்!  (Read 3384 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)


க.ப.வித்யாதரன்



ஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான மன்மத வருடம் பிறக்கிறது. 14.04.2015 செவ்வாய் கிழமை மதியம் மணி 1.42க்கு கிருஷ்ண பட்சத்தில் தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதம், மகர ராசி, கடக லக்னம் எட்டாம் பாதத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னம் கன்னி ராசியில், சுபம் நாம யோகம் பத்தரை நாம கரணத்தில், சித்தயோகத்தில், நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் நான்காம் சாமத்தில் மயில் ஊண் கொள்ளும் நேரத்தில் செவ்வாய் மகா தசையில், சனி புக்தியில், சுக்ரன் அந்தரத்தில், அங்காரகன் ஓரையில் மன்மத வருடம் சிறப்பாக பிறக்கிறது.
 
இந்த வருடம் இப்படித்தான்;
 
மன்மத வருடத்தின் பலன் வெண்பா:
   
மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளுநண்ணுமே- மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையில் காற்றுமிகு
கானப்பொருள் குறையுங் காண்.

 
சித்தர் பெருமான் இடைக்காடரின் மேற்கண்ட பாடலின்படி மன்மத ஆண்டில் நன்கு மழை பொழியும். மரம், செடி, கொடி, பறவை மற்றும் விலங்குகள் பெருகும். அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நல்லதெல்லாம் நடக்கும். பலவகை தானியங்களும் நன்கு விளையும். நாடாளுபவர்கள் போர் குணம் கொண்டிருப்பார்கள். உலகின் ஒரு பகுதியில் சண்டை மூளும். தெற்கு திசையிலிருந்து புயல் உருவாகி சூறாவளிக் காற்று வீசும். அரிதான மூலிகைசெடிகள் அழியும்.
 
  இந்த வருடத்தின் ராஜாவாக சனி பகவான் வருவதால் உலகெங்கும் சாதாரணமானவர்கள் சாமானிய பதவியில் அமர்வார்கள். சில இடங்களில் வறட்சியும், சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் அதிகரிக்கும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே மறைமுக பகைமை இருக்கும். இரும்பு, எண்ணெய் வித்துக்களின் விலைகள் குறையும். எலக்ட்ரானிக் சாதனங்களின் அதிக உற்பத்தியால் விலை மலிவாகும். கால்நடைகளை வினோத நோய்கள் தாக்கும். வேலை நிறுத்தங்களும் உண்ணாவிரதங்களும் ஊர்வலங்களும் அதிகரிக்கும். மக்கள் பாபகாரியங்களை துணிந்து செய்வார்கள்.

திருட்டு பயம் அதிகரிக்கும். சிறுபான்மை மக்கள் பலமடைவார்கள். மந்திரியாக செவ்வாய் வருவதால்  வாகனப் பெருக்கத்தால் பூமியில் வெப்பம் அதிகரிக்கும். மின்சார கசிவால் தீ விபத்துகள் அதிகரிக்கும். எரிமலைகள் வெடிக்கும். முதன்மை பதவியில் இருப்பவர்களுக்கும் இரண்டாம் கட்ட பதவியில் இருப்பவர்களுக்கும் இடையே ஈகோ பிரச்னைகள் அதிகரிக்கும். சேனாதிபதியாக சந்திரன் வருவதாலும் அந்த சந்திரனை குரு பார்ப்பதாலும் ராணுவத்தின் வலிமை அதிகரிக்கும். புதிய ஏவுகணைகள் நவீன போர்தளவாடங்கள் ராணுவத்தில் சேர்க்கப்படும். ஜலகிரகம் சந்திரன் சேனாதிபதியாக வருவதால் கப்பற்படை நவீனபடுத்தப்படும். புதிய நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கப்படும்.

