Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 226  (Read 1967 times)

Offline Forum

size=12pt]ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)[/size]

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 226
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   FTC Team சார்பாக      வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline Guest 2k

பெயர் பழகியிருக்காத தேசத்தில்
குளிர் உறையும் அறையின் கீழ்
சுகமாக உறங்கச் செல்லும் நேரத்தில்
நிச்சலனமாய் வந்து செல்கிறது
பால்யத்தின் நினைவுகள்

கூடைந்த குருவிகளின் கீச்சிடல்கள்
அடங்கிய பின்னர்
தாயின் மடியில் படுத்து பால் நிலவின்
கதைகளை கேட்டறிந்த நாட்கள் முடிந்து போயின

நிலவின் வடை சுடும் பாட்டியை
காட்டி
நிலாச்சோறு உண்ணும் கூட்டத்திற்கிடையே
கைகளை ஏந்தி அமர்ந்திருந்த
ஒவ்வொவொரு கைகளுக்கும் ஒருபிடி நிலவு

நிலவு ஆண் பாலா பெண் பாலா
என்று தர்க்கம் செய்யும்
மின்சாரமற்ற இரவுகளின் கைகளில்
தஞ்சமைடைந்திருந்த பருவங்களில்
அந்திக்காவலன் ஒளியில்
சிறு சிறு காதல் செய்து களித்திருப்போம்
வெட்கத்துடன் முகத்தை மறைத்த நொடி
அந்திக்காவலனும் வெட்கி
மேகங்களிடையே பொதிந்து போனாள்
சந்தேகமில்லாமல் நிலவு பெண்பால் தான்

நிலவுடன் ஓட்டம் பிடித்து
யார் முதலில் வீடைடவது
என்ற கள்ளமில்லா உள்ளங்களின்
போட்டியில்
தோற்றவருமில்லை வென்றவருமில்லை
சிறுவர்களிடம் நிலவும்
நிலவிடம் சிறுவர்களும்
வென்று தோற்றது மட்டும் உண்மை

நிச்சலனமாகி போன இரவுகளுக்கெல்லாம் தேவை
ஒரு நிலவு மட்டுமே




« Last Edit: September 06, 2019, 10:48:35 AM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline யாழிசை

பால்ய வயது பருவ காதல்

அது ஒரு அழகிய பௌர்ணமி நாள்..
கதிரவனிடமிருந்து இரவல் வாங்கின ஒளியில் ...
காரிருளை மெல்ல மெல்ல விழுங்கி கொண்டிருந்தாள்
முழுமதி…

எங்கும் நிசப்த்தம்
ஊரே உறங்கி கொண்டிருக்கும் வேளையில்
காரிருள் கண்ணை மறைக்கும் தருவாயில்
விட்டில் பூச்சிகள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஒரு சில வீடுகளில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன ...

சிலு சிலுக்கும் ஜில்லென்ற காற்று
மெல்ல உடலை வருடி செல்ல ....
உன் அருகில்... உன் கை கோர்த்து  செல்லுகையில்
கார்மேக கூட்டங்களின் தென்றலில் மெல்ல மெல்ல
காணாமல் போகிறேன் ...

எங்கும் நிசப்தம்
ஆனாலும் உன் புன்முறுவலில்
தூரலிட்ட என் வானம் உன் பேரன்பில்
நனைந்தே போன நாட்கள் கண்கள் முன்னே
நிழல்படமாய் வந்து செல்கின்றன ...

என் ஆறாம் அறிவிற்கு எட்டும் முன்னே
ஆறாம் அகவையில் துளிர்விட்டு சென்ற பால்ய வயது
காதலே.........
நான் எழுதியது எல்லாம் என் ஆழ்மனதில் விட்டு சென்ற
சுவடுகள்...

Offline KuYiL

எங்கள் நிலவு.........

கன நேர தூக்கத்தில்
காணாமல் போன நிலவு ...
விழித்து பார்த்து வியந்து
போன  நான் ...

இரவு நேரம்  இளம்பிறையாய்
தெரியும் பொன் நிலவை
காணவில்லயையே.....
பூமியும் சூரியனும்
சேர்ந்து விழுங்கி விட்ட
அம்மாவாசை கூட இல்லையே
இன்று..

எங்கே தான் சென்றுஇருக்கும் 
எழிலான வட்ட நிலவு ..
நிலவு இல்லாத பூகோளத்தில் 
அலையில்லாத கடல் ....

