Author Topic: DEPRESSION !! - ஒர் அலசல்  (Read 1191 times)

Offline இளஞ்செழியன்

DEPRESSION !! - ஒர் அலசல்
« on: July 11, 2019, 01:38:42 AM »
DEPRESSION !!

கொஞ்சம் பெரியபதிவு எல்லாம் இல்லை நிஐமாகவே பெரிய பதிவுதான்.....
நிதானமாக புரிய முயற்சிக்கவும்...

மன அழுத்தம்!

இத பத்தி நீங்க நிறைய இடத்துல படிச்சிருக்கலாம்...
நான் கேட்டதும்,படித்ததும்,உணர்ந்ததையும்
என்னுடைய பார்வையின் ஊடே உங்களை கூட்டிச்செல்கிறேன்...

இந்த மன அழுத்தம் ஒரு முக்கோணம் மாதிரி.
Triangle னு சொல்லலாம்.

இந்த மன அழுத்தம் பற்றி ஒரு டாக்டரால் மட்டும் தான்
அல்லது பிரச்சனையை முழுசா உள் வாங்கிகொள்பவர்களால்
மட்டும்தான் அதற்க்கான தீர்வு வழிய குடுக்க முடியும்
( நான் டாக்டர் இல்லை அது வேற விசயம்)

நான் சொன்ன முக்கோணம்-க்கு வருவோம்.
இந்த முக்கோணம் முன்று நபர் சார்ந்த ஒன்று!

1.மன அழுத்தம் கொண்டவர்
2.அதை முதல்ல கண்டறிபவர் (மருத்துவர் அல்லாதார்!!அதாவது மன அழுத்தம் கொண்டவரோட அப்பா,அம்மா,நண்பர்,கூட வேலை செய்பர்...யாரோ!!)
3.மருத்துவர்.

இப்போ,டாக்டர் பத்தி பேச வேணாம்...
மீதி இருக்க இந்த ரெண்டு பேர் பத்தி பாக்கலாம்.

யாராவது உங்க கிட்ட மன அழுத்தம்,
இல்லனா எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்குன்னு வந்தா,
தயவு செஞ்சு அவங்கள உக்கார வெச்சு என்ன ஆச்சுன்னு கேட்டு பழகுங்க.
அவங்களுக்கு அங்கீகாரம் குடுத்து பழகுங்க.
உனக்கென்ன இப்போவே depression!!போ!!போய்ட்டு வேலைய பாருன்னு உதாசீனம் படுத்தாதீங்க.

இந்த உலகத்துல மன சோர்வு (Stress) தாண்டாம யாருமே வந்தது இல்ல.இந்த depression வர வயது வரம்பு இல்லை.யாருக்கு வேணும்னாலும் எப்போ வேணும்னாலும் வரலாம்.

Depression க்கு நிறைய காரணங்கள் உண்டு.

நம்ம மூளை ஒழுங்கா செயல்பட மூளையில்(தெளிவா சொல்லணும்னா PITUITARY&HYPOTHALAMUS ல) இருந்து சில Neurotransmitters சுரக்கும்....GABA,GLUTAMATE,SERETONIN அப்டின்னு சில....இது எல்லாமே தராசுல வெச்ச மாதிரி சரியான சதவிகிதம்ல இருக்கிறதால தான் நம்மல மூளை ஒரு நிதான நிலைல(EQUILLIBRIUM) வெச்சுக்குது...எது சரி...எது தப்புன்னு யோசிக்குற பக்குவம் வர்றது இந்த Neurotransmitters மூலமா தான்!இதுக்கு பேர் INSIGHT....இதுல கொஞ்சம் மாறுதல் ஆனாலும் மூளை தாறுமாறா செயல்பட ஆரம்பிச்சிடும்.அது நாளடைவில் பல முகம் கொண்டு Depression க்கு கொண்டு போய் விடும்.இதுக்கு பேர் CLINICAL DEPRESSION.சிலருக்கு INSIGHT பாதிக்க படும்.

ஒரு ஹாஸ்பிடல் இருக்குனு வெச்சிக்கோங்க....அங்க ஒருத்தர் மனஅழுத்தம் னு போனார்னா, அவர் கிட்ட டாக்டரால கேக்கப்படுற முதல் கேள்வி ...நீங்க யார் கூட வந்திருக்கீங்க ??