எல்லைப்பாதுகாப்பிற்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும். தண்ணீரால் அதிக நோய் பரவும். பூமியில் நீர் மட்டம் குறையும். வடமேற்கு திக்கில் அமைந்துள்ள நாடுகள், மாநிலங்கள் செழிப்படையும். பால் உற்பத்தியை பெருக்க அரசு புது திட்டங்களை அமல்படுத்தும். அர்க்காதிபதியாகவும் சந்திரன் வருவதால் தங்கம், வெள்ளி விலை நிலையற்றதாக இருக்கும். செப்டம்பர் மாதம் முதல் தங்கம், வெள்ளி விலை உயரும். பெட்ரோல், டீசல் விலை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பருவம் மாறி மழை பொழியும். வெள்ளை தானியமான நெல் உற்பத்தி அதிகரிக்கும். அரிசி விலை குறையும்.

மேகாதிபதியாகவும் சந்திரன் வருவதாலும் நவாம்சத்தில் சந்திரனை மழைக்கோள் சுக்கிரன் பார்ப்பதாலும் பருவமழை அதிகரிக்கும். ஆறு, குளங்கள் நிரம்பும். பலவித தானியங்களும் செழிப்படையும். கரும்பு உற்பத்தி அதிகரிக்கும். மாலை நேரத்தில் புயல் சின்னம் உருவாகி, இரவு நேரத்தில் மழை பொழிவு அதிகமாகும். வெள்ளை நிற மேகங்களின் உற்பத்தி அதிகமாகும். நதிகள் பெருக்கெடுத்து ஓடும். நீர்தேக்கங்கள் பாதிப்படையும். ஸஸ்யாதிபதியாக குரு வருவதால் அதிக பால் தரும் கலப்பின மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகும். ஆடு, கோழி உற்பத்தி அதிகமாகும். ஜவுளி உற்பத்தி அதிகமாகும்.

துணிகளின் விலை குறையும். அலுமினியம், பித்தளை பயன்பாடு அதிகரிக்கும். இரசாதிபதியாக சனி வருவதால் மழை பொழிவு சீராக இருக்காது, பாதரசத்தின் விலை உயரும். அமிலங்களின் விலை அதிகரிக்கும். தான்யாதிபதியாக புதன் அமைந்து சூரியன், செவ்வாயுடன் புதன் சம்மந்தப்பட்டிருப்பதால் தரிசுநிலங்கள், சதுப்புநிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிலங்களிலும் பயிர்கள் விளையும். பயிறு வகைளைகள் தழைக்கும். சர்க்கரை, மதுபான வகைகளின் விலை அதிகரிக்கும். மஞ்சல் விலை உயரும். நீரஸாதிபதியாக சுக்ரன் வருவதாலும் சுக்ரன் ஆட்சி பெற்றிருப்பதாலும் மீனவர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். கடலில் மீன் உற்பத்தி அதிகரிக்கும். கடலில் வாழும் அதிசய உயிரினங்கள் கரையேறும். பாக்கு, தேயிலை, காபி கொட்டை உற்பத்தி அதிகரிக்கும். சந்தனம் அதிகம் விளையும்.
 
  இந்த மன்மத வருடம் கடக லக்னத்தில் பிறப்பதால், மக்களிடையே திட்டமிடல் அதிகரிக்கும். ஜனநாயகம் தழைக்கும். சாதி, மத, சமத்துவத்தையும் பாதுகாப்பையும் ஆட்சியாளர்களிடமிருந்து மக்கள் எதிர்ப்பார்ப்பார்கள். குரு உச்சமாக இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், இந்தியாவின் வெளிநாட்டுக்குக் கடன் குறையும். மத்திய அரசு புது சலுகைகளை அறிவிக்கும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறைந்த விலையில் வீடு, கலப்படமற்ற மருந்துகள் தருவதில் ஆளுபவர்கள் அக்கறைக் காட்டுவார்கள். மதுபானம், சிகரெட் ஆகியவற்றின் மீது அரசு புதிய வரிகளை விதிக்கும். லக்னாதிபதி சந்திரனை குரு பார்ப்பதால் இரண்டாம் எண்ணின் ஆதிக்கம் அதிகரிக்கும்.

