Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 265  (Read 2364 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 265

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

« Last Edit: May 09, 2021, 12:10:44 AM by Forum »

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !


நான் கடல் தாண்டவில்லை...
கைகளில் குழந்தைகளுடன்....
சாக்கடையை  தாண்டுகிறேன்..
என் கையில் இருப்பது
குழந்தைகளுமல்ல...
இந்நாட்டின் எதிர்காலம்...

கட்டியவன் உடனான‌
காலப்பிரமாணம்...
காலாவதியாகி விட்டதால்...
கடக்க தோணி இல்லா ...
கண்ணீர் மாலுமி நான்...
கையில் இருக்கும் பூங்கொத்துக்களை...
காப்பாற்ற புயல்களுடன்
ஒப்பந்தம் வாசித்து..
உயிர்மூச்சு  சுவாசிக்க ..
கையோப்பம் இடுகிறேன்..

இந்நாட்டு அரசியல்வாதியும்
இக்குழந்தைகளின்‌
தகப்பனும் ஒன்று..
ஓட்டு வாங்கும் வரை
லஞ்சம் கொடுத்தேனும்
மனதை கவர்வர்..
அதன் பின்..‌
அவர்களும் ...
சாகுந்தலையை மறந்த
துஷ்யந்தர்கள்தானே?

பயணங்களின்‌பாதைகள்
பாழ்ப்பட்டு இருந்தால் என்ன?
கண்களில் தெளிவும்..
கைகளில் உரமும்...
நெஞ்சில் உறுதியும் போதுமே...

வாழவைத்த இறைவன் ..
வழியா காட்டாமல் போய்விடுவான்..?
வாருங்கள் செல்வங்களே...
வருங்காலம் நம் கையில்!


« Last Edit: April 19, 2021, 04:46:36 PM by AgNi »

Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 120
  • Total likes: 481
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
மழையே...
தொடர் மழையே...
கொட்டித் தீர்த்த பெரு மழையே...
மக்களை துயரக் கடலில் தள்ளி
வேடிக்கைப் பார்க்கும் பருவமழையே...
உன்னால் இயல்பு வாழ்க்கையை
புரட்டிப் போட்டது வெள்ளப் பெருக்கு...
[/b]

திடீர் மழையே...
உன்னால் பல்வேறு பகுதிகளில் மக்கள்
அடைந்துள்ள சிரமம் கொடுமையானதே...
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டடுள்ள
பொருள் இழப்பு , அதைவிட மனதளவில்
ஏற்பட்டடுள்ள காயம் என்றுமே ஆறாதே...

இரவு முழுதும் பெய்யும் கன மழையே...
உன்னால் ஏறி நீர் சாலையில்
வெள்ளம் போல செல்கிறதே...
தாய் குழந்தைகள் மீட்புக்காகவும்...உணவுக்காகவும்
போராடுகின்ற புகைப் படக் காட்சிகளை பார்க்கும் போது...
என் நெஞ்சு வலியால் துடிக்கிறதே...


இருந்தும் இறைவன் அனுப்பிய எச்சரிக்கை குறுந்தகவல்தான்
இந்த மழை என்பதை உணர்ந்து, மனித நேயத்துடன்
மக்கள் ஒருவருக்கொருவர் செய்து கொண்ட உதவியால்
கடுமையான சிரமங்களிலிருந்து மீண்டு வருகின்றனரே...

உயிரினங்களுக்கு இயற்கை தரும் வரமான மழையே...
தேங்கிய நீரை கடந்தே மக்கள்
எங்கும் செல்லும் நிலை மாறனுமே...
பேய்யென பெய்த மழையால்...
உயிரை கையில் பிடித்துக் கொண்டு
பூமி திக்கற்று ஓலமிட்டு
கதறும் சத்தம் முற்றிலும் மாறனுமே...

மழைக்காக நாமோ காத்திருக்கையில்
மழை நம் உயிரை வாங்குவதற்காக காத்திருக்கிறதே...
என்று நினைக்கிக்கும் ஒவ்வொரு மக்களின் எண்ணங்கள் மாறனுமே...
வெள்ளம் வரும் முன்னே அணை போடு என்பதை
கருத்தில் கொண்டு அனைவரும் சேர்ந்து செயல் படுவது சிறப்பு




என்றும் அன்புடன்,
இயற்கை தந்த அழகை
ரசித்து எழுதும் இயற்கை அழகி
ஜெருஷா

« Last Edit: April 22, 2021, 05:52:11 PM by JsB »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook



பசுமைமாறா
புரையோடிய நினைவுகள் !.
தேவையாயிருக்கிறது
அன்பும் ஆறுதலும் அரவணைப்பும்.

