Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 235  (Read 2120 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 235
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   FTC Team சார்பாக        வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline MoGiNi

எழுத்துப் பிழை இன்றி
இலக்கணமாக
இலக்கியமாக
இன்னும் பலவாக
வடித்து விடுகிறாய்
என் மீதான
உன் ஆசைகளை ....

கோடுகளாலும்
புள்ளிகளாலும்
வர்ணத் தெளிப்புகளாலும்
எதுவோ ஒன்றை வரைந்து
அதற்க்கு என் பெயர் சூடி
வழிபடுகிறதாக சொல்கிறாய் ...

மொட்டவிழும் முடிச்சுக்களில்
கட்டழகு கவிந்து
குலைந்து குவிவதாக
பட்டழகு மேனியின்மேல்
போர்த்திக்கொள்ளும்
பாவை என்
பாலாடையன்ன மேலாடையாக
படர்ந்துவிட
ஆசை கொள்வதாக
பிதற்றிக் கொள்கிறாய் ...

எண்ணிக் கொள்ளும்
நிமிட மணித் துளிகளும்
எண்ணி எண்ணுகின்ற
அனைத்துக் கால துளிகளும்
ஓர் குளிர்ந்த நீரோடையின்
பிரவாகம் போல்
உன்னை படர்ந்து
ஸ்பரிசிக்கும் என
கற்பனைகள் விரிக்கிறாய் ...

மெல்ல நடக்கும் தென்றல் என
என் மேனி உருக் கொண்டு
தத்தி தவழும் கிள்ளை முகத்தில்
உன் பிள்ளை முகம் தேடி
சலிப்பதாய் சலித்துக் கொள்கிறாய் ...

வெள்ளிக் கம்பிகளென
மேல் படரும் நரை முடியும்
என் முதுமையின் கம்பீரம் கொண்டு
மினு மினுத்து சிரிக்கும் பொழுது
உன் கரம் கொண்டு
மென்மையாய்
மெல் சுகந்தம் அள்ளும்
மல்லிகையின் சரம் கொண்டு
குழலாடும் தருணங்களிலும்
உன் கூட இருப்பேன் என
என் நெஞ்சள்ளி சிரிக்கிறாய் நீ ...

என் மறுப்புகள் எல்லாம்
என்னை மறுதலித்து
உன் கரம்பற்றி
என் காதலை கிறுக்கி செல்கிறது
ஒரு முத்த ஒற்றுதலில் ...
கலைந்த பொய்கள்
கலகலத்துச் சிரிக்கிறது
துகில் கலைந்த நாணத்துடன் .
« Last Edit: June 14, 2020, 04:40:17 AM by MoGiNi »

Offline SandhyA

  • Jr. Member
  • *
  • Posts: 97
  • Total likes: 236
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am just new to this
வழியினை அடைந்தாலும்
தொலைவு தெரிந்தாலும்
உன் கண்களைக் காண்கையில்
நான் சிலையாய் மாறினேன்...

கைகள் கோர்த்து
பக்கம் நெருங்கி
இடைவெளியின்றி நாம்
இடையினுள் நம் காதல்,
மேகங்கள் மேலே
சென்றதென்ன?
மழையாய் தூவி
நம் காதலை வளர்க்கவோ!

வாழ்வின் கோடுகள்
நம்மை பிரிக்க வந்தால்,
அதனை மிதித்து வருவேன்
அன்பே உனக்காக.

வழி முடிந்தாலும்,
இலக்கு அடைந்தாலும்,
நாம் விட்டுசென்ற சுவாசம்
இசையமைத்து பாடும்
வழிதோறும் விதைகளை தூவி
நாம் வளர்த்த காதலுடன்.
« Last Edit: June 14, 2020, 05:41:25 PM by SandhyA »

Offline Raju

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 253
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am the Perfect version of me !!
உனக்கும் எனக்குமான
ஜீவித பந்தமென்பேன் நான்..

எங்கு தொடங்கி
எங்கு முடியுமென்று
இதுகாறும்
புரியவில்லை
இருந்தும்
உன் அருகாமையில்
என்
வினாக்கள் யாவும்
அஸ்த்தமித்து
கிடக்கிறது..

