FTC Forum

Entertainment => விளையாட்டு - Games => Topic started by: Bommi on July 30, 2012, 03:08:29 AM

Title: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on July 30, 2012, 03:08:29 AM
நண்பர்களே .......இது விடுகதைக்கான விளையாட்டு பகுதி.
நம்முடைய இனையதளத்தில் எல்லாரும் விடுகதை சொல்லாம்.
இதில் விடுகதைகளை மட்டுமே சொல்ல வேண்டும்.
குறிப்பாக விடுகதைகள் தமிழ் மொழியில் தமிழ் எழுத்துக்களிலேயே இருக்க வேண்டும்.
ஒரு விடுகதைக்கான பதில் முழுமை பெற்ற பின்பு அடுத்த விடுகதையை தொடரலாம். அதாவது புதிர் தொடுக்கபட்டவரல்  மற்றவர்களால் கொடுக்கபட்ட பதில் சரியானது என்று உறுதி படுதியபின்னர் .... அவரோ அன்றி அடுத்து வருபவரோ இந்த புதிர் விளையாட்டை தொடரலாம்

தொடரலாம் முதலில் நன் ஆரம்பிக்கிறேன்.......

நல்லதை அனுப்பி விட்டு கெட்டதை எடுத்து கொள்வான் அவன் யார் ?

Title: Re: நண்பர்களே ...... இது விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Global Angel on July 30, 2012, 03:18:21 AM
வடிதட்டு
Title: Re: நண்பர்களே ...... இது விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on July 30, 2012, 03:21:27 AM
மங்கை சரியான பதில்

மூன்று கண்கள் இருக்கும் இவனால் பார்க்க முடியாது?

Title: Re: நண்பர்களே ...... இது விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: பவித்ரா on July 30, 2012, 03:26:59 AM
தேங்காய்

நான் நானாக இருப்பேன்நான் யாரென்று தெரிந்த
பிறகு நானாக இருக்க மாட்டேன்
நான் யார்?
Title: Re: நண்பர்களே ...... இது விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Global Angel on July 30, 2012, 03:27:20 AM
நுங்கு   

Title: Re: நண்பர்களே ...... இது விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Global Angel on July 30, 2012, 03:41:01 AM

Quote
நான் நானாக இருப்பேன்நான் யாரென்று தெரிந்த
பிறகு நானாக இருக்க மாட்டேன்
நான் யார்?

புதிர்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: suthar on July 30, 2012, 08:34:07 PM

Quote
நான் நானாக இருப்பேன்நான் யாரென்று தெரிந்த
பிறகு நானாக இருக்க மாட்டேன்
நான் யார்?

ரகசியம்

ஆதி காலத்தில் அப்பனை விட்டவள் ...
அறிவுள்ள கையில் வந்து அமர்ந்தவள் ...
வெட்டுக்கும் கட்டுக்கும் கட்டுப்பட்டவள்....
வேதனையில் மேனி கிழிந்தவள்
ஏற்றி மஞ்சளும் வைப்பாள்... பொட்டும் வைப்பாள்...
ஆனால், அவள் பெண்ணல்ல. அது என்ன....?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: gab on July 30, 2012, 09:10:12 PM
 பனை ஓலை

ஆடாத அழகி ஆடென்று பெயர் பெற்றாள்...
அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on July 30, 2012, 09:17:34 PM
ஆடு

என்னை நீங்கள் பார்க்கலாம் ஆனால் பிரிக்க முடியாது?அது என்ன
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: vimal on July 31, 2012, 02:37:13 AM
நிழல்  :-*

நம்முள்ளே இருப்பான் , நாம் தூங்கும்போது  மட்டும் விழிப்பான் அவன் யார்???
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: suthar on July 31, 2012, 11:14:38 AM
கண்கள் 

நான் இருந்ததில்லை ஆனாலும் இருப்பவனாக இருப்பேன்.
என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன்
என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென
நான் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: gab on July 31, 2012, 07:59:22 PM
நேரம்.
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 03, 2012, 10:03:29 PM
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன?

Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: suthar on August 04, 2012, 04:00:18 AM
சிரிப்பு
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 04, 2012, 02:24:11 PM
மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை
போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: shaM on August 04, 2012, 11:42:55 PM
அனில்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 05, 2012, 11:36:46 PM
உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Global Angel on August 06, 2012, 03:07:52 AM
5.எறும்பு  

14. ஊரெல்லாம் சுற்றும் பாய். அது என்ன பாய்?

Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 06, 2012, 03:26:40 PM
ரூபாய்

நாலு கட்டையில் உருவாகி நடுச்சுவரில் குடியிருப்பான். அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: gab on August 06, 2012, 10:16:48 PM
ஜன்னல்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 06, 2012, 10:54:36 PM
 மழை காலத்தில்  பிடிப்பான், அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Thavi on August 07, 2012, 03:53:48 AM
காளான்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 07, 2012, 03:15:07 PM
அரைச்சாண் ராணி அவளுக்குள்ளே ஆயிரம் முத்துக்கள் அது என்ன
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: suthar on August 07, 2012, 10:02:59 PM
மாதுளை
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 08, 2012, 12:26:48 AM
ஏறினால் வழுக்கும்  இனிய கனி தரும் காயைத் தின்றால் துவர்க்கும் அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: பவித்ரா on August 08, 2012, 02:57:20 AM
vaazhai maram
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 08, 2012, 11:06:56 AM
கடிக்கத் தெரியாதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: gab on August 08, 2012, 11:09:00 AM
சீப்பு
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 08, 2012, 11:11:11 AM
ஓயாது இரையும் இயந்திரம் அல்ல உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Thavi on August 09, 2012, 02:33:45 AM
கடல் அலை
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 09, 2012, 02:53:48 AM
ஊரெல்லாம் சுற்றும் பாய். அது என்ன
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Thavi on August 09, 2012, 10:14:12 AM
ரூபாய்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 09, 2012, 11:07:55 AM
பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Thavi on August 09, 2012, 11:42:56 AM
மழை
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 09, 2012, 12:00:17 PM
Thana மழை தவறான் பதில்
இதற்கு சரியான பதில் தேங்காய்பூ

இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: பவித்ரா on August 09, 2012, 12:09:44 PM
nila
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 09, 2012, 08:38:38 PM
பாவி நிலவு தவறான் பதில்
இதற்கு சரியான பதில் தூக்கம்

க‌ல்‌லிலு‌ம் முள்‌ளிலு‌ம் பாதுகா‌ப்பா‌ன், த‌ண்‌‌ணீ‌ரி‌ல் தவ‌றி‌விடுவா‌ன் அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: பவித்ரா on August 09, 2012, 10:32:26 PM
சனா தூக்கம் என்பது எப்போது வேணாலும் வரும் இரவுன்னு இல்ல நிலவு தான் சரியான விடை யோசிச்சி  பார்

செருப்பு
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 09, 2012, 11:02:32 PM
ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு பிடி தண்ணீர். அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: பவித்ரா on August 10, 2012, 12:32:44 AM
இளநீர் அல்லது தேங்காய்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 10, 2012, 11:15:07 AM
ஊரெல்லாம் வம்பளப்பான் ஓர் அறையில் அடங்குவான் அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 10, 2012, 11:38:55 AM
8) 8)  நாக்கு (Tongue)  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 10, 2012, 11:45:49 AM
எட்டி நின்று பார்ப்பான்;​ பெட்டியில் போட்டுக் கொள்வான். அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 10, 2012, 11:50:22 AM
8) 8)  கேமரா (Camera)  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 10, 2012, 11:56:35 AM
ஐந்து ஊர்களுக்கு ஒரே மந்தை. அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 10, 2012, 11:59:53 AM
8) 8)  உள்ளங்கை (Palm)  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 10, 2012, 12:08:24 PM
தரையில் தாவுவான்;​ தண்ணீரில் மிதப்பான். அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 10, 2012, 12:11:22 PM
8) 8)  தவளை  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 10, 2012, 05:01:22 PM
கடுகு மடிக்க இலை இல்லை, யானை படுக்க இடமுண்டு- அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 10, 2012, 05:19:37 PM
8) 8)  சவுக்கு மரம்  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 10, 2012, 05:22:31 PM
கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளை காகம் நிற்குது- அது உன்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 10, 2012, 05:37:53 PM
8) 8)  உளுந்து  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 10, 2012, 05:50:49 PM
கரும் வயலில் யானைகள் மேய்ச்சல்-அது என்ன
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Global Angel on August 10, 2012, 07:16:39 PM
தலை,பேன்கள்

2) கடுகு மடிக்க இலை இல்லை, யானை
 படுக்க இடமுண்டு- அது என்ன?

Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 10, 2012, 07:45:11 PM
8) 8) சவுக்கு மரம்  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Global Angel on August 10, 2012, 09:10:20 PM
கட்டைக்காளை குட்டைக்கொம்பு- கிட்டப்
 போனால் முட்ட வருது- அது என்ன?

Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 10, 2012, 09:26:23 PM
8) 8)  முள்  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 10, 2012, 10:38:16 PM
செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 10, 2012, 10:50:18 PM
8) 8)  தொலைபேசி (Phone)  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 13, 2012, 11:26:11 AM
கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 13, 2012, 02:21:44 PM
8) 8)   நெருப்பு (Fire)  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 14, 2012, 10:37:20 AM
கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Thavi on August 14, 2012, 12:46:53 PM
சேவல்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 14, 2012, 10:50:40 PM
கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 14, 2012, 10:53:43 PM
8) 8)  சோளக்கதிர்  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 15, 2012, 01:15:38 AM
 மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Anu on August 15, 2012, 02:19:24 PM
ஈசல்

காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 15, 2012, 02:29:40 PM
8) 8)   ஈ  8) 8)

இது பேசினால் கேட்கமுடியும். ஏனென்றால், இதற்குப் பெரிய வாயுள்ளது. ஆனால் இதனால் சுவாசிக்க முடியாது. அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 16, 2012, 10:52:20 AM
கோவில் மணி

கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 16, 2012, 11:05:44 AM
8) 8)  உப்பு  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 16, 2012, 11:16:35 AM
கட்டைக்காளை குட்டைக்கொம்பு- கிட்டப்போனால் முட்ட வருது- அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Anu on August 16, 2012, 11:23:16 AM
முள்

