Author Topic: Baahubali 1 பாகுபலி  (Read 2853 times)

Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Baahubali 1 பாகுபலி
« on: November 21, 2018, 08:35:57 PM »
மூச்சிலே தீயுமாய்

மூச்சிலே தீயுமாய்
நெஞ்சிலே காயமாய்
வறண்டு போன விழிகள் வாழுதே!
காட்சி ஒன்றினைக் காட்டத்தான்
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்
தேசமே... உயிர்த்து எழு!

இம் மகிழ்மதி
அண்டத்தின் அதிபதி
விளம்பாய்! விளம்பாய்!

ஞானத்தின் ஞாலம் இஃதே
இயம்புவாய்! நெஞ்சியம்புவாய்!

குறையேறா மாட்சியோடு
கறையுறாத மகிழ்மதி!
திரைவீழா ஆட்சியோடு
வரையிலா இம் மகிழ்மதி!

தன்னிற் றுயிற்ற துளிர்களின்
அரணே என போற்றுவாய்!
எதிர்க்கும் பதர்களை
உதிர்த்து மாய்த்திடும்
அசுரனே என சாற்றுவாய்!

புரிசை மத்தகம் மீதிற்
வீற்றிடும் பதாகையே நீ வாழி!
இரு புரவியும் ஆதவனும்
பொன் மின்னும் அரியாசனமும்
வாழியே!

சிவா சிவாய போற்றியே


சிவா சிவாய போற்றியே! 
நமச்சிவாய போற்றியே!
பிறப்பறுக்கும் ஏகனே!
பொறுத்தருள் அநேகனே!

பரம்பொருள் உன் நாமத்தை
கரங்குவித்துப் பாடினோம்!
இறப்பிலி உன் கால்களை
சிரங்குவித்து தேடினோம்!

யாரு இவன்? யாரு இவன்?
கல்லத் தூக்கிப் போறானே!
புள்ள போல தோளு மேல
உன்னத் தூக்கிப் போறானே!

கண்ணு ரெண்டு போதல!
கையு காலு ஓடல!
கங்கையத்தான் தேடிகிட்டு
தன்னத் தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து போகுதே!

எல்லையில்லாத ஆதியே
எல்லாமுணர்ந்த சோதியே
மலைமகள் உன் பாதியே
அலைமகள் உன் கைதியே

அருள்வல்லான் எம் அற்புதன்
அரும்பொருள் எம் அர்ச்சிதன்
உமை விரும்பும் உத்தமன்
உருவிலா எம் உருத்திரன்

ஒளிர்விடும் எம் தேசனே
குளிர்மலை தன் வாசனே
எழில்மிகு எம் நேசனே
அழித்தொழிக்கும் ஈசனே

நில்லாமல் ஆடும் அந்தமே
கல்லாகி நிற்கும் உந்தமே
கல்லா எங்கட்கு சொந்தமே
எல்லா உயிர்க்கும் பந்தமே!

மனோகரி

உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்

பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்... மூரல்
நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல்.... ஆரல்

மனோகரி.... மனோகரி...
மனோகரி... மனோகரி....

கள்ளனா௧ உன்னை அள்ள
மெள்ள மெள்ள வந்தேன்!
எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!

ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள
சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்!

ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...


நீல வானை ஊற்றி
கண்கள் படைத்தானோ?
வேறே... என் தேடல் வேறே!
தேயும் திங்கள் தேய்த்து
செய்த இடை தானோ?
வேறே... என் தேடல் வேறே!
வேழம் அது கொண்டேதான்
அவன் என் தோள்கள் செய்தானோ!
வாழை அது போலே தான்
அவன் என் கால்கள் செய்தானோ!

வழுக்கிட வா!
மனோகரி.... மனோகரி...
மனோகரி... மனோகரி....

பூவை விட்டு பூவில் தாவி
தேனை உன்னும் வண்டாய்
பாகம் விட்டு பாகம் பாகம் தாவினேன்!

ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...

மேகத் துண்டை வெட்டி
கூந்தல் படைத்தானோ?
வேறே... என் தேடல் வேறே!
காந்தள் பூவைக் கிள்ளி
கைவிரல் செய்தானோ?
வேறே... என் தேடல் வேறே!
ஆழி கண்ட வெண்சங்கில்
அவன் அணல் ஒன்றைச் செய்தானோ!
யாளி இரண்டைப் பூட்டி
அவன் தனம் ரெண்டைச் செய்தானோ!

வழுக்கிட வா!
மனோகரி.... மனோகரி...
மனோகரி... மனோகரி....

தேகம் எங்கும் தாகம் கொண்டு
நான் தவிக்கிறேனே
மோகம் மொண்டு நான் குடிக்கிறேன்!

ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...