Author Topic: ~ முட்டை...முட்டை...முட்டை...! ~  (Read 1247 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முட்டை...முட்டை...முட்டை...!

முட்டையின் ஆதியைத் தேடிச் செல்ல வேண்டுமென்றால், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகச் செல்ல வேண்டும். கிமு 3200-லேயே எகிப்தியர் முட்டையை உணவாக உட்கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பியர் கிமு 600-ல் இருந்து முட்டையை ‘டேஸ்ட்’ செய்கிறார்கள். முட்டைகள் பெரும்பாலும் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச்செல்லும் வழியில் உடைந்துவிடும். இதைச் சமாளிக்க 1911-ம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த ஜோசப் கோய்ல் என்பவர் அட்டையால் ஒரு பெட்டி செய்தார். அந்த டெக்னிக்தான் இன்றுவரை தொடர்கிறது.



முட்டையின் எடை எவ்வளவு?

அமெரிக்கத் தர அளவுகோல்படி முட்டையின் அளவை வைத்து அது பிரிக்கப்படுவதில்லை. எடையை வைத்தே பிரிக்கப்படுகிறது. 12 முட்டைகளின் எடை 850 கிராம் (30 அவுன்ஸ்) இருந்தால், அது ஜம்போ வகை. இதுதான் பெரியது.

முட்டையை எப்படி சாப்பிடலாம்?

முடிந்தவரை பச்சை முட்டையைச் சாப்பிடுவதைத்தான் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அல்லது ஹாஃபாயிலாகச் சாப்பிடலாம். முட்டையை வறுத்துச் சாப்பிடுவதால் அதிலிருக்கும் புரதச்சத்து முழுமையாக நீக்கப்படுகிறது.



வேகவைத்த முட்டையையும் பச்சை முட்டையையும் எப்படி உடைக்காமல் கண்டுபிடிப்பது?

வேகவைத்த முட்டையைச் சுற்றிவிட்டால் வேகமாகச் சுழலும். பச்சை முட்டை கொஞ்சம் தள்ளாடி ஆடும்.

முட்டையை எப்படி கிரேடு செய்கிறார்கள்?

முட்டை ஓட்டின் நிலை மற்றும் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது என்பதை வைத்தே முட்டைகள் கிரேடு செய்யப்படுகின்றன. எடையை வைத்துப் பிரிக்கப்படுகிறது என்ற பொதுவான எண்ணம் தவறு.



AAA: இதன் ஓடுகள் உடையாமல், சுத்தமாக இருக்கும். இதன் வெள்ளைக்கரு அடர்த்தியாகவும், மஞ்சள்கரு கலையாமலும் இருக்கும்.

A: இதன் வெள்ளைக்கரு கொஞ்சம் அடர்த்தி குறைந்து காணப்படும். கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான முட்டைகள் இந்த ரகம்தான்.

B: இதன் ஓடுகளில் சிறு விரிசல் இருக்கலாம். வெள்ளைக்கரு கொஞ்சம் தண்ணீராக இருக்கும். இவை கடைகளில் அதிகம் கிடைக்காது.



முட்டை ஓட்டின் நிறத்துக்கும் அதன் சத்துக்கும் தொடர்பு இல்லை. ஆனால், முட்டையின் மஞ்சள் கருவின் நிறத்தைப் பொறுத்தே அதன் சத்தின் அளவு இருக்கும்.

முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் போடுங்கள். துர்நாற்றம் வருகிறதா எனப் பார்த்துவிட்டுச் சமைக்கலாம்.

புதிய முட்டைக்கும் பழைய முட்டைக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது?

தண்ணீரில் போட்டால் பழைய முட்டை மிதக்கும். புதிய முட்டை மூழ்கும். அவித்த பின் புதிய முட்டையின் ஓட்டை உரிப்பது சிரமமாக இருக்கும்.



முட்டையில் என்ன என்ன சத்துகள் இருக்கின்றன?

பி12 வைட்டமின், ஆண்டி ஆக்ஸிடெண்ட்ஸ் குணங்கள்கொண்ட அமினோ ஆசிட் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இவை புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியவை. கண்களுக்கு நல்லது செய்யும் லூட்டின் முட்டையில் அதிகம் இருக்கிறது.

உலகில் கலப்படமே செய்ய முடியாத உணவுப்பொருள் முட்டைதான்... இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

வெள்ளைமுட்டைக்கும் பிரவுன் நிற முட்டைக்கும் சத்துகள் அளவில் எந்த மாற்றமும் இல்லை. முட்டை பேக் செய்யப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்கும் சாப்பிட வேண்டும். நாள்கள் ஆக ஆகச் சத்துகள் குறைந்துகொண்டே இருக்கும்.

Offline SweeTie

Re: ~ முட்டை...முட்டை...முட்டை...! ~
« Reply #1 on: September 17, 2017, 04:52:59 AM »
இந்த முட்டைய பத்தி இம்புட்டு  விஷயம்  இருக்கா???

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ முட்டை...முட்டை...முட்டை...! ~
« Reply #2 on: September 17, 2017, 02:05:44 PM »