Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 179  (Read 2526 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 179
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 11:20:29 AM by MysteRy »

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 180
  • Total likes: 547
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
உண்மையை உறங்க வைக்க.,
வலிமை பாடும் தாலாட்டு - கையூட்டு!
பதவியின் பலத்தை குறைக்க.,
பணம் செய்யும் வஞ்சம் - லஞ்சம்!


ஞாலம் தோன்றி நாமும் தோன்ற..
நம்மில் பலரும் ஆனார் ஆன்றோர்!
அவர் நம் வாழ்வை கட்டிலமைக்க..
ஆளுமை என்றொரு நிலையை கண்டார்!!
ஆளுமை கொண்டு அனைத்தையும் சீராய்.,
ஆக்கிடத்தானே எத்தனித்திருந்தார்.,
ஆளுமையின் கீழ் சீராய் நாடும் .,
நாளும் நலமாய் நகர்ந்தே செல்ல.,
நலம்தனை கெடுத்திட.,
நமக்கொரு எதிரியாய் .,
வந்த வினையின் பெயரே லஞ்சம்.

பொய்யையும் களவையும் பொதுவாய் நீக்கி.,
வாழ்ந்திட சொன்னதே அன்றொரு காலம்.
பொய்யும் ஒர்வகை வாய்மை என்றே.,
போர்க்கொடி தூக்குதே இக் கலிகாலம்.
பொய்யையும் களவையும் போன்றதே லஞ்சம்!!
என்றால் அதுவும் மிகையே இல்லை!

லஞ்சம் என்னும் அரக்கனை ஒழிப்போம்!
நெஞ்சம் நிமிர்த்தி பிறர்க்கென வாழ்வோம்!!

பொதுநலன் கருதி...   உங்கள் பீன்.
[/b]
« Last Edit: March 26, 2018, 10:17:26 PM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline thamilan

லஞ்சம் அது
வஞ்சகத்தை மறைக்க கைக்கு கை மாறிடும்
பணம் பாதாளம் வரை பாயுமாம்
மனிதன் மட்டும் எம்மாத்திரம்
ஒரு சிறிய   நோட்டு
மனிதனையே விலைக்கு வாங்குகிறதே
மனிதனின் அறிவு கூட
அதன் முன் மண்டியிடுகிறதே

கைக்கு கை மாறும் பணம்
அதன் பின்னே
முள்ளுக்கு பின்னே ஓடிடும் நாயாக
மனமும் ஓடுகிறதே
தறிகெட்ட உலகில்
நெறிகெட்ட மனிதராய் மக்களை
மாற்றிடுதே இந்த பணம்

பலரது வாய்களை ஊமையாக்கிடும்
மனங்களை மெளனிக்க செய்திடும்
சாகசக்காரி   இந்த பணம்
சட்டத்தையும் வாங்கலாம்
சர்வத்தையும் வெல்லலாம்
சட்டை பையில் பணமிருந்தால்

உண்மை நேர்மை மனசாட்சி என்பதெல்லாம்
வெறும் செல்லா நோட்டு
இந்த பலம் வாய்ந்த பணத்தின் முன்னே
மனிதன் பணத்தை ஆளும் காலம் போய்
மனிதனை பணம் ஆளும் காலம்
இது என்று மாறுமோ
அன்றே மனிதகுலம்  மீட்சி பெரும்
« Last Edit: March 27, 2018, 11:32:52 AM by thamilan »

Offline யாழிசை

கனிவான பேச்சு
கரிசனத்துடன் உபசரிப்பு
அன்பாகப் பார்த்தாரே!
ஆவலாக கேட்டாரே!

நினைக்கச்   சொன்னாரவர்  பதவியை
அந்நிமிடமே  செய்தாரவர்   உதவியை...

உதவி அல்ல கடமைதான்; அதை
உரைத்தால் எனக்கோ மடமைதான்.

கோப்பை தூர எறிய,
கோரிய வேலையை முடிக்க ;
நாவை அடக்கி கொண்டேன்;
நகையை அடகு வைத்தேன்.

கைகொடுத்து பேசியவர்;
காரியத்தை முடிப்பதற்கு
கையூட்டு வாங்கினாரே; எனைக்
கதிகலங்க வைத்தாரே!
« Last Edit: March 29, 2018, 12:20:07 PM by யாழிசை »

Offline JeGaTisH

லஞ்சம் என்று நீ நினைத்த போதே
உனக்கு மிஞ்சுவது என்னவோ தஞ்சம் தான்.