ஆர்பரிக்காத கடலில் ....
ஏது …..?
நீர் தழுவும் கடல் காற்று...
கட்டு அவிழ்ந்து சுழலும்
பூமிக்காதலனின் சுற்று
வேகத்தை கட்டுப்படுத்தும்
மாய கயிறு எங்கே ?

சுட்டுஎரிக்கும் பகலில்
வியர்வை சொட்டும் பூமிக்கு
காதலியாய் குளிர் முத்தம்
தர நிலவு காதலி இல்லையே .....

மோகமும் தாகமும் சேர்ந்து
உறவாடும் அந்திவேளையில்
இனி நிலவு காதலன்  நிழல்
பட்டு மொட்டு அவிழ்க்கும்
அந்திமலர்கள் இருப்பதில்லையே .....

விடியலின் முன்பே வெள்ளிநிலவை
விரைந்து காணவேண்டும்...
தேடி செல்ல ஒரு துணை
என் ஆருயிர் நண்பன் இருக்க
வேறொருவர் வேண்டுமோ
என் தேடலின் வழி காண...

வழி நெடுகிலும்
இரவு விரித்த
இருள் போர்வை ....
கண்கள் இருந்தும்
காதுகள் சத்தம்
கேட்டு வழி சொல்ல
கால்கள் சென்ற
வழியில் தொலைந்து
போன நிலவை தேடி
நாங்கள் ...

எங்கோ ஒரு திசையில்
வட்டமாய் ஒரு ஒளி….
மலை அரசனின் மார்பில்
தன்னை மறைத்து கொண்டு ....

நிலவு கண்ட ஆனந்தத்தில்
கரை புரண்டோடும் இன்பத்தில்
ஆதங்கமாய் கேட்டேன் ..
ஏன் இங்கு மறைந்தாய்
என் நிலவே ?

கண்ணீர் சிந்திய நிலவு
சொன்னது...........
என் பூமி காதலனை
நான் இழந்து விடுவேனோ ..
பசுமை பூத்த என் காதலன்
அனல் காக்கும் தீயில் அலறிய சத்தம்
என் ஆவி துடிக்க கேட்ட போது

வெடித்து சிதறிய
என் காதலனின் தேகம்
என் கண்ணில் இன்னும்
மறையவில்லை
புண்ணாகி போன என்
காதலனின் உடல் …..

உருகி வழியும் என் காதல்
அவனின்  அவலக் குரல்
கேட்டு துவண்டு போனது…….
அவனில்லாமல் நான் இல்லை
என் காதல் உண்மையெனில்
என் உடல் மறையும்
அவனுக்கு முன்பு…..

சொல்லி முடித்த நிலவை
பதில் ஏதும் சொல்ல முடியா
மௌனத்தில் நான்...

வாடா நிலவே ..
முடியவில்லை நாட்கள்
முடிந்து விடவில்லை நாங்கள்
உன் காதலன் உயிர் எங்கள்
வசம் இனி..

பசுமை குலுங்கும் புத்தம் புதிதாய்
உன் காதலனை நீ விரைவில் காண்பாய்..
ஏது எங்கள் சத்தியம்...

நீ இல்லாத  இருண்ட உலகம்
நினைத்தும் பார்க்க முடியாது...
ஓடி வா நிலவே….

எங்கள் கைகள்
கொண்டு அணைத்து
வெறிச்சோடிய  வானத்தில்
ஆகாய தாரகையாய்
அழகோடும் இருக்க செய்வோம்...











« Last Edit: September 04, 2019, 02:04:07 PM by KuYiL »

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 344
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
நிலவின் மேலான நேசம்..

இரவு தனை அலங்கரிக்கும் நிலவே,
கவிஞன் கற்பனையில் சிறகடிக்கும் உறவே..

ஏழைகளின் எழில்மிகு அரசியே, தெருவிளக்கு இல்லை
என்ற பொழுதும், முழு விளக்காய் மிளிர்ந்தவளே.

நட்சத்திரத்தினால் நெய்யப்பட்ட நீல நிற கம்பளத்தில்,
நாணத்துடன் அமர்ந்திருக்கும் அழகு சிலை அவள் - நிலா...

வழிதுனையாய் நீ இருக்க,  வேறு துணை எதற்கு,
வழிபோக்கனின் ஸ்நேகிதியே..

மிளிரும் அழகு தனில்,  நீல வானில் வளம் வரும் வெண்மயிலே
உன்மேல் நேசம் கொள்ளாதோர் உலகினில் இல்லை..