ஒன்றும் இரண்டும் சேரில் செல்வம்
மூன்றும் நான்கும் சேரில் குளம்
மூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை
மூன்றும் ஆறும் சேரில் பெருமை
ஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 16, 2012, 01:12:13 PM
8) 8)  திருவாவினன்குடி  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 17, 2012, 11:28:33 AM
நடைக்கு உதாரணம் சொல்வர், குறுக்கே நடந்தால் முகம் சுளிப்பர்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 17, 2012, 11:52:54 AM
8) 8)  பூனை  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 18, 2012, 04:49:51 PM
கழனியில் விளைந்த கதிரை, கத்தரி போட்டு வெட்டுவார்- அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 18, 2012, 09:46:27 PM
8) 8)   தலைமுடி (Hair)  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 22, 2012, 07:50:10 PM
காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 23, 2012, 09:17:49 AM
8) 8)   தென்னைமரம்  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 26, 2012, 11:28:21 AM
சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 26, 2012, 11:44:08 AM
8) 8)  தீக்குச்சி  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Anu on August 27, 2012, 08:22:32 AM
ஏணி, ஏணி மேலே கோணி, கோணி மேலே குண்டு,
குண்டு மேலே புல்லு, அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ஆதி on August 27, 2012, 04:17:41 PM
மனிதன்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Anu on August 29, 2012, 09:49:50 AM
ஊசி மூக்கன், உள்ளங்கை கட்டையன் , ஊருக்கு
செல்லப்பிள்ளை - அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 29, 2012, 11:35:55 AM
8) 8)  வெற்றிலை  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Anu on August 30, 2012, 07:23:44 AM
செக்கச் சிவந்திருப்பாள், செட்டியார் மகள்
நாளைச்சந்தைக்கு வருவாள் நாத்தியார்
மகள்- அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on August 30, 2012, 08:53:14 AM
8) 8)  மிளகாய்  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Anu on August 30, 2012, 12:11:07 PM
ஒன்றும் இரண்டும் சேரில் செல்வம்
மூன்றும் நான்கும் சேரில் குளம்
மூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை
மூன்றும் ஆறும் சேரில் பெருமை
ஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on September 02, 2012, 10:24:51 PM
திருவாவினன்குடி
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on September 02, 2012, 10:26:00 PM
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on September 02, 2012, 11:07:59 PM
8) 8)  தவளை  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Anu on September 03, 2012, 05:44:52 AM
நூறு கிளிக்கு ஒரே வாய் - அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on September 03, 2012, 08:01:26 AM
8) 8)  வாழைப்பூ  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Anu on September 03, 2012, 12:34:44 PM
சேலை  ஊடுத்தியிருக்கும் பெண்ணல்ல; அதனுள்ளே முத்து இருக்கும்; சிப்பியல்ல, தாடியுண்டு கிழவனல்ல மக்களுக்கு உணவாகும். அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on September 03, 2012, 02:32:45 PM
8) 8)  மக்காச்சோளம்  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Anu on September 07, 2012, 07:10:08 AM
மழையின்றி மாரியின்றி பச்சையாவதென்ன?

பூவின்றி காயின்றி பழம் பழுப்பதென்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on September 07, 2012, 07:37:23 AM
8) 8)  கிளி  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Anu on September 10, 2012, 06:25:42 AM
பயந்தால் விட மாட்டான். பழகினால் மறக்க மாட்டான்
அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on September 10, 2012, 07:28:30 AM
8) 8)  நாய்  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Anu on September 11, 2012, 11:30:16 AM
பனி ஊரில் பிறந்த பழம், பார்க்கச் சிவப்புப் பழம், தினம் ஒன்று சாப்பிட்டால் மருத்துவரை விரட்டும் பழம். அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Gotham on September 11, 2012, 11:50:48 AM
Apple
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Anu on September 18, 2012, 06:46:42 AM
அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on September 18, 2012, 09:34:16 AM
8) 8)  சந்திரன்  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Anu on September 19, 2012, 08:06:20 AM
ஆற்றோரம் பிறந்து அழகழகாய் விரிந்து சந்தைக்கு வந்து மாமன் வாங்கிபோனால் மங்கை நல்லாள் சிரிப்பாள் - அவள் யார் ? 
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: gab on October 27, 2012, 02:16:14 PM
தங்கம்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Anu on October 27, 2012, 03:14:58 PM
ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on October 27, 2012, 03:23:47 PM
8) 8)  செருப்பு  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Anu on October 28, 2012, 08:26:23 PM
இரவும் பகலும் ஓய்வில்லை. அவன் உறங்கிவிட்டால் எழுப்ப ஆளே இல்லை. அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: KungfuMaster on January 01, 2013, 02:00:14 AM
கடிகாரம்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ஸ்ருதி on January 16, 2013, 06:05:47 PM
ஒரு அரசை தன்  மனைவிகளோட வெளியூர் போறாராம் ...அவருக்கு மனைவிகள் 9 பேர்.  9 மனைவிகளோட பின்னாடியும் 9 குழந்தைங்க  போகுதாம் ..அந்த குழந்தைங்க பின்னாடி அதோட செல்ல பிரியாணிகள் 9 நாய்கள் போகுதாம்,,,அந்த நாய்களுக்கு பின்னாடி அதோட குட்டிகள் 9 போகுது ..
அப்டினா ராஜா கூட மொத்தம் எதனை பேரு போறாங்க ?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on January 17, 2013, 02:26:57 AM
45
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ஸ்ருதி on January 17, 2013, 01:45:51 PM
thappu varun :(
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on January 17, 2013, 03:05:20 PM
theiryalaye shruthi
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on January 21, 2013, 02:04:00 PM
ஸ்ருதி விடுகதைக்கு பதில் சொல்லிவிட்டு
அடுத்த கேள்விய தொடரவும்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Gotham on January 22, 2013, 10:41:04 PM
raja kooda yaarum pogala. ponavanga arasai kooda thaane poirukaanga..  8) 8) :P :P
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on January 27, 2013, 10:24:22 PM
enuma entha game appdiye eruku shabba
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Global Angel on February 01, 2013, 05:41:18 AM
18 peru

raaja kanakkula vara maataru
manaivi 9
pillaigal 9

naai ellam ahirinai .... so ethanai per endrathula varaathu

intha bathil thappunaa   raaja kooda poorathu 9 manaivi matum nathu answera irukum  ::)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on February 04, 2013, 09:38:41 PM
நண்பர்களே விடுகதை பகுதியில்
ஸ்ருதி வராத காரணத்தினால்
அடுத்த கேள்வியை நாம் தொடலாம் 

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது

Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on February 04, 2013, 09:42:58 PM
வெடி, மத்தாப்பு

இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on February 04, 2013, 09:56:55 PM
சைக்கிள்

உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Gotham on February 04, 2013, 10:40:35 PM
அஞ்சல்பெட்டி

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on February 05, 2013, 12:58:51 AM
Gotham intha qustion already ketachu.

ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on February 05, 2013, 01:12:37 AM
எறும்பு

அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on February 05, 2013, 02:01:46 AM
சந்திரன்

உடன்வருவான் உதவிக்கு
வரமாட்டான் அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on February 05, 2013, 11:25:59 AM
நிழல்

குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன்
தூக்கி விடுவான் – அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on February 07, 2013, 03:13:22 AM
பணியாரம்

சுற்றிச் சுற்றி வருவான், சுற்றிலும் இருப்பான். ஆனால், இவனை
உணராலாமே தவிர பார்க்க முடியாது. – அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on February 07, 2013, 03:56:50 AM
காற்று

மேலே வெட்டவெளி, கீழே பொட்டல் வெளி, நடுவில் தண்ணீர்
பந்தல், அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on February 07, 2013, 04:04:14 AM
வானம், பூமி, மேகம்

வெட்ட வெட்ட வருவான், ஆனால் வெட்டினால் இரத்தம் வராது இவனுக்கு.- அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on February 07, 2013, 04:09:05 AM
நகம்

தண்ணீரில் கலக்க மாட்டான். விளக்கை எரிய வைப்பான் – அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on February 07, 2013, 02:18:40 PM
மண்ணெண்ணெய்

அங்காடி கொள்ளப்போய் யானை கண்டேன்
அணிநகர் மன்றிலே சேனை கண்டேன்
கொங்காரும் முத்தரசர் தம்மைக் கண்டேன்
கொடித்தேரும் பரிமாவும் கூடக் கண்டேன்
அங்கிருவர் எதிர்நின்று வெட்டக் கண்டேன்
அதுகண்டு யான் தலையைத் தாழ்த்த லுற்றேன் —–நான் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on February 07, 2013, 07:50:03 PM
சதுரங்கம்

வால் உள்ள பையன், காற்றில் பறக்கிறான்
- அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Anu on February 08, 2013, 11:50:43 AM
பட்டம்

ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on February 08, 2013, 12:19:00 PM
நாக்கு

குலை தள்ளிப்பழம் தருவேன், குழந்தைகளுக்காக
உயிர் விடுவேன் – நான் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on February 08, 2013, 01:41:43 PM
8) 8) வாழை   8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on February 08, 2013, 09:49:41 PM
ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால்
வலிக்கும், கடித்தால் சுவைக்கும் – அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on February 09, 2013, 01:01:19 AM
கரும்பு

 பச்சைத் தோல் கொ‌ண்ட மாமாவு‌க்கு ப‌‌ஞ்சுபோ‌ன்ற சதை.
அத‌ற்கு‌ள் கடினமான எலு‌ம்பு. உடை‌த்தா‌ல் உ‌ள்ளமெ‌ல்லா‌ம்
வெ‌ள்ளை ‌நிற‌ம். அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on February 10, 2013, 01:23:46 AM
தேங்காய்

கையுண்டு காலில்லை, கழுத்து உண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on February 11, 2013, 12:59:25 AM
சட்டை

அண்ணனின் தயவால்
ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on February 11, 2013, 08:11:26 AM
8) 8)  சந்திரன்   8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on February 11, 2013, 12:41:42 PM
பழகினால் மறக்காதவன் பயந்தோரை விடாதவன் அவன்
யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on February 11, 2013, 01:23:42 PM
8) 8)  நாய்  8) 8)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on February 11, 2013, 07:23:52 PM
.அழுவேன், சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on February 11, 2013, 09:15:23 PM
முகம் பார்க்கும் கண்ணாடி

முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on February 15, 2013, 03:48:56 AM
 நாக்கு

கண்ணுக்குத் தெரியாது. ஆனால் உயிருக்கு உடைமை இது. யார் இது
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on February 15, 2013, 02:41:43 PM
காற்று
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: vimal on February 23, 2013, 10:06:07 AM
மண்ணுக்குள்ளே கிடப்பான் மங்கலகரமானவன் அவன் யார்???
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on February 23, 2013, 10:16:46 AM
மஞ்சள்

அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: vimal on February 23, 2013, 10:18:31 AM
கடல் நீர்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on February 23, 2013, 10:19:28 AM
நடைக்கு அஞ்சாது, ஆனால் தண்ணீருக்கு அஞ்சும்- அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: vimal on February 23, 2013, 11:15:19 AM
செருப்பு

என்னை சத்தமாக அழைக்கும்போது காணாமல் போயிருப்பேன்
நான் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on February 23, 2013, 07:31:16 PM
மவுனம்

நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: vimal on February 23, 2013, 09:13:37 PM
E என்ற ஆங்கில எழுத்து ;D ;D ;D

உலகத்தை இணைப்பவன்.என்னை நல்லதிற்கும் பயன்படுத்துவர், தீயதிற்கும் பயன்படுத்துவர்....
நான் யார்??
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on February 27, 2013, 08:35:45 PM
மதம்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on February 27, 2013, 09:40:00 PM
வெள்ளை மாளிகையில்  மஞ்சள் புதையல், அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: vimal on February 28, 2013, 06:36:10 PM
முட்டை

Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on March 09, 2013, 01:03:59 PM
செண்பகவல்லி அம்மனும் பூவண்ண நாதரும் சிரித்து மகிழ்ந்து
தொடுத்த பூவைச் சிக்கில்லாமல்”அவிழ்த்தவருக்குச் சிக்கந்தா
மலை சீதனம்…அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on June 15, 2013, 02:38:55 PM
தூக்கணாங்குருவிக் கூடு