உன்னோடு
கைகோர்த்து
நடைபயிலும்
இந்த ஒர் நொடியில்
என் ஆயுள்
அஸ்த்தமித்தாலும்
சம்மதமே..

காலங்கள் தாண்டி
நம் கண்கள்
உறவாடுமென்றால்
காதலுக்கு நான்
இன்னோர்
தாஜ்மகால் கட்டுவேன்..


முத்தத்தால்
ஒரு
முன்னுரை எழுது
உன் முற்றுப்புள்ளிவரை
முழு அன்போடு
தொடருகிறேன்...

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 856
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
பின்மாலை பொழுதில் ஓர்  தார்சாலை மீது
கைகோர்த்து நிற்கிறது நமது காதல்
காத்திருப்புகளும் சந்திப்புகளும் பழகிப் போன
அந்த கைகளின் கதகதப்புகளும்
நிகழத் துடிக்கும் கனவுகளை
எதிர்பார்த்து  நிற்கிறது.

நமக்குள் சில கேள்விகள் இருக்கின்றன
சில சந்தேகங்கள் இருக்கின்றன
குற்றசாட்டுகளும், சமாளிப்புகளும்
அதிகமாகவே  இருக்கின்றன
இத்தனைக்கும் மேலாக நமது
காதலும் நிறைவாகவே இருக்கின்றது.

என் வெற்றிடங்களை நீயும்
உன் வெற்றிடங்களை நானுமே நிரப்பினும்
காலங்கள் புதிதாக தோன்றுகிறன
கனவுகளும் புதிதாக தெரிகிறன
சொற்களற்று நிற்கும்பொழுது
நம் கண்கள் பேசிக்கொள்கின்றன

பேசி பேசி தீராத பொழுதுகளில்,
முற்றுப் புள்ளி இட்டு....மீண்டும் சில
புள்ளிகளால்  கோலமிட்டு
தொடர்கிறது நம் காதல்.
கண்களால் பேசவும், காதுகளால் காணவும் கற்றுக்கொடுத்திருக்கிறது காதல்.
பழக்கங்களை மாற்றி
நினைவுகளை பரிசளித்திருக்கிறது காதல்.

பார்க்கும்பொழுதுகளில் வேகமாய் ஓடுவதாய்
கடிகார முட்களை  கடிந்து கொள்கிறோம்
பார்க்காதபொழுதுகளில் மெதுவாய்  நகர்வதாய்
மலைத்துக் கொள்கிறோம்
மீண்டும் சந்திக்கும் நாளினை தேடி
நாட்காட்டியின் பக்கங்களை நகர்த்தி பார்க்கிறது
கைகோர்ப்புகளின் கதகதப்புகள்

அத்தனை தொலைவுகள் தாண்டி
காதலுடன் காத்திருக்கிறோம்,
தூரத்தில் பார்வைகள் சந்தித்துக்கொள்ளும்போது
பந்தை கண்ட நாய்குட்டியை போல
உற்சாகம் கொண்டு
கால்களை முந்திக்கொண்டு
மனம் துள்ளி குதித்து ஓடுகின்றது
மீண்டுமொரு முறை கைகளை கோர்த்துக் கொள்கிறோம்,
கனவுகளை பேசிக்கொள்கிறோம்,

எப்பொழுதும்போல கடிகாரத்தின் முட்கள்
நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது
நாம் மட்டும் இந்த சாலையில் உறைந்து நிற்கின்றோம்.
காதல் என்னும் ஒருவழிப் பாதையில்   
நாம் இருமனப் பயணம் கொள்கிறோம்
திரும்பி செல்லும் வழியினை தேடாமல் வந்துவிடு
நாம் இங்கேயே தொலைந்து போய்
என்றென்றும் காதலில் திளைத்திருப்போம்
« Last Edit: June 15, 2020, 08:29:01 AM by Ninja »

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 344
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
என் தேவதை உடனான பயணத்தில்..

என்னவளே ! படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்திற்கும் சுவாசம் எப்படி இன்றியமையாததோ,

அது போல் என்னில் உன் நினைவுகள் இன்றியமையாதவை..
 :(
இளங்காற்றும் பொறாமை கொள்ளும், என் அவளின் மெல்லிய சிணுங்கல் கண்டு.

தாகம் தீர்க்கும் தண்ணீரும், தாகம் கொள்ளும், என் அவளின் தேகம் கண்டு...

