Author Topic: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~  (Read 3166 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
காத்திருப்பேன் மீண்டும் வா !!!

நீ கொடுத்த மேகத்தால்
மழைத்துளியானவள் நான் ...

மண்ணை வந்து சேருமுன்னே 
நான் மரித்துப் போன
தடம் தெரியவில்லை ...

ஒரு நாள் ஒரு பொழுது
உன்னுடன் வாழ்ந்ததில்லை
ஆனால்
ஓராயிரம் ஆண்டுகள் உன்னுள் வாழ்ந்த
நிறைவைத் தருகிறது ...
எனக்காய் நீ சிந்திய ஒரு துளிக் கண்ணீர் ...

இந்த முறை மட்டுமல்ல
நான் ஜனிக்கும் ஒவ்வொரு முறையும்
உனக்காய் காத்திருப்பேன் ...
நீ எனக்காய் ...
மீண்டும் வா ....
மீண்டும் வா !!!!
« Last Edit: April 29, 2017, 08:55:19 AM by ரித்திகா »


Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #1 on: April 28, 2017, 03:38:16 PM »
Hi rithi ma ;D un intro padikum pothu therinjikiten nee mazhai oda rasigainu ;D supera eluthiruka unna oru mazhai thuliya uruvagichu  :-* mazhai matum illa nanum kathirupen unoda kavithaigalukaga :) keep writting rithi chllm ;) and always keep smiling ma ;D

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #2 on: April 29, 2017, 09:01:07 AM »


வணக்கம் பூர்த்தி மா ...!!!!

  ஹாஹாஹா ...நன்றி மா ....
  ஆனால் இது நான் எழுதிய கவிதை இல்லை பூர்த்தி ...
  ஒரு கதைப் படித்தேன் ...அக்கதையில் வரும்
  கவிதை இது ....பார்த்தேன்  படித்தேன் ...
  ரசித்தேன் ...பகிர்ந்தேன் ....
  வசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி பூர்த்தி ...!!!

« Last Edit: April 29, 2017, 02:53:18 PM by MysteRy »


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #3 on: April 29, 2017, 03:18:33 PM »
~ !! தருகிறேன் எந்தன் காதலை !! ~


எனக்குத் தாயுமானவன் நீ..
என் தந்தை நீ ...
என் நண்பன் நீ ...

என் மூச்சு நீ ...
என் பேச்சு நீ ...
என் உணர்வு நீ ...

எனக்கு எல்லாமும் நீ ...
எனக்குள் எல்லாமும் நீ ...

இப்படிக்கு எனக்கு சகலமுமாய்
இருக்கும் உனக்கு
வேறென்னத் தருவேன்
என் காதலைத் தவிர ...!!!

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #4 on: April 29, 2017, 04:10:54 PM »
Hi rithi :D nan மனதை வருடிய கவிதைகள் intha heading vachu guess panirukanum ithu padithathil pidithathu nu :) en brain loose agiduchu he he he ;D
Kavithai rmba azhaga iruku kadhal kavithai nale athu oru thani feel la :) super chllm ;)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #5 on: April 29, 2017, 05:07:19 PM »
 ;D  Ya ya da purthi  ....kaadhal naale athu
oru thani feel thaan ...
enaku piditha kavithai unakum pidithathil ...
manam magizhnthen...thanks da... ;)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
    மரணம்


அது இல்லாது போனால்
என்னவாகும் உலகம்
ஜனனமே தொடர்ந்தால்
பூமியே மூச்சிமுட்டிப்போகும்

மரணம்
பிறப்பிற்கான சான்றிதழ்
பாவபாதையின் தடைக்கல்

மரணம்
இவ்வுலக வாழ்வின் சம்பளம்
மறுவுலக வாழ்வின் முன்பணம்

மரணம்
விதவையின் விரோதி
வெள்ளைச்சேலையின் நண்பன்

மரணம்
நல்லவைகளால் மணம் கமழும்
தீயவைகளால் மனம் உருகும்

 மரணம்
தேடிப்போவது “ரணம்”
தேடிவருவது சுகம்

மரணம்
அடைந்தபோது உடலாகும் “மரம்”
அதை காணும்போது
அச்சத்தால் உள்ளம் அஞ்சிநடுங்கும்

மரணம்
அடைந்தவருக்கு கிடைத்திடும்
சாந்தி
வாரிகொடுத்தவருக்கு தொலையும்
மனநிம்மதி

மரணம்
நான்குவகை பரிமாணம்
[ஜனனம் இன்பம் துன்பம் மரணம்]
நான்கு தோள்களின் பயணம்
[இறுதி ஊர்வலம்]

மரணம்
உலகுக்கு திரும்பமுடியாத
ஒற்றையடிபாதை
இதை உணர்ந்தால் தெளிந்திடும்
உலகபோதை

மரணம்
நான்கெழுத்தின் கவிதை
விவரிக்கமுடியாத சரிதை
மனம் கசிந்துருகும் அழுகை

மரணம்
வருமுன் காப்போம் மனதை
தவிர்த்துக்கொள்வோம் தீயதை
தொடர்ந்து செய்வோம் நல்லதை……..

மணம், ரணம், மரம், மரணம்!!