இந்த கேள்வி நீங்க ஜுரம்,வயிறு வலி, அவ்வளவு ஏன்...ஹார்ட் அட்டாக்(MI)னு சொல்லப்படுற இதய வலி னு போனாலும் கூட முதல்ல கேட்கப்படாது!

குழந்தைகள் அப்புறம் மன அழுத்தம் கொண்டவங்க கிட்ட மட்டுமே கேட்கப்படுற கேள்வி இது.கூட வர்றவங்க பேரு INFORMANT!!இந்த Informant பொது மக்கள் நீங்க தான்.

இந்த Informant யாரு அப்டின்ற அடிப்படையிலே நிறைய விஷயம் அறியப்படும்.

உதாரணத்துக்கு, ஒருத்தர் மன அழுத்ததோட வர்றார்.கூட வந்திருக்கிறது அவரோட நண்பர் னு வெச்சிக்குவோம்...ஏன் வீட்ல இருந்து யாரும் வரல??ஒருவேளை பிரச்சனை வீட்டுல இருக்குமோ??அதனால இவருக்கு மன அழுத்தம் இருக்குமோ னு டாக்டர்'s Analyse பண்ண ஆரம்பிச்சிடுவோம்....இதுக்கு பேர் Case Study...

சோ,உங்க கிட்ட யாராச்சு மன அழுத்தம் னு வந்து நின்னா,அவங்கள டாக்டர் கிட்ட கொண்டு வந்து சேர்க்க போற இணைப்பு பாலமே (Connecting Bridge)நீங்க தான்!!!உங்களோட பங்கு இங்க ரொம்ப முக்கியம்.Depression ல இருக்கவங்க கிட்ட நீங்க சாதாரணமா போய்ட்டு வா,டாக்டர் கிட்ட போகலாம் னு சொன்னா,கண்டிப்பா வர மாட்டாங்க.நான் என்ன லூசா ன்னு நம்ம மேல கோவப்படுவாங்க.அது ஒரு குழந்தை மன நிலை.அதை முதல்ல உள்வாங்கி அதை புரிஞ்சிக்கிற மக்களால் மட்டும் தான் ஒரு நல்ல பாலமா இருக்க முடியும்.

தயவு செஞ்சு நீங்களா ஒரு முடிவு குடுக்காதீங்க.

இத பண்ணு,சரி ஆயிடும்!ஒரு நல்ல பிரியாணி சாப்பிடு சரி ஆயிடும் னு சொல்லாதீங்க!தயவு செஞ்சு அதை அங்கீகாரம் செஞ்சு பழகுங்க... பல யோசனைக்கு பின்னாடி தான் உங்க கிட்ட அழுத்தமா இருக்கவங்க பேசவே வந்திருப்பாங்க!உங்களோட சொந்த விருப்ப அவங்க கிட்ட சொல்லி...அவங்கள தப்பா வழி நடந்துறது தப்பு.யாருக்காச்சு Genetic Disorder(க்ரோமோசோம் குறைபாடு) இருந்தா அது சில வயசுல தான் வெளிப்படவே ஆரம்பிக்கும்.அதனால தான் சொன்னேன்,சைக்காட்ரிஸ்ட் தவிர வேற யாராலும் இதை அவ்ளோ Perfect ஆ கண்டுபுடிச்சு தீர்வு குடுக்க முடியாதுன்னு.

ரெண்டாவது,அவங்களுக்கு நீங்க எப்பவுமே இது ஒரு சின்ன பிரச்சினை... இதெல்லாம் ஒரு பிரச்சனையா... நான் எல்லாம் எவ்ளோவோ பாத்திருக்கேன்னு உங்க சுய வாழ்க்கையில நடந்த விஷயங்களை சொல்லி,உங்க சுய பெருமைக்காக தம்பட்டம் தட்டி,நமக்கு மன அழுத்தம் உண்டுன்னு உணர்ந்து வந்த அவங்கள,நமக்கு எதுவுமே பிரச்சனை இல்லை,நாம தான் ரொம்ப யோசிக்கிறோம்னு அவங்கள கடிவாளம் போட்டுக்க விடாதீங்க.நீங்க தான் அந்த பாலம்னு சொன்னேன்.சோ,உங்களோட பங்கு அவ்ளோ முக்கியம்.

