Author Topic: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~  (Read 3168 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #15 on: June 02, 2017, 01:50:47 PM »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #16 on: July 24, 2017, 11:33:08 AM »
~ !! என்னைத் தோடு !! ~

என்னைத் தோடு என் இதயத் தேவதையே ..
ஏங்கும் என் இதயம் நிறைந்திட
உன் அன்பெனும் தேனைப்  பாய்ச்சு
உன் அன்பினால் என்னைக் கவர்ந்தாயே ...

என்னைத் தோடு என் அன்பே ,
என் இதயத்தைத் தோடு ..
கலைந்த என் கனவுகள் தான் எத்தனை
 உன் நினைவுகள் என் கனவாகட்டுமே ...

என்னைத்  தோடு என்  இதய இளவரசியே..
உன் கனவுகள் என் கனவுகள்  ஆக ..
என் கனவுகள் உன்  கனவுகள்  ஆக ...
ஒன்றாய் நாம் இணைந்திடுவோமே ..

என்னைத் தோடு என் இனிய கனவே ..
உன் நினைவுகள் தான் எத்தனை இனிமை ..
என் இதயத்தில் நீ  நிறைந்தாய் ...
உன் இதயத்தில் நான் ......

- This Poem Loshi Baby sutting From someone...
N now im sutting from loshi baby..
epdi paathalum inga intha kavithai
motha post pannathu Loshi baby...So its Belongs to Her...!!! :-*
« Last Edit: July 31, 2017, 09:20:54 AM by ரித்திகா »


Offline LoShiNi

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 8707
  • Total likes: 6529
  • Karma: +0/-0
  • Gender: Female
  • "Behind every successful woman is Herself " :)
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #17 on: July 24, 2017, 11:58:27 AM »

Offline LoLiTa

  • Hero Member
  • *
  • Posts: 580
  • Total likes: 1131
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Life is Beautiful!♡
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #18 on: July 24, 2017, 03:25:01 PM »
Hi ritu bby! 'KADHALAI TARUGIREN' kavidhai arumai. Oru alagana kadhal padal keta mathriye irku!!!♡

Offline LoLiTa

  • Hero Member
  • *
  • Posts: 580
  • Total likes: 1131
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Life is Beautiful!♡
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #19 on: July 24, 2017, 03:29:16 PM »
Ritu bby 'AVAN' kavidhai angalai patri , pirasavam epodhum angalai patri pesepaduvadhilai.. Enakum rombave pudice kavidhai odhu!!

Offline DeepaLi

Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #20 on: July 30, 2017, 11:29:58 AM »
                                                                                                                                        Hi Rithika sis... Unga kavidhai ellamey romba feelings ah iruku.. padikum bodhey sila ninaivugal elam munnadi varuuthu.. Thanks keep it up sis...
                                                                                                                                       

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #22 on: July 31, 2017, 09:29:21 AM »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #23 on: July 31, 2017, 09:34:56 AM »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
ராசைய்யா நெனவிருக்கா!

சேவல் கூவியதும்
வயக்காட்டில் கண்முழிச்சி
கம்மாக் கரையோரோ
கைக் கால் முகங் கழுவி..

கோமனத் துணியோட
மண்வெட்டிக் கை புடிச்சி
சேத்துக் குழிகுள்ள சோத்துக்கு
கால வச்சோம்.
ராசைய்யா நெனவிருக்கா!

கொம்புக்கு கலர் தீட்டி
திமிளுக்கு மண்பூசி
கருப்பன ஏர்பூட்டி
வயலுழுதோம் நெனவிருக்கா!

அர அடி நெலத்துக்கு
ஜென்மத்து பகை போல
அறியாமல் நான் போட்ட
வாய்க்கால் சண்ட நெனவிருக்கா!

பெத்தது  ஒவ்வொன்னும்
ஒத்துமையா ஓடையில
நாம போட்ட சண்டை எல்லாம்
மறந்த கத நெனவிருக்கா!

பொஞ்சாதிப் பொங்கிதந்த
புளியன் சோத்துருண்ட
தொண்டைக்குழி போனப்போ
இளஞ்சூடு நெனவிருக்கா!

அப்படி நெனவிருந்தா இனி
மறந்துரு,
எல்லாத்தையும் மறந்துறு..

