Author Topic: காலக்கெடு  (Read 282 times)

Offline Guest

காலக்கெடு
« on: December 18, 2018, 10:54:58 AM »
காலக்கெடு....
***********************

நீ விதித்திருப்பாய்
நான் அறிந்திருக்கவில்லை
ஒவ்வொரு தருணத்திலும்
என்னோடு பயணிக்கிறது
என் பிடரி நரம்பைவிட
அருகாமையில்....
.
மின்சாரம் தாக்கி
சாலையில் விழுந்து பிடைக்கும்
புறாவின் சிறகுகளை
நான் அநுமானித்து நகர்கிறேன்
அதன் காலம் முடிவுற்றதாய்....
சட்டென நிமிர்ந்து
விருட்டென பறந்து என்
அநுமானத்தை பொய்க்கச்செய்தது...
.
நல்லாத்தான் வேகமா
நடந்து போயிண்டிருந்தார் - திடீர்ணு
நெஞ்சப்புடிச்சிட்டு உக்காந்துட்டார்
கொஞ்சம் ஜலம் குடுங்கோண்ணார்
நான் கொண்டு வரையில
அப்டியே சாஞ்சுட்டார் யாரோ எவரோ
கெடுதலல்லவே கெடு....
.
ஒவ்வொரு மரணமும்
எனதும் உனதும் அல்லாத
யாரோ ஒரு வயோதிகரின்
யாரோ ஒரு நோயாளியின்
காலக்கெடுவை மட்டுமே
எதிர்பாற்கிறது...
.
கடந்து செல்லும் ஒவ்வொரு
கணமும் எதிர்நோக்கவேண்டியது
நம் மரணம் நமக்கான காலக்கெடுவை
.
விதைத்தவைகள் அறுவடை
செய்யப்படாமலே விட்டுச்செல்லும்
அந்நேரத்தை எதிர்கொள்ளும் முன்
நம் காலம் வெகு சிறிது எனக்கொள்க...
.
போற்றுதலும், பொல்லாமையும்
இல்லாமையும் இகழ்தலும்
இறுமாப்பும் எல்லாம்
அவசானிக்கும் அந்த தருணம்
அடுத்ததாய் ஒரு வாய்ப்பை
கேட்டுப்பெற்றுவிடவியலாதவை...
.
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Guest 2k

Re: காலக்கெடு
« Reply #1 on: December 19, 2018, 08:20:42 AM »
இந்தக் காலக்கெடு ஒருவித பயத்தையே கொடுக்கிறது எப்பொழுதும். நேற்று கவிதையை நான் சரியா படிக்கல போல, திரும்ப மறுவாசிப்பு செய்யும்பொழுது வேறொரு முன்னோக்கை தருகிறது. ஆழமான கவிதையை பகிர்ந்ததுக்கு நன்றி நண்பா

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்