நீ லஞ்சம் வாங்குவதற்கு காரணமே
உன்னுள் குடிகொண்டிருக்கும் இயலாமையே.

சிறி வயதில் நீ கொடுத்த ஜந்து ரூபாய் லஞ்சம்
பெரிதானதும் ஊழலை உன்னில் புகுத்திவிடும் .

படித்து முடித்த மாணவன் வாசல் வெளியே
படிப்பறிவு இல்லாதவன் பரிவட்டதோடு பணியிலே.
 
லஞ்சம் கொடுத்து உன்னை நீயே அழித்துகொள்ளாதே
நீ கொடுக்கும் லஞ்சம் இன்னோருவரின் வாழ்க்கை .

லஞ்சம்  ஓட்டை வழியாக குற்றவாளி தப்பித்து
சிறு அப்பாவி மனிதன் மாட்டிகொள்கிறான்.

ஒருவர் வாங்கும் லஞ்சம் இன்னொருவரை
படுகுழியில் இழுத்துவிடும் .

நீ செய்யும் பணிக்கு கொடுப்பதே கூலி
நீ என்ன செய்யவேண்டும் என்பதற்க்காக கொடுபதல்ல.


        அன்புடன் ரோஸ்மில்க் காதலன் ஜெகதீஸ்
« Last Edit: March 29, 2018, 01:12:15 PM by JeGaTisH »

Offline Ms.SaraN

கலியுகம் என்பது சரிதானோ
எங்கும் லஞ்சம் பித்தலாட்டம் கொடுமை
மனிதனுக்கு சக உரிமை இல்லை
பணக்காரன் என்றும் மாளிகையில்
ஏழையோ  இன்றும் குடிசையில்
பிறப்பு முதல் இறப்பு வரை
எதிலும் இல்லை உண்மை

லஞ்சம் என்னும் சாக்கடை நீர்
அருவில் போல் கொட்டுகிறது எங்கும்
இதை அமிர்தமாக எண்ணி
அருந்துபவர்களோ கணக்கிலிடா பட்டியல்
இவர்களை என்ன சொல்லி  அழைப்பது
மனிதன் என்பதா மிருகம் என்பதா

பலரின் முன்னிலையில் நம்பிக்கை தனவானாய்
நெஞ்சை நிமிர்த்தி கைகுலுக்கி
நல்லவன் போல்  வேஷம் போடுகிறாய்
தனிமையில் நீ வாங்கும் லஞ்சம்
பிச்சையை விட கேவலமானது
இதை நீ எப்போது அறிவாய் புரிவாய்

நீ வாங்கும் ஒவ்வொரு கையூட்டும்
ஒரு ஜீவனை கொல்ல போகிறது
இந்த உண்மையை எப்போது நீ அறிவாய்
வாழும் காலம் முழுதும் பாவம் சேர்க்காதே
கொஞ்சம் புண்ணியம் சேர்த்துவை
உன் பிள்ளைகளுக்கு  போய்  சேரட்டும்

இவர்களை இன்னும் என்ன  சொல்லி திருத்துவது
நீ குடிக்கும் நீர் விஷம் என்பதா
இல்லை அமிர்தம் என்று விட்டு விடுவதா
புரியவுமில்லை தெரியவுமில்லை எனக்கு
« Last Edit: March 29, 2018, 07:20:44 PM by Ms.SaraN »

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear

லஞ்சம் அதன் கை
ஓங்கி நிற்கிறது உலகினிலே
ஒரு கை கொடுப்பது
மறு கைக்கு தெரியக் கூடாது என்பர்
லஞ்சத்தில் ஒரு கை கொடுப்பது
இன்னொரு கைக்கு மட்டுமே தெரிகிறது

லஞ்சம் வாங்கி வயிறு கொழுத்த
நகரக் காவலர்கள்
லஞ்சம் வாங்கி தீர்ப்பை மாற்றி சொல்லும்
நீதியை நிலை நாட்டும்  நீதிபதிகள்
லஞ்சம் வாங்கி கொண்டு மருத்துவ அறிக்கைகளை
மாற்றிச் சொல்லும் மருத்துவர்கள்
லஞ்சம் வாங்கி கொண்டு ஏரிகளை
பட்டா போட்டுக் கொடுக்கும் அரசியல்வாதிகள்
இப்படி எங்கும் நிறைந்திருக்கிறது லஞ்சம் 