கள்ளநோட்டை தடுக்க கடுமையான சட்டங்கள் அமலாகும். சந்திரனை சனி பார்ப்பதால் சளி தொந்தரவு, காய்ச்சல், நுரையீரல் தொற்று ஆகியவற்றால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ராகு வலுவாக இருப்பதால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். வருடம் பிறக்கும் போது தனாதிபதி சூரியன், செவ்வாய், புதனுடன் சேர்ந்து நிற்பதால் இந்திய நாட்டின் நிதியிருப்பு அதிகரிக்கும்.

பங்குச்சந்தை சீராக இருக்கும். கருப்புப்பணம் பறிமுதல் செய்யப்படும். தீ விபத்துகள் அதிகமாகும். நாட்டின் மின் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் மானியத்தொகை வழங்கும். ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடும். திருதிய-விரையாதிபதியாக புதன் வருவதால் விளையாட்டுத் துறையில் இந்தியா பின் தங்கும். தோட்டப் பயிர்கள் நன்கு விளையும். கரும்புக்கு அரசு அதிக விலை அறிவிக்கும்.

விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள். அயல்நாட்டில் சென்று கல்வி கற்போரின் எண்ணிக்கை உயரும். சுக-லாபாதிபதியான சுக்ரனை சனி பார்வையிடுவதால் சிமெண்ட், மணல் இல்லாத நவீன கட்டுமான முறை கட்டிடங்கள் பிரபலமாகும். வரதட்சணைக் கொடுமை குறையும். பாலியல் பலாத்காரத்தை தடுப்பதற்கு மேலும் கடுமையான சட்டம் நடைமுறைக்கு வரும். இந்திய மாணவர்கள் உலகளவில் புகழடைவார்கள். பஞ்சம-தசமாதிபதியாக செவ்வாய் வருவதாலும் செவ்வாய் சுக்ரனின் சாரம் பெற்றிருப்பதாலும் பூமியின் விலை உயரும்.

அடுக்குமாடி கட்டிடங்களின் விலையும் உயரும். பத்திரபதிவுத் துறை நவீனமாகும். மலைப் பிரதேசங்களில் நிலச்சரிவு அதிகரிக்கும். குடும்பத் தொழில், பாரம்பரிய தொழிலுக்கு மரியாதை கூடும். பாக்யாதிபதியாகவும், சஷ்டமாதிபதியாகவும் குரு வருவதால் ஆன்மீகத்துறை அதிக வளர்ச்சி அடையும். வேதங்கள் பிரபலமடையும். புதைந்திருக்கும் புதிய சிலைகள் கண்டறியப்படும். கோவில் அர்ச்சகர்களின் சம்பளம் உயரும். சினிமாத்துறை நலிவடையும். புது முகங்கள் வெற்றி பெறுவார்கள். சப்தம-அஷ்டமாதிபதியாக சனி வருவதால் நீதிபதிகள் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆணைப் பிறப்பிப்பார்கள்.

காடு, வனவிலங்குகளை காப்பாற்ற புதிய சட்டங்கள் வரும். சுற்றுலாத் துறை வளர்ச்சியடையும். அரிதான பறவைகள், விலங்குகள் அழியும். வைகாசி, கார்த்திகை, மார்கழி, மாசி, பங்குனி மாதங்களில் சாலை விபத்துகள், ஆட்சி மாற்றங்கள், வெள்ளப் பெருக்கு, அதிக உயிரிழப்புகள், கலவரங்கள், இன மோதல்கள் ஆகியன அதிகரிக்கும்.

மந்தா என்ற பெயருடன் மகர சங்கராந்தி தேவதை பெண், ஆண் ரூபம் கலந்து பன்றி வாகனத்தில் வடக்கு திசை நோக்கி வருவதால் மழை அதிகரிக்கும். சன்னியாசிகள், நாட்டை ஆளுபவர்களின் உடல் நலம் பாதிக்கும். பரம்பரைபணக்காரர்களின் அந்தரங்கங்கள் வெளியாகும்.
 
  இந்த மன்மத வருடத்தில் விலை வாசிகள் குறைவதுடன் ஏழை, எளிய நடுத்தர மக்களும் மேல்தட்டு மக்களுக்கு ஈடு இணையாக சுக போகங்களை அனுபவிக்க வைப்பதாகவும் அமையும்.