அம்பலத்தில் ஆடும் அழகுக் கண்ணனுக்கு
அங்கமெல்லாம் தங்கக் கண்ணாடி அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Varun on June 24, 2013, 12:10:13 PM
மயில்

வெள்ளப் பிள்ளையார் கோவிலுக்கு விளக்கு வைக்க முடியாது
கறுத்தப்பிள்ளையார் கோவிலில் கால்வைக்க முடியாது ???
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on July 02, 2013, 04:39:35 PM
 கண்

அக்கா வீட்டுக்குத் தங்கை போவாள்.. ஆனால், தங்கை வீட்டுக்கு
அக்கா வரமுடியாது!அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Gayathri on July 07, 2013, 09:42:09 AM
மேலுதடு ,, கீழுதடு

காம்பு இல்லாத வட்ட இலை..
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on August 01, 2013, 04:03:48 PM
அப்பளம்

யானைக்குப் பிடிக்கும்
அடித்தால் வலிக்கும்
வாய் வைத்துக் கடித்தால்
நுனி கசக்கும்
அடி இனிக்கும் அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: sameera on August 02, 2013, 07:46:55 PM
கரும்பு
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Bommi on October 26, 2013, 11:28:27 PM
சிவப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும் அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: sameera on November 08, 2013, 03:47:31 PM
பற்கள்!

சிவப்பு ரோஜா= உதடு!
 வெள்ளை மலர்கள்= பற்கள்!
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: SowMiYa on November 28, 2013, 04:49:08 PM
முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: sameera on December 17, 2013, 05:13:22 PM
கை விரல்கள்

Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: SHaBu on September 29, 2015, 06:09:34 PM
மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை
போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
   
                                     அணில்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: SanSa on January 09, 2017, 03:26:53 PM
ஓடையில் ஓடாத நீர் , ஓருவரும் குடிக்காத நீர்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on January 09, 2017, 03:39:03 PM
கண்ணீர்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: SanSa on January 09, 2017, 04:19:12 PM
ஒரு சாண் குச்சிக்குள்ளே , ஒளிந்துருக்கான் கருப்பு மனிதன் ?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: EmiNeM on April 24, 2017, 09:17:14 PM
எழுது கோல் ( பென்சில் )
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on June 25, 2017, 04:41:22 PM
[highlight-text]ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்?[/highlight-text][/size]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on June 26, 2017, 09:04:13 AM
[highlight-text]தீ

seriya terile...chinna guess  [/ :-\ :Dcolor]
[/highlight-text]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on June 26, 2017, 02:57:41 PM
[highlight-text]தீ என்பது சரி.... ;D ;D ;D

முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது! – அது என்ன?[/highlight-text]
[/color]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on June 26, 2017, 03:23:37 PM
மயில்  :D :D same just geussing
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on June 26, 2017, 04:41:40 PM
தலையை சீவினால் தாகம் தீர்ப்பான் .அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: NiYa on June 26, 2017, 07:28:11 PM
இளநீர்

பல்லிருந்தும் சிரிக்கமாட்டான் ,கண்ணிருந்தும் பார்க்கமாட்டேன் அவன் யார் ?

Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on June 27, 2017, 12:09:58 AM
seeeppu [/font]  just geussing
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: NiYa on June 27, 2017, 12:47:30 AM
சரி தான்

ராஜா ராணி உண்டு நாடல்ல, இலைகளும் உண்டு
ஆனால் மரம் அல்ல அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on August 05, 2017, 02:22:38 PM
வாழைமரத்தில்  :-\ :-\ :-\

ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on August 05, 2017, 02:26:18 PM

தீ ...நெருப்புடா நெருங்குட ..பாப்போம்
தண்ணிய மட்டும் ஊத்திடாதடா
செத்துருவேன் ....

சரியா விடை ??
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on August 05, 2017, 02:30:42 PM
ஆமா சரியான விடை.... ;D ;D ;D

எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on August 05, 2017, 02:39:46 PM
light :Dlight :Dமின்விளக்கு
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on August 05, 2017, 02:52:05 PM
:o :o இல்லை

எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on August 05, 2017, 02:53:28 PM
torchlight :( sediya ?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on August 05, 2017, 02:57:21 PM
;D ;D இல்லை

எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?

Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on August 05, 2017, 02:59:52 PM
 :o :osuriyano..ilaye kaile eduka mudiyathe :'( :'(clue plj
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on August 05, 2017, 03:01:13 PM
;D (மெ ) எழுத்தில் அரபிக்கபடும்...

எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on August 05, 2017, 03:04:07 PM
 :D :Dkandupidichitene ...
yes yes...

meluguvarthiமெழுகுவர்த்தி
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on August 19, 2017, 02:52:29 AM
correct
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeSiNa on August 29, 2017, 08:33:45 PM
அப்பன் சொரியன்
அம்மா சடச்சி
புள்ளையோ சக்கரக்கட்டி அது என்ன...?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: joker on August 30, 2017, 11:32:14 AM
palaapaham  :D
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeSiNa on August 30, 2017, 01:44:25 PM
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MyNa on September 03, 2017, 02:17:10 PM
மிதிவண்டி
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeSiNa on September 04, 2017, 05:00:30 PM
கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MyNa on September 04, 2017, 07:27:02 PM
உப்பு
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: joker on September 05, 2017, 12:45:36 PM
megam
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on September 16, 2017, 04:31:53 PM
corect > உப்பு