மூணாவது,தயவு பண்ணி...அவங்களோட அப்பாவோ இல்ல அம்மாவோ இல்ல அவங்க யாரோட தங்கி இருக்காங்களோ, அவங்க கிட்ட இத மன அழுத்தம் இருக்க நபருக்கு தெரியாம தெரியப்படுத்துங்க....ஏன் னா, மன அழுத்தம் ஒரு Emergency இல்ல.யாருமே மன அழுத்தம் வந்த முதல் நாளே டாக்டர் கிட்ட போக மாட்டாங்க.அவங்க மன நிலை எப்டி வேணும்னாலும் இருக்கலாம்.பல நாள் மன அழுத்தம்,தற்கொலை எண்ணமா மாறும்( எதுக்குடா ! இந்த பதிவ படிச்சோம்னு dont feel உண்மை இதான்) .எனவே,அவங்கள டாக்டர் உதவி கிடைக்கிற வரைக்கும் பத்திரமா பாத்துக்கணும்.

இதை படிச்சிட்டு இருக்க நிறைய பேருக்கு,மன அழுத்தம் இருக்கலாம்..தயவு செஞ்சு,நீங்க உங்களுக்கு இருக்க அழுத்தத்த உணருங்க.உங்கள நீங்களே அங்கீகாரம் பண்ணிக்கோங்க.நம்மோட Self Ego தடுக்கும்.இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை,இதை எல்லாம் தாண்டி வந்து நாம சாதிக்க நிறைய இருக்கு!
கண்டிப்பா நீங்க எல்லாருமே மன அழுத்தம் இருக்கே னு நிறைய Defense mechanism ட்ரை பண்ணி இருப்போம்...உதாரணமா,பாட்டு கேக்குறது,ஒரு ட்ரிப் போறது அப்டின்னு...அப்படி நீங்க முயற்சி பண்ணியும் உங்களுக்கு 1% மன அழுத்தம் இருந்தா கூட,தயவு செஞ்சு வாய தொறந்து நீங்க ரொம்ப நம்புற நபர் கிட்ட சொல்லுங்க..ஏன் னா இங்க நெறய பேருக்கு stress இருக்கு(மன சோர்வு)... அதுக்கு வேணும்னா இந்த Defense Mechanism கொஞ்சம் உதவி பண்ணும். ஆனா ரொம்ப நாள் Stress கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.இது பின்னடைவுல Depression (மன அழுத்தம்) ஆஹ் மாறுது.டாக்டர பாருங்க.எல்லாம் கடந்து போகும்னு சொல்லுறது முட்டாள்தனம்....

அதே மாதிரி,நம்ம நிறைய பேர் கிட்ட இருக்க முக்கியமான பிரச்சனை.... நம்ம அழுத்தமா இருக்க காரணம் இது தான்னு தெரிஞ்சும்...அத விட்டு விலகி வராம இருக்கிறது....Toxic relationship ல இது ரொம்ப இருக்கு....என்ன ஆனாலும் அவன்/அவள் விட்டு நான் விலக மாட்டேன் னு நெனச்சு....மறுபடி மறுபடி அந்த குழியயே நாம தேடி விழுவோம்....அந்த தப்ப பண்ணாதிங்க.....நாம தன்னிலை உணர தவறி போறது தான் முக்கால்வாசி அழுத்தத்தை குடுக்குது.... தயவு செஞ்சு அது வேணாம்....உங்களோட சந்தோசம் உங்க கிட்ட தான் இருக்கு....அத மத்தவங்க கிட்ட தேடாதீங்க....நம்மோட பிம்பம் ரொம்ப பலவீலமான ஒன்னு....அடுத்தவங்க கிட்ட நாம எதிர்ப்பக்குற ஒண்ணு, நமக்கு கிடைக்கலனா, நமக்கு சுய அங்கீகாரம்னு ஒண்ணு இல்லனா,நாம ரொம்ப சுலபமா மன அழுத்தம் ல போய்டுவோம்...