செங்கதிரும் நகைத்து நிற்கும், என் அவளின் நாணம் கண்டு...

என்னவளே !  நேசம் எனும் மையினால், காதல் எனும் உன் ஓவியம் வரைந்தேன், என் இதயம் எனும் காகிதத்தில்..

இதயத்தில் வரையப்பட்டதாலோ, ஏனோ?  நீ தொலைவில் இருந்த பொழுதும் என்னுள்ளம் தொடர்ந்து உன் நினைவுகளுடனே பயணிக்கின்றது...

வாழ்வில் எண்ணற்ற பயணங்கள் துவங்கி முடிந்த பொழுதிலும்,

என் தேவதையின் கைகோர்க்கும் அக்காதல் எனும் பயணத்திலே தொடர்ந்து பயணிக்க விரும்புகிறது என் உள்ளம்...

என் அவளை நோக்கிய பயணம் அது வெகு தொலைவு ஆன பொழுதிலும், பயணத்தின் முடிவுதனில் தேவதை அவள் தரிசனத்தை எண்ணியே மனம் ஆறுதல் கொள்ளும்..

உலகில் ரசிக்க ஆயிரம் அற்புதங்கங்கள் இருந்தபோதிலும்,

அனைத்தையும் மறந்து நான் ரசிப்பது,  என் தேவதையின் கைகோர்க்கும் அந்த அற்புத நாளை என்னிய பயணத்தியே..

தொலைவுகள் தொடர்ந்த போதிலும், தொடர்ந்து பயணிக்கும் என் நெஞ்சம் என் தேவதையின் நினைவுகளுடன்.....

இப்பூவுலகில் அணைத்து மானுட மக்களும் பயணிக்க விருப்பும் பயணம் ஒன்று இருப்பின்
அது காதலியின், காதலனின் உடனான "காதல் பயணமே ". (MNA).....
« Last Edit: June 15, 2020, 08:47:45 PM by Unique Heart »

Offline thamilan

கோடி ஆண்டுகள்
கூடிய தவத்தால்
தேடி வந்த என் தேவதை பெண்ணே


பேர ழகான பெண்களை விடவும்
ஓர ளவானது உந்தன் அழகே
இருந்தும்……...

இரு விழி புகுந்து
இதயம் பிளந்து
பருவசிறகுகள் பறக்க வைத்தது
உன் அழகு


கன்னியர் பலரை
கண்டது என் கண்கள்
உன்னிடம் தானே
உயிரை கண்டது

என் வாழ்வில்
நீ இணைந்தாய்
என் வாழ்வு நந்தவனமானது
எல்லா பூக்களும் என்னுள் பூத்தன     

சருகாய் போனவன்
சரித்திரம் ஆனேன்
இறகாய் உதிர்ந்தவன்
சிறகென பறந்தேன்

காரணம்  என்ன கண்ணே
உந்தன் பூரணக்  காதல்                 
பூத்தது என் மேலே


இணையாய் ஒரு துணை
இல்லாத போதும்
இணையில்லா இணையாய்
இணைந்தவள் நீயே


அணையா விளக்காய்
அன்பை ஏற்றி
அணையாதிருக்க  உன் உயிரை
காவலாய் நிறுத்திய
காதலி உனக்கு
கோவிலை கட்டினால்
கும்பிடும் என் காதலே

Offline SweeTie

மாலையும்  இரவும் மங்கிய ஒளியில்
விண்ணோடும்   முகிலொடும் விளையாடும் 
அந்த  வெள்ளிநிலா 
நிலவை எட்டிப்பிடிக்கும் சாலை
 அள்ளித் தெளித்த  முல்லை மாலர்களென 
 பஞ்சுப் பொதிபோன்ற  முகில்கள்   

அங்கொன்றும் இங்கொன்றுமாய் 
துள்ளித்திரிந்த
வண்ண வண்ண  மின்மினிகள்   
 மறைந்திருந்து   
 வேடிக்கை பார்க்கின்றனவா