தாய் அவள் தன் சேயிர்க்கு உணவூட்ட, உன் அழகு தனை
ஆதாரமாய் காட்டி உணவு புகட்டிய  நொடி முதலே
புன்னகையுடன் புணர்ந்தது பச்சிளம் குழந்தையின் பாசமிகு நேசம்.

கார் முகிலும் காதல் கொண்டது  நேசகி
உனை உறசி செனற நொடிமுதலே.

நீல வானமும்  நெஞ்சுறுகியது, நிலவே நீ வராதிருப்பின்..

உனை காண்பது நிறைவேறா கனவென தெரிந்தும்,
கானல் நீரான காதலுடன் காத்திருக்கிறது கதிரவன்.

நிலவே உனை மடியினில் ஏந்த, கடல்களும் ,
நீரோடைகளும் காலத்தை கடந்த தவத்தினில் 
ஒருதலை காதலுடன் காத்திருக்க,
வெண்ணிலவே உன் நேசம் தான் யாரிடமோ?.

கனவெல்லாம் நினைவுகளாய் உணர்ந்தேன்
நிலவே உனை கண்ட நொடி முதலே..

அன்றும், இன்றும் கவிதையின் பிறப்பிடமாய் உன் மிளிரும் அழகு.

மழலை காதலாய் அன்று, காவிய காதலாய் இன்று...

என்றும் உன்மேலான நேசத்தின் சாயலில். MNA.....
« Last Edit: September 04, 2019, 09:52:20 PM by Unique Heart »

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear

பனிபோர்த்திய குளிர் இரவின் ஒருநாளில்
நானும் என் அண்ணனும் மொட்டை மாடியில் அமர்ந்து
அம்மா கொடுத்த
சோற்று உருண்டை கவளங்களை
சண்டையிட்டுக் கொண்டு
சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்


வெளிச்சமற்ற அந்த இரவில்
வானில் ஒளி வீசியபடி
மிதந்து வந்த ஒற்றை பந்தை பார்த்து
அதிசயித்து அமர்ந்திருந்தோம்
"அம்மா அம்மா வெளிச்சம் தரும் அந்த வெள்ளை பந்து என்ன"
என்று கேட்டேன் அம்மாவிடம்
"இந்த வெள்ளை பந்து தான் இரவில் நமக்கு வெளிச்சம் தரும் நிலா"
என்றாள் அம்மா
நிலவை அதிசயமாக நானும் அண்ணனும்
பார்த்துக் கொண்டு இருந்தபோது
நிலவின் உள்ளே யாரோ இருப்பது கண்டு வியந்து போனோம்
நிலவின் உள்ளே இருக்கும் பாட்டி
தினம் தினம் வடை சுடும் கதையை
அம்மா கூற கேட்டபடி
அவள் மடியில் உறங்கி போனோம்


திடீரென்று விழிப்பு வந்தபொழுது
வானத்தில் ஒரு ஒரு வெளிச்சக்கீற்று
கீழே வந்து விழுந்தது
மெதுவாக அண்ணாவை எழுப்பி
"அதோ பார் அண்ணா ஒரு வெள்ளை பந்து
பூமியில் வந்து விழுந்தது
வா போய் அதை பார்ப்போம்" என்றேன்
இருள் அடர்ந்த வழியில்
இருவரும் பயந்து பயந்து கையை பிடித்து நடந்து சென்றோம்


பக்கத்தில் செல்ல செல்ல அந்த வெளிச்சம் பொருந்திய
பெரிய வெள்ளை பந்து
அம்மா சோற்றூட்டும் போது காட்டிய
நிலா என்று தெரிந்தது.


"நிலா நிலா நீ ஏன் கீழே விழுந்த" என்று கேட்ட என்னை பார்த்து திடுக்கிட்ட நிலா
"சிறுவர்களே என்னைத் தெரியுமா"
என்று கேட்டது
"ஓ தெரியுமே நீ தானே இரவில் வானத்தில் ஜொலிக்கும் வெள்ளி நிலா"
என்று கூறினோம்
"ஆமாம் நான் தான் இரவில் வரும் நிலா
கொஞ்சம் கண்ணசந்து தூங்கிய நேரத்தில் யாரோ என்னை மேலிழுருந்து கீழே தள்ளிட்டாங்க"
என்று அழுதது நிலா