[highlight-text]next >[/highlight-text]இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்- அவன் யார் ?
[/size]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: joker on September 16, 2017, 07:02:02 PM
NILA
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on September 18, 2017, 06:36:07 PM
அணில்

[highlight-text]உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன ?[/highlight-text]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: joker on September 18, 2017, 07:51:09 PM
அணிலுக்கு உயிரில்லையா ?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on September 20, 2017, 11:59:01 AM
corect na....adhu maripoachi na sorry

மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: joker on September 21, 2017, 11:25:55 AM
SPONGE  :D :D
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on September 30, 2017, 11:19:54 PM
முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை – அது என்ன ?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MyNa on October 01, 2017, 11:16:59 AM
நாக்கு
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on November 21, 2017, 07:31:27 PM
இதயம் போல் துடிதுடிக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on March 16, 2018, 01:36:02 PM
கடிகாரம்

NEXT : எட்டாத வெண்ணிலா எங்க வீட்டு அடுப்பிலே காயுது. அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on March 16, 2018, 04:15:28 PM
எட்டாத வெண்ணிலா எங்க வீட்டு அடுப்பிலே காயுது. அது என்ன?

 ;D   தோசை

NEXT > முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on March 17, 2018, 12:00:06 PM
 :D நாக்கு

- இலையைச் சுருட்டும் மரம்; ஏறினால் வழுக்கும் மரம். காயோ துவர்க்கும் மரம்; கனியோ இனிக்கும் மரம். அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: EmiNeM on April 05, 2018, 11:02:13 PM
வாழை மரம்

முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on April 06, 2018, 06:18:02 AM
- கண்மணி

 அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: VipurThi on April 06, 2018, 06:29:35 AM
-நிலா-

ஆயிரம் கண்ணுடைய தேவி ஆற்றிலே மூழ்கி வெயிலிலே காய்கிறாள் அவள் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on April 06, 2018, 07:32:32 PM
சூரியன்....

பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல, பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல. அது எது?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: joker on April 06, 2018, 08:10:18 PM
[highlight-text]வௌவால் [/highlight-text]

விளக்கை சுமந்தபடி விடிய விடிய பறப்பான்
யார் அவன் ?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on April 24, 2018, 11:38:00 AM
மின்மினிப்பூச்சி

சங்கரன் கோவில் டப்பா தாயும் மகளும் தேய்ப்பா – அவை என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on April 24, 2018, 01:57:57 PM
;D [highlight-text]அம்மி குழவி[/highlight-text]

கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது – அது என்ன?
[/size][/color]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on April 24, 2018, 02:55:19 PM
 ;Dகரும்பு

காலில்லாதவன் வளைவான், நெளிவான் காடு மேடெல்லாம் அலைவான் அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: joker on April 24, 2018, 03:12:24 PM
பாம்பு  :D :D

வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான்
பின்
வெளியே உள்ளதை சாப்பிட்டுவிட்டு உள்ளே உளளதை எறிந்தான்
அது என்ன ?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on April 26, 2018, 12:26:36 PM
[highlight-text]சோளம் [/highlight-text]

உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?
[/size][/color]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on April 26, 2018, 12:54:48 PM
தராசு

ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது" அவர்கள் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: joker on April 26, 2018, 02:54:14 PM
[highlight-text]எறும்புக் கூட்டம்[/highlight-text]

எத்தனை தரம் சுற்றினாலும்
தலை சுற்றாது (thn)
அது என்ன?!!?
[/size][/color]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on April 26, 2018, 04:47:52 PM
[highlight-text]மின்விசிறி[/highlight-text]

யாரும் செய்யாதத கதவுவு தானே திறக்கும் தானே மூடும் அது என்ன ?
[/size][/color][/color]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: joker on April 26, 2018, 05:27:53 PM
[highlight-text]கண் இமை[/highlight-text]  :D :D

பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவன் யார் ?! (thn)
[/size]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on April 26, 2018, 06:28:21 PM
[highlight-text]சிப்பு[/highlight-text]

மண்ணுக்குள் கிடப்பவன் மங்களகரமானவன் அவன் யார்?
[/color][/color]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on April 27, 2018, 08:58:04 AM
மஞ்சள்

இதயம் போல் துடிதுடிக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on May 04, 2018, 08:58:01 PM
[highlight-text]கடிகாரம்[/highlight-text]

இங்கிருந்து பார்த்தால் இரும்புக் குண்டு; எடுத்துப் பார்த்தால் இனிய பழம். அது என்ன?
[/size][/color]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on May 07, 2018, 08:19:36 AM
விளாம்பழம்

ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அந்த அழகான மண்டபம் , ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் அந்த மண்டபம். அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on May 09, 2018, 08:19:23 PM
[highlight-text]தேன் கூடு[/highlight-text]

அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன?
[/size][/color]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on May 11, 2018, 07:18:23 AM
காற்று

படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: joker on May 11, 2018, 10:56:24 AM
[highlight-text]பட்டாசு[/highlight-text]  :D :D :D

தாகம் போக்கும் தண்ணீர் இல்லை
களைப்பை போகும் மருந்தும் இல்லை
சண்டைக்கு செல்லும் இது ஆயுதமும் இல்லை
இது என்ன ?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on May 11, 2018, 03:31:48 PM
இளநீர்

பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது. அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: joker on May 11, 2018, 03:37:11 PM
இளநீர் ??????????
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on May 11, 2018, 04:02:20 PM
 ;D ;D ;D ;D adichi vitten joker anna ans enna  :'(
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: joker on May 11, 2018, 05:00:30 PM
[highlight-text]சோடா (பாட்டில் )[/highlight-text]