என்றும் இப்படி இருந்ததில்லை.
எந்நேரமும் நினைக்காவிட்டாலும்
காலில் கல் இடறும்போது
தலை வலிக்கும்போது
வெளி சென்று அசந்து வீடுவரும்போது
என்னையும் அறியாமல்
எனக்குள் நீ...

அம்மா... பாசப்புத்தம் நீ
நீண்ட பாதையில் நிழல் தரும் மரம் நீ
அகண்ட ஓடையில் பாலமும் நீ
பரந்த வெளியில் என் பாதையும் நீ...
சுய நலமில்லா சொந்தம் நீ.

அத்தனை அன்பாய்...
இறுக்கமாய், பிணைப்பாய்
அணைப்பாய், பாதுகாப்பாய்
அள்ள அள்ளக் குறையா
நிரம்பி வழியும் அட்சயபாத்திரம் நீ...
என் நலத்தின் தவத் தாய் நீ.

உன் மடி கடந்தபின்
துயர் நெடி வழி நெடுகிலும்,
புன்னகை மறந்து
பசப்பும் பொய்யான பருந்துகள் நடுவில்
நானும் நடிப்போடு.

ஆசையாய் இருக்கிறது...
மீண்டும் ஒரு முறை
உருமாறிச் சிறிதாகி
கோழியின் பாதுகாப்பில்
கோழிக்குஞ்சாய்
உன் அன்பில் வாழ்ந்திட.



- மாறன்



Offline thamilan

பெண்ணே 
நீ  சுமை  சுமக்கப்  பிறந்தவள்
உன் வாழவே ஒரு சுமை தானே - பிறந்து
பருவம்  அடையும்  வரை  தான் 
உனக்கு  சுதந்திரம்
அந்தப் பருவமே உனக்கு
சுமை தானே   
அதன் பின் சுமைகள் ஒவ்வொன்றாய்
உன்மேல்    திணிக்கப்படும்

குடுமச்ச்சுமை அதன் பின்
திருமணம் என்றொரு பெரும் சுமை
நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
உன்மேல் திணிக்கப்படும்
ஆயுள் சுமை அது

கணவனை மனதில் சுமக்க வேண்டும்
அவன் குடும்பத்திலும் தன் குடும்பமாக
சுமக்க வேண்டும்   
அவன் குழந்தையை வயிற்றில் சுமக்க  வேண்டும்
அவனுக்கு குழந்தை கொடுப்பதோடு
கடமை முடிந்து விடும்
அந்த குழந்தைகளை
பாலூட்டி சீராட்டி வளர்க்கும் சுமையும் உனதே

கணவன் வேலைக்கு போய் விடுவான்
மாமாவுக்கு ஊர்வம்பு பேசுவதத்திற்கே நேரம் போதாது
மாமிக்கோ டிவி சீரியல் பார்க்கவே நேரம் போதாது
கடைக்கு போக வேண்டுமா
குழந்தைகள் ஸ்க்கூல் கொண்டு போக வேண்டுமா
எல்லாம் அவளது சுமையே

கையில் ஒன்றும் நெஞ்சில் ஒன்றுமாக
தெருவுக்கு வந்தால்
அங்கும் அவளுக்கு போராட்டமே
நிற்காமல் ஓடும் வாகனங்கள் ஒரு புறம்
தெருவில் தேங்கி கிடக்கும்
சாக்கடை நீர் மறுபுறம்
தெருவை கடப்பதே பெரும் போராட்டம் அவளுக்கு

வாழ்நாள் எல்லாம் சுமை சுமக்கும் இவளுக்கு
நல்ல கணவன் கிடைத்தால்
மனச்சுமையை  சரி இறக்கி வைக்கலாம்
அவன் தரும் ஆதரவில்
எந்த சுமையையையும்  சுமக்கலாம் - இது
எத்தனைப் பெண்களுக்கு வாய்க்கிறது
இந்த  உலகத்தில் ?????

Offline MoGiNi

கடந்து சென்ற
தென்றலின் எச்சங்கள்
என்றும்
சுவாசித்தலுக்கு உரியவை ..

காதல் எனும் அழகியலின்
கரு பெண்மை
அந்த பெண்மையின் பால்
பூத்த மலர்கள்
மென்மை ...

கனவுகள் சுமந்தவள்தான்
கட்டியவன் கைபிடித்து
சிறு கல்லை கடக்கவும்
யுக யுகமாய் யோசித்து
யாசித்து நகர்ந்த நாட்களவை ..