வயக்காடு இன்னைக்கு
கோங்க்ரீட்டா மாறிடுச்சி
நம்ம ஊரு நெலத்தடிதண்ணி
எவனுக்கோ போயிருச்சு.

வாக்கு கேட்ட வாய்க் கெல்லாம்
எங்க சனம் தென்படல
ஈரேழு லோகத்து சாமிக்கும்
கண்ணில்ல!

போதும்யா போதும்...
அந்தி சமஞ்சிருச்சி
அடி வானம் செவந்துருச்சி
ஊர் மேஞ்ச பொட்டக் கோழி
கூட்டுக்குள் அடஞ்சிருக்கும்.

ராத்திரி சோத்துக்கு வழியென்ன
தெரியாது
இப்படியே போனதுன்னா எங்க உயிர் தங்காது..!
 
~ !! ச.மனோ !! ~
« Last Edit: August 17, 2017, 06:50:07 AM by ரித்திகா »


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #25 on: August 23, 2017, 10:19:46 AM »
உணர்தல் அழகு...

அந்த மேகதூதனின் ஈரமுணர்ந்து
அந்திக் குளிரின் கூதலுணரந்து...

வாட்டிய வெயிலின் வெப்ப முணர்ந்து
நீட்டியக் கடலில் தனிமையுணர்ந்து...

மண்ணின் மனமுணர்ந்து...
பூக்களின் வண்ணமுணர்ந்து..

வனாந்தரத்தின் சப்தமுணர்ந்து
மயானத்தின் நிசப்தமுணர்ந்து...

பணத்தின் வாசமுணர்ந்து
பிணத்தின் நாற்றமுணர்ந்து...

ரயிலில் பயணமுணர்ந்து
இராத்திரியில் பயமுணர்ந்து...

ராஜாவின் மெட்டுணர்ந்து
ரஹ்மானின் இசையுணர்ந்து...

கண்ணில் காதலுணர்ந்து
பெண்ணின் ஸ்பரிசமுணர்ந்து...

உதட்டில் சுவையுணர்ந்து
ஊடலின் சுகமுணர்ந்து...

கட்டிலில் காமமுணர்ந்து
தொட்டிலின் ஆட்டமுணர்ந்து...

மழழையின் மொழியுணர்ந்து
என் தமிழின் அழகுணர்ந்து...

யாம் இத்துணையும் காதலித்து - இவ் வையகத்தே வாழ்நாள் முடிக்க உணர்ச்சியே சிறந்தது.

ஆம் உணர்தலே காதல்..!


  ~ !! ச.மனோ !! ~ 


Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #26 on: August 24, 2017, 12:48:50 PM »
உங்கள் வாசிப்பின் இரசனை உணர்ந்து
காதலில் நின் இனிமை உணர்ந்து
நிந்தன் கவி ஆற்றலின் காரணம் உணர்ந்து
என் தங்கையின் மனதையும் அவள்தன்
மனதோரம் இருக்கும்  கனாவையும்
உணர்ந்து கொண்டேன் .

அருமை கண்ணா
மென்மேலும் உங்கள் வாசிப்பு இரசனை
பெருக வாழ்த்துகிறேன்.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #27 on: August 28, 2017, 09:16:53 AM »
நெகிழி.... 

நீ தூக்கிச் செல்லும்
பாலிதீன் பைகள்
தேசத்தின் தூக்கு கயிறு...

ஆய்வு சொல்லதுப்பா
நெகிழி உபயோகித்தால்
மீன்கள் முதல்
மான்கள் வரை
மாண்டுப் போகும்.

ஈக்கள் முதல்
பூக்கள் வரை
மலடாகும்.

அத்தனை நதியின் காம்புகளும்
அதிவிரைவில் வற்றிவிடுமாம்.

புத்தனைப்போல் வாழ்ந்தாலும்
புற்றுநோய் முற்றிவிடுமாம்.

தீவனமில்லா ஏழை கால்நடைகள்
தினம் தின்றுமடிகிறது
பாலிதீன் பைகளை
காகிதமென்று எண்ணி....

நெகிழி நம் தேசத்தின்
வற்றா மடுகளில் ரத்தம்
உறிஞ்சுமொரு உன்னி.

கால்நடை இறப்புக்கும்
சாக்கடை அடைப்புக்கும்
காரணமிந்த நெகிழி

சுகாதார கேடுக்கும்
சூதறியா நாடுக்கும்
இதுவே சகுனி.