எங்கும் எதிலும் லஞ்சம்- விளைவு
ஏற்படபோவது விரைவில் பஞ்சம்...
கடமையாற்ற எதற்குதாரீர் லஞ்சம்-
தவறாமல் கண்ணியம் காப்பீர் கொஞ்சம்....
எல்லாவற்றிலும் ஊழல்மயமாக்கி
இழைக்காதீர் வஞ்சம்- தவிர்த்தால்
எதிர்கால சந்ததி வளர்ச்சியில் மிஞ்சும்..
வாழ வழியின்றி கையேந்துவது யாசகம்


Copyright by
BreeZe
« Last Edit: March 29, 2018, 06:27:45 PM by BreeZe »
Palm Springs commercial photography

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 845
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself


லஞ்சம்  லஞ்சம்
லஞ்சத்தில்
இன்பமும் உண்டு 
துன்பமும் உண்டு
மன ஊடலில் வரும்
லஞ்சம் இன்பம் தரும்
கை ஊடலில் வரும்
லஞ்சம் துன்பம் தரும்

குழந்தையின் அழுகையை
நிறுத்த பொம்மையை
லஞ்சமாக தருகையில் 
லஞ்சம் நீ இன்பமே ..

என்னவளை கவர
என் அன்பு கிறுக்கல்களை
லஞ்சமாக தருகையில்
லஞ்சம் நீ இன்பமே

அம்மா கோபமாக
இருக்கையில்
என் முத்தங்கள்
லஞ்சமாக தருகையில் 
லஞ்சம் நீ இன்பமே ..

எதிர்பார்ப்போடு
இறைவனை வேண்டி
எதிர்பார்த்த
விஷயங்கள் நிறைவேற ,
பணத்தைக் காணிக்கை
என்ற பெயரில்
இறைவனுக்குத் தருகையில்
லஞ்சம் நீ துன்பமே..

அரசாங்க வேலை 
அரசாங்க அதிகாரி 
அரசாங்க மரியாதை பெற ..
கௌரவத்தை விடுத்து
பணத்தை அன்பளிப்பு
என்ற பெயரில்
அரசியல்வாதியிடம் தருகையில்
லஞ்சம் நீ துன்பமே ...

இறந்த பின்
சொர்கம் அடைய
பணத்தை நெற்றிக்காசு
என்ற பெயரில்
எமனுக்கு  தருகையில்
லஞ்சம் நீ துன்பமே ..

நல்லதை நினைப்போம் ...
ருபாய் நோட்டு மதிப்பை குறைப்போம் ...
மனிதனின் குணத்தை மதிப்போம் ...
மன ஊடல் லஞ்சத்தை வளர்ப்போம்...
கை ஊடல்  லஞ்சத்தை ஒழிப்போம் ....

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
கையெழுத்துக்காய் நீட்டும்
கைகளில் எல்லாம் கத்தை
கத்தையாய் நோட்டுகள்
அதை தட்டி கேட்பவர்களின்
மனதிற்கு எல்லாம் 
போடப்படுகிறது பூட்டுகள்

நேர்மைக்காய் மேலோங்கிய கைகளிலெல்லாம்
காந்தி உருப்பொறித்த தாள்களின் பைகள்
வாய்விட்டு சொல்லப்பட்ட உண்மைகளெல்லாம்
யாரோ கட்டி விட்ட கட்டுக்கதைகள்

ஏழை முகம் கண்டு சுளிப்பவரும்
வண்ணத்தாள் கண்டு சிரிக்கின்றனர்
கிழிந்துவிடும் தாள் கொண்ட மதிப்பும்
வீழ்ந்து மடியும் மானிடருக்கில்லாமல்
போனதேன்???

வேலி எனும் அரசாங்கம்
மக்களெனும் பயிரை மேய்வதேன்
தட்டி கேட்க வேண்டிய ஆசாமிகளோ- ஆட்சியில்
கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனரே


அன்று அவனின்றி ஓர்
அணுவும் அசையவில்லை
இன்று பணமின்றி வேறு
எதுவும் இயங்கவில்லை
என்றோ மாறிடும் மாறிடும்
என்றெண்ணி காலமோ
கானல் நீராய் போகின்றதே!!!!


                          **விபு**