Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
<a href="http://www.youtube.com/watch?v=K9jQm0FZZ98" target="_blank" class="aeva_link bbc_link new_win">http://www.youtube.com/watch?v=K9jQm0FZZ98</a>


படம் : ரோமியோ ஜூலிட்
இசை : D.இம்மான்
பாடல் வரி : தாமரை
பாடியவர் : விஷால் டட்லாணி,சுனிதா சாரதிதூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

என் மேலே ஈரம் ஆக ஓருயிர் கரைவதை
நானே கண்டேன்

கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்

வேறு என்ன வேண்டும் வாழ்வில்

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

குயிலென மனம் கூவும்
மயிலென தரை தாவும்
என்னோடு நீ நிற்கும் வேளையில்

புழுதியும் பளிங்காகும்
புழுக்களும் புனுகாகும்
கால் வைத்து நீ செல்லும் சாலையில்

யார் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும்
நீ தந்த இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும்

காதல் வந்தால் கோபம் எல்லாமே
காற்றோடு காற்றாக போகின்றதே

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

இரவுகள் துணை நாடும்
கனவுகள் கடை போடும்

நீ இல்லை என்றால் நான் காகிதம்

விரல்களில் விரல் கோர்க்க
உதட்டினை உவர்ப்பாக்க
நீ வந்தால் நான் வண்ண ஓவியம்

நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை
ரீங்காரம்தான் செய்து கொல்கின்ற ஆணை

நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே
கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன்

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

என் மேலே ஈரம் ஆக
ஓருயிர் கரைவதை நானே கண்டேன்

கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை
இங்கு பார்த்தேன்

வேறு என்ன வேண்டும் வாழ்வில்......


                                             பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.
2
<a href="http://www.youtube.com/watch?v=QgSN41LopIc" target="_blank" class="aeva_link bbc_link new_win">http://www.youtube.com/watch?v=QgSN41LopIc</a>


படம் :தாயின் மணிக்கொடி
இசை : வித்யாசாகர்
பாடல் வரி : வைரமுத்து
பாடியவர் :கோபால் ஷர்மா ,தேவிநூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா...

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே என்னை கண்டேன்

கண்மூடினால் கண்மூடினால்
அந்நேரமும் உன்னை கண்டேன்

ஒரு விரல் என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா

மறு விரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா

உயிர் கொண்டு வாழும் நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா

இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

ஒ... இதே சுகம் இதே சுகம்
என்னாளுமே கண்டால் என்ன

இந்நேரமே இந்நேரமே
என் ஜீவனும் போனால் என்ன

ம்... முத்தத்திலே பல வகை உண்டு
இன்று சொல்லட்டுமா கணக்கு

இப்படியே என்னை கட்டிக்கொள்ளு
மெல்ல விடியட்டும் கிழக்கு

அச்சப்பட வேண்டாம் பெண்மையே
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

இதழோடு இதழ் சேர்த்து

உயிரோடு உயிர் கோர்த்து வாழவா

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா                                            பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.
3
GENERAL / Re: ❤❤ DaiLy QouTe ,Maybe It Can Make U ThiNk ❤❤
« Last post by ரித்திகா on April 22, 2018, 10:49:27 AM »
4
GENERAL / Re: ♥♥ << Sayings That Will Keep U GoinG >> ♥♥
« Last post by LoShiNi on April 22, 2018, 09:14:43 AM »
5

பக்தியோடு பார்த்தாய் 
தெய்வமாய்
ஆதலாலோ என்னவோ 
சந்நிதானத்திலே
வைத்து சமாதி கட்டுகிறான் ....

இலகுவான மனதோடு
இருப்பவளை ஏனோ உவமைக்காய்
 நிலவோடு ஒப்பிட்டு
பெருமை பிதற்றுகிறான்   ....

அறிவுவளர்க்க ஆசானிடம்
சென்றால் கனிவோடு நடவாமல்
களியாட்டம் ஆடுகிறான்  ....

கடைக்கண்ணி செல்ல
அண்டை வீட்டில் விட்டாலும்
பசுந்தளிர் என்றும்
பாராமல் பாம்பாய்
முழுங்க துடிக்கிறான் ....


பெண் சிசுவென, இருந்தாலும் 
காப்பது அரிதாகி போகிற
எழுபதாண்டுகளை கடந்த சுதந்திர இந்தியா
தீர்வு தான் என்ன ?

சாட்டையை கையிலெடுத்து
சட்டத்தை மாற்று
மிருகமாய் மாறினவனை
மிருகக்கூண்டில் அடை
செய்வதறியாது மரணபயத்தை
அவனும் உணர்ந்தே மரணிக்கட்டும் .....

மகள்களை அரவணைத்து
காத்த பெருமிதத்தில்
என் சுதந்திர தேவி
தலைநிமிர்வாள் .......
6
Mikka nanri Jegatish bro matrum Joker bro
7
செல்பி" மோகம்
     பாவம் பாராது
சூறையாடியது
      அவன் காதல் வேகம்
பல மனைகளிலும்
      வினையாகி போனது
புகைப்பட தாகம்

ஒரு கதை படித்த உணர்வு  உங்கள் வரிகளில்
பிம்பம் என் கண்களில் நிழலாடியது

ஆமாம் இன்றைய காலத்தின் அவலநிலை
செலஃபீ மோகம் கொண்டு காலனின் வருகையை
மறந்து போகும் மனிதர்கள்

தொடர்ந்து எழுதுங்கள் சிறந்த கருத்து இன்றைய காலத்திற்கு
ஏற்ற படைப்பு

வாழ்த்துக்கள்
8
ருக்கு ருக்கு ருக்குமணி
ரமணித் துளசி மணி
அப்போ அது அப்போ

சிக்குப் புக்கு சின்ன மணி
வெய்யில் பட்டா வெள்ளி பனி
இப்போ இது இப்போ

ருக்கு ருக்கு ருக்குமணி
ரமணித் துளசி மணி
அப்போ அது அப்போ

சிக்குப் புக்கு சின்ன மணி
வெய்யில் பட்டா வெள்ளி பனி
இப்போ இது இப்போ

சம்சார கலை அது
முகத்தில் தெரியுது
காமாட்சி விளக்கு ஜொலிக்குது
9
Ithayamae Ithayamae Yennai Maranthathu Yean
Pirivenum Thuyarilae Yennai Thalliyathu Yean
Un Peyar Solliyae Naan Paithiyam Aanen
Nilaiyena Thodarnthaen
Athai Neeyarivaayoa
Nizhal Thara Neeyondu Varuvaayoa
10
அருமையான கவிதை அசினி
கவிதை பயணம் தொடரட்டும்.
வாழத்துக்கள்.
Pages: [1] 2 3 ... 10