பாலிதீன் பைகள்
பாவை நம் மண்ணோடு
பலவந்தமாக
பாலியல் வல்லுறவு கொள்கிறதே!
தமிழ் மக்களே நாமிதை
தடுக்க வேண்டாமா ?

மூச்சு திணறுதப்பா பூமிக்கு - அவள்
முந்தியில் பிறந்த
சந்ததிகள் நாமொரு
முடிவெடுக்க வேண்டாமா?

பொய்யும் புரட்டும் பேசும்
போலி உதட்டுக்கு
எதற்க்கப்பா லிப்ஸ்டிக்?
பெய்யும் மழையின்றி
தவிக்கும் நமக்கு
எதற்க்கப்பா பிளாஸ்டிக்?

பெண்சிசு கொலையைப் போல
மன்னிக்க இயலா
பெரிய குற்றம்
மண்சிசு கொலை.

ஊருக்கு விழிப்புணர்வு
ஊட்ட
ஊர் ஊராக
ஊர்வலம் வேண்டாம்
போலியாக
பேரணி வேண்டாம்.

நானிலம் நலம் பெற
நடைமுறை வாழ்வில்
நானினி நெகிழியை
பயன்படுத்த மாட்டேன்

டீக்கடையில் தந்தாலும்
நெகிழி குவளையில்
இனிக்கும் தேநீர்
இனியும் அருந்த மாட்டேன்.

இப்படி ஒவ்வொருவரும்
உறுதி கொள்வோம். -இதை
தனிமனித கொள்கையில்
இணைத்து கொள்வோம்.

முற்றிலுமாக பிளாஸ்டிக்கை
முடக்க பழக வேண்டும்.
நாளை நம் குழந்தைகள் வாழ
உலகம் வேண்டும்.

பாலிதீன் பை - எமனின்
பாசக் கயிறு போல
தவிர்த்திடுங்கள் தோழா
இனியெம் தலைமுறைகள்
உயிர் வாழ...

இவண் ..
இப்புவியின் பேச தெரிந்த விலங்கினம் .. ..
« Last Edit: August 28, 2017, 09:19:42 AM by ரித்திகா »


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
« Reply #28 on: February 17, 2018, 01:18:23 PM »
ஒரே ஒருமுறை காதல் செய்!

கண்களுக்குள் கரைந்து போ
மூச்சிக்காற்றை பரிமாறிக்கொள்
இணையத்து திரைகிழித்து - இச்சை
மூட்டும் இயற்கை வாசலில் வந்து விழு!

உன் அவனோ அவளோ கைபிடி!
காதலில் இருக்கின்ற
இடைவெளி தேடு
கண்டுபிடித்தால்
மொத்தமும் நிரப்பி விடு!

கரை மணலில் கால் பதி
அலை நுரையில் கை நனை
அந்திச் சாயம் பூசிக்கொள்
ஆப்பிள் கடித்து
பனித்துளி குடித்து
ஆதாம் காலத்து காதல் செய்!

காமத்து பெருவெளியை ருசி
சந்தேகங்கள் தீர்த்து போ
தேகச்சூடு அதிகரித்து
ஹார்மோன் வெள்ளம் பெருக்கெடுத்து
காதலை காமமும்
காமத்தை காதலும் கடந்து
பூச்சொரிந்து புனிதக் காதல் செய்!

வார்த்தைகள் தேடி எடு
கவிதைகள் கிறுக்கு
கவிதையில்
சந்தேகம் ஏற்பட்டால் - அந்த
பாரதிக் கம்பனை உதவிக்கு அழை!

நிலவின் வெளிச்சத்தை
உறையவிட்டு
இரவின் அழகு போர்த்தி
நட்சத்திரங்கள் திருடி - அந்த
உலக அதிசயங்களுக்குள்
ஒண்டி ஒண்டி காதல் செய்!

சின்னச் சின்ன சண்டையிடு
செல்லக் கடிகள் பதியவிடு
தேகம் கடந்து
தேடல் தொடர்ந்து
திகட்டத் திகட்ட காதல் செய்!

தேடல்கள் முடிந்து
மரணித்துப் போயின் - மறவாது
அந்தக் கல்லறைத் தூக்கத்திலும்
கண்ணியமாய் காதல் செய்!   

~ !! ச. மனோ !! ~
« Last Edit: February 17, 2018, 01:20:51 PM by ரித்திகா »