Author Topic: ~ ஃபிஷ் ரோல் ~  (Read 81 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218361
  • Total likes: 23056
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ ஃபிஷ் ரோல் ~
« on: May 29, 2016, 10:25:10 PM »
ஃபிஷ் ரோல்



தேவையான பொருட்கள் :

மீன் – 300 கிராம்
உருளைக்கிழங்கு – 250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி – 1 டீஸ்பூன்
தனியா பொடி – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
மைதா மாவு – 2 டீஸ்பூன்
முட்டை – 2
ப்ரெட் தூள் – 2 கப்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை :

* பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து விட்டு நன்கு உதிர்த்து அதனுடன் உப்பு, மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து பூரி மாவு போல பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
* மீனை அவித்து முள், எலும்பு ஆகியவற்றை நீக்கி சதைப் பாகத்தை மட்டும் எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம் போட்டு வதக்கி பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். மைதா மாவை போட்டு 2 நிமிடம் கிளறி, உதிர்த்து வைத்துள்ள மீனையும் போட்டு கிளறி, கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
* பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மாவில் ஒரு சிறிய உருண்டை எடுத்து பூரி போல் தேய்த்து அதற்கு நடுவில் மீன் கலவையை 2 டேபிள் ஸ்பூன் அளவு வைத்து பூரியை பாய்போல் சுருட்டி மேல்புறமும், கீழ்புறமும் உருளைக்கிழங்கு மாவால் மூடவும்.
* மீன் ரோலை நன்கு அடித்து வைத்துள்ள முட்டையில் முக்கி எடுத்து ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
* தக்காளி சாஸ் அல்லது சில்லி சாஸீடன் பரிமாறவும்.
* ஃபிஷ் ரோல் ரெடி.