இயந்திரமான என் வாழ்வில்
இதமான தென்றலாய்
உன் நட்பு
இணையத்தில் முகமறியாமல்
உதடுகள் பேசிக்கொள்ளாமல்
எழுத்துக்களில் மட்டும் பேசிக்கொள்ளும்
நம் நட்பு
எத்தருணமும் என்னை
தொடரும் நிழலாய்
உன் நட்பு
நலமா? சாப்பிட்டிங்களா?
என்ற இரு வார்த்தைகளில்
தன் மொத்த கரிசனையும்
காட்டி விடும் உன் நட்பு
உன் தமிழ் வரிகளில்
மூழ்கி போய் இருக்கிறேன்
உன் கவித்திறமையில்
பல தடவை வியந்திருக்கிறேன்
உன் அணைத்து கவிதைகளுக்கும்
முதல் ரசிகை நான் தான் நண்பா
இந்த இனிய உன் பிறந்தநாளில்
உன் பிறப்பில் நீ அனைத்தையும் பெற்று
உலகிற்கு பகிர்ந்து
நீயும் மகிழ்ந்து உலகையும்
மகிழவைக்க வாழ்த்துகிறேன் நண்பா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்