காதல்  எனும்   கானகத்தே 
நெடும்  தூரப்  பயணமதில்
வஞ்சிமகள்   பூப் பாதம் 
நொந்துவிட  கூடுமென
மொட்டவிழ்ந்த   ரோஜாக்கள்   
பட்டு  இதழ்  கொட்டிவிட   
 தாமரை இலையில் 
தக்கிய  பனித்துளிபோல்
அன்னமென  நடைபயின்றாள்
சின்ன இடை வஞ்சியவள்

கானகத்தே காத்திருக்கும் 
காளையவன் காதுகளில்
 இசைக்கிறது  மாது  அவள்
கொலுசு மணி ஓசை
சற்றே நிமிர்ந்து   பார்த்து 
தலைசுற்றிப்போகிறான் அவன்
இந்திர லோகத்து  சுந்தரியா?   
ரம்பையா?  இவள்
விஷ்வாமித்திரரையே 
 கவர்ந்த  மேனகையா? 

கண்டதும் காதல்  என்பதும் இதுவோ
அவள் உதட்டோர மென்சிரிப்பில்
உறுதிமொழி  கண்டான் அவன்
விழிகள்  நான்கும்  பரிமாறின
மௌனத்தின்  மொழிகள்
இதயங்கள் இரண்டும்  சங்கமமாயின
கைகோர்த்து கொண்டது   காதல் 
நிலவுக்கு  ஏனோ  இத்தனை வெட்கம்
மெல்லிய முகில்  துகிலால் 
மூடிக்   கொண்டதும்  ஏனோ  !!
 
« Last Edit: June 16, 2020, 05:10:30 PM by SweeTie »

Offline Hari

  • Jr. Member
  • *
  • Posts: 82
  • Total likes: 206
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
அன்பே உன் கை கோர்த்து
விண்ணுலகை நோக்கி 
நெடுதூர பயணம் செல்ல ஆசை.
அந்த நிலவை  செதுக்கி
உனக்காக ஒரு காதல் கோட்டை கட்ட ஆசை...
நட்சத்திரக்  கூட்டங்கள்  அணிவகுக்க
நீயும் நானும்  சேர்ந்து விண்ணுலகை ஆள ஆசை..

உன் அழகினால்தான் மேக கூட்டங்களும்
குளிர்ந்து மழையாய் பொழிகிறது
மண்ணுலகிற்கு  சூரியன்  ஒளி கொடுப்பதுபோல்   
நீ  வந்த  பின்  என் வாழ்கை ஒளிமயமானதடி...

உன் அழகு குரல் என்னை
இடி மின்னலாய் தாக்குதடி ..
நான் தனியாக நடக்கும்போது
தொலைவை வெறுக்கிறேன்..
உன் கைகோர்த்து  நடக்கையில்
அந்த தொலைவை விரும்புகிறேன் ...

உன் அன்பான இதயதுக்கு  சமன் 
பல்லாயிரம் அழகான முகங்கள் ...
அதனாலேயே  உன் அழகை  விட
அன்பான உன் இதயத்தை  நேசிக்கிறேன்...

சிறைப்பட்டு கடந்த என் இதயம்
உன் வருகையால் பறவையாய் சிறகடித்து பறக்கிறது ..
நிழல் வெளிச்சம்  உள்ளவரைத்தான்பின்தொடரும் .
நான் உன் சுவாசமாய் என்  உயிர் உள்ளவரை
உன்னுடன் இருக்க விரும்புகிறேன் ..

உன்னுடன் தனிமையில்  இருக்கும் இந்த நேரத்தில்
ஆயிரம் கவிதைகள் சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன் .
ஆனால் என்னால் சொல்லமுடியவில்லை
உன் ஒற்றை பார்வையால் என் வார்த்தைகளை பிடிங்கி கொண்டாய் ..

 இருள் சூழ்ந்த என் இதயத்தில் மின்மினியாய்
 ஒளி ஏற்றி பிரகாசிக்க செய்தவளே...
உன் காதல் அம்புகளால் என் இதயத்தை துளைத்தவளே .
நீ என்னுடன்  இருக்கும் நேரத்தில்
காதலின்  சுகம்  புரிகிறது ...
காதல்  இல்லை எனில்
 என்றோ மனிதன் மிருகமாய் மாறி  இருப்பான்..
மனிதனை மனிதனாய் இருக்க செய்வது இந்த  காதல் தானே ..
« Last Edit: June 18, 2020, 09:00:02 PM by Hari »