Author Topic: இரத்த அழுத்தம் என்றால் என்ன?  (Read 96 times)

Offline JsB

  • Jr. Member
  • *
  • Posts: 56
  • Total likes: 224
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இதயம், உடலுக்கு தேவையான இரத்தத்தை அனுப்புகிறது.  அப்போது ஏற்படும் அழுத்த மாற்றமே, இரத்த அழுத்தமாகும்.  இந்த இரத்த அழுத்தம் எப்போழுதும் ஒரே மாதிரியாக‌  இருப்பதில்லை.  மாறாக, காலையில் குறைவாக இருக்கும் இரத்த அழுத்தம், மாலையில் அதிகமாகும். அதேபோல், உடற்பயிற்சியின் போதும், உணர்ச்சி வசப்படும் போதும் அதிகமாகும், இரத்த அழுத்தம்,  உறங்கும் பொழுது குறைவாக இருக்கும்.

பொதுவாக, சராசரி நபருக்கு 120/80 எம்.எம்.எச்.ஜிக்கு மேல் இரத்த அழுத்தத்தின் அளவு இருக்க கூடாது.  அவ்வாறு 120/80 எம்.எம்.எச்.ஜிக்கும், அதிகமாக, இரத்த அழுத்தம் இருப்பதையே 'இரத்த கொதிப்பு' என்கின்றனர் மருத்துவர்கள்.  இந்த இரத்த கொதிப்பினால் இதயம் விரைவில் பலவீனமடைந்து, மரணத்தை சந்திக்கும் நிலை ஏற்படும்.

இரத்த கொதிப்பை ஏற்படுத்தும் 5 காரணங்களை ...
அவை பின் வருமாறு...

உடல் உழைப்பின்மை மற்றும் உடற்பயிற்சியின்மை:

பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமற்ற, உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையையே கடை பிடித்து வருகின்றனர். உடல் உழைப்பின்மை மற்றும் சோம்பேறித்தனமாக இருப்பதினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.இத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினை கைவிட்டு, குறைந்த பட்சம் சிறு சிறு உடற்பயிற்சிகளையாவது மேற்கொள்வதன் மூலம், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதுடன், நீரிழிவு, உடல் பருமன் அதிகரித்தல் மற்றும்  இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
 
புகைப்பிடித்தல்:

புகைப்பிடிக்கும் பழக்கமானது, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இரத்த கொதிப்பு உண்டாக்கும்.ஒவ்வொரு முறை புகைப்பிடிக்கும் போதும் ரத்த அழுத்தம் உயர்கிறதாம், இந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்தால் இதயத்தமணிகள் பலவீனம் அடைந்து விரைவில், இதயம் செயலிழக்க வாய்ப்புகள் அதிகம்.

அதிகளவு மது அருந்துதல்:

அதிக அளவில் மது அருந்துவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை  அதிகளவு மது அருந்தும் பழக்கம் ஏற்படுத்தி விடும்.

ஆரோக்கியமற்ற உணவு முறை:

ஆரோக்கிய மற்ற உணவு முறைகளால், குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு மற்றும் சோடியம் கலந்த உணவுகளை சாப்பிடுவதினால், ரத்த அழுத்தம் உயர்வதுடன், இதயம் சம்மந்தமான நோய்களையும் சந்திக்க நேரிடுமாம். மேலும், இத்தகைய உணவு பழக்கம், கிட்னியின் செயல்பாட்டை குறைப்பதுடன்,விரைவில் கிட்னியின் செயலிழப்பிற்கும் வழிவகை செய்கிறது.

மன அழுத்தம் அதிகரித்தல்:

மன அழுத்தமும், உயர் இரத்த அழுத்தமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவையாக கருதப்படுகிறது.  இத்தகைய, அதிகப்படியான மனக்கவலை, உங்களது பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்காது, மாறாக உடல் நலத்தை கெடுத்துவிடும். இத்தகைய மோசமான விளைவுகளை கொடுக்க கூடிய மன அழுத்தத்தை, சமனில் வைத்துக்கொள்ள யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.


உடலில் நோய் ஏற்பட்டுள்ளது அதைச் சரிசெய்யவே பி.பி என்ற ஒரு விஷயம் உடலில் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பி.பி என்பது பின்னே நடப்பதை முன்னே சொல்லும் அறிவிப்பு மணியாகும். பி.பி இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் உடலில் ஏதோ பிரச்சினை அல்லது நோய் என்பதை அறிந்து, அதைக் குணமாக்கும் வழியை தேடுங்கள். அந்த நோய் குணமானால் பி.பி தானாகவே காணாமல் போய்விடும்.
 
அதை விடுத்து பி.பி.யை மட்டும் குறைப்பது என்பது அறிவிப்பு மணியை மட்டும் கழற்றி வைப்பது போலாகும். அறிவிப்பு மணியைக் கழற்றி வைத்து விட்டால் பின்னால் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் போய்விடும்.

உடலில் உருவான நோயைக் குணமாக்காமல் அதை உணர்த்தும் பி.பி.யை மட்டும் மருந்துகள் மூலம் குறைப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
 
வலுக் கட்டாயமாக இதயத்தின் துடிப்பு குறைக்கப்படுகிறது. இரத்த நாளங்கள் விரிவாக்கப்பட்டு, அவை இயற்கையாகச் சுருங்கி விரியும் தன்மையை இழக்கின்றன. அதனால் நாளாவட்டத்தில் அவை தண்ணீர்க் குழாய் போல் ஆக்கப்பட்டு, உடலின் தன்மைக்கு அல்லது நோயின் தன்மைக்குத் தகுந்தாற்போல் சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக உடலில் இருந்து உப்புகளும் கனிமங்களும் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுவதால் இரத்தம் நீர்த்துப்போய் விடுகிறது.

இதற்குப்பின் எந்த நோய் வந்தாலும் நம்மால் உணர முடியாமல் போய்விடுகிறது. பி.பி. மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக நோய்கள் தொடர்ச்சியாக வருவது இதனால்தான். அதனால் தயவுசெய்து பி.பி எதனால் வந்தது என்பதை அறிந்து முதலில் அந்த நோயைக் குணமாக்குங்கள்.
 
நோய் குணமாக வேண்டுமானால் முதலில் உங்கள் ஜீரணத்தைச் சரி செய்யுங்கள், உடலில் நாட்பட்டுச் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றுங்கள். இந்த இரண்டையுமே அக்குபஞ்சர் (தொடு சிகிச்சை) மருத்துவம் செவ்வனே செய்கிறது. வயிறுதான் அனைத்து நோய்களின் வரவேற்பறை. அதைச் சரி செய்யாமல் பி.பி. வந்து விட்டது சுகர் வந்து விட்டது என்று புலம்புவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை.படித்து பயன் பெறுங்கள் ..
என்றும் அன்புடன்,
தோழி JSB 🌹