நிலா அழுவதை பார்த்த எனக்கும்
அண்ணாவிற்கும்
பாவமாகி போச்சு
"நிலா நிலா நீ அழ வேண்டாம்
உன்னை வானில் சேர்க்கிறோம் நாங்க"
என்று ஆறுதல் கூறினோம்
இப்போ எப்படி இவ்வளவு பெருசா இருக்க நிலாவ
வானத்துல தூக்கி போடுறது
என்று நானும் அண்ணாவும் யோசிச்சோம்.
அண்ணா சொன்னான்
"அதோ உயரமாக தெரியும் மலை முகட்டிற்கு நிலாவை உருட்டிக் கொண்டு சென்றால் அங்கிருந்து
நிலா வானத்திற்கு எம்பி குதித்து சென்றிடும்"


நானும் அண்ணாவும் அந்த பெரிய வெள்ளை நிற உருண்டை பந்தை
இல்லை இல்லை
அந்த வெள்ளி நிலவை
கஷ்டப்பட்டு உருட்டிக் கொண்டு போனோம்
நிலாவும் எங்களோடு சேர்ந்து
உருண்டு கொண்டே வந்தது
மூச்சிறைக்க மூச்சிறைக்க
நானும் அண்ணாவும் கஷ்டப்பட்டு
நிலாவை  உருட்டிக் கொண்டே
போனோம்


மலையின் மீது ஏற ஏற என் உடைகள்
முட்களில் மாட்டி கிழிந்து விட்டது
என்னுடைய செருப்பும் அறுந்துவிட்டது
அம்மா திட்டுவாள் என்று
அழுது கொண்டே நிலாவை
மலைக்கு மேல் தள்ளிச் சென்றோம்
ஒரு வழியாக மலை உச்சிக்கு
நிலாவை கொண்டு சேர்த்ததும்
நிலவை வானத்திற்கு எம்பி குதிக்க சொன்னோம்
நிலாவும் குதித்து எம்பி
வானத்திற்கு பறந்து சென்றது


வானத்திற்கு நிலா திரும்ப வந்ததும்
சந்தோஷமான நிலாவிலிருந்த பாட்டி
எனக்கும் அண்ணாவிற்கும்
வடைகளை தூக்கி போட்டாள்
வானில் இருந்து வடை மழையாக பொழிந்தது
"ஹய்யா வடை வடை" என்று
உற்சாகத்தில்
கைத்தட்டி சிரித்தோம் நானும் அண்ணாவும்
அப்பொழுது திடீரென்று வடைகள்
வேக வேகமாக மேலே விழுந்தது
"அய்யோ" என்று பயந்தபடி
நானும் அண்ணனும் ஓடினோம்
ஒரு பள்ளத்தில் நான் உருண்டு விழ
யாரோ
"அஞ்சலி எந்திரி அஞ்சலி எந்தரி" என்று எழுப்பினார்கள்
திடுக்கிட்டு விழித்தேன்
"நேரமாச்சு ஸ்கூலுக்கு கிளம்புங்க"
என்றாள் அம்மா
வெளியில்  எழுந்து வந்து பார்த்தால் நிலாவை காணவில்லை
அதற்கு பதிலாக ஆரஞ்சு நிற பெரிய பந்து
வானில் எழும்பிக் கொண்டிருந்தது"
"அடச்சே எல்லாம் கனவா,
வடை போச்சே"
என்று அழுதபடி ஸ்கூலுக்கு கிளம்பினேன்



Copyright by
BreeZe

Offline thamilan

வான்முகிலை எட்டிப்பிடிக்கும்
உயர்ந்த மலைகள்
பச்சை பாவாடையும் தாவணியும் உடுத்திய
அழகிய மலைமகள்கள்
இந்த மலைகளுக்கு நடுவே
தொட்டில் காட்டியது போல எங்கள் கிராமம்

நாகரிகம் வளர்ந்திட்ட இந்த யுகத்திலே
ஒன்றுக்கு இரண்டாக சம்சாரம் இருந்தாலும்
இன்னும் மின்சாரம் இல்லாத
குக்கிராமம் எங்கள் கிராமம்

ஒரு வீட்டிலும் குளிர்சாதனப் பெட்டிகள் இல்லை
மின்விசிறிகள் இல்லை
அழுவதத்திற்கு சீரியல் பார்க்க
தொலைக்காட்சி பெட்டிகள் இல்லை
இவை எதுமே எங்களுக்கு
தேவையும் இல்லை

இதமான குளிர்காற்று
இரவில் போர்வைக்குள் சுருளச் செய்யும்
பனிக்காற்றாய் மாறும்
எதுமே கெட்டுப்போகாது
எங்கள் கிராமத்து மனிதர்களை போல