~ !! Yousuf !! ~
« Last Edit: May 08, 2017, 11:14:45 AM by ரித்திகா »


Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Hi Rithi ma :D

மரணம்
அடைந்தவருக்கு கிடைத்திடும்
சாந்தி
வாரிகொடுத்தவருக்கு தொலையும்
மனநிம்மதி

Intha line rmba unmaiyana oru vishayam la :( maranatha vella yaralum mudiyathu :) enaku itha padichathum harry potter and the deathly hallows la maranam and 3 sagotharargal nu oru storya sollrathu than click aachu :) life la nama unaravendiya oru kavithai :) thanks for posting here Rithi ma :D

Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
மழை எல்லோருக்கும் பிடித்த ஒன்று
நீங்கள் ரசிக்கும் விதம் அருமை
உங்கள் மரண கவிதை
உண்மையின் வெளிப்பாடு யதார்த்தம்

Offline ChuMMa

யாரங்கே?
வாருங்கள்...

விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்

திரவ முத்துக்கள்
தெறிப்பது பாருங்கள்

யாசித்த பூமிக்கு
அந்த வானம்
வைரக் காசுகள்
வீசுவது பாருங்கள்

மழை மழை மழை
மழை மழை மழை

மண்ணின் அதிசயம் மழை

பூமியை வானம்
புணரும் கலை மழை

சமுத்திரம் எழுதும்
சமத்துவம் மழை

மழைபாடும்
பள்ளியெழுச்சியில்
ஒவ்வொர் இலையிலும்
உயிர் சோம்பல்முறிக்கிறது

இது என்ன...?

மழையை இந்த மண்
வாசனையை அனுப்பி
வரவேற்கிறதா?

என்ன...?
என்ன சத்தம்...?
சாத்தாதீர் ஜன்னல்களை
அது மழைக்கெதிரான
கதவடைப்பு

குடையா?
குடை எதற்கு?
அது
மழைக்கெதிராய்
மனிதன் பிடிக்கும்
கறுப்புக் கொடி

ஏன்...?
ஏனந்த ஓட்டம்?
வரம் வரும் நேரம்
தபசி ஓடுவதா?

இதுவரை நீங்கள்
மழையைப் பார்த்தது
பாதிக் கண்ணால்

ஒலி கேட்டது
ஒரு காதால்

போதும் மனிதர்களே

பூட்டுப் போட்டுப்
பூட்டுப்போட்டுப்
புலன்களே பூட்டாயின

திறந்து விடுங்கள்

வாழப்படாத வாழ்க்கை
பாக்கி உள்ளது

உங்கள் வீட்டுக்கு
விண்ணிலிருந்து வரும்
விருந்தாளியல்லவா மழை

வாருங்கள்

மழையை
நம் வீட்டுத்
தேநீருக்கழைப்போம்

----வைரமுத்து ----
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #10 on: May 31, 2017, 12:59:34 PM »
« Last Edit: May 31, 2017, 01:54:29 PM by ரித்திகா »


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #11 on: May 31, 2017, 12:59:55 PM »
« Last Edit: May 31, 2017, 02:05:25 PM by ரித்திகா »


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #12 on: May 31, 2017, 01:02:16 PM »
~ !! அவன் !! ~

முதலிரவு முடிந்ததுமே
முகமெல்லாம் மலர்ந்தவனாய்
'அப்பா' ஆகிவிட
ஆவலுடன் காத்திருப்பான்.
அவளுடைய அடிவயிற்றை
நாள்தோறும் வருடிவிட்டு,
எப்போது என்குழந்தை
இவ்வுலகு வருமென்பான்?
உண்மையில் அவன் ஆசை
அவளைவிட பேராசை.
அவள் ஆசைப்படுவதெல்லாம்
அழகாய் கொடுத்திடுவான்.
தாயாகிப் படுகின்ற
அவள்அவஸ்தை பார்ப்பதனால்
தன்னெஞ்சே வெடிப்பதுபோல்
தனிமையிலே அழுதிடுவான்.
சுகமாகப் பிரசவித்தால்
கொஞ்சமாக அழுதிடுவான்.
சீசரில் பிரசவித்தால் - அவள்
வலி தீர அழுதிடுவான்.
பெண்களுக்கு கண் குளத்தில்
வழியவழிய நீரிருக்கும்.
ஆண்களுக்கு அதுகொஞ்சம்
ஆழமாகப் போயிருக்கும்.
ஆணழுதால் மீன்போல
யாருக்கும் தெரிவதில்லை.
பெண்ணழுதால் பிடித்துவைக்கப்
பாத்திரங்கள் போதவில்லை.
அவள் முகத்தை தன்மார்பில்
தான் அணைத்துத் தாயாவான்.
அவள் வலியைத் தான் கொஞ்சம்
கடன் வாங்கி வைத்திருப்பான்.
குழந்தையைத் தோள்மீதும்
மனைவியைத் தன்மீதும்
சுமக்கின்ற சுமைதாங்கி
'அவன்' என்றால் அது மிகையல்ல !!

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #13 on: May 31, 2017, 11:04:15 PM »
வணக்கம் தங்கச்சி

கவிதை அழகா இருக்கு
ஆழமான அன்போடு இருக்கு
ஆண்களையும் பேற்றி இருக்கு
படிக்கையில் மகிழ்ச்சியா இருக்கு


இதுக்கு மேல தங்கையின் கவிக்கு
வேறு எதுவும் சொல்லவும் முடியாது


மிக மிக சிறப்பான
உண்மையான வாழ்க்கையை
தாங்கி பிறந்து தவழ்கிறது கவிதை


வாழ்த்துக்கள்
நன்றிமா
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #14 on: June 01, 2017, 07:10:39 AM »
nice rithika. varum varum meendum wait pannunga hehe