உற்றவனின் இழப்பு
உடுக்கை இளந்தவளாச்சு
பெற்றவர் எவரும்
சுற்றமாக  கூட இல்லை

எதனை காலம்
எதை நினைத்து கடக்கும் ..
சமூகம் எனும்
சாக்கடையை
கடப்பதைவிடவா
இந்த சாக்கடை கடினம் ...

எதை நோக்கி
எதிர்காலம்
தெரியவில்லை
எனினும்
இவர்களை வைத்தே எதிர்காலம்

கண்களாகி காற்றுமாகி
ஊனுமாகி உயிருமாகி
உடைந்து பெற்றேன் உன்னை
உலர்ந்து போகும்வரை
உயிராய் காப்பேன்
வாடா என் செல்லமே
கொஞ்சம் வாழ்ந்துதான் பார்ப்போமே ...

Offline SweeTie

காதலின் சுவடுகள்
காயவில்லை   இன்னும் 
காலனவன்   தீர்ப்பிலும்   
கருணையில்லை 
பேதையென்   வாழ்விலும்
சுருதியில்லை

காலமும்   கடந்து செல்ல   
வேதனைகள்  சோதனைகள்
எத்தனையோ  தடைக்கற்கள்
அத்தனையும்.......
நித்தமும்   கடக்கின்றேன்
வாழ்ந்துவிட துடிக்கின்றேன்

பெற்றவரை  மறந்து
உற்றவரை  துறந்து 
காதலெனும்  ஓடையில் 
காலமெல்லாம்  நீந்தி
கரையேற ஆசைகொண்டு
கைகூப்பி நிற்கின்றேன்   

காலம் கடந்துசெல்ல
காதலில்  பூத்த மலர்
வாழ்வை  அலங்கரிக்க
களி கொண்டேன் .
காலத்தால் அழியாத 
காவியமும் ஆனேன்

ஏமாற்றம்  எனைப்பார்த்து '
எள்ளி  நகையாடியது
எட்டி உதைத்து 
உருட்டி விளையாடியது ';
சில நாளில் .....
காமன்  களையிழந்தான்
ஜெயம்கொண்டான் காலன்

பெற்றவள்  கடமை 
சற்றேனும்  குறையாமல் 
சுமக்கின்றேன்   கடக்கின்றேன்
சோர்வு,  களை  தெரியாமல்
இறக்கிவைக்க  முடியாமல்
இரவுபகல் சுமக்கின்றேன்  ....... .

 

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

பெண்ணே நீதான் உலகத்தின் ஆதாரம்
அவளே உலகத்தின் சுவாசம்
அவள் இல்லையேல்
இந்த அகிலம் இல்லை...

பெண் யாதுமாகி நின்றாள்
யாவரும் புகழும் வண்ணம்
நீ  பெருமை சேர்க்கும் பணியை செய்தாய்...

பெண்ணே எத்தனை அவதாரம்
அன்னையாக,சகோதரியாக,
மனைவியாக , தோழியாக
அனைத்திலும் நீ தான் சிறந்தவள்.....


பெண்ணே உலகத்தில் எத்தனை
பதவிகள் நீ பெற்றாய்
அதிபராகவும், பிரதமராகவும்,போர் விமானியாவும்,
விண்வெளி வீராங்கனை, ஒலிம்பிக் பதக்கம் வென்று தாய் நாட்டின் மானத்தை காப்பாற்றவும் சாகசம் புரிந்தாள்....


பெண் என்பவள் அவளே
உலகத்தின் கற்பக விருட்சம்
அவள் போன்று பாசமாகவும்,பரிவாகவும்
கருனையாகவும், பணிவாகவும் நடந்து
கொள்வதில் அவள் போல் யாருமில்லை.....


பெண்ணே கவனம் இது
ஆணாதிக்க சமூகம் இங்கு சாதனை
படைத்தவர்கள் அனைவரும் இதை
எதிர் கொண்டு தான் சாதனை
புரிந்துள்ளனர்  ......


பெண் என்பவள் உலகத்தின் எழுச்சி
அவளே நாட்டின்  பெருமை
அவளே  குடும்பத்தின் ஆதாரம்
அவளே சாதனைகளின் பிறப்பிடம்.....


பெண்ணே நீ சமூகத்தின்
பல்வேறு வகையான விமர்சனங்களை
எதிர் கொண்டு வீரு நடை கொண்டு
 வா சாதனை படைப்போம்....


தாயின் அன்பிற்கு ஈடேது
தாயின் அன்பும் கொஞ்சும்
மழலை யின் சிரிப்பும் விலையேது
வாருங்கள் தாய் அன்பை போற்றுவோம்
இனி வளமான எதிர் காலம் அமைப்போம்......



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்