இரவில் எங்கள் கிராமமே
பார்க்க ரம்மியமாக இருக்கும்
மின்விளக்கு இல்லாததால்
வானத்து நட்சத்திரங்களுக்கு போட்டியாக
வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்குகள்
கண் சிமிட்டும்

இரவில் படிப்பது தான் எங்களுக்கு சிரமம்
உயிர் போலே ஊசலாடும்
விளக்குகளின் ஒளியில்
கண்கள் எரியும்
பார்வை மங்கும்

நானும் எனது நண்பர்களும்
சிறுவர்கள் ஆனாலும் அறிவாளிகள்
படிப்பதற்கு வெளிச்சத்துக்கு என்ன செய்வது என்று
அடிக்கடி சிந்திபோம்

அப்படி ஒரு நாள்
இரவில் வெளியே அமர்ந்து
வானத்தை அண்ணாந்து பார்த்தபடி
சிந்தனையில் ஆழ்ந்திருந்தோம்

அன்று பெளர்ணமி போலும்
வானத்தில் அழகான பெரிய வட்ட நிலவு
எங்களை எட்டிப் பார்த்தது
நிலவைப் பார்த்ததும் ஒரு யோசனை
எனது மனதிலும் எட்டிப்பார்த்தது

இந்த நிலவை பிடித்து
எங்கள் கிராமத்துக்கு கொண்டுவந்தால்
எல்லோருக்கும் ஒளி கிடைக்குமே
நாங்களும் படித்து மேதைகள் ஆகலாமே

இந்த விஞ்ஞான உலகத்தில்
உள்ளங்கைகளில் உலகைக் கொண்டுவர முடியுமென்றால்
நிலவை ஏன்
எங்கள் கிராமத்துக்கு கொண்டுவர முடியாது

அண்ணாந்து பார்த்தோம்
நிலவு எங்கள் மலைக்கு மேல்தான் இருந்தது
நண்பர்களும் நானும்
மலைக்கு மேல் ஏறினோம்
நிலவை பிடித்தவரை

மலை உச்சிக்கு சென்று விட்டோம்
நிலவு ஒரு கால்பந்து அளவில்
வட்டமாக ஜொலித்தது
தொட்டுவிடும் தூரம் தான்

கூட வந்த நண்பி தடுத்து  நிறுத்தினாள்
ஏனென்று கேள்விக்குறியாக
எங்கள் பார்வை அவளை துளைத்தது

வானில் இருக்கும் நிலவை
பூமிக்கு கொண்டுபோனால் வானுக்கு
ஒளி கொடுப்பது யார்
அதை நம்பி இருக்கும் நட்சத்திரங்களுக்கு
ஒளி கொடுப்பது யார்
அவள் கேள்விகள் எங்களை சிந்திக்கவைத்தது

எங்கள் தேவைக்காக
மற்றவர்கள் தேவைக்கான பொருளை திருடுவதா
மற்றவர்களுக்கு சொந்தமானதை
நமது நலனுக்காக திருடுவதா
இதும் ஒருவகை திருட்டு தானே

வேண்டாம் கஷ்டப்பட்டாலும்
விளக்கின் ஒளியில் படித்தாலும்
மற்றவர்கள் பொருள்  நமக்கு   வேண்டாம்
தெருவிளக்கு ஒளியில் படித்து
மேதைகளானவர்கள் இல்லையா
நாம் மண்ணெண்ணெய் விளக்கில் படித்து சரி
மேதைகள் ஆகலாம் என
மனதில் உறுதியுடன் ஆனந்தமாக
மலையை விட்டு கீழே இறங்கினோம்

Offline SweeTie

பேய்களின் திருவிழா  அன்று
மலை அடிவாரத்தில்  பனியில்  புரண்டு
 விளையாடி  மகிழ்ந்தன 
குட்டிசாத்தான்கள்  ஆண் பெண் இரண்டு 


வெள்ளை நிறத்தில்  ஒரு பளிங்குமலை
டுமீல்........ என்ற  சத்தத்துடன் 
வழுக்கி விழுந்து உருண்டு வந்தது  வானிலிருந்து
ஐயோ !   அம்மா!   என   கூச்சலிட்டு     
பயந்து மிரண்டன  குட்டிசாத்தான்கள்
செய்வது தெரியாமல் திகைத்து நின்றன

