Author Topic: சித்ரா ஹிட்ஸ்  (Read 20731 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #105 on: January 21, 2012, 04:05:36 PM »
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: சித்ரா
பாடல்: வைரமுத்து



பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

( எங்கே எனது கவிதை )

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் (2)


( எங்கே எனது கவிதை)


ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று கேட்குதே
வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே

பாறையில் செய்தது் என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

( எங்கே எனது கவிதை )



                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #106 on: January 21, 2012, 04:07:22 PM »
படம்: சொல்லாமலே
இசை: போபி
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா
வரிகள்: அறிவுமதி


சொல்லாதே சொல்லச் சொல்லாதே
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது
உயிர் பேசாதே பேசாதே..
(சொல்லாதே..)

மௌனம் கொண்டு ஓடி வந்தேன்
வார்த்தை வரம் கேட்டாய்
காதல் மொழி வாங்கி வைத்தால்
நீயும் சொல்ல மாட்டாய்
நிலவை வரைந்தேன் தெரிந்தாய் நீயே
மனதை தொலைத்தேன் எடுத்தாய் நீயே
உன் பேரை நெஞ்சுக்குள் வாசித்தேன் ஸ்வாசித்தேன்
காற்றுக்கும் எந்தன் மூச்சுக்கும்
இங்கு ஏதோ ஏதோ ஊடல்
(சொல்லாதே..)

காத்திருக்கும் வேளையெல்லாம் கண் இமையும் பாரம்
காதல் வந்து சேர்ந்துவிட்டால் பூமி வெகு தூரம்
நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள் நூறு
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பாலங்கள் போடு
சொல்லாத சொல்லெல்லாம் அர்த்தங்கள் சொல்லுமே
என்னவோ இது என்னவோ இந்த காதல் ஈரத் தீயோ..
(சொல்லாதே..)



 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #107 on: January 21, 2012, 04:08:14 PM »
படம்: சிறைச்சாலை
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: அறிவுமதி (இவரது முதல் பாடல்)
இசை: இளையராஜா



ஆண்: செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெண்: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
ஆண்: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
பெண்: மன்னவன் விரலகள் பல்லவன் உளியோ
ஆண்: இமைகளும் உதடுகள் ஆகுமோ
பெண்: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

(செம்பூவே பூவே)

ஆண்: அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சையாக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
பெண்: தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில் காதல் குற்றாலம்
ஆண்: தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா
பெண்: நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
ஆண்: ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பெண்: கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ

(செம்பூவே பூவே)

பெண்: இந்த தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ
ஆண்: அந்த காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சின் நாணம் சுட்டு மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே
பெண்: விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ
ஆண்: முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
பெண்: நாணத்தாலோர் ஆடை சூடிக் கொள்வேன் நானே
ஆண்: பாயாகும் வழி சொல்லாதே பஞ்சணை புதையல் ரகசியமே

(செம்பூவே பூவே)


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #108 on: January 21, 2012, 04:08:59 PM »

படம்: பாசப் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ், சித்ரா

ஆண்: தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

பெண்: வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே
ஆண்: பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே
பெண்: அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே
ஆண்: தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
பெண்: தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே
ஆண்: மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே நீ என்றும் வாழ வேண்டுமே

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

ஆண்: தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா
பெண் : கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தெய்வமே

ஆண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
பெண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
ஆண்: வாழ்த்துவேன் உனை போற்றுவேன் வாழ்வெல்லாம் உனை ஏற்றுவேன்
பெண்: காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே நாம் சேர்ந்து வாழ வேண்டுமே

(தென்பாண்டி)
(தென்பாண்டி)


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #109 on: January 21, 2012, 04:09:45 PM »
படம்: ஆட்டோகிராஃப்
பாடியவர்: சித்ரா
இசை: பரத்வாஜ்
பாடலாசிரியர்: பா. விஜய்



ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..
(ஒவ்வொரு..)

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே..
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்..
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்..

மனமே ஓ மனமே நீ மாறிவிடு..
மலையோ.. அது பனியோ..
நீ மோதிவிடு..

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்..

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லைப் போராட்டம்?
கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

(மனமே..)
(ஒவ்வொரு..)

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்..
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு..

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்..

(மனமே..)
(ஒவ்வொரு..)
(மனமே..)



 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #110 on: January 21, 2012, 04:10:29 PM »
பாடல்: உடையாத வெண்ணிலா
பாடகர்கள்: ஹரிஹரன், சித்ரா
இசை: வித்யாசாகர்
படம்: ப்ரியம்


ஆ: உடையாத வெண்ணிலா
பெ: உறங்காத பூங்குயில்
ஆ: நனைகின்ற புல்வெலி
பெ: நனையாத பூவனம்
ஆ: உதிர்கின்ற பொன்முடி
பெ: கலைகின்ற சிறு நகம்
ஆ: சிங்கார சீண்டல்கள்
பெ: சில்லென்ற ஊடகம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்..
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்..
ஆ&பெ: (உடையாத..)

ஆ: அந்தி மஞ்சள் மாலை
ஆளில்லாத சாலை
பெ:தலைக்கு மேலே பூக்கும்
சாயங்கால மேகம்
ஆ: முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
பெ: எச்சி வைத்த பின்னும்
மிச்சமுள்ள பாலும்
ஆ: கன்னம் என்னும் பூவில்
காய்கள் செய்த காயம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
ஆ&பெ: (உடையாத...)

பெ: கண்கள் சொல்லும் ஜாடை
கழுத்தில் கோர்த்த வேர்வை
ஆ: அள்ளிச்செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று
பெ: மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த சேலை
ஆ: முகத்தின் மீது ஆடை
மோதிச்சென்ற மோகம்
பெ: இரண்டு பேரை ஒன்றாய்
எழுதிப்பார்க்கும் இன்பம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ&பெ: (உடையாத..)