அடிச்சிவிட்டீங்களா நல்ல வருவீங்கம்மா நீங்க
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on May 17, 2018, 12:22:57 PM
;D [highlight-text]பாம்பு[/highlight-text]

நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்?
[/size][/color]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: joker on May 17, 2018, 01:59:04 PM
[highlight-text]அன்னம் [/highlight-text]

காகிதத்தை கண்டால் கண்ணீர் வரும் அது யார் ?  :D :D
[/size][/color]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on May 17, 2018, 02:36:57 PM
[highlight-text]பேனா [/highlight-text] ;D ;D ;D

ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
[/size][/color]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on May 24, 2018, 08:19:38 AM
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன? ;)
விரல்கள்

தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: JeGaTisH on May 24, 2018, 02:37:28 PM
;D ;D ;D ;D  [highlight-text]தபால் தலை[/highlight-text]

சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?
[/size][/color]
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: DoRa on May 24, 2018, 06:09:24 PM
தீக்குச்சி :D .......

 ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் அவன் யார்? ;)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ice Mazhai on May 24, 2018, 08:32:21 PM
செருப்பு

புதிய விடுகதை எனக்கு தெரியல
என்னை மன்னித்து யாராவது தொடருங்கள்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: DoRa on May 24, 2018, 08:36:15 PM
ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது என்ன? ;)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: சாக்ரடீஸ் on May 25, 2018, 01:47:42 AM

Answer : நிலா

Que:
கூடவே வருவான். ஆனால் பேசமாட்டான். யார் அவன்...????

Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: DoRa on May 25, 2018, 02:10:33 AM
நிழல்   :P

வந்தால் கொண்டாட்டம், வராவிட்டால் திண்டாட்டம்? ;)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on May 25, 2018, 06:32:30 AM
மழை
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on July 13, 2019, 07:41:44 PM
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Achilles on August 27, 2019, 11:47:09 PM
idhayam
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: BreeZe on August 28, 2019, 10:10:35 AM
Clock
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on June 18, 2020, 11:17:17 AM
bree baby n Achilles thavarana vidai...
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MysteRy on June 18, 2020, 07:06:37 PM
மூச்சு (Muchu)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: CheetaH AdhitYa on June 23, 2020, 09:10:03 PM
அண்டை வீட்டில் குடியிருப்போம் அக்காள் தங்கை நாங்கள்;
கிட்டகிட்ட இருந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டோம் - அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: MoGiNi on June 24, 2020, 01:38:28 AM
kankal
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: CheetaH AdhitYa on June 24, 2020, 02:49:41 PM
correct mogini  8)

next-
பறிக்கப் பறிக்க பெரிதாகும் அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on June 24, 2020, 08:36:36 PM
பள்ளம்

வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம்
அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ninja on June 24, 2020, 08:53:56 PM
மழை மேகம்

மீன் பிடிக்க தெரியாதாம் ஆனால் வலை மட்டும் பின்னுவானாம் அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on June 24, 2020, 09:08:23 PM
சிலந்தி

எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள் அவள் யார் ?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: TiNu on June 30, 2020, 06:42:56 PM

நிலா

எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன். தண்ணீர் குடித்தால் இறந்துவிடுவேன். நான் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: CheetaH AdhitYa on July 02, 2020, 12:30:52 AM
எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன். தண்ணீர் குடித்தால் இறந்துவிடுவேன். நான் யார்?

விடை-நெருப்பு

புதியது-
பா‌‌ஸ்போ‌ர்‌ட்டு‌ம் வே‌ண்டா‌ம், ‌விசாவு‌ம் வே‌ண்டா‌ம்,
உலக‌த்தையே சுத்தி வரலாம். அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ninja on July 02, 2020, 08:29:41 AM
கனவுல தான் சுத்தி வர முடியும்  :o விடை: கனவு

அடுத்து: நடக்க முடியாது: ஆனால் நகராமல் இருக்காது. அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Natchathira on July 02, 2020, 10:22:31 AM
நடக்க முடியாது: ஆனால் நகராமல் இருக்காது. அது என்ன?  கடிகார முட்கள் ;D ;D ;D ;D

கோணலாக இருந்தாலும் குணமும் சுவையும் குன்றாது. அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: CheetaH AdhitYa on July 02, 2020, 06:19:17 PM
கோணலாக இருந்தாலும் குணமும் சுவையும் குன்றாது. அது என்ன?

விடை-கரும்பு

புதியது- ஈரேழு பதினுலு இறகு மயிலா
முந்நான்கு பன்னிரண்டு முத்து மயிலாட,
வராத பெண்களெல்லாம் வந்து விளையாட - அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Natchathira on July 03, 2020, 06:43:11 AM
ஈரேழு பதினுலு இறகு மயிலா
முந்நான்கு பன்னிரண்டு முத்து மயிலாட,
வராத பெண்களெல்லாம் வந்து விளையாட - அது என்ன?  ----பல்லாங்குழி

மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ninja on July 03, 2020, 09:09:27 AM
மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்
விடை: பஞ்சு

அடுத்து:
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: TiNu on July 03, 2020, 12:09:59 PM

இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? - மிதி வண்டி

அடுத்து:
காட்டிலே பச்சை; கடையிலே கருப்பு; வீட்டிலே சிவப்பு;  அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on July 10, 2020, 08:08:30 AM
  காட்டிலே பச்சை; கடையிலே கருப்பு; வீட்டிலே சிவப்பு;  அது என்ன? -மரம்,கரி, நெருப்பு..

மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ninja on July 10, 2020, 08:27:17 AM
விடை: விழுது

அடுத்து,
ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: TiNu on July 12, 2020, 03:16:18 PM

ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?

விடை:கண்ணீர்

அடுத்து,

எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்?

Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Evil on July 12, 2020, 04:05:36 PM
எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்?

விடை:கோமாளி

அடுத்து,
ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது" அவர்கள் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: TiNu on July 13, 2020, 04:37:54 PM

விடை: எறும்புக் கூட்டம்

அடுத்து,
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன ?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on August 01, 2020, 09:50:37 AM
- பாய்

அடுத்து - வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார் ?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Evil on August 01, 2020, 01:57:07 PM
விடை: தபால் பெட்டி

அடுத்து,
ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on August 01, 2020, 05:02:06 PM
-முட்டை

வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Natchathira on August 06, 2020, 04:18:21 AM
கல்வி

நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on August 06, 2020, 09:05:43 AM
அச்சு வெல்லம்

குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்?   
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: TiNu on September 02, 2020, 12:04:15 AM
குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்? ---> கத்திரிக்காய்

Next: பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும்,
தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?

Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on September 02, 2020, 10:23:23 AM
 - முருங்கைமரம்

 அடுத்து-கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ninja on September 02, 2020, 10:26:38 AM
விடை : புகை
அடுத்து -
ஆகாயத்தில் பறக்கும், அக்கம் பக்கம் போகாது?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on September 07, 2020, 06:40:18 AM
கொடி

 அடுத்து -அண்டமென்ற பெயரும் உண்டு, அடை காத்தால் குஞ்சும் உண்டு?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ANJANA on July 20, 2023, 01:24:39 AM
முட்டை

பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Madhurangi on August 01, 2023, 02:10:46 PM
பெட்ரோல்

வழியெல்லாம் கூடவே வருவான்; வீட்டுக்குள் மட்டும் வரமாட்டான். அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ishaa on August 03, 2023, 01:23:49 AM
காலணிகள்

ஆயிரம் அறைகள் கொண்ட பிரம்மாண்டமான மிட்டாய் கடை அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: VenMaThI on August 05, 2023, 03:36:13 AM

தேன்கூடு

யாரும் ஏற முடியாத மரம்; கிளைகள் இல்லாத மரம். அது என்ன மரம்?

Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ishaa on August 09, 2023, 12:28:42 PM
வாழை மரம்

ஒய்வு எடுக்காமல் இயங்கும்..! ஆனால் ஒய்வு எடுத்தால் மறுபடியும் இயக்காது அது என்ன.?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Nivrutha on August 09, 2023, 03:04:56 PM
கடிகாரம்

அடுத்து..

தோலை உரித்தால் அழ மாட்டான். தோல் உரித்தவனை அழ வைப்பான்.அவன் யார்??
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ishaa on August 10, 2023, 02:14:59 AM
வெங்காயம்

கடிகாரம் - தப்பு

ஒய்வு எடுக்காமல் இயங்கும்..! ஆனால் ஒய்வு எடுத்தால் மறுபடியும் இயக்காது அது என்ன.?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Nivrutha on August 10, 2023, 12:07:29 PM
வெங்காயம்

கடிகாரம் - தப்பு

ஒய்வு எடுக்காமல் இயங்கும்..! ஆனால் ஒய்வு எடுத்தால் மறுபடியும் இயக்காது அது என்ன.?

இதயம்??
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ishaa on September 21, 2023, 04:49:39 AM
சரியான விடை 👏👏

சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Madhurangi on September 21, 2023, 07:16:40 AM
Ishaa sis eyes?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ishaa on September 21, 2023, 10:50:26 AM
சரியான விடை👏👏👏

Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ishaa on September 21, 2023, 03:14:00 PM
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: சாக்ரடீஸ் on September 21, 2023, 03:58:29 PM
குடை
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ishaa on September 21, 2023, 07:20:10 PM
👏👏👏

நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடியும் நடந்தான் அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: சாக்ரடீஸ் on September 21, 2023, 07:23:07 PM
✏️
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ishaa on September 21, 2023, 08:17:36 PM
👏👏👏

ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: IniYa on September 21, 2023, 08:44:23 PM
கண்ணீர்😭
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ishaa on September 21, 2023, 09:09:51 PM
👏👏👏

பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Madhurangi on September 21, 2023, 10:35:22 PM
Mounam 🤐
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: vaseegaran on September 24, 2023, 11:12:54 AM
அமைதி
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ishaa on September 25, 2023, 12:41:37 PM
@Madhu& @Vaseegaran சரியான விடை👏👏👏

உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்???
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on October 16, 2023, 02:09:33 AM
விடை: பெயர்

மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன? 
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: IniYa on October 16, 2023, 11:35:52 AM
விடை: விழுது
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on December 20, 2023, 01:58:48 AM
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Vethanisha on December 20, 2023, 05:37:52 AM
Idly  ;)
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: சாக்ரடீஸ் on December 20, 2023, 10:47:41 AM
Poori 🤔🤔🤔
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on December 23, 2023, 04:33:28 PM
vethu ma Good try ;)

Jocky 🎉crct Ans 👏

அடுத்து: சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: சாக்ரடீஸ் on December 23, 2023, 11:16:29 PM
@rithika- Dop😉

Answer- Eyes
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on December 27, 2023, 09:23:53 AM
bery bery good Jocky
Crct Ans....🎉👏

 அடுத்து: ஓயாமல் இரையும் இயந்திரமல்ல,  உருண்டோடி வரும்
பந்தும் அல்ல அது என்ன?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Ishaa on December 31, 2023, 02:11:51 AM
@RithiKa clock'a?
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: ரித்திகா on January 06, 2024, 03:49:40 PM
No baby
Title: Re: விடுகதைக்கான விளையாட்டு பகுதி
Post by: Vethanisha on January 06, 2024, 07:17:01 PM
Kadal Alai🌅