பளிங்கு நிலவு பளிச்சென்று  இருந்தது
ஒளிக்கீற்றுகள்  பட்டு  தெறித்தன
பலத்த யோசனையில்  ஆழ்ந்தன  குட்டிசாத்தான்கள்
நேரம் தாழ்த்தாமல்   நிலவை உருட்டின
தங்கள்  பேய் வீட்டுக்கு

அதோ ,,,,,,,  தெரிகிறது   அவர்கள் வீடு
இருளில் மூழ்கிக்  கிடக்கிறது
சுற்றும் முற்றும்   யாருமில்லை
நாய்களின்   ஊளை  மட்டுமே கேட்கிறது
அவசர அவசரமாய்  சீக்ரம்  நிலவை  உருட்டினர்
 
 வீட்டுக்கு  வந்தது வெள்ளிநிலா
ஒளியும்  தந்தது  தங்க நிலா
துள்ளி குதித்து    கும்மாளமடித்தன
குட்டி சாத்தான்கள்
 
தினமும்  வானில் வலம் வரும் நிலவே
பௌர்ணமி  நிலவே  முழு நிலவே
காதலர் இதயம் சேர்த்திடும் நிலவே 
கவிஞரும்  பாடும்  குளிர் நிலவே
வந்ததும்  வந்தாய்  ஒளியும்  தந்தாய்   
இதயம்   நிறைந்தாய்  இன்னல் களைந்தாய் 
எமக்கே சொந்தம்   நீ  நிலவே.!!!   
« Last Edit: September 07, 2019, 03:13:47 AM by SweeTie »

Offline gab

நிலவு தேயாத தேசம்

வானத்தின் நீலம் நிறம் அடர்ந்து வரும் வேளைகளில்
குதூகலிக்கும் எங்கள் மனது
குடிசையின் ஓட்டை வழிவீழும் நிலவொளியில்
களித்திருக்கும் எங்களுக்கு
நித்தம் நித்தம் நிலாச் சோறுதான்.

இருப்பவருக்குதான் மின்சாரம்
இல்லாதவருக்கு குடிசை ஓட்டைகள்தான் விளக்கொளிகள்
ஒளியிழக்கும் தேய்பிறை நாட்களில்
இருளடர்ந்த குடிசையில்
புதிதாய் ஒரு நிலவு செய்திட
பாழ் மனம் தான் ஏங்கிடும்.

வீடிருப்பவருக்கு நிழலும் தேவையில்லை
நிலவும் தேவையில்லை..
வீதியே வீடென்றிருப்பவருக்கு
சிறு மரத்தின் நிழல்தான்
வெயிலையும் மழையையும்
தாங்கி நிற்கும் குடை.
வெளிச்சம் நிரப்பிடும்
குளிர்ந்த வெண்ணிலவு தான்
இருளை விரட்டும் ஒளி.


யாருடனும் பேசக் கிடைக்காத நாட்களில்கூட
பேசிக் கிடப்போம் அந்த வெண்ணிலவுடன்.
எட்டாத உயரத்தில் இருந்தாலும்
எங்கள் கைகளுக்கு மட்டும்
அடங்கிடும்அந்த வெண்ணிலவு..
நிலவுடன் வளர்ந்து
நிலவுடன் வாழும் ஏழைகளுக்கெல்லாம்
அந்தவெண்ணிலவும் நண்பன்தான்.

நம்பிக்கைகள் இழக்கும் ஒவ்வொரு நாளும்
வானடர்ந்து இருக்கும் நட்சத்திரங்களும்
வளர்ந்து தேயும் நிலவும்கற்றுக் கொடுப்பது
அடுத்த நாளிற்கான நம்பிக்கைகளை..

ஒரு கணம் மேகப்பொதிகள் மறைந்தாலும்
மறுகணம் வெளிச்சக்கீற்றுடன் வரும்
வெண்ணிலவு கொடுப்பதெல்லாம்
நம்பிக்கையின் கீற்றுகளைதான்..

நீரில் தெரியும் நிலவை கைகளால்
கலைத்துவிட்டு நோக்கும் தருணம்
ஒரு கணம் கலைந்து மறு கணம்
மீளும் வெண்ணிலவு பார்த்து
சலனமடையும் மனம் கூட தெளிவடையும்..

சூரியன் மறையாத தேசம் உண்டென்று சொல்லுவர்
எங்களைப் போல் ஏழைகள் வேண்டுவதெல்லாம்
நிலவு தேய்ந்திடாத ஒரு தேசத்தைதான்!!!