சிலருக்கு தேவை இல்லாத எண்ணம் இருக்கலாம்.சுத்தி இருக்க எல்லாருமே என்னை தப்பா பாக்குறாங்க,சிலருக்கு யாரோ கூப்பிடுற மாதிரி இருக்கலாம்.

Delusion,Hallucination,OCD இதெல்லாம் இப்படி தான் ஆரம்பிக்கும்...இதெல்லாம் DISTUBANCE OF THOUGHT & PERCEPTION...நான் முன்னாடி சொன்ன மாதிரி மூளைல இருந்து வர்ற அந்த Neurotransmitters ஓட சமநிலை தவறும் போது தான் இது நடக்கும்....கண்டிப்பா டாக்டர பாருங்க....கொஞ்ச நாள் ....ஒரு நல்ல கவுன்சிலிங்,சில மாத்திரைகள் சாப்பிட்டா அந்த Neurotransmitters அளவு நார்மல் ஆகிடும்....சுகர்,BP,ஜுரம் மாதிரி இதுவும் ஒரு உடல் உபாதை தான்....

Mcnaughten rule - Nothing is an offence which is done by a person who, at the time of doing it, by reason of, unsoundness of mind, is incapable of knowing the nature of the act, or that he is doing what is either wrong or contrary to law.

ஸ்காட்லாந்து ல 1840ல வாழ்ந்த MCNAUGHTEN னு ஒருத்தன்...மன அழுத்தம் காரணமா சில கொலைகள் செஞ்சான்...ஆனா, அவனுக்கு மன அழுத்தம் காரணமாக தான் இதெல்லாம் செஞ்சான் னு அவனை நிரபராதினு சொல்லி,அவருக்கு முறையா மருத்துவ உதவி குடுத்தாங்க...

பல பேர் இங்க பாதி Mcnaughten....அதாவது நமக்கு இந்த மன அழுத்தம் இருக்குன்னே தெரியாம நாம ஏதேதோ பண்ணிக்கிட்டு இருக்கோம்....கிட்ட தட்ட குழந்தை மனசு....அதற்கு தேவை ஒரு சமநிலை....

அந்த சமநிலை மருத்துவரால் 100 சதவிதம் குடுக்க முடியும்....நம்புங்க....
மன அழுத்தம் கொண்டவர டாக்டர் கிட்ட கொண்டு வந்து சேர்க்குற பாலம் தான் மக்கள் நீங்க....யாரையும் அவ்ளோ சுலபமா போடா பைத்தியம் னு சொல்லாதீங்க....இவன் கெடக்குறான் சைக்கோ னு சொல்லாதீங்க....நீங்க இதெல்லாம் சொல்ல சொல்ல தான்,அழுத்தம் ல இருக்கவங்க அவங்க பிரச்சனைய சொல்லாம உள்ளேயே வெச்சி கடைசி வரைக்கும் சொல்லாமலே இருப்பாங்க....


சில உண்மைகள் கசக்கும்

எல்லாருக்கும் ஒரு சமூக பொறுப்பு இருக்கு....அந்த பொறுப்பு இப்படி வெளிப்படுத்தும் போது உலகம் ரொம்ப அழகானதா இருக்கும்.... அதிலும் FTC போல் online chatters உங்க எல்லாருக்குமே பொறுப்புகள் அதிகம்.. வார்த்தைகளை மனம் போன போக்கில் வீசாதீர்கள் அதிலும் வெறுப்பு கலந்து ..முண்டியடித்து உங்களின் பால் எல்லோர் கவனத்தையும் ஈர்க்க முயலாதீர்கள்.. நீங்கள் நீங்களாகவே இருங்கள் அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்..

மனசு தான் எல்லாத்துக்கும் காரணம்....அந்த சந்தோஷம் குடுக்கிற மனசுக்கு சந்தோஷம் தர்ற விஷயம் அதோட சமநிலை....அதை தக்க வெச்சிக்கிட்டு வாழ்க்கையை வாழுங்க.❤️

❤SAY NO TO DEPRESSION !! ❤️
« Last Edit: July 11, 2019, 02:55:50 AM by இளஞ்செழியன் »
பிழைகளோடு ஆனவன்...